ஒருவருக்கு பேய் பிடிப்பது சாத்தியமா…?

…….

….

ஜக்கி வாசுதேவ் அவர்களின்
சுவாரஸ்யமான கட்டுரையொன்று கீழே –

…………

கேள்வி: சிலரை இந்த சமூகம் தீய சக்தியால் பீடிக்கப்பட்டவர்
என பழிக்கிறதே, இதில் ஏதாவது உண்மை இருக்கிறதா?

பதில் :

இப்போது நீங்கள் இரு பிரச்சனைகளை ஒன்றாக்குகிறீர்கள்.
ஒன்று உளவியல் சார்ந்தது மற்றொன்று தீய சக்தியால்
பீடிக்கப்படுவது. ஒன்று மற்றொன்று என தவறாக
கொள்ளப்படுகிறதா…? மிக மிக அதிகமாக.

எப்போதெல்லாம் மக்கள் மனநிலையால் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் அதை தீய சக்தியால் பீடிக்கப்பட்டதாகவே நினைக்கிறார்கள். ஏனென்றால் உங்கள் மனதிற்கு பல பரிமாணங்கள் உள்ளன.

பெரும்பாலானவை கண்டுபிடிக்கப்படாமலே உள்ளன. உங்கள்
மனதின் சில குறிப்பிட்ட பாகங்களை தொட்டால், திடீரென்று
நீங்கள் இதுவரை வாழ்வில் அறிந்திராத மொழியை பேச ஆரம்பித்துவிடுவீர்கள், இதுவரை பேசாத குரலில் உங்கள்
இயற்கை குரலுக்கு மாறாக பேசுவீர்கள்.

பித்துப்பிடித்த நிலையில் உள்ளவர்கள் இதை எளிதாக செய்ய
முடியும்;
விழிப்புணர்வு மிக்கவர்களும் இதை எளிதாக செய்ய முடியும்.

ஆகையால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட மன நிலையை அடையும்போது அவர்களுடைய வெளிப்பாடு இயல்புக்கு மாறாக உள்ளது.
ஆகையால் யாரோ ஒருவர் வேறு விதமான குரலிலோ அல்லது
வேற்று மொழியிலோ அல்லது வேறு விதத்திலோ வழக்கத்திற்கு
மாறான முறையிலோ இருந்தால் மக்கள் ஏதோ தீய ஆவி
அவர்களை ஆட்கொண்டதாக கருதினர்.

சில சமயம் நியாயமான நல்லறிவுடைய தன்மையில்,
சில சமயம் பயங்கரமான தன்மையுடைய செயல்களையும்
அவர்கள் மக்களுக்கு செய்தனர்.

நாம் உளவியல் சார்ந்த பிரச்சனைக்குள் செல்லவேண்டாம்.
அவை நிச்சயமாக உள்ளன. இது இந்த உலகத்தில்
உண்மையான ஒன்று. இந்த உடம்பு எப்படி நோய்வாய்ப்படுமோ
அது போல் மனமும் நோய்வாய்ப்படும் என்பது நமக்குத்தெரியும்.

ஒருவரை, ஒரு ஆவியால் பிடிக்க முடியுமா?

ஆம், நிச்சயமாக முடியும். நீங்கள் ஒரு இடத்தில இருக்கும் பொழுது உங்களைச்சுற்றி பல உள்ளன. ‘அது நம்மை பிடிக்குமா’ என
கேட்டீர்கள். அவைகளுக்கு உங்களை பிடிப்பதில் ஆர்வமில்லை.

அது மட்டுமல்லாமல் எல்லாவற்றுக்கும் மற்றவரை பிடிக்கும்
சக்தியில்லை. சில குறிப்பிட்ட க்ஷணத்தில், குறிப்பிட்ட
தருணங்களில் குறிப்பிட்ட திறன்கொண்டவற்றால் மட்டுமே
இதை செய்ய இயலும். இது மிகவும் அபூர்வமானது. நீங்கள்
அதைப்பற்றி கவலைப்படக்கூடத் தேவையில்லை.

ஆனால் அது போன்று ஒன்று உள்ளதா….?
ஆம் உள்ளது.

இது போன்ற விஷயங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு தேர்ச்சி
பெற்றவரால், ஏதுவான தருணங்களை உருவாக்கி அதன் மூலம்
தீய சக்திகள் உங்களை ஆட்கொள்ள வைக்கமுடியும். உங்களை
தீய சக்திகள் பிடித்துக்கொள்வதற்கான ஏற்ற சூழலை
அவர்களால் ஏற்படுத்த முடியும்.

இதைத்தான் மாந்திரீகம் என அழைக்கிறார்களா?

மாந்திரீகம் என்பது ஒரு பொதுவான சொல். ஆனால்
உங்களுக்கு தெரியுமா? நான்கு வேதங்களில் ஒன்றான
அதர்வண வேதம் இதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

சக்திகளையும், வாழ்க்கையையும்
உங்களின் நன்மைக்காகவோ பிறரின் தீமைக்காகவோ
உங்களது தேவைக்கேற்ப திறன்பட கையாள்வது.
உங்களுக்கு தெரியுமா, உலகமுழுக்க மாந்திரீகம்
வழக்கத்தில் உள்ளது. எந்த ஒரு கலாசாரத்திலும் இது
இல்லாமல் இல்லை.

