மறுஜென்மத்துக்கான ஆதாரங்கள் ….!!!

……

….

அண்மையில், தெலுங்கில் மறுஜென்மம் பற்றி ‘நானி”
“ஷியாம் சிங்கா ராய் ” என்று ஒரு படம் எடுத்திருந்தார்…
பின்னர் பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டது –
படம் பெரிய ‘ஹிட்’…

அதைத்தொடர்ந்து – இந்த மாதிரி வேறு ஏதேனும்
ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்குமா என்று தேடினேன்…

கிடைத்தது – சுவாரஸ்யம் – கீழே பகிர்ந்து கொள்கிறேன்…

…………………………………………………………………………………………………………………………………………………..

அதற்கு முன்பாக, நேற்றைய இடுகையில் நான் எழுதிய பின்னூட்டம் ஒன்றைப்பற்றி, இங்கு நான் சொல்ல விரும்புகிறேன்….

நிறைய வாசக நண்பர்கள் ஏற்கெனவே இடுகையை படித்து விட்ட நிலையில் பின்னூட்டத்தில் – அந்தக் கருத்து வெளியானதால், அது அனைவரையும் சென்றடைய வாய்ப்பில்லை; எனவே நான் மிகவும் முக்கியமானதாக கருதும் அதை முதலில் இங்கு மீண்டும் தருகிறேன். பிறகு இன்றைய இடுகை தொடர்கிறது….

…………………………………………………………………………

இந்த இடத்தில் நான் இதை அவசியம் சொல்லியாக
வேண்டும்…. விவேகானந்தரை மறந்து விட்டு,
இந்து மதத்துக்காக வாதாடுகிறேன் என்று யாரும்
பெருமை கொள்வதில் அர்த்தமில்லை;

என்னைப் பொருத்தவரை, விவேகானந்தரை மறந்தவர்,
இந்து மத கொள்கைகளையே அறியாதவர் என்று தான்
சொல்ல வேண்டும்..
—————————————————
சுவாமி விவேகானந்தர் என்ன சொன்னார்….???

” I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true.
I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. ”

– Swami Vivekananda
——————————————
Swami Vivekananda’s address to the World Parliament of Religions, Chicago on 11 September, 1893 .

——————————————————-

இனி இன்றைய இடுகை தொடர்கிறது…..
……………………………………………….

உலக அளவில் முன்பிறவி நினைவுகளை நிரூபிக்கும் வகையில்
அமைந்த பல்வேறு சம்பவங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அவற்றில் பல்வேறு சம்பவங்கள் முன் பிறவி
நினைவுகளை அச்சு பிசகாமல் நிரூபிக்கும் வகையில் அமைந்தாலும் அதற்கான அறிவியல்பூர்வ காரணங்களை நிரூபிக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறி வருகின்றனர்.

உலக அளவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் பல சம்பவங்கள்
இதை நிரூப்பித்துள்ளன. அவற்றில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட
சில உண்மை சம்பவங்கள் இங்கு –

உலகெங்கும் சென்று முற்பிறவி தொடர்பான ஞாபகம் எழுந்த ஆயிரக்கணக்கானவர்களைப் பற்றி ஆராய்ந்து பதிவு செய்து
வைத்த டாக்டர் இயான் ஸ்டீவன்ஸன் (Dr. Ian Stevenson)
1975 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். இவர் இந்தியாவுக்கு
வந்தது மிருதுளா சர்மா என்ற 25 வயது பெண்மணியைப் பற்றி
ஆய்வு செய்ய.

இந்த மிருதுளா சர்மாவுக்கு உள்ள விசேஷம் என்னவென்றால்,
அவர் இரண்டு பட்டங்களைப் பெற்றவர். ஆனால், இந்த இரண்டு பட்டங்களும் இரண்டு பிறவிகளில் பெற்றதாகும். ஒன்று காசி
பல்கலைக் கழகத்தில் ஹிந்தியில் எம். ஏ. மற்றொன்று
மீரட் பல்கலைக் கழகத்தில் பொலிட்டிக்கல் சயின்ஸ்.
பிரச்சனை என்னவென்றால் இந்த இரண்டு பிறவிகள் குறித்த எண்ணங்களோடும், நினைவுகளோடும் அவர் வாழ்ந்து கொண்டிருப்பதுதான்.

