…

….
டெல்லி சட்டமன்றத்தில், முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்
அவர்கள் 4-5 நாட்களுக்கு முன் பேசிய 8 நிமிட உரை – கீழே
காணொளியாக தரப்பட்டிருக்கிறது…..
நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று கெஜ்ரிவாலின் பேச்சைச் கேட்டு
அனுபவித்து சிரித்தேன்; மீண்டும் போட்டு, ரசித்துச் சிரித்தேன்.
அவரது இந்த பேச்சைக் கேட்டு சிரிக்காமல் இருக்க முடியாது.
அரசியல் என்றாலே ஒருவரை ஒருவர் அசிங்கமாக திட்டுவது,
கோபமாகத் திட்டுவது என்றிருக்கும் இன்றைய உலகில்,
சிரிக்கச் சிரிக்க –
எதிர்க்கட்சியை(அவரது) கலாய்ப்பது பிரமாதம்….
மொழிபெயர்ப்பு செய்து போடாலும் கூட
ஹிந்தி தெரியாதவர்களால் இதை ரசிக்க முடியாது….
அந்த காமெடி உணர்வை மொழி பெயர்ப்பது இயலாத காரியம்….
( அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பின், கெஜ்ரிவால்,
பிரதான எதிர்க்கட்சித் தலைவராக வரக்கூடும்…!!!
ஆளும் கட்சி எதாக இருக்கும் என்பது குறித்து நான் எதுவும்
கூறவில்லை ….!!! )
கெஜ்ரிவால் நல்லவரா…. கெட்டவரா
என்பது குறித்து இங்கே நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை;
ஆனால், மிகவும் தந்திரசாலியான,
புத்திசாலியான – ஒரு அரசியல்வாதி….!!!
பிழைக்கத் தெரிந்தவர்… பொது இடங்களில்
ஹிந்தியை தவிர வேறு எந்த மொழியிலும்
பேச மாட்டார் என்பதும் அவரது விசேஷங்களில் ஒன்று ….!!!
…………..
.
…………………………………………………