….

…..

….
அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மின் துறை
குறித்து ஒரு புகாரை வெளியிட்டிருந்தார்….
கீழே –
…………….
- கடந்த 16 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ரூ.355 கோடி இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம் முறைகேடாக ரூ.4,442 கோடி
மதிப்பில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து இருப்பதாக
குற்றம் சாட்டினார்.
பி.ஜி.ஆருக்கும் கோபாலபுரத்துக்கும் தொடர்பு –
“கோபாலபுரத்தை சேர்ந்த நபர் பி.ஜி.அர். நிறுவனத்துக்கு பணம்
கொடுத்து இருக்கிறார். பி.ஜி.ஆர். எனர்ஜிக்கும் திமுகவுக்கும்
இரத்த பந்தம் உள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு நான் குற்றம்சாட்டியதற்காக என் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
பி.ஜி.ஆர். நிறுவனத்துக்காக ஆஜராகும் வழக்கறிஞர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்தான்.
2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தபோது
இதே பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனம் மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்தத்தை வாங்கினார்கள்….. பல முறைகேடுகளில் ஈடுபட்ட
நிறுவனம் 2010 ஆம் ஆண்டு சி.ஏ.ஜி. தணிக்கையில் பி.ஜி.ஆர்.
எனர்ஜியால் அதிக நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு
இருக்கிறது.
பி.ஜி.ஆர். நிறுவனத்தால் அந்த தொழில்நுட்பத்தை முறையாக
கையாள முடியவில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும் என சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பல ஆண்டுகளாக லாபத்தையே காட்டாத பி.ஜி.ஆர். நிறுவனம்
இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காகவும் பல்வேறு முறைகேடுகளில்
ஈடுபட்டு உள்ளனர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் அதிகளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் பி.ஜி.ஆர். போன்ற நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்ததுதான்.
- 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறை பி.ஜி.ஆர். எனர்ஜி
நிறுவனத்தில் சோதனையிட்டபோது போலியாக ரூ.113 கோடி
பில் கண்டெடுக்கப்பட்டது.
திடீரென பி.ஜி.ஆர். நிறுவனம் எப்படி புனிதமாக மாறியது.
அவர்கள் மீது ஏதாவது தீர்த்தம் தெளிக்கப்பட்டதா?
நமது கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும்.
திமுக ஆட்சி முடிவதற்குள் ரூ.36,000 கோடி அளவுக்கு பி.ஜி.ஆர். நிறுவனத்துக்கு டான்ஜெட்கோ கொடுக்க உள்ளது.
இதுகுறித்து செபிக்கு தமிழ்நாடு பாஜக புகார் கடிதம்
எழுத உள்ளது. அதேபோல் மத்திய கணக்கு தணிக்கை வாரியம்
மற்றும் மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் கடிதம் எழுத இருக்கிறோம்.” என்றார்.
…………….
- அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த செந்தில்பாலாஜி, “பாஜக தலைவர் அண்ணாமலை தனது
குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி
நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.
அண்ணாமலை ஒரு விழாவில் 20,000 புத்தகங்களில் படித்துள்ளேன்
எனப் பேசியதை சுட்டிக்காட்டி விமர்சித்த செந்தில்பாலாஜி,
“BGR நிறுவனம் டெண்டர் எடுத்த ஆண்டு 2019.
டெண்டர் கொடுத்த ஆட்சி அதிமுக. வாழ்ந்த 13700+ சொச்ச
நாட்களில் 20000 புத்தகம் வாசித்திருக்கும் அதிமேதாவி ஆர்வக்கோளாறுகளுக்கு புரிதல் வேண்டும் அல்லது புரிந்து
கொள்ள பக்குவம் வேண்டும். அரைவேக்காடுகளுக்கு
இரண்டும் இல்லை.” என்று விமர்சித்தார்.
…………………………….
நாம் இதில் கூறுவது –
இதில் அமைச்சரால் விளக்கம் அளிக்கப்பட
வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன –
- பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனம் 355 கோடி ரூபாய் இழப்பில்
இயங்கிக்கொண்டு இருப்பது உண்மையா….?
இந்த நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு 4,442 கோடி ரூபாய்க்கு
ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது உண்மையா….?
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது எப்போது….?
4,442 கோடி ரூபாய் ஆர்டர் கொடுக்கப்பட்டது எப்போது….?
அதிமுக ஆட்சியிலா அல்லது திமுக ஆட்சிக்கு வந்த பிறகா…?
( நமக்கு கிடைத்திருக்கும் தகவல் – மார்ச் 10-ம் தேதி, 2022
திமுக ஆட்சியில் – என்று சொல்கிறது….!!!)
- “கோபாலபுரத்தை சேர்ந்த நபர் யாராவது பி.ஜி.அர்.
நிறுவனத்துக்கு பணம் கொடுத்து இருக்கிறாரா ….?
(அதாவது, இந்த நிறுவனத்தில்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலீடு செய்திருக்கிறாரா….?)
திமுக சார்பான மாநிலங்களவை உறுப்பினர் –
வழக்கறிஞர் வில்சன் அவர்களுக்கும்
பி.ஜி.ஆர். நிறுவனத்துக்கும் எதாவது தொடர்பு உண்டா….?
- பி.ஜி.ஆர். நிறுவனம் சம்பந்தமாக கூறப்படும் ‘ரெய்டு’
விவரங்கள் உண்மையா….?
