…

…..
சட்டமன்ற தேர்தலின்போது, பாஜகவை ஒரு மைனர் பார்ட்னராக,
அதிமுக தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டது…
ஆனால், அவர்களின் துரதிருஷ்டம், தேர்தலில் அவர்கள் தோற்று
திமுக வென்று ஆட்சியை கைப்பற்றியது…
ஆட்சியை கைப்பற்றியவுடன் திமுக செய்த முதல் காரியம்
அதிமுகவை அப்படியே செயலற்று முடக்கிப்போட்டது தான்.
அதற்காகவே, வரிசையாக அதன் முன்னாள் அமைச்சர்கள்
வீடுகளில் ரெய்டு, லஞ்ச ஊழல் வழக்கு, கோடிக்கணக்கில்
சிக்கிய பணம், சிறை – என்று காட்சியை விரித்தது.
எதிர்பார்த்தபடியே, ரெய்டு, சிறைவாசத்தை தவிர்க்க நினைத்த
அதிமுக தலைவர்கள் ஒடுங்கிப்போய், அடக்கி வாசிக்க
ஆரம்பித்தார்கள்…. திமுக ஆட்சியில் பல தவறுகள் நிகழ்ந்தாலும், கடுமையாக எதிர்ப்பதை தவிர்த்து வந்தார்கள்….
ஆகவே திமுக எதிர்ப்பவர் இல்லாமல் போனது.
இதைப் பார்த்த மைனர் பார்ட்னர் பாஜக, பொறுக்க முடியாமல் –
தனது தனி ஆவர்த்தனத்தை துவக்கியது….
வரிசையாக, திமுக ஆட்சியில் லஞ்ச ஊழல்கள், ரவுடித்தனம்,
சட்டஒழுங்கு முறைகேடு என்று பல முறைகேடுகளை
வெளிப்படுத்தி, கடுமையான தாக்குதல்களையும்,
போராட்டங்களையும் நடத்த ஆரம்பித்தது….
ஒரு சமயத்தில் – மீடியாக்களிடம் – பாஜக, தான்-தான் தமிழ்நாட்டில்
முக்கிய எதிர்க்கட்சி என்று வெளிப்படையாகவே பெருமையாக
சொல்ல ஆரம்பித்து விட்டது…. ( நடைமுறையில், அது நிஜமாகவும்
இருந்தது…)
விஷயம் எல்லை மீறிபோவதைப் பார்த்து விழித்துக்கொண்ட
அதிமுக, தனது பங்குக்கு தீவிரமான போராட்டங்களையும்,
பேரணிகளையும் ஏப்ரல் 6-ந்தேதியன்று அனைத்து முக்கிய
ஊர்களிலும் துவக்கி, தான்-தான் ஓரிஜினல் “ஊர்ப்பேய்” என்று
தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியை துவங்கி இருக்கிறது…!!!
இதையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். அவர்கள்
ஒரு முழுமையான அறிக்கையை வெளியிட்டு, தாங்கள் ஆக்டிவ்’வாக
இருப்பதை நிரூபித்திருக்கிறார்…
அதிலிருந்து கொஞ்சம் கீழே –
……………….
விருதுநகர் இளம் பெண் தொழிலாளியை பாலியல் தொந்தரவு
செய்தது முதல், திருமங்கலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல்
தொல்லை கொடுத்தவரை திமுக பிரமுகர்களின் பங்கு
நிறைய உள்ளதாக லிஸ்ட் போட்டு குற்றஞ்சாட்டி உள்ளார்
ஓபிஎஸ்..
ஓபிஎஸ், திமுகவின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பி
மறுபடியும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது திமுக தரப்பில் எரிச்சலை கூட்டி வருகிறது..
அந்த அறிக்கையிலிருந்து :
அறிஞர் அண்ணா “நல்ல விளக்குக்கு வெளிச்சம் எப்படியோ,
நல்ல வயலுக்கு விளைச்சல் எப்படியோ,
அப்படித்தான் நல்ல ஆட்சியில் மக்களுக்கு நிம்மதி வேண்டும்.”
என்று நல்ல ஆட்சிக்கு விளக்கம் தந்திருக்கிறார் பேரறிஞர் அண்ணா.
போறிஞர் அண்ணா அவர்களின் கூற்றிற்கு மாறான நிலைமை
தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிறது.
‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்ற சூழ்நிலை மாறி,
‘அமைதியின்மை, வளமின்மை, வளர்ச்சியின்மை’ என்ற சூழல்
கடந்த பதினோறு மாதங்களாக நிலவி வருகிறது.
காவல் துறையினரை கண்டு ரவுடிகள் அஞ்சிய காலம் மாறி,
ரவுடிகளை கண்டு காவல் துறை அஞ்சும் நிலை தமிழ்நாட்டில்
நிலவுகிறது.
தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் பொறுப்பேற்றதிலிருந்து
பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும், கொள்ளைகளும்
தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
அரசு அதிகாரிகளும், சிறு தொழிலதிபர்களும், வியாபாரிகளும்,
இன்னும் சொல்லப்போனால், காவல் துறையினரே மிரட்டப்படும் நிகழ்வுகளும் ஆங்காங்கே அன்றாடம் நடைபெற்று வருகின்றன.
பாலியல் தொந்தரவு நிகழ்வுகளில் ஆளும் கட்சியினரின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது.
விருதுநகர் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றும் இளம்
பெண் தொழிலாளியை பாலியல் தொந்தரவு செய்ததில் உள்ளூர்
தி.மு.க.வினருக்கு பங்கு இருக்கிறது என்பதை உதாரணமாகச்
சொல்லலாம்.
இதேபோன்று, மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே
தாயை இழந்த பள்ளி மாணவிக்கு கல்வி உதவி செய்வதாகக் கூறி
அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் தி.மு.க.
பிரமுகர். பின்னர் அந்த மாணவியின் தந்தை அளித்த புகாரின்
பேரில், அந்த தி.மு.க. பிரமுகர் போக்சோவில் கைது
செய்யப்பட்டு இருக்கிறார். இவையெல்லாம் ஆளுங் கட்சியினரால்
ஏற்படும் அராஜகச் செயல்களுக்கு எடுத்துக்காட்டுகள்…
இதேபோல், மணல் கடத்தல், சாலை போடுதல் போன்ற பணிகளிலும்
ஆளும் கட்சியினரின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது.
ரவுடிகளின் அட்டகாசம் தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே
ஒரு ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு விருத்தாச்சலம் அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியை கத்தியால்
தாக்கப்பட்டு இருக்கிறார்.
கஞ்சா விற்பனை அண்மையில், ராணிப்பேட்டை மாவட்டம்,
அரக்கோணம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறப்பதையும், இதனால் இளைஞர்கள் சீரழிந்து
வருவதையும் அறிந்த காவல் துறையினர், அந்த இடத்திற்குச்
சென்று அதனை தடுக்க முயன்றபோது அவர்கள் மீதே
நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டு, அதில் காவலர்கள் மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காவல் துறையினரையே தாக்கும் அளவுக்கு ரவுடிகளின்
அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது. இந்தச் சூழ்நிலையில்,
மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் சென்னை நகரின்
பிரதானப் பகுதியான பாரிமுனையில் பட்டப் பகலில் தி.மு.க.
பிரமுகர் திரு. சவுந்தரராஜனை மர்மக் கும்பல் பயங்கரமான
ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது.
இது சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு,
தற்போதைய தி.மு.க. ஆட்சியில் அரசு அதிகாரிகள்,
ஆசிரியர்கள், குறு,சிறு தொழிலதிபர்கள், வியாபாரிகள்,
உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,
இன்னும் சொல்லப் போனால்
பாதுகாப்பினை வழங்கக் கூடிய காவல் துறையினர் என அனைத்துத் தரப்பினரும் ஓர் அச்ச உணர்வுடனேயே
இருக்கின்றனர்.
மொத்தத்தில் பாதுகாப்பில்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில்
நிலவுகிறது. இதற்கு காரணம் சமூக விரோதிகளின்
பயமின்மை.
பொது அமைதி இல்லை என்றால் தொழில் வளம் இருக்காது,
தொழில் வளம் இல்லை என்றால் பொருளாதார வளர்ச்சி இருக்காது, பொருளாதார வளர்ச்சி இல்லையென்றால் வேலைவாய்ப்புகள் இருக்காது. வேலைவாய்ப்புகள் இல்லையென்றால்
பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும். இது ஒரு கெடுசூழல்.
எனவே பொது அமைதியை உருவாக்க வேண்டிய கடமை,
சட்டம்-ஒழுங்கை சீராக்க வேண்டிய பொறுப்பு – தமிழ்நாடு
அரசிற்கு, மாண்புமிகு முதலமைச்சருக்கு நிச்சயம் உண்டு.
சுகாதாரம், செல்வ வளம், விளைபொருளின் வளம்,
இன்ப வாழ்வு, நல்ல பாதுகாப்பு ஆகிய ஐந்தும் நாட்டிற்கு அழகு
என்று வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க –
ரவுடிகளை இரும்புக் கரம் கொண்டு ஓடுக்கி.
அமைதியை நிலை நாட்டி, அதன்மூலம் தமிழ்நாட்டை
வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை
எடுக்க வேண்டும்” என்று ஓபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால், இப்போது கூட, ஓபிஎஸ் அதி ஜாக்கிரதையாக –
திமுக ஆட்சியில், மூத்த அமைச்சர்களின் மீது கூறப்படும்
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளைப்பற்றி –
ஒன்றுமே கூறாமல் தவிர்த்து விட்டது கவனிக்கத்தக்கது…..
