டாக்டர் ராமதாஸ் அவர்களின் யோசனைகள் …!!!

…..

தனது பாணியிலான நிழல் பட்ஜெட் மூலம் இப்போதும்,
பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் சில
ஆலோசனைகளைக் கூறி இருக்கிறார்….

அவரது நிழல் பட்ஜெட்டிலிருந்து சில
நல்ல திட்டங்களை கீழே வடிகட்டி என்னுடைய
வார்த்தைகளில் தருகிறேன்.

……………

 • டாஸ்மாக் கடைகள் முற்றிலுமாக மூடப்பட வேண்டும்….
 • பள்ளி மாணவர்களுக்கென தனியாக இலவச பேருந்து
  இயக்கப்பட வேண்டும்….

( தற்போது பள்ளி மாணவர்கள் பஸ்ஸில் பயணிக்கும்
நிலை, அபாயகரமானது, அவலமானது…பள்ளி நேரங்களில்,
யுனிஃபார்ம் அணிந்திருக்கும் அனைத்து மாணவ,
மாணவிகளையும் மட்டும் ஏற்றிச் செல்லும் வகையில்,
தனி, இலவச பஸ் வசதி – மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.)

 • தமிழகம், 60 மாவட்டங்களாக
  பிரிக்கப்பட வேண்டும்…

( மாவட்டங்கள் நிர்வாக வசதி கருதி சிறியதாகவும்,
மாவட்ட தலநகரங்களுக்கு அந்த மாவட்ட மக்கள் சுலபமாக
வந்து போகக்கூடிய தூரத்திலும் இருக்க வேண்டும்…)

 • தமிழக சட்டப்பேரவை குறைந்தது ஆண்டுக்கு 3 முறையும்,
  100 நாட்களும் கூடி மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆக்கபூர்வ
  விவாதம் நடத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
 • தமிழ் நாட்டில், ஐஐடி-க்கு நிகரான 5 சிறப்பான
  தொழில் நுட்பக்கல்லூரிகள், தமிழக அரசின் சார்பில்
  துவக்கப்பட வேண்டும்.
 • சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க, படிப்படியாக
  முயற்சிகள் எடுக்க வேண்டும்.
 • சூரிய ஒளி மின் திட்டத்தை -பெரிய அளவில் கொண்டு
  வர வேண்டும். குறைந்த பட்சம் 5000 மெகாவாட் சூரிய
  ஒளியில் மின்சாரம் தயாரிப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
  ஒவ்வொரு ஊராட்சியிலும் சூரியஒளி மின்திட்டங்கள்
  கொண்டு வரப்பட்டு, உள்ளூர் மின் வசதி திட்டங்களுக்கு
  அவை செயல்படுத்தப்பட வேண்டும்.
 • தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும், மத்திய அரசின்
  கேந்திரிய வித்யாலயா அளவுக்கு தரம் உயர்த்தப்பட வேண்டும்.
  சிபிஎஸ்சி திட்டத்தை விடவும் சிறப்பானதாக தமிழக
  பள்ளிகளின் கல்வித்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
 • பள்ளி, கல்வித்துறை வளர்ச்சிக்காக், பெரும் தொழில்
  நிறுவனங்களிடமிருந்தும், தனியாரிடமிருந்தும்
  நன் கொடைகள் பெறப்பட்டு, வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முழு மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அது குறித்த விவரங்கள் அடங்கிய
ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட வேண்டும். அது குறித்த விவரங்களை
பதிவு செய்ய மருத்துவ தகவல் மேலாண்மை அமைப்பு
உருவாக்கப்பட வேண்டும் . இதன் மூலம் தமிழக மக்கள்
எந்த ஊரிலும், எந்த மருத்துவமனையிலும் சென்று சிகிச்சை
பெற முடியும்.
(- மேலே சொல்லியுள்ள இதே போன்ற மருத்துவ உதவித் திட்டம்,
பிரிட்டனில் ஏற்கெனவே வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ளது -)

 • தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின்
  எண்ணிக்கை 2,654 -ல் இருந்து 3,500ஆக உயர்த்தப்பட வேண்டும்.
  நெல் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கையும் 400ஆக
  உயர்த்தப்பட வேண்டும்.
 • தமிழ்நாட்டில் தரிசு நிலங்களில் சீமைக்கருவேல மரங்களை அழித்துவிட்டு, பனை மரம் நடும் திட்டம் செயல்படுத்தப்பட
  வேண்டும்.
 • முதலீடு திரும்ப எடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில்
  சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை இரத்து செய்யவும்,

பராமரிப்பில்லாத சாலைகளில் 40% கட்டணம் மட்டும்
செலுத்தினால் போதும் என்று அறிவிக்கவும் மத்திய அரசை,
தமிழக அரசு வலியுறுத்தி முடிவெடுக்கச் செய்ய வேண்டும்.

 • சென்னை – கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை சாலை
  8 வழிச்சாலையாக மாற்றப்பட வேண்டும்.
 • உலகம் முழுவதும் சுமார் 150 நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பதற்காக இணையவழி
  தமிழ் கற்பித்தல் சேவை தொடங்கப்பட வேண்டும். இதற்காக
  தனியே இணையதளம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் தமிழ்
  கற்பிக்கப்பட வேண்டும்.
 • இணையவழியில் தமிழ் கற்கும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு
  இணைய வழியிலேயே தேர்வுகள் நடத்தப்பட்டு, அதற்கான
  சான்றிதழ்களும் வழங்கப்பட வேண்டும்.
 • தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழில் மற்றும் வர்த்தக
  நிறுவனங்களில் மாத வருமானம் ரூ.40,000 வரை உள்ள வேலைகளை
  80% தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்பட புதிதாக சட்டம் ஒன்று
  இயற்றப்பட வேண்டும்.

( டாக்டர் ராமதாஸ் அவர்கள் மேற்கண்ட திட்டங்களுக்கான,
நிதியை எப்படி திரட்டுவது என்பதைக் குறித்தும்,
யோசனை கூறி இருந்தால், யோசனைகள் – இன்னமும்
பொறுப்புள்ள யோசனைகளாக இருந்திருக்கும்…)

……………….

நாளை வெளியிடப்படவிருக்கும் தமிழக பட்ஜெட்டில்
டாக்டர் ராமதாஸ் அவர்களின் சிறப்பான மேற்கண்ட
ஆலோசனைகளையும் முடிந்த அளவிற்கு தமிழக அரசு
உட்கொள்வது பயனளிப்பதாக இருக்கும். தமிழக நிதியமைச்சர்,
ஈகோ பார்க்காமல் யோசிக்க வேண்டும்.

.
……………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to டாக்டர் ராமதாஸ் அவர்களின் யோசனைகள் …!!!

 1. Tamil சொல்கிறார்:

  //முதலீடு திரும்ப எடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை இரத்து செய்யவும்,
  எந்தெந்த ரோடுகள் இந்த யோசனையின் கீழ்வரும் என்பதை டாக்டர் ராமதாஸ் அவர்கள் சொல்வார்களா?

  தமிழ்நாட்டின் பல சாலைகள் அனில் அம்பானி அவர்கள் நிறுவனத்தினால் நடத்தப்படுகின்றன, ஒன்று அல்லது இரண்டை தவிர மற்ற அனைத்தும் வருடம்தோறும் நஷ்டக் கணக்கு காட்டி கொண்டிருக்கின்றன காரணம் என்று என்ன என்று ஆராய்ந்தோம் ஆனால் நம்மை ஆள்வதற்கு நாம் தேர்ந்தெடுத்து அனுப்பி இருப்பவர்கள் எப்படிப்பட்ட கேடிகள் என்பது நமக்கு தெரியவரும்.

  நேரம் கிடைக்கும்போது அவற்றை விரிவாக சொல்ல முயற்சிக்கிறேன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.