( 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறை பி.ஜி.ஆர். எனர்ஜி
நிறுவனத்தில் சோதனையிட்டபோது போலியாக ரூ.113 கோடி
பில் கண்டெடுக்கப்பட்டது…. )
அந்த ரெய்டின் விளைவாக, அந்த நிறுவனத்தின் மீது
மோசடி புகார்கள், வழக்குகள் எதாவது நிலுவையில் உண்டா….?
(திமுக அரசால்) ஒப்பந்தம் புதிப்பிக்கப்பட்டபோது, இந்த விஷயங்கள்
எல்லாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதா….?
- சம்பந்தப்பட்ட அமைச்சர் இந்த விஷயங்களுக்கெல்லாம்
முறையாக விளக்கம் அளிக்க வேண்டும்… பாஜக தலைவரை
கேலி செய்து அறிக்கை வெளியிட்டு விஷயத்தை திசை
திருப்பி விட முடியாது….
இந்த விவரங்கள் விவரமாக, வெளிப்படையாக தெரிவிக்கப்படாத
வரை இந்த சந்தேகங்கள் நீடித்துக் கொண்டே தான் இருக்கும்…
……………………………………
இந்த விஷயம் குறித்து
கூடுதலாக – கிடைத்த தகவல்கள் சொல்கின்றன….
கடந்த மாதம் வரை பி.ஜி.ஆர் குழுமத்தின் ஷேர் மதிப்பு
அறுபது ரூபாய் என்கிற அளவில் இருந்திருக்கிறது….
இந்த ஒப்பந்தம் பெறப்பட்ட பிறகு ஒரே நாளில்
ஷேரின் மதிப்பு உயர்ந்துவிட்டது.
இந்த உயர்வுக்கு முன்பாகவே –
அந்த நிறுவனத்தின் ஷேரில் சிலர் பெரும் தொகையை
முதலீடு செய்திருக்கிறார்கள். ஷேர் மதிப்பு உயரப்போகிறது
என்பதை அறிந்தே இந்த முதலீடு நடந்துள்ளது.
.
…………………………………………….
ஒப்பந்தம் கையெழுத்தானது
திமுக ஆட்சியில் 10.03.22 அன்று.
60 ரூபாய் அளவில் இருந்த ஷேர் விலை
90 ரூபாய்க்கு எகிறியது.
ஒப்பந்தம் குறித்து முன் கூட்டியே
அறிந்தவர்கள் செய்த முதலீட்டின் பலன்
உடனடியாகவே கிடைத்தது.
நீண்ட கால பலன்கள் தனி.
ஏர்கெனவே மின்சாரத் துறையின்
ப்ளாக் லிஸ்டில் இருந்த நிறுவனம்
இப்போது புனிதம் பெற்று விட்டது.
வேறேன்ன வேண்டும் ?
பாஜக தலைவர் இதை சீரியசாக
மேற்கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும்.
– உண்மை.
மற்றும் மக்கள் மத்தியிலும் இந்த செய்தி
இன்னும் பெரிய அளவில் எடுத்துச் செல்லப்பட
வேண்டும். ஊடகங்கள் எதுவும் இதுகுறித்து
வாயே திறக்கவில்லை; திறக்கவும் திறக்காது.
இரத்த சொந்தம் என்று சொன்னது முதல்வரின் பெண்ணையா? சபரீசன் ஏகப்பட்ட புதுப் புது கம்பெனிகளை ஆரம்பித்திருக்கிறார் (திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே) என்று இதற்கு முன் செய்திகளில் குற்றச்சாட்டினைக் கண்டேன்.
ஊழல் செய்து பணம் சேர்த்து கப்பம் கட்டுவதில் கண்ணப்பன் பெரியவரா பாலாஜி பெரியவரா என்று நீயா நானாவிலோ அல்லது லியோனி பட்டிமன்றத்திலோ விவாதம் நடக்குமா?
அண்ணாமலை அவர்கள் இந்த விஷயத்தை எடுத்திருப்பதால், ஆவின் இனிப்பில் நடந்த ஊழலை நிறுத்தியதுபோல இதுவும் நிறுத்தப்படும் என்று நம்புகிறேன். பொங்கல் பரிசாக குஜராத் கம்பெனிக்குக் கொடுத்த வேஸ்ட் வெல்லம் போன்ற ஆர்டரை மட்டும் அண்ணாமலை அவர்களால் நிறுத்த முடியாமல் போயிற்று. அதனால் 500 கோடிக்கு மேல் நடந்த ஊழலை நிறுத்த முடியவில்லை என்று செய்திகளில் படித்தேன்.
கிட்ட தட்ட 1000 கோடி குறைவாக இதே ப்ரொஜெக்ட்டை செய்து தருகிறோம்
என்று மத்திய அரசு நிறுவனமான பாரத் ஹெவி எலேக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம்
அறிவித்திருக்கிறது . அதன் தொழிற்சங்க தலைவர் இது குறித்து தமிழக அரசுக்கு
கடிதம் எழுதி உள்ளார். இப்போது 1000 கோடி யாருக்கு போக போகிறது
என்று தெளிவாக தெரிகிறது. முந்தைய திமுக ஆட்சியில் இதே நிறுவனம் பி ஜி ஆர்
எனெர்ஜிஸ் சொதப்பி மின்சார துறை குளறுபடிகள் மூலம் ஆட்சியை திமுக இழந்தது.
பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு கவர்னரை சந்தித்து மனு ஒன்றும்
கொடுத்துள்ளார். நல்லது நடக்கும் என்றே நம்புவோம் .
திராவிட மாடல் ஆட்சியில் பதில் கிடைக்காது… கிண்டல் கேலிதான் கிடைக்கும்
பிங்குபாக்: பல்லிளிக்கும் ஊழல் – சந்திக்கு வந்து விட்டதே…!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்