ஒன்பது மாதங்களாக எத்தனை கோடி கொள்ளை….?யார் யாருக்கு பங்கு ….? அமைச்சர் ஏன் இன்னும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை….?

…….

…..

திருவாளர் கண்ணப்பன் குறித்து – நேற்றிரவு – வெளிவந்துள்ள
பத்திரிகைச் செய்தி கீழே –
…………

கப்பம், கமிஷன், கண்ணப்பன்: விஜிலென்சை அதிரவைக்கும் வாக்குமூலங்கள்!
….

சென்னை எழிலகத்தில் போக்குவரத்து துறை ஆணையர்
அலுவலகத்தில் உள்ள துணை ஆணையர் நடராஜன் அறையில்
கடந்த மார்ச் 14ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
நடத்தியது அரசு வட்டாரங்களில் குறிப்பாக போக்குவரத்து துறை வட்டாரங்களில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

போக்குவரத்துத் துறையில் ஊழல்களும், முறைகேடுகளும்
அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழக விஜிலென்ஸ்
போலீஸார் முதல்வரின் சம்மதத்துடன் கடந்த 14ஆம் தேதி
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு எழிலகம் முதல் மாடியில்
உள்ள துணை ஆணையர் 1 நடராஜன் அறைக்குள் நுழைந்து
அதிரடி சோதனைகள் செய்தனர். இந்த சோதனையில்
35 லட்சம் ரூபாய் ரொக்கம், வரவு செலவு கணக்கு டைரி,
துண்டு சீட்டுகள், செல்போன், பணம் எண்ணக்கூடிய
இரண்டு மிஷின் மற்றும் முக்கிய ஆதாரங்களைக்
கைப்பற்றியதோடு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து
வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டும் சென்றார்கள்.

ரெய்டுக்கு பிறகான நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் விஜிலன்ஸ் வட்டாரம் ஆகியவற்றில் விசாரித்தோம்.

“விஜிலென்ஸ் போலீஸ் 14ஆம் தேதி மதியம் எழிலகம் முதல் மாடிக்கு வந்தவர்கள் சுமார் நான்கு மணி நேரம் தீவிரமான சோதனைகள்
செய்தனர். போக்குவரத்து துணை ஆணையர் (1) நடராஜன்
அறையில் பணம் எண்ணக்கூடிய இரண்டு மிஷின், கருப்பு நிற
பேக்கில் பண்டல் பண்டலாக பணம் இருந்தது. அந்த
பணக் கட்டுகளில் யார், யார் பணம் கொடுத்தார்கள் என்று
அவர்கள் பெயரையும் எழுதி அந்த பண்டல் மீது ரப்பர் பேண்டு
போட்டு வைத்திருந்தார்கள்.

கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக 30 பேர் அட்வான்ஸ் கொடுத்துள்ளார்கள். அதில் முருகன் ஐந்து லட்சம், மாதேஸ்வரன்
ஐந்து லட்சம், தசரதன் ஐந்து லட்சம், சாந்த லட்சுமி ஐந்து லட்சம்
என அட்வான்ஸ் கொடுத்தவர்கள் பெயரை எழுதிய துண்டு சீட்டை
அந்தந்த பண்டல் மீது வைத்து ரப்பர் பேண்டு போட்டு
வைத்திருந்தனர்.

இதேபோல 32 லட்சம் ரூபாய்க்கும் யார் யார் கொடுத்தார்கள்
என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. மீதி மூன்று லட்சம்
யார் கொடுத்தவர் என்று பெயரைக் குறிப்பிடாமல் இருந்துள்ளது.
ஆக மொத்தம் 35 லட்ச ரூபாய் இருந்தது.

பணம் எண்ணக்கூடிய பணிகளைக் கவனிக்கும் முருகன்
மற்றும் ரகுராமன் இருவரும் போக்குவரத்து துறை ஆணையர்
அலுவலக ஊழியர்கள். இவர்கள் ரெய்டு வந்தபோது
தப்பி ஓடிவிட்டனர்.

அதில் முருகன் என்பவரைப் பிடித்து அவரிடமிருந்து
சில லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்து வாக்குமூலமும்
பெற்றுள்ளனர் விஜிலென்ஸ் போலீசார்.

