…..

…..
விமரிசனம் தளத்தில் இரண்டு நாட்களுக்கும் முன்னர்,
“பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின்
புகாருக்கு, தேவை – அமைச்சரிடமிருந்து உரிய பதில் –
கேலியல்ல….!!!” என்கிற தலைப்பில், மின் வாரியம்
சம்பந்தப்பட்ட ஊழல் புகார் தொடர்பான ஒரு இடுகை
வெளிவந்திருந்தது….
அந்த இடுகையைத் தொடர்ந்து நமது வலைத்தள நண்பர் சிவா அவர்களிடமிருந்து வந்திருக்கும் ஒரு ஆவணம்
இந்த இந்த ஊழல் எந்த வகையில், “விஞ்ஞான”பூர்வமாக –
நடந்திருக்கிறது என்பதை தெளிவாக விளக்குகிறது….
அந்த ஆவணத்தை கீழே தந்திருக்கிறேன். ஊழல் குறித்த
முழு விவரங்களும் அதிலேயே அடங்கியிருக்கிறது….
உரிய முறையில் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று,
முதலில் ஸ்டே ஆர்டரும், பின்னர் வழக்கும் தொடுப்பதே
இந்த ஊழலை தடுத்து நிறுத்த தென்படும் ஒரே வழி ….
பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்
அதைச் செய்வாரென்று நம்புவோம்.
கிண்டல் செய்து – விஷயத்தை திசை திருப்பி – தப்பி விடலாம்
என்று கணக்கு போடும் “எக்ஸ்பர்ட்” ஊழல்வாதிகளுக்கு
எல்லா சமயங்களிலும், எல்லாரையும், ஏமாற்றி விட முடியாது
என்பதை புரிய வைக்க வேண்டும்.
………………



இந்தப் பதிவில் சொல்லியுள்ள தகவல் சரிதானா என்பதில் எனக்குச் சந்தேகம் உண்டு. நஷ்டத்தினால் ஷேர் 60 உள்ள ஒரு நிறுவனத்துக்கு பெரிய ஆர்டர் கொடுத்ததன்மூலம் ஷேர் 90 ஆகி, அதனால் எத்தனை கோடிகளோ லாபம் அடைவதற்காக இந்த அட்டு BGR நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள் என்றும் படித்தேன். இவையெல்லாம் காழ்ப்புணர்ச்சியில் சொல்லப்படுவது. முதல்வர், தன் குடும்பத்தோடு தனி விமானத்தில் துபாய் சென்று தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவேண்டு என்ற நோக்கத்தோடு தன் பேரன் பேத்தி சூழ நல்ல எண்ணத்தில் சென்றதையே சிலர், அங்கு ஆரம்பிக்கப்போகும் ஐயாயிரம் கோடி முதலீடுக்காக (Palm Beach hotel resort) செல்கிறார் என்றும் அது கேடி உறவுகள், பேரன் பேத்திகளின் பெயரில் என்றும் சில இடங்களில் படித்தேன். இதெல்லாம் காழ்ப்புணர்வு என்றே எனக்குத் தோன்றுகிறது. விமர்சனம் செய்பவர்கள் ‘உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவர் உளுந்தூர்பேட்டையில் ஒட்டகம் பிடிக்கப் போவதைப் போல’, அரசின் செலவினங்களுக்கு அரசு நிறுவனங்களான ஆவின், தமிழக கூட்டுறவுச் சங்கங்கள், பெல் போன்றவற்றிர்க்கு ஆர்டர் கொடுத்து செலவை மிச்சப்படுத்தி, செலவழியும் பணமும் அரசுக்கே வரும்படியாக வருவதைச் செய்யாமல், மற்ற நிறுவனங்களுக்குக் கொடுத்து ஆயிரம் கோடிகளுக்கு மேல் கமிஷன் அடிக்கிறது திமுக அரசு என்று சொல்வதும் ஏற்புடையதா என்று யோசிக்கிறேன்.
இந்த மாதிரி நெகடிவ் செய்திகள் எந்தப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் வரவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஏதேனும் தவறு நிகழ்ந்திருந்தால் அவை உடனே செய்திகளை வெளியிட்டிருக்குமே. நாட்டின் மீது மிகுந்த அக்கறை கொண்டவை இந்த நான்காம் தூண் அல்லவா? இதுபோலத்தான், முந்தைய ஆட்சியின்போது அரசுக்கு ஐந்து லட்சம் கோடி கடன் இருக்கிறதே என்ற கவலையில் நிறைய விவாதங்கள் நிகழ்த்தின, மதுவினால் மக்கள் பாதிக்கப்படுகிறார்களே என்று தொடர்ந்து செய்திகள் போட்டன. இந்தியப் பொருளாதாரத்தையும், மத்தியில் பாஜக தமிழகத்தில் அதிமுக போன்ற அரசுகள் கவனிக்கவில்லையே என்று கவலைப்பட்டு கண்ணீர் வடித்து பொருளாதார மேதை மேதகு புளி அவர்களைப் பேசச்சொல்லி தொடர்ந்து காணொளி வெளியிட்ட மின்னம்பலம் போன்றவையும் இப்போது அப்படி எதையும் வெளியிட்டமாதிரி தெரியவில்லை. இப்போது அப்படி எந்தச் செய்திகளும் நான் பார்க்காததால், அரசு 9 மாதத்தில் 60 ஆயிரம் கோடிகளுக்கு மேல் கடன் வாங்கியிருக்கிறது, மது விலையை உயர்த்தி தாங்கள் லாபமடைய (திமுகவினரின் மது ஆலைகள்) வழி வகுத்திருக்கிறது, தமிழக நிறுவனங்களைப் புறக்கணித்து வெளி மாநில நிறுவனங்களுக்கு கமிஷன் காரணமாக ஆர்டர்கள் கொடுக்கிறார்கள் போன்ற செய்திகளையெல்லாம் நான் நம்புவதில்லை.
ஹம்பந்தோடா ஆயில் ரிபைனரி இப்போது எப்படி இருக்கிறதென்று தெரியவில்லை. அந்த துறைமுகம் இப்போது முழுமையான சீனா கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது. அதனால் இந்த ரிபைனரி சொந்தக்காரர்கள் பணம் என்ன ஆனதோ!
சம்பந்தமில்லாமல் சொல்கிறேன் என்று பார்க்காதீர்கள். அந்த ரிபைனரியில் 70% சொந்தக்காரர் சிங்கப்பூரை சேர்ந்த சில்வர் பார்க் பிரைவேட் லிமிடெட். அந்த கம்பெனியின் உரிமையாளர்கள் ஜகத்ரக்ஷகன் குடும்பத்தினர். அதில் முதலீடு செய்த பணம் கிட்டதட்ட 25000 கோடி. அவர் பணமா இல்லை அவர் பினாமியா? முழுமையாக போயிருக்கும்!
துபாய் முதலீடுகள் சிலவருடங்களாக பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன. இப்போது இவர்கள் போடும் 5000+ கோடியும் அப்படியே ஆகட்டும்!
நல்லவன் (தமிழக மக்கள்) சம்பாதித்து நாறவாயன் (?) தின்பது போல்!