….



….
நம் மக்களின் இயல்பு – பொய்யைச் சொன்னால் உடனடியாக
நம்பி விடுவார்கள்… ஆனால், உண்மையைச் சொன்னால் –
ஆதாரம் கேட்பார்கள்…!!!
பாஜக பக்கம் திமுக போகப்போகிறது என்று அதிமுக
தலைவர்களில் ஒருவரான ஜெயகுமார் அவர்கள் 2 நாட்களுக்கு
முன்னர் சொன்னதாக ஒரு செய்தி வந்தது….
யாரும் அதை நம்பியிருக்க மாட்டார்கள்.
ஜெயகுமார் எந்த கோணத்தில் சொன்னாரோ –
ஆனால், நான், என் கோணத்தில், இது சாத்தியமாகக் கூடும்
என்றே நினைத்தேன்….
நான் ஏற்கெனவே சில விஷயங்கள் குறித்து யோசித்து,
இப்படியும் நடக்கக்கூடும் என்று நினைத்தேன்….
ஆனால், என்னிடம் ஆதாரங்கள் எதுவும் இல்லாததால்,
நேரம் வரும்போது எழுதுவோம் என்று நினைத்திருந்தேன்.
அதை உறுதிப்படுத்துகிறது சவுக்கு சங்கர் அவர்கள்
தந்திருக்கும் ஒரு விரிவான பேட்டி…
பொதுவாக சவுக்கு சங்கர் அவர்களின் பேட்டிகளில்,
30 -40 % உண்மை இருக்கும்… மீதி – அந்தந்த நேரங்களில்
அவர் மனம் விரும்புவது வெளிப்படும்.
ஆனால், இந்த பேட்டியில் 80-85 சதவீதம் உண்மை இருக்கிறது
என்பது என் கருத்து…..
திமுகவும் பாஜகவும் நெருங்கக்கூடும் என்பதை
வாசக நண்பர்கள் பலரும் கூட நம்ப மாட்டீர்கள்….
எதிர்பார்க்க மாட்டீர்கள்..
ஆனால், இந்த பேட்டியைப் பார்த்து விட்டு சொல்லுங்கள்…
உங்கள் அடிப்படை நம்பிக்கை இன்னும் அப்படியே இருக்கிறதா….???
அல்லது கொஞ்சமாவது தளர்ந்திருக்கிறதா…?
திமுக தன் கூட்டணியிலிருந்து – காங்கிரஸ் கட்சியை கழட்டி விட வேண்டும் என்பது தான் பாஜகவுக்கு முக்கிய குறிக்கோள்….. அதற்காக -பாஜக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் என்பதே உண்மை….!!!
……
.
……………………………………………..
இது உண்மையாக இருக்கும் என்று தோன்றவில்லை. தி மு க வினால் ஆகவேண்டியது பிஜேபிக்கு ஒன்றும் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக தி மு க விற்கு மாற்று பிஜேபி என்று தமிழகத்தில் நிறுவ அண்ணாமலை முயற்சித்துக்கொண்டிருக்கிறார். முன்னேறிக்கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.
திமுக வின் குடுமி பிஜேபி கையில். இன்னும் உலுக்கவே ஆரம்பிக்கவில்லை!
1. படுபயங்கர திமுக ஜால்ராவாக இருந்த சவுக்கு சங்கர், ஒரு சில வாரங்களுக்குள் கொஞ்சம் திமுக எதிர்ப்பு என்ற நிலை எடுப்பதுபோல (அதாவது அவங்க ஊழலை வெளிப்படையாகப் பேசுவதுபோல) இருக்கிறது.
2. திமுகவின் எத்தர் வேலைகளை பாஜக நிச்சயம் அறியும். ஐந்து பைசா மாறனுக்குச் செலவழிக்கக்கூட மனதில்லாமல், அரசு செலவில் சிகிச்சை பெறட்டும் என்று விட்டுவைத்து அதற்காக பாஜக கூட்டணியில் இருந்து, மாறன் இறந்ததும் கூட்டணியை முறித்துக்கொண்ட திமுகவைப் பற்றி பாஜகவிற்கு தெரியாமலா இருக்கும்?
3. திமுக, மத்திய அரசுடன் சந்திப்பதற்கு முன்பு கூழைக்கும்பிடு போடுவதும் (ஸ்டாலின், மற்றும் இணையப் பத்திரிகைகள் எப்படி பேசுகின்றன எழுதுகின்றன என்று பார்த்தால் இதனைக் கண்டுபிடிக்கலாம். மத்திய அமைச்சர், மத்திய என்றெல்லாம் எழுதுவார்கள்), சென்னைக்குத் திரும்பியவுடன் பாஜகவை மூர்க்கமாக எதிர்ப்பதுபோலவும் அவர்களைப்பற்றி மோசமாகப் பேசுவதும் வழக்கமாக வைத்துள்ளார்கள். திமுகவிற்கு, இந்து எதிர்ப்பு அஜெண்டா. பாஜகவிற்கோ, இந்து ஆதரவு என்பது அஜெண்டா (அதுதான் அவர்களின் பெரிய வாக்கு வங்கி). அதனால் இருவரும் கூட்டுச் சேர்வது சாத்தியமல்ல.