……………..
ஒருவழியாக, அதிமுக தனது பொறுப்பை உணர்ந்து –
அல்லது முக்கிய எதிர்க்கட்சி என்கிற தனது இடத்தை
தக்க வைத்துக்கொள்ள – மீண்டும் செயல்பட துவங்கி இருக்கிறது
என்று சொல்லலாம்…..!
அதிமுக-வை தூக்கத்திலிருந்து எழுப்பி ஆட்டத்தை துவக்க வைத்த
பெருமை பாஜகவின் அண்ணாமலை அவர்களையே சாரும்.
ஆனால், இதற்காக – பாஜக தனது ஆட்டத்தின் வேகத்தை
குறைத்துக் கொண்டு விடுமா என்ன…?
இனி, திமுக- மத்தளத்திற்கு, இரண்டு பக்கத்திலிருந்தும் “இடி”
கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்…!!! 🙂
.
……………………………………………….
//திமுக செய்த முதல் காரியம் அதிமுகவை அப்படியே செயலற்று முடக்கிப்போட்டது தான். அதற்காகவே, வரிசையாக அதன் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு, லஞ்ச ஊழல் வழக்கு, கோடிக்கணக்கில்
சிக்கிய பணம், சிறை – என்று காட்சியை விரித்தது. எதிர்பார்த்தபடியே, ரெய்டு, சிறைவாசத்தை தவிர்க்க நினைத்த அதிமுக தலைவர்கள் ஒடுங்கிப்போய், அடக்கி வாசிக்க ஆரம்பித்தார்கள்….//
இணையத்தில் பத்திரிகை நடத்தறவங்க, தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் பலர், பயந்து அல்லது காசு வாங்கிக்கொண்டு, ‘ஸ்டாலின் துபாய் பயணத்தால், புதின் மகள்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது’ என்ற ரேஞ்சுக்கு எழுதறாங்க. நீங்க என்னடான்னா ‘தற்போதைய பத்திரிகை உலக விதிகளை’ப் புறக்கணித்து எழுதப்பார்க்கிறீங்களே.
நீங்க எழுதியிருக்கறதைப் பார்த்தால், பாஜக மத்திய அமைப்புகளை வைத்து திமுகவின் ஊழலுக்குக் கடிவாளம் போட்டு ஊழல்வாதிகளை ஜெயிலுக்கு வரிசையாக அனுப்பி திமுகவையும் முடக்கிவிடும் போலிருக்கே. அதனால்தான் பிரதமரையும், மத்திய உள்துறை அமைச்சரையும் மிக பவ்யமாக (கே கே எஸ் எஸ் ஆர் ரேஞ்சுக்கு) ஒரு சிலர் பார்த்துட்டு வந்தமாதிரித் தோணுதே.
அப்படி நீங்க எழுதும்போதும், ‘செயலற்று முடக்கிவிடலாம்’ என்று எதிர்பார்த்து பாஜக அண்ணாமலையை நோக்கி மிரட்டல் கணைகளை பாரதி மூலமாக விட்டும், கெத்தாக ‘தைரியமிருந்தால் கைது செய் பார்க்கலாம்” என்று கமலாலயத்தில் காத்திருந்த அண்ணாமலையை ‘மடியில் கனமில்லை வழியில் பயமில்லை’ என்று விவரிக்கலாமா? 100 கோடி மானநஷ்ட வழக்கு, 500 கோடி மானநஷ்ட வழக்கு, 10 கோடி மானநஷ்ட வழக்கு என்று மிரட்டல் விடறாங்களே தவிர, ஐந்து பைசாவுக்கும் வழக்குப் போடும் தைரியம் வருவதுபோலத் தெரியவில்லையே
புதியவன்,
நீங்கள் கூறியுள்ள இந்த இரண்டுமே சரியானவை தான் –
” அதனால்தான் பிரதமரையும், மத்திய உள்துறை அமைச்சரையும்
மிக பவ்யமாக (கே கே எஸ் எஸ் ஆர் ரேஞ்சுக்கு) ஒரு சிலர் பார்த்துட்டு வந்தமாதிரித் தோணுதே.
-சவுக்கு சங்கர் பேட்டியிலும் அவர் இந்த பாயிண்டை
வலியுறுத்திச் சொல்லி இருந்தாரே….
” கமலாலயத்தில் காத்திருந்த அண்ணாமலையை
‘மடியில் கனமில்லை வழியில் பயமில்லை’ என்று விவரிக்கலாமா?
அண்ணாமலை இதுவரை ” காசு சம்பாதிக்கக்கூடிய பதவிகள்
எதிலும் இருந்ததில்லை ” – என்பதால் இதையும் தாராளமாகச் சொல்லலாம்.
