சிபிஐ மீதான நம்பிக்கை குறைகிறது -சொல்வது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி …

….

டில்லியில் சி.பி.ஐ., சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா
அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னர் பேசியதிலிருந்து –

…………..

“ஆட்சி அதிகாரத்துக்கு வரும் அரசியல் பிரதிநிதிகள்
நேரம் வரும்போது மாறிவிடுவார்கள். ஆனால், சி.பி.ஐ. போன்ற
புலனாய்வு நிறுவனங்கள் நிரந்தரமானவை.

அவற்றில் யாராலும் தலையிட முடியாது. அவை சுதந்திரமானவை.
உங்கள் வேலைக்கு நேர்மையாக இருப்பேன் என உறுதி கூறுங்கள். சகோதரத்துவமே உங்கள் பலம்.” என்றார்.

“ஆரம்பத்தில் சிபிஐ மீது பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

பல்வேறு நீதிமன்றங்களில் சிபிஐக்கு விசாரணையை
மாற்ற வேண்டும் என்ற வழக்குகள் நிரம்பி வழிகின்றன.
ஆனால், சமீப காலமாக சிபிஐ மீதான நம்பகத்தன்மை குறித்து
சி.பி.ஐ.-யும் ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

சி.பி.ஐ-யின் ஒவ்வொரு நகர்வுகளின் அடிப்படையிலும் அதன் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக சிபிஐ விசாரணைகள் தொடர்பாக
அதிகளவில் ரகசியம் காப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

சிபிஐ தலைவரை தேர்ந்தெடுக்க ஆணையம் வேண்டும்…
சிபிஐ அமைப்பிற்கு என தனி விதிகள் தேவைப்படுகின்றன.
அதில், அதன் செயல்பாடுகள், அதிகாரங்கள், எல்லைகள்
வகுக்கப்பட்டு இருக்க வேண்டும். சிபிஐக்கு தலைவரை
தேர்ந்தெடுக்க பாரபட்சம் பார்க்காத சுதந்திரமான ஆணையத்தை
அமைக்க வேண்டும். அதில் பலதுறைகளை சேர்ந்தவர்கள்
நியமிக்கப்பட வேண்டும்.” என்றார்.

காவல்துறை பற்றி கூறும்போது, “அரசியல் அதிகாரம்
படைத்தவர்களால் காவல்துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது.
போலீசார் பாரபட்சம் பார்க்காமல் செயல்பட வேண்டும்.
ஜனநாயக அம்சங்களை நிலைநிறுத்தி வலுப்படுத்த வேண்டும். எந்தவிதமான சர்வாதிகாரப் போக்கையும் காவல்துறை கையில் எடுக்கக்கூடாது. இதிலிருந்து தடம் மாறிச்செல்வது ஜனநாயகத்தையே பாதிக்கும்.” என்றார்.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு விசாரணை
அமைப்புகளை, ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
அது தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும்.
லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளால், போலீஸ் மீதான மதிப்பு சீரழிந்துவிட்டது. அதனால், சி.பி.ஐ., அதிகாரிகள் உள்ளிட்ட
போலீசார், நேர்மையை கடைப்பிடித்து, மக்கள் சேவையில்
முழுமனதுடன் ஈடுபட வேண்டும்….
……….

பாவம்… ஆழ்ந்து யோசித்து, நாட்டிற்கு அவசியமானதை
வெளிப்படையாகப் பேசுகிறார் இவர்…

ஆனால், இவர் பேசுவதை யார் கேட்கப்போகிறார்கள்
இந்த நாட்டில்…..? அதிகாரிகளா – அரசியல்வாதிகளா….?

எதாவது ஒரு வழக்கின் மூலம் இந்த கருத்துகளை
சுப்ரீம் கோர்ட்டின் ஆணையாக தெரிவிக்க முடியுமானால்,
ஒருவேளை பலனளிக்கலாம்….!!!

.
…………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to சிபிஐ மீதான நம்பிக்கை குறைகிறது -சொல்வது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி …

 1. கார்த்திகேயன் சொல்கிறார்:

  பாவம். ஆளுநர் / ராஜ்பயசபா உறுப்பினர் பதவி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டார்

 2. புதியவன் சொல்கிறார்:

  ஒரு அமைப்பின் நம்பகத் தன்மை அது யாரால் நிர்வகிக்கப்படுகிறது என்பதைப் பொருத்தது.

  டி என் சேஷனும் அப்படிப்பட்ட அமைப்பின் தலைவராக இருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சந்தித்துச் சம்பாதித்த முந்தைய சிபிஐ இயக்குநரும் அப்படித்தான் இருந்தார்.

  எதுவும் அந்த அந்த ஆளுமையை மட்டைமே பொருத்து இருக்கிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   அப்படியென்றால், அரசியல் தலைமையின்
   செல்வாக்கே அதில் இல்லை என்பது
   உங்கள் அபிப்பிராயமா ….?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   கா.மை. சார்… அரசியல்வாதிகள், பெரும் கார்ப்பொரேட்டுகள் தூண்டில்களை விரிக்கும் இடத்தில் இருக்காங்க. மத்திய அரசோ இல்லை மாநில அரசோ. (அவங்களால, ஓய்வு பெற்ற நீதிபதி கமிஷன், கவர்னர், தங்கள் கார்ப்பொரேட்டில் பெரிய வேலை என்றெல்லாம்). அதற்கு மயங்குபவர்கள் இல்லாத துறையே கிடையாது (பிஎஸ் என் எல் வேலுச்சாமி போல). அதையும் மீறி நேர்மையாக அதிகாரிகளால் செயல்பட முடியும். அதற்கு திராணியும் ரத்தத்தில் நேர்மையும் வேணும், டி.என்.சேஷன் போன்ற அதிகாரிகள் போல.

   //ஆழ்ந்து யோசித்து, நாட்டிற்கு அவசியமானதை வெளிப்படையாகப் பேசுகிறார் இவர்…// – அதனை டி.என்.சேஷன் போன்றவர்கள் மட்டுமே செயல்படுத்தினார்கள். அதன் பிறகு என்னவாயிற்று? தேர்தல் ஆணையராக ஒருவர் இருக்கக்கூடாது, மூன்று பேர் கொண்ட குழு என்று சோனியா காந்தி அதனை நீர்த்துப்போகச் செய்தார். Politicians can tempt.

 3. Tamil சொல்கிறார்:

  சாமானியனின் பார்வையில் உச்சநீதிமன்றமும் நம்பிக்கை இழந்து வருகிறது அதை சரி செய்ய வேண்டிய இடத்தில் இருக்கின்ற தலைமை நீதிபதிக்கு அது புரியுமா என்பது சந்தேகம் தான்.

 4. Thirumalachari Thiruvengadam சொல்கிறார்:

  Blatant misuse of the agencies was done during congress rule also but it was subtle and selective. The present regime having been voted to power by anintoxicated population who has been provided with spirits of religion Ram and and a fear psychosis is not only blatant but uses them to suppress and dissidence and even informed criticism

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.