சென்ற பிறவியில் தான் முன்னு என்ற பெயரை உடையவரென்றும்,
இந்தப் பிறவியில் மிருதுளா என்றும் சொன்னார். சென்ற பிறவியில் டெஹராடூனில் பிறந்தேன் என்றும், இந்த பிறவியில் நாஸிக்கில்
பிறந்த தாகவும் தெரிவித்தார்.

முற்பிறவியில் இறந்தது 1945. மீண்டும் பிறந்தது 1949.
சென்ற பிறவியில் பனியா என்ற ஜாதியில் பிறந்தார். இந்தப்
பிறவியில் பிராமண ஜாதியில் பிறந்தார். இவரைக் குறித்து
ஆய்வு செய்யவே இயான் ஸ்டீவன்சன் இந்தியாவுக்கு வந்தார்.

வர்ஜீனியா பல்கலைக் கழக பேராசிரியரான அவர் இது போன்ற
ஆயிரக் கணக்கான நபர்களைப் பற்றி ஆராய்ந்து அதற்கான
காரணத்தைக் கண்டறிந்து பதிவு செய்தவர். அவர் ஆராய்ச்சி
முடிந்து செல்லும் பொழுது ”இது மறு பிறவி என்பதற்கான
தெளிவான சாட்சி ஆதாரமாகும்”என்றுபதிவு செய்து வைத்தார்.
மறுபிறவி நம்பிக்கை இல்லாத தேசத்தில் பிறந்து அதை
நிருபிப்பதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் செலவு
செய்திருக்கிறார் இவர்.

இந்த மிருதுளா என்ற பெண்மணியின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களைப் பார்த்தால் எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது
என்பது உறுதியாகத் தெரிகிறது. மிருதுளாவிற்கு இரண்டு வயது
நடை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே பூர்வ ஜன்ம நினைவுகள்
எழத் தொடங்கின.

அதைக் குறித்து தன் பெற்றோர்களிடம் அவள் தெரிவித்த பொழுது
அவர்கள் குழந்தை ஏதோ குழந்தைத்தனமாக உளறுகிறது என்று எண்ணியிருந்தனர். நாட்கள் செல்லச் செல்லத் தான் சொல்வதை
இவர்கள் நம்ப மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்ட மிருதுளா
தன் எண்ணங்களைத் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.

அப்படிப்பட்ட சூழலில் தான் நமக்கு மேல் உள்ள தீர்மானம் என்று சொல்கிறார்களே அந்த விதி மிருதுளா வாழ்வில் விளையாடியது. தகப்பனார் இறந்து போனார். தாயார் சாந்தா சாஸ்திரி அவர்களுக்கு டெஹராடூனில் ஆசிரியையாக வேலை கிடைத்தது. எனவே
தாயும் மகளும் அங்கு குடி பெயர்ந்தனர். அதுதான் அவளின்
முற்பிறவி ஊராகும். இப்படிப்பட்ட சூழலில் தாயாருடன் ஒரு ஆன்மிக நிகழ்ச்சிக்குச் சென்ற பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

அதே சபையில் ஓரத்தில் அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணியின் மடியில் போய் அமர்ந்து கொண்ட மிருதுளா அவரை கட்டி அனைத்துக் கொண்டார். அவர்களும் ஏதோ குழந்தைக்கு நம்மை பிடித்திருக்கிறது போல என்று எண்ணி தன் மடியில் அமர்ந்திருந்த குழந்தையை
அன்போடு தடவிக்கொடுத்தார்.

ஆனால்குழந்தையோஅந்தவயதானபெண்மணி யின் அருகில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்து நீ என் தங்கை என்று சொல்லியது.
அது எப்படி நான் வயதில் பெரியவளல்லவா ? என்னை அக்கா
என்றுதான் சொல்ல வேண்டும் என்று அந்தப் பெண் சொல்ல,
மிருதுளா ஒத்துக் கொள்ளவே இல்லை. நீ என் தங்கைதான் என்றும் நான் தான் முன்னு என்றும் இது என் அம்மா என்றும்அழுத்தம்
திருத்தமாகச் சொல்லவே அந்தவயதான பெண்மணிக்கு இது ஏதாவது ஏமாற்றுவேலையா இருக்குமோ என்று
ஐயம் எழுந்தது.