அவரது வாக்குமூலத்தில், ‘துணை ஆணையர் நடராஜனைச்
சந்திக்கப் பலபேர் வருவார்கள், போவார்கள். அதில் யார்
கொடுத்த பணம் எதற்குக் கொடுத்த பணம் என்று எனக்குத்
தெரியாது. பணத்தை எண்ணி கட்டுப்போட்டுக் கொடுப்போம்.
அதான் எங்கள் வேலை. அந்த பணத்தை அமைச்சர் கண்ணப்பன் சொல்பவரிடம் கொடுத்து அனுப்பிவிடுவார். சில நேரத்தில்
நடராஜனே எடுத்துப்போய் கொடுப்பார்’ என்று
கூறியுள்ளார் முருகன்.

ரெய்டு நடத்திய அன்று போக்குவரத்து துறை துணை ஆணையர்
நடராஜன் பயன்படுத்தக்கூடிய அரசு வாகனமான பொலிரோ
காரில் பல டாக்குமென்ட்டுகளை கைப்பற்றியுள்ளார்கள்.
அதில் பிரேக் இன்ஸ்பெக்டர்கள் இட மாறுதல் பட்டியல்,
பதவி உயர்வு பட்டியல், எந்தெந்த ஆபீஸ் எவ்வளவு
கொடுத்துள்ளார்கள், கொடுக்க வேண்டியது எவ்வளவு,
வரவு எவ்வளவு செலவு எவ்வளவு என்ற பட்டியல் இருந்துள்ளது.

அதைவிட முக்கியமானது திருச்சி கிழக்கு ஆர்டிஓ ஒருவர்
தெளிவான பட்டியலை அனுப்பியுள்ளார். அதில் இந்த மாதம்
493 வாகனங்கள் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது‌. லைசென்ஸ்,
எல்.எல்.ஆர், எஃப்சி என அனைத்திலும் கிடைத்த பணம் வரவு
2 லட்சத்து 93 ஆயிரம், செலவு 2 லட்சத்து 99 ஆயிரம்,
ஆறாயிரம் என் சொந்த பணத்தைப் போட்டுக் கொடுக்கிறேன்
என்று குறிப்பிட்டுள்ளார். மாதம் 25 ஆயிரம் இருந்த மாமூல்
பணத்தை 2.5 லட்சமாக உயர்த்தி விட்டதன் விளைவுதான் இது‌.
அந்த லஞ்சப்பணப் பட்டியலும் விஜிலென்ஸ் போலீஸிடம்
சிக்கியுள்ளது. அதை முதல் தகவல் அறிக்கையிலும்
காட்டியுள்ளார்கள்.

அதேபோல் கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கு அட்வான்ஸ்
லஞ்சம் கொடுத்தவர்களின் பெயர்கள் பண்டல் மீது இருந்ததை
வைத்து… சாந்தி, பரமசிவம், பிரேம்குமார் ஆகிய மூவரிடமும்
விஜிலென்ஸ் போலீஸ் விசாரித்துள்ளார்கள்.

அதில் ஒருவர் நகையை அடகு வைத்தும் வட்டிக்கு வாங்கியும் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். இன்னொருவர் வங்கியில்
பர்சனல் லோன் போட்டும், வெளியில் கடன் வாங்கி
கொடுத்துள்ளதாக ஆதாரங்களையும் காட்டியுள்ளார்கள்.

கண்காணிப்பாளர் பதவி உயர்வு பட்டியலில் உள்ள மீதியுள்ள
27 பேர் இன்று மார்ச் 17ஆம் தேதி, விஜிலென்ஸ் தலைமை
அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

போக்குவரத்து துறை அலுவலகங்களில் இருந்து மாதாமாதம்
கப்பத் தொகை, பணி உயர்வு இடமாறுதல்களுக்கு
லட்சக்கணக்கில் லஞ்சம் ஆகியவை மட்டுமல்ல…
பல அரசு பேருந்து டெப்போக்களில் உதிரி பாகங்கள் –
டெண்டர் விடாமல் வாங்க சொல்லியுள்ளார் அமைச்சர்
கண்ணப்பன்.

13 போக்குவரத்துக் கழக டெப்போக்களில் 3 டெப்போ மேனேஜர்கள்
டெண்டர் விடாமல் பர்ச்சேஸ் செய்யமுடியாது என மறுத்துள்ளார்கள்.

அதனால், அந்த 3 மேனேஜர்களையும் விழுப்புரம், திருவாரூர், கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று மாவட்ட டிப்போக்களுக்கு இடமாற்றம் செய்துவிட்டார் அமைச்சர் கண்ணப்பன்.

