கப்பலில் உயிர் தப்பி வந்த பெண்களும், குழந்தைகளும் …

….

…..

2-ஆம் உலகப்போர்….துவங்கிய நேரம் –

ஹிட்லரின் வெறி கொண்ட படைகளின் தாக்குதல் ஒரு புறம்….

ரஷ்யப்படைகளின் ஆக்கிரமிப்பு மறுபுறம்….

“போலந்த்” என்கிற நாடே உலகப்படத்தில் இருக்கக்கூடாது
என்பது போல் வெறியுடன் தாக்குதல் நடத்தின 2 நாடுகளும்…

போலந்த் மக்கள் உயிர் பிழைக்க – கிடைத்த வழிகளிலெல்லாம்
ஓடினர்… குடும்பங்கள் சிதறின ….ஆண்கள் ஒரு பக்கம்..
பெண்களும், குழந்தைகளும் வெவெறு பக்கங்களில்…
தரை வழியாக – கடல் மார்க்கமாக… இப்போது உக்ரேனில் நாமெல்லாம்
பார்த்துக்கொண்டிருப்பது அதன் மிகச்சிறிய ஒரு சாம்பிள்….!

ஹிட்லரின் ஜெர்மனி மற்றும் ரஷ்யாவின்
தாக்குதல்களுக்கிடையே ஒரு கப்பலில் –

சுமார் 500 பெண்களையும், 200 சிறுவர்,சிறுமிகளையும்
ஏற்றி விட்டனர் போலந்து ராணுவத்தினர்….
எந்த நாட்டில் இடம் கிடைக்கிறதோ – அங்கேயே
தங்கிக் கொள்ளுங்கள்…
போர் முடிந்த பிறகு – உயிர் பிழைத்திருந்தால் – மீண்டும்
உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொள்ளலாம் என்று சொல்லி…

சமுத்திரத்தில் ஐரோப்பிய நாடுகளில், மத்தியதரைக்கடல்
நாடுகளில் – பல நாட்கள் அலைந்தது அந்தக் கப்பல் …
ஈரான், சிசிலிஸ், ஏமன்….என்று –

நாடு, நாடாக -அந்தக்கப்பல் நுழைய முயற்சி செய்தது…
ஊஹூம் …. எந்த நாடும் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை;

கடைசியாக – அந்தக் கப்பல், இந்தியாவின் மேற்குக்
கடற்கரையோரம், குஜராத் கடற்கரையில் இருந்த ஜாம் நகரை
(சுதேசி சமஸ்தானம்) அடைந்தது….அங்கே அவர்களுக்கு
காத்திருந்தது நம்ப முடியத ஒரு அதிசயம்….!

அன்போடு அவர்களை ஏற்று, அரவணைத்து, இருக்க இடம்,
உண்ண உணவு, குழந்தைகளுக்கு படிப்பு என்று அத்தனை
வசதிகளையும் தன் சொந்தச் செலவில் செய்து கொடுத்தார் –
ஜாம் நகர் மன்னர் – “ஜாம் சாஹேப் – திக்விஜய் சிங்” அவர்கள்.

கிட்டத்தட்ட – 7 வருடங்கள் அந்த மக்களும், அதற்குப்பின்
வந்து சேர்ந்த இன்னும் பலருமாக, சுமார் 1000 பேர்,
மன்னரின் பாதுகாப்பில்இருந்தனர்… போர் முடிந்த பிறகு,
அவர்களை மீண்டும் போலந்து சென்று தங்கள் தங்கள்
குடும்பங்களுடன் இணையும் வரையில் மன்னர் உதவினார்…!

கீழேயுள்ள இந்தச் செய்தியைப் படித்த பிறகு,
……

….

அந்த நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட சில காணொலிகளை
தேடிக் கண்டுபிடித்தேன்… மிக சுவாரஸ்யம்… கீழே தந்திருக்கிறேன்…

இந்தியாவின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், நம் ஜாம் நகர்
மன்னரின் கருணையையும் நினைத்துப் பார்க்க மிகவும்
பெருமிதமாக இருக்கிறது….

…………..

History Of Poland Refugees In India –
Jam Sahib Digvijay Singh Jadeja |

………………….

B.C. woman among 1,000 adopted by
Indian maharaja during WW II

……………………….

Second World War Polish children sheltered
by Indian king commemorate it in western India celebrations –


இவ்வளவு அருமையான மன்னரை நாம் நேரில் காண வேண்டாமா…?? !!!

ஜாம் மன்னர் திக்விஜய்சிங் அவர்கள் 2-ஆம் உலகப்போர்
சமயத்தில் கலந்துகொண்ட ஒரு நிகழ்வின் காணொலி –

Digvijaysinhji Ranjitsinhji in uniform
addresses RAF Vadodara Squadron (1942)

.
………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to கப்பலில் உயிர் தப்பி வந்த பெண்களும், குழந்தைகளும் …

  1. புதியவன் சொல்கிறார்:

    In 2016, 50 years after Jam Saheb’s death, Poland’s Parliament unanimously adopted a special resolution honouring Jam Saheb Digvijay Sinhji for his aid to Polish children refugees during World War II.
    இவர் நினைவாக வேறு ஏதோ போலந்தில் இருப்பதாக நான் படித்திருக்கிறேன் (தெரு அல்லது ஊர் பெயரோ அல்லது வேறு ஏதோ)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.