அந்த வயதானப் பெண்மணி வேறு யாருமல்ல, மிருதுளாவின் பூர்வ ஜன்மத்தில் தாயாரான சத்தியவதி செட்டியே. அவர் சுதந்திரப்
போராட்ட வீராங்கனையும் கூட. சிறந்த சமூக சேவகியுமாவார்.
இது குறித்து இரு தாய்மார்களும் பேசி முடிவு செய்து மிருதுளாவை சத்தியவதி அவர்கள் தங்கள் வீட்டுக்கு
அழைத்துச் சென்றார்.

அங்கு சென்ற பிறகு குழந்தையை பல விதமான கேள்விகளால்
துளைத்தெடுத்துப் பார்த்தார்கள். அவளோ எல்லாவற்றையும்
சரியாகவே சொன்னாள். பொருட்கள் இடம் மாறி இருப்பது,
புதிதாக கட்டப்பட்ட இடங்கள் என்று பலவற்றையும் சொல்லி
அசத்தினாள்.

அப்பொழுது சத்தியவதி அவர்கள் ஒருவரைச் சுட்டிக் காட்டி எல்லாவற்றையும் சரியாகச் சொன்ன நீ நம் வீட்டு வேலைக்காரரான
இவரை மறந்து விட்டாயே என்று ஒரு நபரைச் சுட்டிக் காட்டினார்.
அவர் அப்பொழுது தான் ஏதோ பொருட்களை வாங்கியபடி உள்ளே நுழைந்தார். உடனே மிருதுளா அது வேலைக் காரரல்ல என் தந்தை
என்று சொல்லி ஓடிப் போய் அவரைக் கட்டிக் கொண்டது.


இப்பொழுது எல்லோருக்கும் நம்பிக்கை வந்து விட்டது.
இரண்டு தாய்களும் தங்கள் மகளிடம் அன்பைப்பொழிந்தனர். சத்தியவதி அவர்கள் மிருதுளாவின்திருமணத்திற்கு பணமும், நகைகளும், வீடும்
சீதனமாகக் கொடுத்தார். மிருதுளா ஐந்து வயதாக இருக்கும்
பொழுது சுவாமி சிவானந்தரை ரிஷிகேசத்தில் வைத்து தரிசித்தார்.
அவரைப் பற்றி அறிந்து கொண்ட அவர் நல்லாசி வழங்கிஅனுப்பிவைத்தார்.தன்னுடையபுத்தகம்ஒன்றில்
மிருதுளாவை பற்றி சுவாமிகள் குறிப்பிட்டிருந்தார். இதை
1967 ஆம் ஆண்டு வெளி வந்த தி டைம்ஸ் ஆப் இண்டியா
(31 -10 -1967) பத்திரிக்கை கட்டுரையாகப் பிரசுரித்தது.

இப்படி மிருதுளா பற்றி பல செய்திகள் வெளிவரவே அதைக்
கேள்விப்பட்டு தான் ஸ்டீவன்சன் இந்தியா வந்தார். ஸடீவன்சன்
பல கேள்வி களைக்கேட்டார்.அனைத்தும் சரியாகவே இருந்தது.
மச்சங்கள் குறித்தும் ஆய்வு செய்தார். முற்பிறவியில் இருந்த
மச்சங்கள் இப்பிறவியிலும் இருக்கும் என்பது அவர் கருத்து.

நீ எப்படி இறந்தாய் ? உன் மரணம் உனக்கு நினைவில் இருக்கிறதா ?
என்று ஸ்டீவன்சன் கேட்டார். ”ஆமாம் நினைவிருக்கிறது. உடலில் மிகுதியான வலி இருந்தது. பாதத்திலிருந்து என்னை யாரோ பிடித்து இழுப்பது போலத் தோன்றியது. அப்பொழுது தலையில் கடுமையான வலி ஏற்பட்டது. அந்த நொடியே மிதப்பது
போலத் தோன்றியது. வலியெல்லாம் மறைந்து ஆகாயத்தில்
மிதப்பது போலத் தோன்றியது.

சிறுவயதில் இந்த நினைவு அதிகமாக எழுந்தன. இப்பொழுது
அது கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டது என்று கூறினார்.


அரசாங்க அலுவலகங்களில் பழைய கோப்புகளைத் தேடுவது போல நம்மில் கூட யாருக்காவது – ஆழ்மனதை கிளறினாலும் முற்பிறவியின் பதிவுகள் கிடைக்கக்கூடுமோ… ?

.
…………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.