ஆகையால் இது கற்பனையான ஒன்றல்ல. எல்லா இடங்களிலும்,
வேறு ஒரு ஆவியின் மீது ஆளுமை செலுத்தவும் அடக்குவதற்கான திறனையும் யாரோ ஒருவர் அறிந்திருந்தார் , அதனை பலவாறாக பயன்படுத்திக்கொண்டனர்.

உலகின் மற்ற பாகங்களுடன் தொடர்பில்லாத கலாசாரங்களில்
கூட மாந்திரீகம் வழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் இது மிக
அதிக திறன் உடைய நிலையில் இருந்தது. ஆகையால் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவரை மாந்திரீகர் என அழைக்கலாம்.

இது போன்ற செயல்கள் சாத்தியமா?
மிகவும் சாத்தியமே.

கிட்டத்தட்ட எவர் வேண்டுமானாலும் இதைச்செய்யலாம்.
உங்கள் வாழ்க்கையில் மூன்று மாதங்களை கொடுக்க சம்மதித்தீர்களானால் முழுமையான, கடுமையான சாதனாவின்
மூலம் இதன் மேல் நீங்கள் ஆளுமை கொண்டவராகலாம் என
நான் சொல்லுவேன்.

உங்களிடம் துணிவிருந்தால், சில கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொள்ள துணிவும் உறுதியும் இருந்தால் மிகக்கடுமையான எல்லைகளை, சாதாரணமாக சொல்லவேண்டுமானால் –
எல்லையற்ற கடுமையான நிலைகள்- அது வாழ்க்கையின்
எல்லை அல்ல; ஆனால் சமூகம் சார்ந்த எல்லை. சாதாரண
அனுபவத்தில் மக்களுக்கு அதுவே உச்ச நிலை. மூன்று மாத கால பயிற்சியில் பலர் இது போன்ற தன்மைகளின் மீது அதிகாரம் பெற்றுவிடுவர். ஆனால் அதன் நோக்கமென்ன?

நீங்கள் இன்னும் உங்கள் வாழ்க்கையின் மீதே அக்கறை
செலுத்தவில்லை. ஏன் மற்ற உயிரின் மீது தலையீடு செய்ய
வேண்டும்? உங்கள் தலையாய மற்றும் தலைசிறந்த வேலை உங்களைப்பற்றியதே. அதை கையாளக்கற்றுக்கொள்ளுங்கள்,
அதுவும் ஒரு தந்திரம் தான். இப்போது நீங்கள் தியானம் கற்றுக்கொள்ளுங்கள் அல்லது பேரானந்தத்தில் மூழ்க கற்றுக்கொள்ளுங்கள் அல்லது உங்களை பரிதாபமான நிலைக்கு
கொண்டு செல்லக்கற்றுக்கொள்ளுங்கள். இதுவும் ஒருவகையான தந்திரமென்று உங்களுக்கு தெரியுமா?

.
……………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to ஒருவருக்கு பேய் பிடிப்பது சாத்தியமா…?

  1. புதியவன் சொல்கிறார்:

    தியானத்தைத் தீவிரமாக ஒருவர் மேற்கொள்ளும்போது, அவருக்குப் பலவிதமான சக்திகள் கைகூடும். ஆனால் அதைப்பற்றிக் கவலை கொள்ளாமல், அதன் மீது ஆசை கொள்ளாமல், தொடர்ந்து மேற்செல்ல வேண்டும். அப்படிச் செல்லும்போது தியானத்தின் நோக்கம் நிறைவுறும்.

    ஆனால் சக்திகளின் மீது ஆசை அதிகமாகி, அதனை உபயோகிக்கத் தொடங்கினால், அதன் பிறகு, அந்த நிலையிலிருந்து மேலே செல்வது இயலாது.

    நித்யானந்தாவிற்கும் தியானத்தின் பாதையில் கிடைத்த அபரிமித சக்திமேல் ஆசை கொண்டு அதனை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார். அதனால் அதற்கு மேலான நிலைக்கு அவர் எய்தமுடியாது. பலர், அவரின் அந்தச் சக்தி மூலமாகக் குணமடைந்து, அதற்காக அவருக்குக் காணிக்கை செலுத்துகின்றனர். அவரும் அந்தப் பணத்தில், அதன் மூலமாகக் கிடைக்கும் சுகங்களில் ஆசை வைத்துவிட்டார்.

    சாதாரண சக்திகளை (உதாரணமாக, கொசு நம்மைக் கடிக்கக்கூடாது. தேன்கூட்டின் அருகில் சென்றாலும் தேனீக்கள் நம்மைத் தீண்டக்கூடாது, ஒரு உயிரின் சக்தியை இன்னொரு உயிருக்கு மாற்றுவது போன்றவை) அடைவது சுலபம் என்றே படித்திருக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s