புது வசந்தம் அவர்களின் பின்னூட்டக் கேள்வி …

…..

…..
புது வசந்தம் சொல்கிறார்:
5:47 முப இல் ஏப்ரல் 15, 2022 –

வணக்கம், நீங்கள் பூரண உடல் நலத்துடன் இருக்க வல்ல
இறைவனை வேண்டுகிறேன். உங்களின் ஆரம்ப கால பதிவு
முதல் வாசித்தவன் நான், பலரிடமும் உங்கள் பதிவுகள் குறித்து கலந்துரையாடி இருக்கிறேன்.
ஆனால், கடந்த இரண்டு மூன்று வருடங்களாக உங்கள் பதிவுகள் சமநிலையற்ற ஒரு பதட்டத்துடன் எழுதப்படுவது போல தெரிகிறது.

….
மத்திய அரசின் போக்கும் மற்றும் மாநிலங்களில் நடக்கும்
வெறுக்கத்தக்க அரசியலும் உங்கள் பார்வையில் படவேயில்லை
போல.
….

சற்றே ஒரு பத்து நிமிடங்கள் கடந்த சில வருட உங்களின் எழுத்து பயணத்தை திரும்பி பாருங்கள் நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்
என ஒருவேளை புரியலாம். உங்களின் எழுத்திற்கு பின்னுட்டம் எழுதும் நண்பர்களும் ஒரே மாதிரியான வகையில் இருப்பதாகவே தெரிகிறது.

…………………………………………………………………………………………………….


நண்பர் புதுவசந்தத்திற்கான எனது விளக்கம், மற்ற வாசக
நண்பர்களையும் சென்றடைய வேண்டும் என்பதால்,
அதையே இன்றைய பதிவாக இடுகிறேன்.
………

நண்ப புது வசந்தம் –

என்னுடைய பழைய – அரசியல் சம்பந்தப்பட்ட – இடுகைகளில்
இருந்த வேகமும், தீவிரமும், அழுத்தமும் இன்றைய இடுகைகளில்
இல்லை என்கிற உங்களின் கருத்தை நான் அப்படியே ஏற்கிறேன்.

ஆனால், அதற்கான காரணங்களை உங்களால்
உணர முடியவில்லை என்பதால்… நானே இங்கே சொல்கிறேன்…
உங்களுக்கும், மற்ற நண்பர்களுக்குமான விளக்கமாக….

2012,13,14-ஆம் ஆண்டுகளின் சமயத்திலும், அதையொட்டியும்
என் எழுத்தில் இருந்த வீரியம்
இன்று இல்லாததற்கு என்ன காரணம்….?

முதுமையின் தளர்வு, உடல்நலக் குறைவு காரணமாக என்னால்
அதிக நேரம் கணிணி முன் உட்கார முடியவில்லை என்றாலும் கூட –
முக்கிய காரணம் அதுவல்ல –

-தற்போதைய அரசியல் சூழ்நிலையே….

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, எவ்வளவு கடுமையான
விமரிசனங்களை நான் முன்வைத்தாலும், அரசின் தரப்பிலிருந்தோ,
ஆளும் கட்சியிலிருந்தோ, நான் எந்தவித எதிர்ப்பையும்
எதிர்கொள்ளவில்லை.

அப்போதெல்லாம் பின்னூட்டம் எழுதிக்கொண்டிருந்த வாசக
நண்பர்களும், எந்தவித அரசியல் சார்புமின்றி, மிகத்தெளிவாக
தங்கள் கருத்துகளை முன்வைத்து, விவாதங்களை மேற்கொள்ள
மிக ஆர்வத்துடன் முன்வந்தார்கள். விவாதங்களில் பலவேறு
கருத்துகளை, அரசியல் சார்பின்றி, எதிர்விளைவுகள் குறித்த
பயமின்றி விவாதிக்க முடிந்தது.

ஆனால் தற்போதைய சூழ்நிலை ….?
நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்….

கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சம் கடுமையாக
விமரிசனம் செய்தாலும் கூட –
ஆஹா எங்கள் தலைவரை, எங்கள் ஆட்சியை, எங்கள் கட்சியை
குறை சொல்கிறாயா என்று கேட்டு ( அது மத்தியாக இருந்தாலும் சரி,
மாநிலமாக இருந்தாலும் சரி…) –

பல கட்சி அபிமானிகள், மிகத்தீவிரமாக, அவர்கள் சார்ந்த
கட்சிகளின் கருத்துகளை பின்னூட்டங்களின் மூலம் வெளிப்படுத்தி,
பாரபட்சமற்ற விமரிசனத்தை கண்டிக்க முற்படுகிறார்கள்.
ஒருதலைப்பட்சமான அத்தகைய பின்னூட்டங்களுக்கு
நான் எந்த அளவு விளக்கம் தர முடியும்…?
தந்தாலும், யார் விடுகிறார்கள்…?

இதோடு நின்றால் கூட பரவாயில்லை;
மிகச்சாதாரணமான நிலையில் உள்ள வட்டத்தலைவர்கள் கூட,
விமரிசனங்களைப் பற்றி, “எங்கள் தலைவரை அவமதித்து
எழுதுகிறார்கள்… சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று
புகார் கொடுக்கிறார்கள். அதை காவல்துறையும் ஏற்று,
எஃப்.ஐ.ஆர். பதிவதையெல்லாம் நீங்களும் கவனித்துக் கொண்டு
தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சட்டபூர்வமாகவோ, சட்டபூர்வம் இல்லாமலேயோ –
எழுத்து சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்பதை
நீங்களும் நிச்சயமாக உணர்ந்திருப்பீர்கள் என்றே
நான் நம்புகிறேன்.

கட்சி சார்பில்லாத நண்பர்கள் பின்னூட்டம் எழுதுவது
மிகவும் குறைந்து விட்டது என்பதையும் நீங்களே
கவனித்திருக்கிறீர்கள்.
(நீங்களே இந்தப் பகுதியில் – எவ்வளவு, மாதங்கள் (வருடங்கள்…?)
கழித்து இப்போது தானே எழுதுகிறீர்கள்..!!!)

வயதோ, தளர்வோ இருந்தாலும் கூட, என் எழுத்து வீரியம்
என்னுள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது …
( அடங்கிப் போய், முடங்கிப் போய் …!!!)

இந்த சூழ்நிலையிலும், நான் பழையபடி வீரியமாக எழுத வேண்டும்
என்றால், எதாவது ஒரு கட்சியின் துணை, சார்பு, பாதுகாப்பு –
இல்லாமல் முடியாது என்பது தான் இன்றைய நிஜ நிலை ….

கட்சி சார்ந்து, கட்சியின் துணையுடன், பாதுகாப்பாக
எழுதுவது என்பது என்னிடம் இன்று வரை இல்லை –
இறுதி வரையும் இருக்காது….

எனவே …………………………………………………….

.
வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

.
……………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to புது வசந்தம் அவர்களின் பின்னூட்டக் கேள்வி …

  1. Tamil சொல்கிறார்:

    அந்த பயம் இருக்கட்டும் ஆஹாஹாஹா

  2. Thirumalachari Thiruvengadam சொல்கிறார்:

    I totally agree with Shri KM.None has commented on the way the Reliance group took posse
    Saigon of the stores of Futures even when the case was subjudiceHow many developmental projects and funds were provided to the south and the implications of the impending demarcations on the political power of the southern states.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s