நம்ப முடியாத காட்சிகள் ….!!!

…….

கீழே – முதலில் –

ஆயிரக்கணக்கில், ரஷ்யாவின் பல நகரங்களில் – ரஷ்ய மக்களே
புடின் அரசின், உக்ரேன் மீதான போருக்கு எதிராக – போராட்டம்
நடத்துகிறார்கள்…

புடின் அரசு போர் வேண்டாம் என்று போராடும் தம் சொந்த
ரஷ்ய மக்களையே கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது….

ரஷ்ய செய்தி தளங்களில், உக்ரேனில் நடப்பது குறித்த
செய்திகளை ஒலி, ஒளி பரப்புவது புடின் அரசால் தடை
செய்யப்பட்டிருக்கிறது….

இருந்தாலும், மற்ற வழிகளில்
தகவல் தெரிந்த மக்கள் போராடுகிறார்கள்….
உக்ரேனுக்கு அனுப்பப்பட்டிருக்கும் ரஷ்ய ராணுவ வீரர்களின்
குடும்பங்களும் இதில் அடக்கம்….

ரஷ்ய மக்களின் எதிர்ப்பு காணொலி –


கீழே – காணொலி –

ஆயிரக்கணக்கில் உக்ரேன் மக்கள், குறிப்பாக பெண்களும்,
குழந்தைகளும், அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடிச்
செல்கிறார்கள்….

இங்கே, உக்ரேனிலிருந்து வரும் ஒரு ரெயில், ஜெர்மனியின்-
பெர்லின் செண்டிரல் ரெயில் நிலையத்திற்கு வந்து சேருகிறது.

ஆயிரக்கணக்கான, உள்ளூர் மக்கள், (பெர்லின் நகர மக்கள்)
பூங்கொத்துகளுடனும்,

” எங்களிடம் இடம் இருக்கிறது… நீங்கள்
வந்து தங்கிக் கொள்ளலாம் “

-என்று தெரிவிக்கும் பதாகைகளுடனும்
அந்த உக்ரேனிய அகதிகளை மலர்ந்த முகத்தோடு
வரவேற்கிறார்கள்….

இன்றைய சூழ்நிலையில் எங்கே காண முடியும் இத்தகைய
மனித நேயத்தை…..? தம் வீட்டிற்கு ஏழை உறவினர் வந்தாலே
தவிர்த்து விடும் வழிகளைத் தேடும் மனிதர்கள் நிறைந்த
இன்றைய சமூகத்தில்…..?

………………………………………………………..

…………………………………………………………………………………………………………………………………..

இன்னும் சில வீடியோக்கள் கீழே –


ரஷ்ய டேங்குகளை கைப்பற்றும் உக்ரேனிய பொதுமக்கள்….

புடினின் நெருங்கிய நண்பரான பெரும் பணமுதலையுமான
ஒருவரின் – ரஷ்ய க்ரூய்ஸ் கப்பல் –
இதை கைப்பற்றி முடக்கியது ஜெர்மனி –

.

…………………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to நம்ப முடியாத காட்சிகள் ….!!!

  1. சிவா சொல்கிறார்:

    ஒன்று; கூடிய சீக்கிரம் புடின் மன நலம் பிடித்து
    மென்டல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவார்.

    அல்லது – ரஷ்யாவில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு,
    ஆட்சியை ராணுவம் கைப்பற்றும். புடின் சிறையில்
    அடைக்கப்படுவார்.
    இரண்டிலொன்று வெகு விரைவில் நடக்கும்.
    இது எவ்வளவுகெவ்வளவு விரைவாக நடக்கிறதோ
    அவ்வளவுக்கவ்வளவு உலகம் நிம்மதியடையும்.

  2. Vicky சொல்கிறார்:

    Sir, public hates war and the consequent losses. I am hearing stories justifying the war and how the western countries influence and benefit out of the Russian-Ukraine war. Also closely following up on the loss of lives and wealth. I guess you have concluded that it is all the fault of Putin. Can you, as usual, write a series or one article detailing the story behind this war and why we should justify Putin’s stand? This will truly help.

