….

……
2014 தேர்தல் முதற்கொண்டு, இன்றைய தினம் வரை
பிரதமர் மோடிஜியின் முதன்மை கோஷமே –
“காங்க்ரஸ் முக்த் பாரத் ” – அதாவது “காங்கிரஸ் இல்லாத
பாரதத்தை உருவாக்குவோம் “
- காங்கிரஸ் கட்சியை முற்றிலுமாக
இந்தியாவிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே
பிரதமரின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது….
இன்று வரை அந்த கொள்கையை நிறைவேற்றவே
அவர் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்….
ஆனால், நேற்று, மஹாராஷ்டிரா, புனே நகரத்தில்
ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, மத்திய அமைச்சர்
நிதின் கட்கரிஜி, இதற்கு நேர் மாறான கருத்தைச் சொல்லி
இருக்கிறார்…
கட்கரிஜி சொல்கிறார் –
“இந்திய ஜனநாயகத்துக்கு
வலிமையான காங்கிரஸ் கட்சி அவசியம்”
நம்ப முடியவில்லையா….?
இதோ செய்தித்தளங்களில் வெளிவந்துள்ள நிதின் கட்கரிஜி
அவர்களின் பேச்சு விவரம்….
………………………….
“நான் தேசிய அளவிலான அரசியல்வாதி.
மகாராஷ்டிர மாநில அரசியலுக்குள் வருவதை
நான் விரும்பவில்லை. ஒரு காலத்தில் நான் தேசிய
அரசியலுக்குச் செல்ல விரும்பவில்லை. ஆனால்
அங்கே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
தற்போதைய தேசிய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி பலவீனமாகி கொண்டிருப்பது நாட்டுக்கு நல்லதல்ல.
காங்கிரஸ் கட்சியின் இடத்தை மாநிலக் கட்சிகள் எடுத்துக்
கொள்ள முயற்சி செய்வது ஜனநாயகத்துக்கு
நல்ல அறிகுறி இல்லை.
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு என்பது முக்கியமானது.
இந்த வகையில் காங்கிரஸ் உறுதியாக இருக்க வேண்டும்
என்பதை நான் மனமார விரும்புகிறேன்.
அடல் பிகாரி வாஜ்பாய் மக்களவைத் தேர்தலில் தோல்வி
அடைந்திருந்தாலும், பண்டிட் ஜவகர்லால் நேருவின்
பெருமதிப்பைப் பெற்றிருந்தார். எனவே ஜனநாயகத்தில்
எதிர்க்கட்சிகளின் பங்கு மிக முக்கியமானது.
காங்கிரஸில் இருப்பவர்கள் தங்கள் நம்பிக்கையை
இழந்து விடாமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
தோல்விகளால் விரக்தி அடையாமல் இருக்க வேண்டும்.
வெறும் தேர்தல் தோல்விகளால் ஒருவர் தனது
சித்தாந்தத்தையோ கட்சியையோ விட்டுவிடக் கூடாது.
ஒவ்வொரு கட்சியும் அதற்கான நாளை அடைந்தே தீரும்.
அதுவரை உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது
தான் முக்கியமானது.
ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் ஜனநாயக வண்டியின்
இரு சக்கரங்களுக்கு நிகரானவை. வெவ்வேறு அரசியல்
கட்சிகளின் தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள்
இருந்தாலும் அவர்கள் எதிரிகள் என்று அர்த்தமில்லை”
………………….
கட்கரிஜி மிகவும் புத்திசாலியான நபர்.
அனைத்துக் கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு.
எல்லாரையும், சிரித்து அரவணைத்து செல்லக்கூடியவர்.
தான் இப்படி பேசுவதை மோடிஜி விரும்ப மாட்டார் என்று
தெரிந்திருந்தும், கட்கரிஜி இப்படி பேசுவது
எதைக் குறிக்கிறது…..?
கட்சி, பிரதமரின் கட்டுப்பாட்டில் இல்லையா…..?
.
……………………………………………….
//கட்சி, பிரதமரின் கட்டுப்பாட்டில் இல்லையா…..?// – நீங்களும் தமிழக செய்தி ஊடகங்களின் பாணியைப் பின்பற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரே செய்தியை வெவ்வேறு பாணியில் கட்சியைப் பொறுத்து தமிழக ஊடகங்கள் செய்திபோடும் விவாதம் செய்யும்.
ஸோஃபியா, தமிழிசையை எதிர்த்து விமானத்தில் கத்தினால், அது கருத்துச் சுதந்திரம். ஆனால் ஸ்டாலின் பயணத்தைப் பற்றிச் ‘சர்ச்சைக்குரிய’ கருத்தைப் பதிவிட்டவர் கைது என்று இன்று செய்தி போடுகிறார்கள் இந்த ஊடக வியாபாரிகள்.
பாஜகவில் ஜனநாயகம் போற்றப்படுகிறது என்றே, கட்கரியோ இல்லை சுப்ரமணியன் சுவாமியோ அல்லது வேறு யாரோ வித விதமாக தனக்குச் சரி என்று பட்டதைப் பேசுவதை நான் பார்க்கிறேன். நீங்க, கட்சியில் உள்ளவங்க எல்லோரும் மோடி, அமித்ஷா சொல்லுவதை மட்டுமே பேசணும் என்று எதிர்பார்க்கிறீங்க. ஹாஹா.
