…….

…..
சிங்கப்பூர் பிரதமர் இந்தியாவில் ஜனநாயகம் பற்றி பேசியதை
குறை கூறி, டெல்லி மீடியாக்களும், ஆளும் தரப்பினரும்
கடுமையாகப் பேசி வருகின்றனர்….
இந்திய தரப்பிலிருந்து, அதிகாரபூர்வமாக சிங்கப்பூர் பிரதமர்
பேசியதை குறை கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது…
“India on Thursday formally protested against
Singapore Prime Minister Lee Hsien Loong’s
remarks that almost half the members of the
Lok Sabha have criminal charges pending against
them, describing the comments as “uncalled for ..”
அப்படி என்ன சொல்லி விட்டார் சிங்கப்பூர் பிரதமர்….?
நேற்று முன் தினம், சிங்கப்பூர் பாராளுமன்றத்தில், ஜனநாயகம்
செயல்படும் முறை குறித்து பொதுவாக பேசும்போது,
பல நாடுகளிலும் அரசியலில் ஈடுபடுபவர்களின் தரம்
குறைந்துகொண்டே வருகிறது என்றும்,
அந்தந்த நாடுகள் சுதந்திரம் பெறும்போது இருந்த
தலைவர்களையும், இப்போதைய தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரதிநிதிகளின் தரத்தையும் பார்க்கும்போது நாளுக்கு நாள்
தரம் தாழ்ந்துகொண்டே போவது புரியும் என்றும் சொன்னார்….
இந்தியாவைப் பற்றி பேசும்போது அவர் சொன்னது –
” In the case of India, Lee noted: –
“While Nehru’s India has become one where,
according to media reports, almost half the
MPs in the Lok Sabha have criminal charges
pending against them, including charges of
rape and murder. Though it is also said that
many of these allegations are politically
motivated.”
(அவர் இந்தியாவைப்பற்றி மட்டும் சொல்லவில்லை;
இஸ்ரேலையும் உதாரணம் காட்டினார்….
“Things start off with passionate intensity.
The leaders, who fought for and won independence,
are often exceptional individuals of great courage, immense culture, and outstanding ability.
They came through the crucible of fire and emerged
as leaders of men and nations. They are the
David Ben-Gurions, the Jawaharlal Nehrus,
and we have our own too,” PM Loong said… “
நம்மைப்பற்றி அவர் கூறியது –
” பத்திரிகைத் தகவல்களின்படி, இன்றைய லோக் சபாவில்
கிட்டத்தட்ட பாதி உறுப்பினர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட
கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்
இருக்கிறார்கள்… “
அவர் மத்தியில் ஆளும் கட்சியைப்பற்றி தனிப்பட எதையும் சொல்லவில்லை; அவர் சொன்ன விவரங்கள், அனைத்து
கட்சிகளுக்கும் சேர்த்து தான்.
இன்றைய ஜனநாயக சீர்கேட்டிற்கு, காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுமே பொறுப்பு …
ஆனால், மற்ற வேறு எந்த கட்சியும் எந்தவித எதிர்ப்பையும்
தெரிவிக்காத நிலையில், பாஜக மட்டும் இதை தனக்கு எதிராக சொல்லி இருப்பதாக நினைத்துக்கொண்டு எதிர்வினை ஆற்றுவது தவறு ….
இதே போல், இஸ்ரேலைப்பற்றியும் அவர் சொல்லி இருந்தாலும்,
இஸ்ரேல் நாடு எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை;
சிங்கப்பூர் பிரதமர் சொன்னாலும் சொல்லா விட்டாலும்,
நமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் தரம், தகுதி குறித்து
நமக்கே தெரியாதா என்ன….?
தீவிர அரசியலில் ஈடுபட அடிப்படைத் தகுதியே –
கிரிமினல் செயல்கள் தான் என்பது நம் நாட்டின்
விதியாகி விட்டது….