4. தென்னகத்தில் வாக்கு வங்கி இல்லாமலேயே, கூட்டணி மூலம், தன் இருப்பை உயிர்ப்புடன் தமிழகத்தில் வைத்திருக்கிறது காங்கிரஸ். திமுக, காங்கிரஸ் கூட்டணி முறிவு, பாஜகவிற்கு நல்லதுதான். உண்மையைச் சொன்னால், திமுக கூட்டணியிலிருந்து எப்போது காங்கிரஸ் விலகுகிறதோ அப்போது, கிறிஸ்துவ வாக்குகள் பிரியும். முஸ்லீம் வாக்குகள் நிச்சயமாக, பாஜக்விற்கு எதிராக, ஜெயிக்கும் கட்சியான திமுகவிற்குச் செல்லும். காங்கிரஸ், திமுக கூட்டணியிலிருந்து விலகினால், பொய்ச்செய்திகள் வெளியிடும் விவாதிக்கும் சேனல்களில் சில, உண்மைச் செய்திகளுக்குத் திரும்பலாம்.
பாஜக, திமுக கூட்டணியில் சேராது என்றே நான் நம்புகிறேன். மெதுவாக அதிமுகவின் பெரும்பகுதி பாஜகவுக்கும் சிறு பகுதி திமுகவுக்கும் செல்லும் என்று நான் நினைக்கிறேன். (ஒருவேளை திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டால், என்னைப்போன்றவர்களின் வாக்கு பாஜகவுக்குக் கிடைக்காது, பாஜக தமிழகத்தில் வளரும் வாய்ப்பை ஊத்திமூடியதாகிவிடும்)
பேட்டி எடுப்பவரும் (மாதேஷ்), பேட்டி கொடுப்பவரும் திமுக காரங்க மாதிரித்தான் எப்போதும் நடந்துக்குவாங்க (பல வருடங்களாக). அதிலும் மாதேஷ், முழுக்க முழுக்க திமுகதான்.
ஒவ்வொரு பிரச்சனையிலும், திமுக, மத்திய பாஜக அரசின்மீது பழி சுமத்துகிறது. டாஸ்மாக் விலை உயர்வுக்கு மாத்திரம்தான் பாஜக காரணம் என்று சொல்லவில்லை. இப்படி தொலைக்காட்சி பத்திரிகையின் மூலம் பாஜகவின் இமேஜைக் குறைக்கும் வேலைகளைத் தொடர்ந்து திமுக செய்துவருவதால், கூட்டணி என்ற கனவு பலிக்காது என்று நினைக்கிறேன்.
//சொத்து வரி உயர்வு மனமுவந்து செய்யவில்லை என்று சட்டசபையில் முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.// – நேற்று அமைச்சர் நேரு, மத்திய அரசின் அழுத்தத்தால்தான் சொத்துவரியை கடுமையாக உயர்த்த நேர்ந்தது என்று சொன்னார். அண்ணாமலை ப்ரெஸ் மீட்டில் கடுமையான எதிர்வினை கொடுத்ததும், இன்று ஸ்டாலின், தானாகவே, விருப்பம் இல்லாமல் சொத்துவரியை உயர்த்தியிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். அப்புறம் ஏன் 2018ல், சொத்து வரி இதில் பாதியைவிடக் குறைவாக அதிமுக உயர்த்த முயற்சித்தபோது கடுமையாக எதிர்வினையாற்றினீர்கள் என்று யாரும் (பத்திரிகை, இணைய தொலைக்காட்சி) கேட்கமாட்டார்கள். அவர்கள், இந்த விஷயத்தை அலசாமல், அண்டார்டிகாவில் மீன்கள் ஏன் குறைவு என்றோ இல்லை, ஹிஜாப் விஷயத்தைப் பற்றியோ விவாதம் நடத்துவார்கள்.
திமுக பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லை. ஏன் என்றால் அந்த அளவுக்கு
அண்ணாமலை அவர்கள் திமுகவின் ஊழல்களை புட்டு புட்டு வைக்கிறார்.
அதற்கு திமுகவிடம் இருந்து ஒரு வலிமையான எதிர்ப்பு எதுவுமில்லை.
அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என்று கேலி செய்வதோடு தவிர, இல்லை நாங்கள் ஊழல் எதுவும் செய்யவில்லை என்று உறுதியாக அவர்களால் கூற முடியவில்லை.சவுக்கு சங்கரும் தன் பங்குக்கு
திமுக ஊழல்களை expose செய்கிறார்.திமுக அமைச்சர்கள் மீது ED கேஸ் இருக்கிறது என்கிறார்கள்.
ஆனால் அவை எப்போது அடுத்த கட்டங்களை நோக்கி நகரும் என்று தெரியவில்லை.
திமுக ஒரு இந்து எதிர்ப்பு கட்சி.பாஜக ஒரு இந்துத்வ கட்சி.இக்கட்சிகள் இப்போதைய நிலைமையில்
இணைய வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.