…….
கார்ட்டூனிஸ்ட் சத்தீஷ் ஆச்சார்யா வின்
பாப்புலர் ஆகிக் கொண்டிருக்கும் ஒரு கார்ட்டூன் –

…………………
இந்த கார்ட்டூனை வரைந்தவர் எதைச் சொல்ல வருகிறார்
என்பது ஒரு பக்கமிருக்க-
பார்ப்பவர்களிடையே இந்த கார்ட்டூன் – ஒன்றுக்கு மேற்பட்ட
கருத்துகளை உருவாக்குவதாகத் தோன்றுகிறது.
உதாரணமாக –
ஒன்று –
உ.பி.தேர்தலுக்கு முன்னதாக யோகிஜியின்
பெர்சனாலிடி பிரகாசமாகத் தோன்றவில்லை…
ஆனால், தேர்தலுக்குப் பின், அது விஸ்வரூபம் எடுத்து,
பிரம்மாண்டமாக தெரிகிறது.
இரண்டு –
2022 – உ.பி.தேர்தலுக்கு – யோகிஜிக்கு, மோடிஜியின்
உதவி தேவைப்பட்டது…..
மாறாக, 2024 – டெல்லி பாராளுமன்ற தேர்தலுக்கு
யோகிஜியின் தயவு மோடிஜிக்கு தேவைப்படும்.
( உ.பி.யிலிருந்து 80 M.P.க்கள்….!!! )
……
இதற்கு மேலும் சில கருத்துகள் தோன்றுகின்றன….
ஆனால் அவற்றை வாசக நண்பர்களுக்கே விட்டு விடுகிறேன்….
அவர்களுக்காக, பின்னூட்ட தளம் காத்திருக்கிறதே….!!!
.
………………………………………………..
திராவிட மாடலில் தந்தை மகன் பேரன் கொள்ளுப் பேரன் மட்டுமே முதலமைச்சராகவோ அமைச்சராகவோ முடியும்.
இடுகைக்குச் சம்பந்தமில்லாததுபோல பின்னூட்டம் அமைந்திருந்தாலும் முழுமையாக இல்லை. ‘அமைச்சராகவோ முடியும். மற்றவர்கள் பிச்சையிடும் பதவிக்குப் போட்டிபோடவேண்டும். தொண்டர்கள் மற்றும், 200 ரூ இணையப்போராளிகள், அடிமை, அதைவிட அடிமை, அதிக ஜால்ரா, கொத்தடிமை போன்ற பதவிகளுக்கு மட்டுமே போட்டியிடமுடியும்.
நான் கூறவந்த கருத்தை புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி
இப்போதுமே யோகி, மோடி அவர்களின் கரிஷ்மா நிலைக்கு உயர்ந்துவிடவில்லை. யோகியின் வெற்றிக்கு மோடி, அமித்ஷா ஆகியோர்களின் பிரச்சாரமும் மிகப் பெரும் காரணம் என்று நான் நினைக்கிறேன்.
பாஜகவின் அடித்தளம் ஸ்ட்ராங்க் ஆகிக்கொண்டு வருகிறது (அதாவது தொண்டர் மாற்றும் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பு). இது குறைந்தபட்ச வாக்குகளை நிச்சயம் செய்துவிடுவதால்தான், கூடுதல் வாக்குகள் பெற் உதவுகிறது. உபியிலும் 2 சதம் அதிகவாக்குகள் இந்தத் தடவை யோகியின் அரசுக்குக் கிட்டியுள்ளது குறிப்பிடத் தகுந்தது.
நாமும் பிஜேபி ஒரு மதவெறி பிடித்த கட்சி என்று பல வகைகளிலும் கூவி, கூவி பல்டி அடித்து பார்த்தாகிவிட்டது.
இந்த சோற்றாலடித்த பிண்டங்கலாகிய மக்களின் காதில் அவை விழவில்லை போலும்.
அப்படியென்ன மதவெறியுடன் நடந்து கொண்டார்கள் , என்று சிந்திக்க வைத்து விட்டோமோ என்னவோ ..போங்கள் …..மீடியாக்களின் மதவெறியை தூண்டும் செய்திகள் கடைசியில் அவர்களுக்கே பயன் பட்டு கொண்டிருக்கிறதோ , என்னவோ….
எங்கள் இளவரசரும் ஆழ்ந்த நித்திரையில் உள்ளார்….என்ன செய்வது என்றே தெரியவில்லை…
இந்த பரிதாப நிலையில், தமிழ் நாட்டிலிருந்து , ஒரு இளைஞர் , பிரதமர் பதவிக்கு ஆசை படுகிறார் என்று செய்தி.அவர்தான் எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து தலைமை தாங்க போவதாக கேள்வி. ஆனால் இந்த வடக்கத்திய கும்பல்களுக்கு தமிழ் தெரியாதே…என்ன செய்ய போகிறாரோ …