அதேபோல் லைசன்ஸ், ஆர்சி புக், ரெனிவல் செய்து பிரிண்ட்
கொடுக்கும் வேலை தனியார் நிறுவனமான BANTONயிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 5ஆயிரம் லைசென்ஸ் வழங்கப்படுகின்றன. 5 ஆயிரம் புதிய வாகனங்கள் பதிவு செய்து
ஆர்சி புக் கொடுப்பது, மூவாயிரம் எஃப்சி கொடுப்பது, ரெனிவல்
செய்வது என 15ஆயிரத்திற்கும் குறையாமல் நடைபெறும். ஒவ்வொன்றுக்கும் நூறு இருநூறு என்று அன்றாடம் கமிஷனாக
கேட்டு வசூலித்து வருகிறார்கள்” என்று கொட்டி முடித்தார்கள்.

போக்குவரத்துத் துறை அமைச்சரும் அவரை சுற்றியிருப்பவர்களும் எதற்கெடுத்தாலும் கப்பம், கமிஷன் என வேட்டையாடி வருகிறார்கள். இவ்வளவு துல்லியமான ஆதாரங்கள் போக்குவரத்து அமைச்சர் கண்ணப்பனுக்கு எதிராக சிக்கியிருக்கும் நிலையில் –

https://www.minnambalam.com/politics/2022/03/17/36/transport-minister-kannappan-bribary-vegilance-got-statements………………….

…………………………………………

கடந்த 9 மாதங்களாக இந்த கொள்ளை, மெகா லஞ்ச ஒழல்
தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது….

முதலமைச்சருக்கு தினமும் விஜிலன்ஸ் ரிப்போர்ட் போகிறது….
இந்த விஷயம் முதல்வரின் பார்வைக்கு போகவில்லையா….?
மேலும் 8 மாதங்களுக்கு முன்னரே முதல்வருக்கும், தலைமைச்
செயலர் உட்பட மற்ற இலாகாக்களுக்கும் இது குறித்து
வெளிப்படையான புகார் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அப்படி இருந்தும் – இந்த மெகா ஊழல் தொடர்ந்து நடக்க
அனுமதிக்கப்பட்டு வந்தது எப்படி…? ஏன்…?
இதில் யார் யாருக்கு பங்கு ….?

இதுவரை திருவாளர் கண்ணப்பன் –
மீது ஏன் இன்னமும் எந்தவித நடவடிக்கையும் இல்லை….?

ஒரு வேளை, சட்டபூர்வமான வழக்கு தொடர்வது குறித்த
நடவடிக்கைகள் வேண்டுமானால், நடைமுறை காரணங்களுக்காக
தாமதப்படலாம்.

இத்தனை ஆதாரங்களோடும், ஆவணங்களோடும்,
சாட்சியங்களோடும் – விவகாரம் உறுதிப்படுத்த பின்னரும் –

அவர் இன்னமும் அமைச்சராக தொடர்வது எப்படி….?

இத்தனை லஞ்ச குற்றச்சாட்டுகளையும்
பார்த்த பின்னரும், அவை வெளிப்படையாக ஊடகங்களில்
வெளிவந்த பிறகும் கூட – அவரை அமைச்சர் பதவியிலிருந்து
இன்னமும் நீக்காமல் இருப்பது உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கிறது….!!!

இந்த நபர் அமைச்சராக நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும்,
தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி, அசிங்கம், துரோகம்.
தொடர்ந்து ஜனநாயகத்திற்கு இழைக்கப்படும் அவமானம்…

.
…………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

10 Responses to ஒன்பது மாதங்களாக எத்தனை கோடி கொள்ளை….?யார் யாருக்கு பங்கு ….? அமைச்சர் ஏன் இன்னும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை….?

 1. கார்த்திகேயன் சொல்கிறார்:

  இத்தனை லஞ்ச குற்றச்சாட்டுகளையும்
  பார்த்த பின்னரும், அவை வெளிப்படையாக ஊடகங்களில்
  வெளிவந்த பிறகும் கூட – அவரை அமைச்சர் பதவியிலிருந்து
  இன்னமும் நீக்காமல் இருப்பது உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கிறது….!!! -அவரை நீக்கினால் தான் நீங்க ஆச்சரியப்படனும். உண்மையான வருமானம் எவ்வளவு என தெரிந்து கொள்ளத்தான் இந்த சோதனை நடைபெற்று உள்ளது. இது தான் திருட்டு திராவிட மாடல்

 2. சிவா சொல்கிறார்:

