ஏ.ஆர். ரெஹ்மான் அவர்களின்புதிய ஆல்பம் பற்றி ஒரு கருத்து –

….

…..

வாசக நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் – எனது இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்…

……………………………………………………………………………………………………………………………………………….

ஏ.ஆர். ரெஹ்மான் அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள
“மூப்பில்லா தமிழே தாயே” – ஆல்பம் குறித்து –

ஏ.ஆர். ரெஹ்மான் இசை ஆல்பத்தைப் பற்றி எனக்கு
ஒரு பெரும் வருத்தம் உண்டு….இதை பார்த்த பிறகு உங்களுக்கும்
இதே உணர்வு தான் ஏற்படும் என்று நம்புகிறேன்…

தமிழுக்காக ஒரு ஆல்பம் வெளியிட்டார்… அந்த ஆர்வம்
குறித்து மிக்க மகிழ்ச்சி.
(தமிழன்னையை பிரதிபலிப்பதாக சொல்லப்படும் –
அவரது – சித்திரத்தைப்பற்றி பலரும் குறைப்படுவது
ஒரு பக்கம் இருக்கட்டும்…)

எனது குறை – எவ்வளவு அழகாக கவிஞர் தாமரை அவர்கள்
மெனக்கெட்டு, இந்தப்பாடலை இயற்றி இருக்கிறார்…!!!
ஆனால், இவரது இசையமைப்பில், அத்தனை வார்த்தைகளும்
அழுந்தி, அமுங்கி, மறைந்து, புரிய முடியாமல் போய் விட்டனவே…
லிரிக்சை தனியே தேடியெடுத்து பார்க்காமல்,
இந்தப்பாடலை எத்தனை பேரால் புரிந்து கொள்ள முடியும் …?
(இதைப்படிப்பவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்..)

தமிழுக்கு பெருமை சேர்க்கும் – தமிழின் பெருமையை,
அருமையை – பகரும் இந்த வார்த்தைகள் – பாடலை கேட்பவர்களை
சென்றடைய வேண்டாமா….?

வார்த்தையே புரியாமல், வெறும் ஓசை மட்டும் தமிழின்
பெருமையை புலப்படுத்தி விடுமா…? வார்த்தையே புரியாமல்,
அதுவும், இந்த மாதிரி கொண்டாடப்பட வேண்டிய பாடலின்
வார்த்தைகளே வெளியாமல் இசையமைப்பது
எந்த விதத்தில் நியாயம்…?

(இந்தப்பாடல் தான் என்றில்லை… ரெஹ்மானின் பெரும்பாலான
பாடல்களில், சொற்களை கண்டுபிடிக்க தனியே பெரும் முயற்சி
எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது…)

ரெஹ்மான் அவர்கள் இந்த விஷயத்தைப்பற்றி
யோசிக்க மாட்டாரா..?

(தமிழ்ப் பாடலுக்கே, தமிழில் சப்-டைட்டில் சேர்க்க வேண்டிய அவசியம் தேவையோ… ? .)

கீழே தனியே –
தாமரை அவர்களின் அழகிய பாடல் வடிவத்தை தந்திருக்கிறேன்….

முதலில் காணொளி –
பிற்கு வரி வடிவில் பாடல் ….

….

…..

பாடல் வரிகள் –

புயல் தாண்டியே விடியல்
புதுவானில் விடியல்
பூபாளமே தமிழே வா
தரணியாள தமிழே வா

விழுந்தோம் முன்னம் நாம்
எழுந்தோம் எப்போதும்
பிரிந்தோம் முன்னம் நாம்
இணைந்தோம் எப்போதும்

திசை எட்டும் தமிழே எட்டும்
தித்தித்தும் முரசும் கொட்டும்
மதிநுட்பம் வானை முட்டும்
மழை முத்தாய் கவிதை சொட்டும்

திசை எட்டும் தமிழே எட்டும்
தித்தித்தும் முரசும் கொட்டும்
மதிநுட்பம் வானை முட்டும்
மழை முத்தாய் கவிதை சொட்டும்

அகம் என்றால் அன்பாய் கொஞ்சும்
புறம் என்றல் போராய் பொங்கும்
தடையின்றி காற்றில் எங்கும்
தமிழ் என்று சங்கே முழங்கும்
தடையின்றி காற்றில் எங்கும்
தமிழ் என்று சங்கே முழங்கும்