கட்கரி சொல்லுவது சரிதான். வலிமையான காங்கிரஸ் (வெளிநாட்டவர் பிடியில் இல்லாத, குடும்பச் சொத்தாக தலையாட்டிப் பொம்மைகளை மட்டும் பதவியில் அமர்த்துபவர் இல்லாத) இந்தியாவிற்கு நல்லது. இரண்டு வெவ்வேறு கொள்கை இருக்கும் தேசியக் கட்சிகள் வலிமையாக இருப்பது இந்தியர்களுக்கு நல்லது. நாளை பாஜக மீது நம்பிக்கை குறையும்போது வேறு alternate கட்சி இருக்கவேண்டும். மாநிலக்கட்சிகள் என்பவை சுயநலத்தால் ஆனவை. அவை நெல்லிக்காய் மூட்டையைப் போன்று சிதறிவிடும், அல்லது காங் திமுக கூட்டணி அரசு இருந்தபோது நாட்டின் பணத்தைச் சுருட்டியதுபோல ஆகிவிடும்.
உண்மையில் நான் கட்கர்ஜி சொல்வதை வேறு கோணத்தில் பார்க்கிறேன். அவர்கள் (BJP) AAPஐத்தான் threat ஆக நினைக்கிறார்கள். அதனால் காங்கிரஸ் வளர்வதோ இல்லை அதன் இடத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதோ, பாஜகவுக்குத்தான் லாபம் என்ற கோணத்தில் சொல்லுகிறார் என்று நான் நினைக்கிறேன்.
புதியவன்,
கட்கரியோ இல்லை
சுப்ரமணியன் சுவாமியோ அல்லது –
– “வேறு யாரோ” –
வேறு யாராவது கூட பேசிவிட முடியுமென்று
உண்மையிலேயே நீங்கள் நம்பினால், அது மகிழ்ச்சி
தரும் விஷயம் …!!!
————-
நான் எழுப்பிய இன்னொரு வினா….
“தான் இப்படி பேசுவதை மோடிஜி
விரும்ப மாட்டார் என்று தெரிந்திருந்தும்,
கட்கரிஜி இப்படி பேசுவது எதைக் குறிக்கிறது…..? ”
————-
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//தான் இப்படி பேசுவதை மோடிஜி விரும்ப மாட்டார் என்று
தெரிந்திருந்தும்,// – I don’t think so. BJP is against Congress only due to Sonia & co. They want Congress without Foreign elements. நமக்குத் தெரியும் காங்கிரஸ் இன்னும் பல காலத்துக்கு weakஆக இருக்கும். அதன் காரணம், அதனுடைய முஸ்லீம் வாக்குகள், யார் பாஜகவை வெற்றிகொள்வார்களோ அவர்களை நோக்கிச் செல்கிறது, சென்றுவிட்டது. காங்கிரஸின் வாக்குகள், to some extent, Christians. அது எப்போ மாறுபடுதோ அப்போ சோனியாவின் வாரிசுகளுக்கு தேர்தலில் நிற்கவே தொகுதி இருக்காது என்று நினைக்கிறேன்.
I also feel, all are RSS spokespersons. அதனால அவங்க பேச்சின் நோக்கம் ஒன்றாகவே இருக்கும். யஷ்வந்த், சு.சுவாமி போன்ற சில விதிவிலக்குகள் இருக்கும்.
.
நிதின் கட்கரிஜியின் அணுகுமுறைக்கும்,
மோடிஜியின் அணுகுமுறைக்கும் –
உள்ள வித்தியாசம் நிஜமாகவே
உங்கள் பார்வைக்கு புலப்படவில்லையா …?
.
உண்மையில் காங்கிரஸ் இருப்பது பிஜேபிக்கு நல்லது. காங்கிரஸ் இருக்கும் வரை மற்ற எதிர் காட்சிகள் ஒன்று சேராது. காங்கிரஸில் இல்லாத தொண்டர்களால் அது ஆட்சிக்கும் வர முடியாது. பல ஊர்களில் பல எதிரிகளோடு சண்டை போடுவதைவிட பலம் குறைந்த ஒரே எதிரியோடு சண்டை போடுவது எளிது.
அதனால்தான் காங்கிரஸ் மீதான எந்த வழக்கும் பெரிய அளவு முன்னேறாமல் அதே சமயம் ஊற்றி மூடாமலும் இருக்கிறது என்று தோன்றுகிறது.
மற்றபடி, உட்கட்சி ஜனநாயகம் போன்றவற்றை நான் நம்பவில்லை. எல்லா கட்சியிலும் பல விதமாக பேசக்கூடியவர்கள் இருப்பார்கள். அவர்கள் எப்போது பேசவேண்டும் என்பதை முடிவெடுப்பது தலைமைதான்!
நாளைக்கே பிஜேபியுடன் இணக்கமாகவேண்டும் என்றால் சிவசேனாவின் சஞ்சய் ராவத் குரல் அமுங்கிவிடும்!
வேறு கோணத்தில் எனது கருத்து…
மத்தியில் மாநிலகட்சிகளின் வளர்ச்சி இந்திய ஒற்றுமைக்கு ஆபத்து. மாநிலகட்சித் தலைவர்கள் அவர்களது மாநில நலனுக்கே முக்கியத்துவம் தருவார்கள். திமுக போன்ற கட்சிகள் அவர்களது குடும்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும்
The absence of congress will compel Modi to find another target to polarize the votess.It is not correct to say all Muslims and Christians are anti Hindu or anti BJP. What Gadgari feels the need to splinter votes and enable BJP to horse trade if need be if local groups are their and prevent them from joining to get her as happened in Marashtra based on subnationalism
//கட்சி, பிரதமரின் கட்டுப்பாட்டில் இல்லையா…..?
அவரே அவர் கட்டுப்பாட்டில்
எனக்கு இன்னும் அடுத்த பிரதமர் வேட்பாளரை ஆர்எஸ்எஸ் கூடாரம் தயார் செய்து விட்டது என்று தோன்றுகிறது
எனக்கு இன்னும் -> எனக்கு என்னவோ