    • Vicky சொல்கிறார்:

      Why we cannot justify Putin’s stand

    • Peace சொல்கிறார்:

      Motive is self preservation and desire to protect his country. Here one should note that very few control the riches and the president controls them. There are plenty of articles and videos available on the internet. This is a game of chess between him and the west. Pawns are the innocent people on both sides

  3. Tamil சொல்கிறார்:

    இந்தப் போரினால் இழப்புகள் அதிகம். பெரும்பாலும் இழப்புகள் ஏழைகளுக்கு தான்.
    அணுமின் நிலையங்களின் மீது தாக்குதல் நடத்துவது போன்றவை எந்த வகையில் சரி என்று தெரியவில்லை.

    பெர்லின் நகர் மக்களின் அன்பு பிரமிக்க வைக்கிறது.

  4. Ganapathy சொல்கிறார்:

    Sir, war is bad and we do not want war. I am also not a supporter of Russia but I feel that their grievances were not addressed. When the Warsaw Pact dissolved and Soviet Union broke up, it appears that there was a commitment that NATO will not expand. At that time, NATO had 16 countries and now it has 30 countries with continuous expansion in Eastern Europe adjoining Russia’s borders. NATO can station missiles and target them at Russia and with the short distance, Russia will not be able to shoot them without incurring severe casualties. This was the position and fear of USA oo when USSR was stationing missiles in Cuba and they came to close to a nuclear war at that time. Ukraine was intending to join NATO and this was seen as a hostile act by Russia. We can say that it is up to the countries desire to join wherever they choose to join but European Union is different (with common market and all) and NATO (is only for defence) is different. I think I read somewhere a statement by a former Indian IS official in India Today, Imagine India’s reaction if Nepal entered into military alliance with China and have missiles there targeting India. Will we sit back and watch? So there are two sides to the story….. But war is not the answer

  5. vimarisanam-kavirimainthan சொல்கிறார்:

    ரஷ்யாவின் – உக்ரேனிய ஆக்கிரமிப்பு
    முயற்சி பற்றி, வாசக நண்பர்களின் கருத்தையும்
    அறிந்து கொள்ள வேண்டுமென்றே நான்
    காத்திருந்தேன்…

    நண்பர் விக்கி எழுப்பிய கேள்விகளுக்கு,
    இந்த பின்னூட்டம் பகுதியில் வெளியாகி இருக்கும்
    பல கருத்துகளும் பதில் சொல்கின்றன…

    நான் ரஷ்யாவை கடுமையாக கண்டித்து எழுதி
    இருப்பதால், அமெரிக்காவையோ, அதன்
    நடவடிக்கைகளையோ – ஆதரிக்கிறேன் என்று
    யாரும் நினைத்து விடக்கூடாது… இன்றைய தினத்தில்,
    அமெரிக்காவை விட, சுயநலமிக்க நாடு எதுவுமில்லை;
    தனக்கு ஒரு ஃபார்முலா… மற்றவர்களுக்கு
    வேறு ஃபார்முலா…. அமெரிக்கா – ஈராக்கில்
    தரையில் கூட இறங்காமல், வானத்திலிருந்தே
    1000 பவுண்டு குண்டுகளை ஆயிரக்கணக்கில் வீசி,
    ஈராக்கிய அப்பாவி மக்களுக்கு இழைத்த கொடுமைகளை
    என்னால் இன்னமும் மறக்க முடியவில்லை;

    எனவே, இந்த மாதிரி, தங்கள் ராணுவ வலிமையைக்
    கொண்டு – மற்றவர்களை தங்கள் வழிக்கு கொண்டு வர
    முயற்சிக்கும் எந்த நாட்டையும் நம்மால் ஆதரிக்க
    முடியாது….

    உக்ரேன் விவகாரத்தைக்கூட, அமெரிக்கா – கிளறி விட்டு,
    வேடிக்கை பார்ப்பது – முக்கியமாக – ரஷ்யாவை
    பொருளாதார ரீதியாக அழிக்க வேண்டும் என்கிற
    எண்ணத்தில் தான்.

