…..

…
மார்ச் 10-ந்தேதி நடந்த, மாநில போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில்
அமைச்சர் துரைமுருகன் அவர்கள் பேசியதாக வெளிவந்துள்ள
செய்தி –
“மாநில எல்லைகளில் உள்ள பார்டர் செக் போஸ்ட்கள்,
போலீஸ் ஸ்டேஷன்களில் என்ன நடக்கிறது என்பது
எனக்கு தெரியும்….
ஒவ்வொரு செக்போஸ்டிலும் தினமும் எத்தனை வாகனங்கள்
கடந்து செல்கின்றன…. இதில் எவ்வளவு பணம் வசூலிக்கிறார்கள்
என்பதும் எனக்கு தெரியும்…
அதிகாரிகளே தவறு செய்தால் கீழ்மட்ட போலீசாரை யாரும்
தடுக்க முடியாது …
எனது சொந்த மாவட்டமான வேலூரில் தினமும்
கத்திக்குத்து இல்லாமல் இருந்தது இல்லை என்கிற நிலை உள்ளது.
வழக்கில் கைது செய்யப்படும் குற்றவாளி மறுநாளே
ஜாமீனில் வெளிவந்து விடுகிறான்;
அவனை ஜாமீனில் விடக் கூடாது என்று போலீசார் ஆட்சேபம் தெரிவித்திருந்தால் அவனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்…?
வேலூரில் உள்ள சில போலீஸ் ஸ்டேஷன்களில் 15 முதல்
20 ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் சிலர் வேலை செய்கின்றனர்…
இதனால் ரவுடிகள் அனைவரும் அவர்களுடன் நல்ல தொடர்பில்
உள்ளனர்….
கொலை செய்யும் முன்பு இவரை கொலை செய்ய போகிறேன்
என்று தகவல் கொடுத்துவிட்டு ரவுடிகள் செல்கின்றனர்…
அதன்படி கொலையும் நடக்கிறது…
மாவட்டங்களில் அதிகளவில்
சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று
சில எஸ்.பி.க்கள் கோரிக்கை வைத்தீர்கள்….
ஆனால் சிசிடிவி கேமரா மற்றும் லைட் வெளிச்சத்திலேயே
துணிச்சலாக செயினை பறித்துச் செல்வது அதிகம் நடக்கிறது…”
(ஆதாரம் – தினமலர் செய்தி – 11/03/2022 )
……………………..
சில கேள்விகள் எழுகின்றன –
திமுக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகி விட்டன.
காவல் துறை முதலமைச்சரின் பொறுப்பில் இருக்கிறது.
அமைச்சரவையில் – திரு.துரைமுருகன் அவர்கள்,
முதலமைச்சருக்கு அடுத்த 2-ம் இடத்தில் இருக்கிறார்….
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கூட –
காவல் துறையில் இத்தனை ஓட்டைகள் இன்னமும்
தொடர்கின்றன என்று துரைமுருகன் அவர்கள்
ஒப்புக்கொள்கிறாரா….?
இத்தனையும் இவருக்கு தெரியும் என்றும் சொல்கிறார்;
அப்படி இருந்தால், மிக மிக மூத்த அமைச்சரான இவர்
இந்த நிலையை மாற்ற கடந்த 10 மாதங்களில் என்ன செய்தார்…?
இது குறித்து முதலமைச்சரிடம் பேசி, குற்றங்களை
களையவேண்டிய, தவறுகளை திருத்த வேண்டிய பொறுப்பு
இவருக்கு இல்லையா…..?
அல்லது – முதலமைச்சரின் கீழ் உள்ள துறையே சரிவர
இயங்கவில்லை என்று வாய்ப்பு கிடைக்கும்போது,
சுட்டிக்காட்ட விரும்புகிறாரா….?
(அல்லது, காவல் துறை தன்னிடம் தரப்பட்டிருந்தால்,
இத்தகைய பேச்சுகளை கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காதே என்று மறைமுகமாக
சொல்ல விரும்புகிறாரா…??)
இதனால் – ஆட்சிக்கோ, போலீஸ் துறையை கவனித்து வரும்
முதலமைச்சருக்கோ அவப்பெயர் வருமென்பது
மிக மூத்த அரசியல்வாதியான துரைமுருகன் அவர்களுக்கு
தெரியாதா ….?
அப்பாவுடன் 50 ஆண்டுகளுக்கு மேல் நண்பர்களாக
இருந்தவர்களை தன்னுடன் அமைச்சர்களாக வைத்துக்கொள்ள
வேண்டிய கட்டாயத்தில் திண்டாடும்…. முதல்வர் என்ன செய்வார்…?
பாவம்…. சொல்லவும் முடியாமல்,
மெல்லவும் முடியாமல் முதல்வர் படும் பாடு – ” தர்மசங்கடம்….”
.
………………………………………………