…..

…..
அரசியலில், அதிகாரத்தில் உள்ள சில தெரிந்த நண்பர்கள்
மூலமும், பத்திரிகைகள், செய்தித்தளங்கள், வம்புத் தளங்கள்,
ஆங்கில மற்றும் இந்தி தளங்கள் மூலமும் – பரவலாக இல்லாத
சில வலைத்தளங்கள் மூலமாகவும் – நிறைய செய்திகள் தெரிய
வருகின்றன….
இவற்றை 100 சதவீதம் உண்மை என்று உறுதியாகச்
சொல்ல முடியாது – ஆனால்… அடிப்படையில் உண்மை…
மேற்கொண்டு, அவரவர் விருப்பங்களின்படி சில வகைகளில்
மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம். இவற்றில் எந்த அளவு
உண்மை, எந்த அளவு மிகைப்படுத்தல் – கற்பனை கலந்தவை
என்பதை என்னால் /உங்களால் ஓரளவு பிரித்தறிய முடியும்….
ஆனால், நான் இந்த செய்திகளின் அடிப்படையில்
எழுதுவதானால், இவற்றை ஆதாரங்களாக கொடுக்க முடியாது; ஏனென்றால், நான் எழுதக்கூடியவை முழுவதுமாக அவற்றை அடிப்படையாக கொண்டவையாக இருக்காது….
நான் எழுத நினைக்கும் பல விஷயங்கள், இந்த காரணங்களினால்
எழுத முடியாமல் போகின்றன… ஆதாரம் காட்டாமலும்
எழுதலாம் தான்… ஆனால் 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு
நோட்டீஸ் வந்தால் நானெங்கே போவது…..?
எதாவது அரசியல் கட்சிகள், செய்தி நிறுவனங்களைச்
சேர்ந்தவராக இருந்தால், அந்த பின்னணி, அவர்களை
காப்பாற்றும்; துணைக்கு வரும்.. ஆனால், நான் ….?
எந்த கட்சியையோ, நிறுவனத்தையோ – சாராமல் இருப்பவன் ;
என் மனசாட்சி மட்டுமே எனக்குத் துணை….
ஆனால், அதனால் என்னை காப்பாற்ற இயலாது.
எனவே, இப்போதெல்லாம் நான் நினைக்கும் பல கருத்துகளை,
சுதந்திரமாக எழுத முடியாத சூழ்நிலையில் தான் இருக்கிறேன்.
முன்பெல்லாம் இப்படி இல்லை; சில வருடங்கள் முன்பு வரை
என் எழுத்துக்கு எந்த வித தடங்கலும் இருந்ததில்லை;
எனவே, சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல், சில கருத்துகளை –
- அவை ஆதாரமற்றவையாக இருந்தாலும் கூட -வெளியிட
ஒரு வழி….. கீழே உள்ளது போன்ற காணொளிகளை
வெளியிடுவது. இங்கே பொறுப்பு அவர்களுடையதாகி விடுகிறதே…!!!
ஒரு காணொளி கீழே –
(எதெது உண்மை; எந்த அளவு உண்மை – என்றெல்லாம்
என்னிடம் கேட்காதீர்கள்; அதை உணர்ந்து கொள்வது
உங்கள் பொறுப்பு….!!! )
………
.
…………………………………………………
இதுக்கு முன்பு அண்ணாமலையிடம் 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு கேஸ் போட்டதாக திமுக இணையப் பத்திரிகைகள் பல எழுதின. அதுக்கு அப்புறம் அந்தச் செய்தி பற்றித் தகவல் இல்லை. இணையப்பத்திரிகைகள் அனேகமாக எல்லாமே, ஒரு செய்திக்கு இவ்வளவு காசு என்று யாரிடமோ வாங்கிக்கொண்டு வெளியிடுவது போலத்தான் ஒருதலைப்பட்சமான செய்திகளை வெளியிடுகின்றன.
காணொளிகளில் எப்போதுமே, ஆளும் கட்சிக்கு எதிர்ப்பாக வெளியிடப்படுபவைகளில் 60 சதம் உண்மை இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், ஆதரவாக வெளியிடப்படுபவைகளில் 6 சதம் உண்மை கூட இருக்காது. இப்படித்தான் நாம் புரிந்துகொண்டு, அரசியல் காணொளிகளைக் காண வேண்டும். அதிர்ஷ்டம் இருந்தால் 60 சதம் என்பது 80-90 சதமாக இருக்கலாம். 6 சதம் என்பது 1-2 சதமாகவும் இருக்கலாம்.
நம் முதல்வர் வேறு, துபாய் செல்லுமுன், தமிழக சட்டம் ஒழுங்குக்காக காவல்துறை கூட்டம் கூட்டினார் என்று நினைத்தால், திமுக இணையப்பத்திரிகைகளில், ஆளும் கட்சிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளை ஒடுக்குவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டம் அது என்று சொல்கிறார்கள்.
நியாயமான, நேர்மையான, வெளிப்படையான
விமரிசனங்களை அனுமதிக்க மறுப்பது –
இந்த மாதிரி மறைமுகமான, ஆதாரமற்ற,
யாரும் பொறுப்பேற்காத –
வதந்திகள் /செய்திகள் பரவுவதற்கே உதவும்.
அதிகாரத்தில் உள்ளவர்கள் இதை
புரிந்துகொள்வார்களா …?
.
அடிமை அரசு என திராவிட ஊடகங்களால் பரப்புரை செய்யப்பட்ட அதிமுக ஆட்சியில் கூட தங்களுக்கு இந்த மாதிரியான பயம் வந்ததில்லை. இதான் சார் திராவிட மாடல் ஆட்சி