    ஆனால், உக்ரேனில் நடக்கும் விவகாரங்களில் –
    ரஷ்யா – எந்த பாவமும் இழைக்காத அப்பாவி பொதுமக்களை
    கடும் துன்புறுத்தலுக்கு உட்படுத்தும் செயலை,
    மனசாட்சி உள்ள யாராலும் பார்த்துக் கொண்டிருக்க
    முடியாது…

    லட்சக்கணக்கில், உக்ரேனிய பெண்களும், குழந்தைகளும்,
    பலரும் நடந்தே சென்று, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுவதை
    காணும்போது, ஐக்கிய நாடுகள் சபை என்று ஒன்று
    இருப்பதே அர்த்தமற்றது என்பதை நிரூபிக்கிறது….

    தங்கள் ராணுவ பலத்தின் மூலம் மற்ற நாடுகளை
    அடிமைப்படுத்தும் எந்த ஒரு நாட்டையும் நாம் சகித்துக்
    கொண்டிருப்பது – நமது இயலாமையை மட்டுமே
    வெளிப்படுத்துகிறது…

    • புதியவன் சொல்கிறார்:

      போர் என்று வரும்போது அப்பாவிகள்தாம் பாதிக்கப்படுவர். ஆனால் இங்கு ரஷ்யாவின் நிலைப்பாடு ஓரளவு சரி என்றே நான் நினைக்கிறேன்.

      அமெரிக்காவிற்கு உக்ரைனின் மீதோ அல்லது நேட்டோ நாடுகளின் மீதோ அன்பு இருந்தால், அனைத்து ஆயுதங்களும் இலவசமாக வழங்கப்பட்டிருக்கவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், புதின் நிலைப்பாடு சரியானதே என்று நான் நினைக்கிறேன். இங்கு உக்ரைனை அடிமைப்படுத்த ரஷ்யா விரும்பவில்லை. ஆனால் உக்ரைன், மேற்கத்தைய நாடுகளுக்கு அடிமைப்பட்டு ரஷ்யாவிற்கு ஆபத்தை உண்டாக்குவதைத்தான் புதின் எதிர்க்கிறார்.

      அமெரிக்கா, காரணமே இல்லாமல் பொய் சொல்லி ஈராக்கின்மீது ஆக்கிரமிப்புச் சண்டை தொடர்ந்தது. நோபல் கமிட்டி, வெட்கத்தை விட்டு, அமெரிக்க அதிபர்களுக்குத் தொடர்ந்து காரணமே இல்லாமல் சமாதானப் பரிசைக் கொடுப்பதையும் நீங்கள் படித்திருப்பீர்கள். உலகில் பெரிய aggressor அமெரிக்காதான் என்பதை வரலாற்றை அவதானிக்கும் யாவரும் அறிவர்.

      ஒவ்வொரு நாடும், தன் நலத்துக்கு எது சரி என்றே நிலைப்பாடு எடுத்தாலும், அமெரிக்கா, அதனையும் மீறி, தன் தொழிலதிபர்களுக்கு எது நல்லது என்றே முடிவெடுக்கிறது.

  6. சதாசிவம் சொல்கிறார்:

    முன்பு மன்னராட்சி முறை இருந்தபொழுது, ஒவ்வொரு மன்னரும் அடுத்த நாட்டின் மீது போர்தொடுத்தும் , சதி வேளைகளில் ஈடுபட்டும் , ஒரு நிம்மதியற்ற நிலைமையே நீடித்தது.என்று, எப்பொழுது அடுத்த நாட்டு மன்னர்கள் நம்மை தாக்குவார்கள் என்ற பயத்திலேயே மன்னர்கள் வாழ்ந்திருக்க கூடும் . அது இன்று நவீன வடிவத்தில் உள்ளது. ஒவ்வொரு நாடும், அவர்களின் நியாயத்தைதான் கற்பிக்கிறார்கள். நியாயங்களுக்கு மட்டும் இங்கும் குறையில்லை.அணைத்து நியாயங்களும் நம்மை குழப்புகின்றன .
    போர்க்களம் மாறலாம் , ஆனால் போர்கள் தான் மாறவில்லை ….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.