…….

…..
தமிழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட
உண்மையான எதிர்க்கட்சியின்
முக்கியத் தலைவர்கள் – அநேகமாக – எல்லாருமே –
ஆளும்கட்சியின் ரெய்டு’க்கு பயந்துகொண்டு, பம்மி, பயந்து,
பதுங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் –
நாலே.. நாலு – எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டிருக்கும்
பாஜகவின் தலைவர் அண்ணாமலை,
துடிப்புடன் செயல்பட்டு, ஊழல்களை, தேடித்திருவி
கண்டுபிடித்து – வெளிப்படுத்தி
உண்மையான எதிர்க்கட்சியின் பணிகளை திறம்படச்
செய்து கொண்டிருக்கிறார்….
ஊழல் ஒழிப்பு பணிகளை அசராமல் தொடர –
வாழ்த்துகள் அண்ணாமலை சார்…..
கீழே – இன்றைய தினமலர் நாளிதழ் செய்தியொன்று –
……………

.

விஜயகாந்திற்கு ரசிகர் மன்றங்கள் இருந்தன… நல்ல அறிமுகம் கிராமப்புரங்கள் வரை இருந்தன. அதனால் அவர் ஆளுங்கட்சியை எதிர்த்து தில்லாகக் களம் இறங்கியபோது வெற்றி காண முடிந்தது. அவரே தனியாகத் தொடர்ந்து களத்தில் இருந்திருந்தால், ஒரு சமயத்தில் சுலபமாக 15 சதத்தையும் தாண்டியிருக்கலாம். ஜெ. கரு போன்ற ஆளுமைகளை மீறி இவ்வளவு சதம் வாக்கு வாங்கியதே ஒரு சாதனை. ஆனால் மக்கள் அராஜக ஆட்சியை வெளியேற்றணும் என்று நினைத்தால் யாருக்கு வாக்களித்தால் அதனை வெளியேற்றமுடியுமோ அந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்பர். இதனாலேயே 2011ல் ஜெ. தான் விஜயகாந்துடன் கூட்டுச் சேராமலேயே பெருவெற்றி பெற்றிருக்க முடியும், தவறு செய்துவிட்டேன் என்று பின்னர் சொன்னார். (அந்தக் கூட்டில்தான் விஜயகாந்தின் வீழ்ச்சி ஆரம்பித்தது என்பது வேறு விஷயம்).
தேசியக் கட்சிகளில் பல புல்லுருவிகள் (நெடுநாள் கட்சியில் இருப்பவர்கள், தலைமைக்கு வீட்டைக் கூட்டுபவர்கள், செருப்பை எடுத்துச் செல்பவர்கள், ஆம்லட் போட்டுத் தருபவர்கள், கார் ஓட்டுபவர்கள் என்று பலர் உண்டு). அதனால் கோள் சொல்லியே எந்தத் தலைவரையும் வளரவிடாமல் கட்சியை அழிப்பதில் கங்கணம் கட்டித் திரிவர். இதனை நாம் காங்கிரஸில் பார்த்திருக்கிறோம். ஜாஃபர் ஷெரீஃப், பிரதீபா பாடீல், மரகதம் சந்திரசேகர், விபி சிங்………. என்று நெடிய லிஸ்ட் உண்டு. இதுதான் மாநிலத் தலைவர்கள் வளர்வதற்கும், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் தடையாக இருப்பது. பாஜகவில் சித்தாந்த ரீதி அதிகமாக இருப்பதால் இது மிகவும் குறைவு. பாஜக கட்சியும், வயது உச்சவரம்பு, யாருக்கு சீட் வழங்குவது என்பதில் பெரும்பாலும் சித்தாந்தத்தைக் கடைபிடிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. (சில அரசியல் விதிவிலக்குகள் உண்டு)
அண்ணாமலையை ஒரு அஜெண்டாவுடன் பாஜக தலைமை இறக்கியிருக்கிறது என்று நம்புகிறேன். அவர் தொடர்ந்தால் பாஜக தமிழகத்தில் வளர்ச்சி பெறும். அண்ணாமலைக்கு தைரியமும், நேர்மையும் இருக்கிறது. படித்தவர். கைநாட்டு அரசியல்வாதிகளிடமிருந்து தமிழகத்தை மாற்றும் potential உள்ளவர் என்று நம்புகிறேன். அவர் வளர்ச்சி கூடும், at AIADMK’s expense என்பது என் அனுமானம். காரணம் திமுக வாக்கு வங்கி சிறுபான்மையினரின் வாக்குகள் மற்றும் தமிழர் அல்லாத மலையாளி, தெலுங்கு வாக்குகள் மற்றும் திக கோஷ்டி.
பாஜக தலைமை எந்த மாதிரி தமிழகத்தை approach செய்கிறது, எந்த அளவு தீயசக்திகளிடமிருந்து விலகி இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் காண முடியும். 1.75 லட்சம் கோடி, பிஎஸென்னெல் ஊழல் வழக்கு போன்ற பல வழக்குகளில் எப்படி நடந்துகொள்கிறது என்பதையும் பார்க்கணும். இதுவரை நம்பிக்கை தரும் விதமாக பாஜக நடந்துகொள்ளவில்லை (ஊழல் வழக்குகள், பணமதிப்பு இழப்பின்போது 2000 நோட்டுகள் லட்சக்கணக்கில் பிடிபட்டவரைத் தண்டிக்காமல் இருந்தது என்பது போன்று) காங்கிரஸ் போன்று, சில சீட்டுகளுக்காக தமிழகத் தலைவர்களைக் காவு கொடுக்கிறதா என்பதையும் பார்க்கணும். அண்ணாமலை மாதிரி தலைவர்கள் அரிதாகத்தான் தோன்றுவார்கள் என்பது என் எண்ணம் (விஜயகாந்தையும்-ஆரம்ப கால, அப்படித்தான் நான் எண்ணினேன்)
appadiye unga maami seitha SEBI corruption pathi pesina nanna irukkume
அதெல்லாம் இருக்கட்டும்……. முதல்வர் தில்லி செல்வதற்கு முன்பு, ‘மத்திய அமைச்சர்’ …, ‘மத்திய உள்துறை அமைச்சர்’….. என்று எல்லாவற்றிர்க்கும் ‘மத்திய’ என்பதைச் சேர்த்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டதைக் கவனித்தீர்களா?