காத்திருந்த இந்திராணி.. பறந்து வந்த பிடிஆர்..!!! – காமெடி ஷோ….!!!

…..

…..

தற்போது தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிருக்கு
50 சதவீத இட ஒதுக்கீடு அமுலுக்கு வந்துள்ளது….

அதன் விளைவுகள் எப்படி…..?

இட ஒதுக்கீடு என்பது ஒரு மிகப்பெரிய காமெடி ஷோ’வாக
மாறி விட்டது என்பது தான் உண்மை….

விவரங்களுக்குள் செல்லும் முன் ஒரு காமெடி ஷோ –

ஒரு பத்திரிகைச் செய்தியிலிருந்து –

……………………………..


“காத்திருந்த இந்திராணி.. பிளைட்டில் பறந்து வந்த பிடிஆர்.. “

ஆரப்பாளையம் பகுதி திமுக செயலாளராக பொன்.வசந்த்
என்பவர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின்
தீவிர ஆதரவாளர் ஆவார்..

ஆனால், 57-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால்
அங்கே தன்னுடைய மனைவி இந்திராணியை நிறுத்தினார்…

இதைத்தவிர, திமுக பிரமுகர்களான மிசா பாண்டியனின்
மனைவி – பாண்டிச்செல்வி,
முருகன் மனைவி – பாமா
முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கத்தின் –
மருமகள் விஜயமௌசுமி …
அமைச்சர் பி.மூர்த்தி சார்பாக …. வாசுகி

என்று பல அரசியலுக்கே சம்பந்தம் இல்லாத –
ஆனால் திமுக அரசியல்வாதிகளின் பெண் சொந்தங்கள்
போட்டியிட்டனர்….

இறுதியில், பிடிஆர் அவர்களின் ஆதரவாளரான பொன் வசந்த்’தின்
மனைவி – திருமதி இந்திராணி மதுரை மாநகராட்சியின்
8-வது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே சென்னையில் இருந்த
பிடிஆர், தனி விமானத்தில் பறந்துவந்து கலந்து கொண்டிருக்கிறார்…

பிடிஆர் சென்னையில் இருந்ததால் அவர் விழாவுக்கு வந்து
சேரும்வரை, இந்திராணி பொன்வசந்த் மாநகராட்சியில் 2 மணி
நேரமாக காத்து கொண்டிருந்தார்..

தனி விமானத்தில் பிடிஆர் சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு 11.30 மணியளவில் வந்தபிறகே, இந்திராணி பொன்வசந்த் மேயராக அதற்கான
அங்கியில் வந்து பதவியேற்றார். மாநகராட்சி ஆணையாளர் கேபி.கார்த்திகேயன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்…!!!

ஆனால், முக்கிய நிர்வாகிகளான, அமைச்சர் பி.மூர்த்தி,
மாநகர, புறநகர் மாவட்டச் செயலாளர்கள் யாருமே இந்த
விழாவில் பங்கேற்கவில்லை.. நிகழ்ச்சியை புறக்கணித்து
விட்டனர்.

……………………………………………………………………………………….


இவ்வாறு அரசியல்வாதிகளின் பினாமிகளாக தேர்ந்தெடுக்கப்படும்
பெண்களிடம் சென்று சேரும் அதிகாரம் எப்படி, யாரால்
பயன்படுத்தப்படும்….?’

திருவூர் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட
ஒரு பெண்மணி கூறியது ”பெண்களுக்கு இட ஒதுக்கீடு
கொடுத்துள்ளது நல்ல முடிவுதான். ஆனால் பல கிராமங்களில்
பெண்கள் தேர்வானாலும், அவர்களின் கணவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஊராட்சிக்கு வரும் நிதியை எந்தெந்த
திட்டங்களுக்கு செலவிடவேண்டும் என தேர்வான பெண்
தலைவரின் கணவர்தான் தீர்மானிக்கிறார்.
பெண் கையொப்பம் மட்டுமே இடுகிறார்.


பெண் வேட்பாளர்கள் பலர் தங்களது கணவரின் புகைப்படத்தை
தங்களது பிரசார நோட்டீசில் அச்சிடுவதை சுட்டிக்காட்டும்
ஒரு பெண் சொல்கிறார் – ”எங்கள் ஊராட்சியில் தலைவர்
பதவிக்கு 13 பேர் போட்டியிடுகிறார்கள். நானும், இன்னொரு
பெண் வேட்பாளரும் போட்டியிடுகிறோம். ஆனால் அந்தப்பெண்
வேட்பாளர், கணவரின் புகைப்படத்தை போடுவதோடு இல்லாமல்,
என்ன பணிகள் நடைபெறும் என்பதையும் கணவர் தான் விளக்கி
பிரசாரம் செய்கிறார்.


கிராமங்களில் பெண் வேட்பாளர் வெற்றி பெற்றாலும்,
தலைவர் நாற்காலியில் கணவர் அமர்ந்து, கூட்டம் நடத்திய
சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்கிறார் இன்னொரு வேட்பாளர்….


தேர்தலில் வெற்றிபெற்ற தலித் பெண் பஞ்சாயத்துத்
தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்து இந்திய
ஜனநாயக மாதர் சங்கம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

அந்த ஆய்வு குறித்து பேசிய அந்த மாதர் சங்க பொதுச்செயலாளர் ”விழுப்புரத்தில் தலித் பெண் பஞ்சாயத்து தலைவர் ஒருவரை
சந்திக்கச் சென்றோம். அவரது பாதுகாப்பு கருதி பெயரை சொல்ல
விரும்பவில்லை. அவரது வீடு தெரியாமல் கேட்டோம்.
ஒரு மாடி வீட்டுக்கு கூட்டிச் சென்றார்கள். அவர் அந்த வீட்டில்
பின்புறம் பருப்பைக் கொட்டி சலித்துக்கொண்டிருந்தார்.
அவர் வேலை செய்யும் வீட்டின் முதலாளி ஆதிக்க சாதியைச்
சேர்ந்தவர். இந்த தலித் பெண்ணை கையெழுத்திடச் சொல்லிவிட்டு,
அந்த முதலாளி தான் தலைவராக இருந்தார். இந்த விவரத்தை
புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை……”

…………………

இந்த ஜனநாயக கூத்து எப்போது, எப்படி – மாறப்போகிறது….?

.
………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

5 Responses to காத்திருந்த இந்திராணி.. பறந்து வந்த பிடிஆர்..!!! – காமெடி ஷோ….!!!

 1. Tamil சொல்கிறார்:

  காலம் கனியும் காத்திருப்போம்!!

 2. vimarisanam-kavirimainthan சொல்கிறார்:


  நண்பர் சைதை அஜீஸ் அவர்களிடமிருந்து வந்த –
  இன்றைய இடுகைக்கு மிகவும் பொருத்தமான ஒரு காணொலி –

  லிங்கை க்ளிக் செய்யவும்.

  https://mail.google.com/mail/u/1?ui=2&ik=d17db2f48a&attid=0.1&permmsgid=msg-f:1726451928196658459&th=17f596e1adf3351b&view=att&disp=safe&realattid=17f596b62b4e8e64f611

 3. vimarisanam-kavirimainthan சொல்கிறார்:

  என் தளத்தில் திறக்கிறதே ..
  மீண்டும் பதிந்திருக்கிறேன்.
  இப்போது முயற்சி செய்து பாருங்கள்…
  சில விநாடிகள் தாமதமாகிறது… அவ்வளவு தான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.