உறங்காத பிள்ளைக்கெல்லாம்
தாலாட்டாய் தமிழே கரையும்
பசியென்று யாரும் வந்தால்
பாலாகி அமுதம் பொழியும்

கொடைவள்ளல் எழுவர் வந்தார்
கொடை என்றால் உயிரும் தந்தார்
படை கொண்டு பகைவர் வந்தார்
பல பாடம் கற்றுச் சென்றார்

மூவேந்தர் சபையில் நின்று
முத்தமிழின் புலவர் என்றார்
பாவேந்தர் என்றே கண்டார்
பாராளும் மன்னர் வந்தார்

அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே

அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே

மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே

உதிர்ந்தோம் முன்னம் நாம்
மலர்ந்தோம் எப்போதும்
கிடந்தோம் முன்னம் நாம்
கிளைத்தோம் எப்போதும்

தணிந்தோம் முன்னம் நாம்
ஏரிந்தோம் எப்போதும்
தொலைந்தோம் முன்னம் நாம்
பிணைந்தோம் எப்போதும்

விழுந்தோம் முன்னம் நாம்
எழுந்தோம் எப்போதும்

அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே

மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே

தமிழென்றால் மூவகை என்றே
ஆண்டாண்டாய் அறிந்தோம் அன்று
இயல் நாடகம் இசையும் சேர்ந்தால்
மனம் கொள்ளை கொள்ளும் என்று

காலங்கள் போகும்போது
மொழி சேர்ந்து முன்னால் போனால்
அழிவின்றி தொடரும் என்றும்
அமுதாகி பொழியும் எங்கும்

விஞ்ஞானத் தமிழாய் ஒன்று
வணிகத்தின் தமிழாய் ஒன்று
இணையத்தில் ஊடல் கொண்டு
நிறையும் தமிழ் உலகப் பந்து

மொழியேற்று முன்னே வந்தோம்
தட்டச்சில் தனியே நின்றோம்
கணினிக்கும் பொருந்தி கொண்டோம்
கலைக்கேற்ப மாறிக் கொண்டோம்

தொழில்நுட்ப கவனம் கொண்டோம்
மொழி வாங்கி மாறிச் செல்வோம்
பின்வாங்கும் பேச்சே இல்லை
முன்னோக்கி சென்றே வெல்வோம்

புதுநுட்பம் என்றே எதுவும்
கால் வைக்கும் முன்னே தமிழும்
ஆயத்தம் கொள்ளும் அழகாய்
ஆடைகள் அணியும் எளிதாய்

எங்கேயும் சோடை போகா
என் அருமை தமிழே வா வா
வருங்காலப் பிள்ளைகள் வாழ்வும்
வளம் பொங்க வா வா வா வா

அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே

பழங்காலப் பெருமை பேசி
படிதாண்டா வண்ணம் பூசி
சிறை வைக்கப் பார்ப்பார் தமிழே
நீ சீறி வா வா வெளியே

வாய் சொல்லில் வீரர் எல்லாம்
வடிகட்டப்படுவார் வீட்டில்
சொல்லுக்குள் சிறந்தது என்றால்
செயல் என்றே சொல் சொல் சொல் சொல்

சென்றிடுவோம் எட்டுத்திசைக்கும்
அயல்நாட்டுப் பல்கலைப் பக்கம்
இரு கைகள் தமிழுக்கமைப்போம்
ஊர் கூடித் தேரை இழுப்போம்

மொழியில்லை என்றால் இங்கே
இடமில்லை என்றே அறிவாய்
விழித்துக்கொள் தமிழா முன்னே
இணைத்துக்கொள் தமிழால் உன்னை

தமிழ் எந்தன் உயிரே என்று
தினம்தோறும் சொல்வோம் இன்று
மொழியின்றி யாரைக் கொன்று
உயர்வோமா உலகில் இன்று

அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே

அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே

மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே

.
……………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஏ.ஆர். ரெஹ்மான் அவர்களின்புதிய ஆல்பம் பற்றி ஒரு கருத்து –

  1. Tamil சொல்கிறார்:

    தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.