…..

கருப்பு-வெள்ளை மாயா பஜார் -1957-ல் தமிழிலும்,
தெலுங்கிலும் வெளிவந்து சக்கை போடு போட்ட படம்…
மஹாபாரதத்தின் ஒரு கிளைக்கதையாக,
அர்ஜுனனின் மகன் அபிமன்யு மற்றும்
அவனது அத்தை மகள் வத்சலா ஆகியோரின்
காதலை சுவைபடக் கூறும் ஒரு சுவையான படம்..
நகைச்சுவை மிகுதி. அனைத்து வயதினரையும்
முக்கியமாக சிறு வயது பிள்ளைகளையும் கவர்ந்த படம்.
இதில் பீமனின் மகன் கடோத்கஜனாக எஸ்.வி.ரங்காராவ்
தோன்றும் காட்சிகள் எல்லாம் பலத்த கைத்தட்டல்களுடன்
வரவேற்கப்பட்டன.
64 வருடங்களுக்கு முன் வெளிவந்த இந்தப்படம் சில வருடங்கள்
முன்பு, டிஜிடல் தொழில் நுட்பத்தில், வண்ணப்படமாக மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது…. அது இப்போது காணக் கிடைத்தது.
அதிலிருந்து இரண்டு வெகு சுவாரஸ்யமான,
நகைச்சுவை/பாடல் காட்சிகளை இங்கே மாதிரிக்கு
தருகிறேன்….
வீட்டில் பசங்கள் இருந்தால் –
கூட அழைத்துக் கொள்ளுங்கள்….!!!
………..
கடோத்கஜன்(எஸ்.வி.ரங்காராவ்), வத்சலாவாக (சாவித்ரி)
உருமாறி அடிக்கும் கொட்டம் – டும் டும் என் கல்யாணம்….
……………..
………………
பலராமரின் அரண்மனைக்கு வந்து கடோத்கஜன்
வத்சலாவை தூக்கிச் செல்லும் காட்சி….
(தமிழில் கிடைக்கவில்லை -தெலுங்கில் தான் கிடைத்தது…
இருந்தாலும் – பிரச்சினை ஏதுமில்லை; சுலபமாக புரியும்…)
……………..
.
………………………………………….