  கடந்த ஆகஸ்டு மாதமே முதலமைச்சருக்கும், தலைமைச் செயலருக்கும்
  ரிப்போர்ட் போயிருக்கிறது. அதற்கு பின்னரும் நடவடிக்கை எதுவும் இல்லை;
  7 மாதங்களுக்குப் பின்னர், அதுவும் வேறு காரணங்களுக்காக ரெய்டு
  நடந்திருக்கிறது.
  ஊழலை ஒழிப்பதாகச் சொல்லி பதவிக்கு வந்தவர்கள், ஊழல் பணத்திற்கு ஏலம் விடும் அதிசயம் இங்கு நடக்கிறது. தமிழக ஊடகங்கள் அநேகமாக எதுவுமே
  இதைப்பற்றி பெரிதாக எதுவும் சொல்லவில்லை; டெல்லியில் இதை
  “ப்ரஸ்டிட்யூட்” என்று சொன்னதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  “அறப்போர் இயக்கம்”, “சட்டப்பஞ்சாயத்து இயக்கம்” போன்ற
  இயக்கங்கள் தொடர்ந்து நடக்கும் இந்த கொள்ளைகளைப்பற்றி
  வாயே திறக்கவில்லை;

  ஓருவேளை – திமுகவை ஆட்சியில் அமர்த்துவதற்காகத்தான் இந்த இயக்கங்கள்
  எல்லாம் இயங்கினவோ ..?

  • புதியவன் சொல்கிறார்:

   காமை சார், ஒரு சந்தேகம்.

   மதசாசார்பற்ற அரசு என்று சொல்லி மக்களுக்குண்டான பணத்தை மசூதி தேவாலயங்களுக்கு ஒதுக்கி, கோவில் வருமானத்தை மற்றவற்றிர்க்கு உபயோகிப்பதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

   • கார்த்திகேயன் சொல்கிறார்:

    இப்படி கேள்வி கேட்டா எப்படி. பாஜக உள்ள வந்துரும் சார்

  • புதியவன் சொல்கிறார்:

   மின்னம்பலத்தையும் பொருளாதாரப் புளியையும் விட்டுவிட்டீர்களே

  • கார்த்திகேயன் சொல்கிறார்:

   என்ன சார் உலகம் தெரியாத பச்ச மண்ணா இருக்கிங்க

 4. bandhu சொல்கிறார்:

  “அறப்போர் இயக்கம்”, “சட்டப்பஞ்சாயத்து இயக்கம்” , “சாராயக்கடைகளை எதிர்த்து போரிட்ட கோவன்.. ” எல்லோருக்குமே ஒரு அஜெண்டா இருந்தது. அது திமுகவை பதவிக்கு கொண்டு வருவது. அது முடிந்தவுடன் எல்லோரும் பதுங்கிவிட்டார்கள். மறுபடி ஆட்சி இழந்தவுடன் வீரத்துடன் வந்து போராடுவார்கள்!

  இந்த ஊழல், அதற்கு எந்த நடவடிக்கை எடுக்காதது போன்றவை யாருக்கும் ஆச்சர்யம் அளிக்கக் கூடாது! பிரசாந்த் கிஷோருக்கு 400 கோடி, பெரும்பாலான மக்கள் ஓட்டுக்கு பணம், கவுன்சிலர் தேர்தலுக்கும், பொதுக்கூட்டத்துக்கு ஆள் பிடிக்க ஒவ்வொருவருக்கும் பிரியாணி+குவார்ட்டர்+200 முதல் 500 ரூபாய், தேர்தல் கூட்டங்களுக்கு போக தனி விமானம், காரில் போவதென்றால், ஒருவரே போனால் கூட 50 கார் அணிவகுப்பு… இதற்கெல்லாம் எவ்வளவு செலவாகும்? அரசு கொடுக்கும் சம்பளம் இதில் 0.0001% செலவுக்குக் கூட காணாது! இப்படியெல்லாம் சம்பாதித்தால்தான் உண்டு! இதில் எல்லோருக்கும் பங்கு உண்டு. அது எல்லோருக்கும் தெரியும்!

  நடவடிக்கை எடுத்து பொன் முட்டை இடும் வாத்தை அறுக்க சொல்கிறீர்களா?

 5. Tamil சொல்கிறார்:

  //“அறப்போர் இயக்கம்”, “சட்டப்பஞ்சாயத்து இயக்கம்” போன்ற
  இயக்கங்கள் தொடர்ந்து நடக்கும் இந்த கொள்ளைகளைப்பற்றி
  வாயே திறக்கவில்லை;

  they are active and they are talking about many issues, but why do we expect only they talk for all the issues?

 6. Tamil சொல்கிறார்:

  Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள்

  https://twitter.com/poovulagu?lang=en

  these guys are completely doing only PR work for DMK government

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.