.
வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
IPS பதவியில் சம்பாதிக்க முடியாதா
Dear Kaverimainthan
I am your regular reader of your writings
Everyone knows how the previous Govt
Run by the AIDMK after the death of
JJ and not less corrupt then DMK . The survived solely with Support of BJP
I feel the incident occurred now is stray incidents . As regards to
corruption
It is mixed with all politician no exemption
For any party both in central and state
On Thu, Apr 7, 2022 at 12:59 வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் wrote:
> vimarisanam – kavirimainthan posted: ” … ….. சட்டமன்ற தேர்தலின்போது,
> பாஜகவை ஒரு மைனர் பார்ட்னராக,அதிமுக தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டது…
> ஆனால், அவர்களின் துரதிருஷ்டம், தேர்தலில் அவர்கள் தோற்றுதிமுக வென்று ஆட்சியை
> கைப்பற்றியது… ஆட்சியை க”
>
//and not less corrupt then DMK . The survived solely with Support of BJP I feel the incident occurred now is stray incidents . As regards to corruption It is mixed with all politician no exemption//
என் observations படி, திமுக அடிப்பது மெகா கொள்ளை மாதிரித்தான் செய்திகள் வருகின்றன. ஆவினுக்கே இனிப்புகள் ஆர்டர் கொடுக்காமல் சம்பந்தமே இல்லாத கம்பெனிக்கு, 2ஜி கண்டிஷன்ஸ் ஆ.ராசா போட்டதுபோல, இத்தனை கோடி டர்ன் ஓவர் இருக்கணும் என்று போட்டது எந்த அரசு? குஜராத்திலிருந்து மட்டமான வெல்லம் போன்றவற்றைத் தருவித்து ரேஷன் கடையில் கொடுத்தது எந்த அரசு? எத்தனை ஊழல்கள் இந்த பத்து மாதங்களில் வெளிவந்துவிட்டன? அதைவிட, கட்சிக்காரர்கள் அராஜகம், போலீஸ் நிலையங்களின் கட்டுப்பாடு கட்சிக்கு வருவது, கோயில்கள் இடிப்பு, வெளிப்படையான இந்து மத எதிர்ப்பு…….. அப்போது கடுமையாக எதிர்த்தவற்றை, அதைவிட அதிகமாக implement செய்வது, அப்போது பொங்கிய பத்திரிகைகள் இணையப்புலிகள் இப்போது ஷூ பாலிஷ் போட்டுவிடுவது, தன் நிறுவனத்துக்குத் தராத படங்கள் வெளியிடுவதில் சிக்கல், உண்மைச் செய்திகளே போடாமல், சாஷ்டாங்கமாக அடிமை வேலை பார்க்கும் பத்திரிகைகள், தொலைக்காட்சி மீடியாக்கள், அன்று சிங்கக் குரல் எழுப்பிய கோவாலசாமி பரிதாபமாக மானம் இழந்து, பதவிக்காக, உதயநிதிக்கு வணக்கம் வைக்க எழுந்து நின்றுகொண்டிருப்பது போன்றவை எனக்கே பார்க்க சகிக்கலை
உதாரணத்திற்கு நேற்றைக்குச் செய்தி, ‘நடிகர் விஜய் முதல்வரைச் சந்தித்தார்’ என்பது பத்திரிகைத் தலைப்பு. ஆனால் உண்மை என்ன? ஏதோ திருமணத்துக்கு விஜய் போயிருக்கிறார். அவர் மண்டபத்தை விட்டுச் செல்லப் போகும் சமயத்தில் ஸ்டாலின் அவர்களும் விஜயம் செய்திருக்கிறார். ஒரு மரியாதை நிமித்தமாக ‘வணக்கம்’ வைத்திருக்கிறார். இப்போது அந்த நிகழ்வையே வைத்து, அவர் ஏதோ முதல்வரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிச் சந்தித்தது போலும், அவர் படத்தின் வெளியீட்டை முடிச்சுப் போடுவது என்றெல்லாம் இந்தப் பத்திரிகைகள் எழுதுவது, பேசுவது/நடந்துகொள்வது ஷூ பாலிஷ் போடுவதை விட அசிங்கமான வேலை அல்லவா?
நல்லவேளை….கவர்னர் இருக்கிறார். இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்று நினைக்கவே அச்சம்தான். உதாரணமாக, பல்கலைக்கழக வழிகாட்டுக் குழுக்களில் இருப்பவர்கள் படித்திருக்கத் தேவையில்லை என்ற புதிய நெறிமுறையின் அர்த்தம் என்ன? தேசத்ரோகம், terrorism இவற்றில் ஈடுபட்ட குற்றவாளிகளையும் விடுவிக்க கோப்பு அனுப்பவேண்டிய அவசியம் என்ன?
இப்போது நடப்பது stray incidents அல்ல.