,,,,


…………………………………………………………….
சென்ற வாரம் வந்த புகார் – போக்குவரத்து துறையில்
விஜிலன்ஸ் ரெய்டு …. கையும் களவுமாக
பிடிக்கப்பட்ட அதிகாரி, தண்டனையாக சென்னையிலிருந்து –
நாகர்கோவிலுக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார்….
( கைது, சஸ்பெண்ட் எதுவும் இல்லையா …?
நோ சார் … இது திராவிட மாடல்…!!!)

அதைத் தொடர்ந்து, அதிகாரி மீது ட்ரன்ஸ்ஃபர்
நடவடிக்கையாவது எடுக்கப்பட்டது….
ஆனால், அதே துறைக்கு பொறுப்பான அமைச்சர்
மீது நடவடிக்கை எதுவும் இல்லையா என்று கேள்வி எழுந்தது….

இது திராவிட மாடல் ஆயிற்றே – உடனடி ஆக் ஷன்….!!!
லஞ்சப்புகார் கூறப்பட்டஅமைச்சர்
போக்குவரத்து துறையிலிருந்து,
பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்…!!!
.
இதில் பரிதாபம் என்னவென்றால் –
அமைச்சரின் சொந்த தொகுதியான,
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் ஒன்றிய
வட்டார வளர்ச்சி அலுவலராக இருக்கும் ராஜேந்திரன்
என்பவர் தன்னை மேற்படி அமைச்சர் ஜாதி பெயரைச்
சொல்லி திட்டியதாக நேற்று தான் அவர் புகார் கூறி இருக்கிறார்….
…….
” அமைச்சர் கடந்த ஞாயிற்றுக்கிழமை என்னை வீட்டிற்கு
வர சொன்னார். அவரை பார்க்க வீட்டிற்கு சென்ற போது..
அவருக்கு மரியாதை செய்தும் அவர் என்னை ஜாதி
சொல்லி திட்டினார். —– —– என்று சொல்லி மீண்டும் மீண்டும்
திட்டினார் . உன்னை இடமாற்றி காட்டட்டுமா.. என்று கூறி
என்னை ஜாதி ரீதியாக 6 முறை எஸ்சி என்று கூறி திட்டினார்.
எனக்கு 57 வயதாகிறது. இந்த வயதில் என்னை இப்படி
யாரும் திட்டியது இல்லை. எனக்கு மனக்காயம் ஏற்பட்டுள்ளது.
எனக்கு தூக்கம் இல்லை. சாப்பிட முடியவில்லை.
இது பற்றி ஆட்சியர், துணை ஆட்சியரிடம் பேச முடியவில்லை.
அதனால் இப்போது செய்தியாளர்களை சந்தித்து என்
கஷ்டத்தை சொல்கிறேன் என்று முதுகுளத்தூர் ஒன்றிய
வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன்,
செய்தியாளர்களை சந்தித்து புகார் தெரிவித்துள்ளார்.

………….
அமைச்சர் மீது ஜாதியைச் சொல்லி திட்டினார்
என்று புகார் செய்த அலுவலர் ராஜேந்திரனுக்கு – உடனடியாக நீதி கிடைத்துள்ளது………
அவர் யார் மீது புகார் செய்தாரோ,
அந்த அமைச்சரிடமே பணி செய்ய வேண்டிய
கட்டாய நிலை அவருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாவம் – இந்த திராவிட மாடலில் – அவர் கதி என்ன ஆகப்போகிறதோ….?

( இதெல்லாம் குறித்து, விசிக தலைவர் தொல்.திருமா
அவர்களுக்கு இன்னும் ஒன்றும் தெரிந்திருக்காது….
தெரிந்திருந்தால் , இதுவரை சும்மா இருந்திருப்பாரா என்ன ….!!!)
பத்திரிகைச் செய்திகளிலிருந்து எடுக்கப்பட முடிந்தது இவ்வளவு தான்.
நாமாக விமரிசனம் என்று எதையாவது எழுதினால் –
- பாரதி சார் 100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்
அனுப்பி விடுவார் …..!!! - நமக்கேன் வம்பு…!!!
(விரைவில் இந்த திராவிட மாடல் அகில இந்திய அளவில் எடுத்துச்செல்லப்படும் என்று வேறு சொல்லி பயமுறுத்துகிறார்களே..>!!!)
.
……………………………………………….
..
டிடிவி தினகரன் அவர்களே இப்படியெல்லாம்
கூறும் அளவிற்கு சென்று விட்டதா திமுக ….?
..
தொல் திருமா அவர்களின் கவனத்திற்கு இந்தச் செய்தி இன்னும் செல்லவில்லை. அவரும் கோவாலசாமி போல, உக்ரைன் ரஷ்யா போரை ஊன்றிக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் மீது தவறில்லை.
முதலமைச்சர் ஸ்டாலின் சரியாக நடவடிக்கை எடுத்திருக்கிறார். நல்லவேளை வட்டாட்சியரை, போக்குவரத்துத் துறைக்கு மாற்றல் கொடுத்து பிரச்சனைக்குத் தீர்வு காணவில்லையே.
கொஞ்சம் காத்திருந்தால், ‘இந்தியாவுக்குமான சமூக நீதி’ என்ற புத்தகத்தை பிரியங்கா வதாரா மூலமாக வெளியிடும்போது இதுவும் நீதிகளில் ஒன்றாக வரலாம்.