…

ஸ்ரீராம நவமி அன்று சென்னை மாம்பலம் அயோத்யா மண்டபத்தை வலுக்கட்டாயமாக இழுத்து, பூட்டு போட்டு தமிழகத்தில் பாஜகவை வளர்க்க திமுக, பெரிய அளவில் உதவி இருக்கிறது ……
…
ஸ்ரீராம நவமி அன்று சென்னை மாம்பலம் அயோத்யா மண்டபத்தை வலுக்கட்டாயமாக இழுத்து, பூட்டு போட்டு தமிழகத்தில் பாஜகவை வளர்க்க திமுக, பெரிய அளவில் உதவி இருக்கிறது ……
விநாச காலே விபரீத புத்தி!
பாஜக ஒன்றும் தீண்டதகாத கட்சியல்ல….
வணக்கம், நீங்கள் பூரண உடல் நலத்துடன் இருக்க வல்ல இறைவனை வேண்டுகிறேன். உங்களின் ஆரம்ப கால பதிவு முதல் வாசித்தவன் நான், பலரிடமும் உங்கள் பதிவுகள் குறித்து பரிந்துரையும் செய்துள்ளேன்.
ஆனால், கடந்த இரண்டு மூன்று வருடங்களாக உங்கள் பதிவுகள் சமநிலையற்ற ஒரு பதட்டத்துடன் எழுதப்படுவது போல தெரிகிறது. ஜெவின் மரணத்திற்கு பிறகு வந்த ஒரு செல்லாக்காசு அரசை உயர்த்திப் பிடித்து , திமுக அரசு எந்த விதத்திலும் வந்து விடக் கூடாது என்ற பதற்றம், அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இன்றும் ஒருவித ஒவ்வாமையுடன் தொடர்கிறது.
மக்களை கருத்தில் கொள்ளாது மத்திய அரசின் போக்கும் மற்றும் மற்ற மாநிலங்களில் நடக்கும் வெறுக்கத்தக்க அரசியலும் உங்கள் பார்வையில் படவேயில்லை போல. வழக்கமான உங்கள் பதிவு தான், உங்கள் தளம், உங்கள் எழுத்து நீங்கள் எது வேண்டுமானாலும் எழுதலாம். எனது வேண்டுகோள், சற்றே ஒரு பத்து நிமிடங்கள் கடந்த சில வருட உங்களின் எழுத்து பயணத்தை திரும்பி பாருங்கள் நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் என ஒருவேளை புரியலாம். உங்களின் எழுத்திற்கு பின்னுட்டம் எழுதும் நண்பர்களும் ஒரே மாதிரியான வகையில் இருப்பதாகவே தெரிகிறது.
இந்திய அரசியல் அமைப்பில் யாரும் யோக்கியர்கள் கிடையாது. எல்லோரும் அவரவருக்கு தேவையானதை எடுத்துக் கொள்கிறார்கள். மக்கள், நாம் தான் எல்லா பக்கமும் அடி வாங்குகிறோம். அரசியல்வாதிகளை பொறுத்தவரை அவர்களுக்கு சிறிதளவும் சேதம் ஏற்படாது. காங்கிரஸில் சம்பாதித்தவன் பிஜேபியில் புனிதன் ஆகிறான். அதே தான் இங்கும்.
இங்கே இப்தெல்லாம் சின்ன கொள்ளி என்ற ஒன்று இல்லவேயில்லை, தினமும் பெரிய கொள்ளிகளாய் உருமாறிக் கொண்டேயிருக்கிறது.
உங்களின் பதிவுகளின் ரசிகனாக இதை பதிவிடுகிறேன்
//பிறகு வந்த ஒரு செல்லாக்காசு அரசை// – இந்தக் கருத்து எதனால் என்று தெரிந்துகொள்ளல்லாமா? நீட் தேர்வுக்கு 7.5 சதம், மக்களுக்கு நேரடியாகப் பாதிக்காத அரசு, காவல் நிலையைத்தை ஆக்கிரமிக்காதது என்று பலவற்றை நாம் பார்த்திருப்போம். சரி.. எதிர்கட்சியான திமுக என்ன செய்தது? எதை எதை எதிர்த்தது? அரசைக் கிண்டல் செய்தது? அவற்றில் எதனை திமுக அரசு இப்போது செய்யாமல் இருக்கிறது? என்பதையும் எழுதினால் புரிந்துகொள்ளலாம்.
பரிந்துரை, சரியான வார்த்தையாகது. நண்பர்களுடன் கலந்துரையாடிருக்கிறேன் என்பதே சரியாகும்.
அதிமுக-பாஜக இரண்டும் படப்பிடிப்பு மூலம் மக்களை ஏமாற்றலாம் என்று ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
மக்களும் நீண்ட உறக்கத்தில் இருக்கிறார்கள் அவர்கள் எழுந்து உண்மை அறியும் போது மாற்றம் நிகழும்
திமுக + பிரசாந்த் கிஷோர் படப்பிடிப்பும் நீண்ட நாள் தாக்கு பிடிக்காது என்கிறீர்களா ?
இது அநியாயம் …