……

……
தொழில் முதலீட்டார்களை தமிழகத்திற்கு ஈர்க்கும் பொருட்டு,
தமிழக அரசு துபாயில் பல தொழிலதிபர்களுடன் தொடர்பு
கொண்டிருக்கிறது….
இது குறித்து அடிப்படை பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்காக,
அரசு அதிகாரிகள் துபாய் செல்வதும், சம்பந்தப்பட்டவர்களுடன்
பேச்சு வார்த்தைகள் நடத்துவதும் சகஜமே…
இது அதிகாரபூர்வமான அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகள்.
ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்றைய
செய்தியாளர் சந்திப்பின்போது, பிப்ரவரி மாதமே
திருவாளர் சபரீசன் துபாய் சென்றதாகவும், தற்போது
தமிழக அரசுடன் 3500 கோடி ரூபாய் முதலீட்டிற்கு ஒப்பந்தம்
செய்திருக்கும் லூலூ க்ரூப்ஸ் தொழிலதிபர் யூசுப் அலி
அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும்
சொல்லி இருக்கிறார்….
முதலீட்டாளர்களை சந்தித்து பேசுவது,
தமிழக அரசு அதிகாரிகளின் அரசுப்பணி…பொறுப்பு.
இதில் திருவாளர் சபரீசன் சம்பந்தப்பட்டது எப்படி….?
திருவாளர் சபரீசன் தமிழக அரசில் எதாவது அதிகாரபூர்வமான
பதவி, பொறுப்பு வகிக்கிறாரா….?
பொதுவாக வர்த்தகங்களில் பல வித தரகர்கள் –
கமிஷன் ஏஜெண்டுகள் – உண்டு…. உதாரணமாக,
ரியல் எஸ்டேட் துறையில் டீல் முடித்து
கொடுக்கும் பணியை செய்வதற்கென்றே ரியல் எஸ்டேட்
ஏஜென்சிக்கள் உண்டு. இவர்கள் அதிகாரபூர்வமாக,
வெளிப்படையாக இயங்குவார்கள்….
அவர்கள் முடித்து கொடுக்கும் பணியின் மொத்த மதிப்பில்
இவ்வளவு சதவீதம் கமிஷன் என்று வெளிப்படையாக
அறிவித்தே செயல்படுவார்கள்.
2%, 5%, 10 % -என்று தொழிலுக்கு தகுந்தாற்போல் கமிஷன்
தீர்மானிக்கப்படும்…. இந்த கமிஷன் ஏஜெண்டுகள் –
(இடைத்தரகர்கள்) வெளிப்படையாக இயங்குபவர்கள்….
இவர்களது நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு, வரவு-செலவு,
தணிக்கை செய்யப்பட்டு, வருமான வரியும் கட்டுபவர்கள்.
திருவாளர் சபரீசன், அப்படி எதாவது கமிஷன் ஏஜென்சி
நடத்துகிறாரா….? தமிழகத்திற்கு முதலீட்டாளர்களை
கொண்டு வரும் பணியில், அவரது நிறுவனம் எதனுடனாவது
அரசு அதிகாரபூர்வமாக ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறதா…?
அப்படி எதுவும் இல்லையென்றால்,
திருவாளர் சபரீசன் இவ்வாறு முதலீட்டாளர்களுடன் தொடர்பு
கொண்டு, பேரம் பேசுவது – முறையற்ற செயலாகுமே…
சட்டபூர்வமான அதிகாரம் பெறாதவர்கள் இடைத்தரகர்களாக
செயல்படுவது முறையல்லவே…
அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதை தவிர்க்க,
இத்தகைய செயல்களுக்கு,
சம்பந்தப்பட்டவர்கள் தெளிவாக விளக்கம் அளிப்பது அவசியம்….
.
…………………………………………………
இந்த மாதிரி இதையே நோண்டிக்கொண்டு இருக்கக்கூடாது, உண்மை மக்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகத்தான் நாஞ்சில் சம்பத்தின் தீப்பொறி ஆறுமுகப் பேச்சு. (நாஞ்சில் சம்பத் யாருன்னு கேட்கறீங்களா? வரும் வருமானத்துக்கு ஏற்றபடி, கட்சிக்கு ஏற்றபடி நாவை வாடகைக்குக் கொடுக்கும் வை.கோ அவர்களின் வார்த்தெடுப்பு)