அது சரி – சிங்கப்பூர் பிரதமர் நம் லோக் சபா உறுப்பினர்கள் குறித்து
சொன்னது எவ்வளவு தூரம் உண்மை ….?
2019 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்த சமயம் வெளியான,
கீழே இருக்கும் செய்தித்தலைப்பை பார்த்தால் தெரியும்….
……………….

……………………………………………
539 உறுப்பினர்களில், 233 பேர் மீது கிரிமினல் வழக்குகள்
நிலுவையில் இருக்கின்றன….
………………….
ஒன்று வேண்டுமானால் செய்யலாம்…
பொத்தாம் பொதுவாக சிங்கப்பூர் பிரதமரை குறை சொல்லாமல்,
அவர் சொன்னது எந்த விதத்தில் தவறு என்று சுட்டிக் காட்டலாம்…. !!!
” சார்…. நீங்கள் பாதி பேர் கிரிமினல் பேர்வழிகள் என்று
சொன்னது தவறு… 539 பேரில் 233 பேர் மீது தான் கிரிமினல்
வழக்குகள் இருக்கின்றன… இது 43.2 % அளவிற்கு தான் வருகிறது..
எனவே, உங்கள் தவறைத் திருத்திக் கொள்ளுங்கள் ” என்று சொல்லலாம்…!!!!
இதையே ஒரு பத்திரிகை அறிவிப்பாக, (Press Notification )
வெளியிட்டு விட்டால் இன்னும் நல்லது…. !!!!
மற்ற நாடுகளுக்கும், இந்த சரியான தகவல் கிடைத்து, அவர்களும் நம்மைப்பற்றிய அபிப்பிராயத்தை, தேவைக்கேற்ப சரி செய்துகொள்ள உதவும்…. !!!!!!!!!
………………..
நம் அரசியல்வாதிகளின் தரம் குறித்து வெட்கப்பட வேண்டிய
நிலையில் இருக்கும் நாம்,
உண்மையை சொல்பவர்கள் மீது எரிந்து விழுவதை தவிர்த்து விட்டு,
நம் பாராளுமன்றத்தையும், சட்டமன்றங்களையும் – ” சுத்தம் ” செய்யும் முறைகளைப்பற்றி யோசிப்பது நல்லது.
இல்லையா நண்பர்களே….?
.
……………………………………………….
உண்மையை சொன்னால் கண்டனம் தெரிவிப்பது ஏன்,
வெளிநாட்டுகாரருக்கே தெரிந்து சொல்லி விட்டார் என்பதற்காகவா..
சிங்கப்பூர் பிரதமர் சொன்ன விதம் தவறு. அதை ‘இப்போது இருக்கும் m p களில் 50% பேருக்கு எந்த கிரிமினல் கேசும் இல்லை’ என்று சொல்லியிருந்தால் ஒத்துக்கொண்டிருப்பார்கள்!
அடுத்த நாட்டை, அதைவிட அந்த நாட்டை ரெப்ரெசெண்ட் செய்யும் பாராளுமன்ற அங்கத்தினர்களைப் பற்றி இன்னொரு நாடு கருத்துச் சொல்வது தவறு. அதனை ஆளும் அரசு எதிர்க்கவேண்டும். அதனால் பாஜகவைப் பற்றிச் சொல்வதாக எடுத்துக்கொண்டார்கள் என்று சிந்திக்கவேண்டியதில்லை.
இன்னொன்று…இவங்களை (அந்த 50 அல்லது 80 சதவிகிதத்தை) தேர்ந்தெடுத்தது இந்தியர்கள். அவங்களோட யோக்கியதையும் இதிலிருந்து தெரிவதாக எடுத்துக்கொள்ளலாம்.
ஒருவரின் மனைவிக்கு ஏகப்பட்ட மோசமான குணங்கள் இருக்கலாம். அவருடைய பசங்களும் மோசமானவர்களாக இருக்கலாம். அதற்காக அந்தக் குடும்பத்துக்குச் சம்பந்தமில்லாதவர்கள் அதனைப்பற்றி கருத்துச் சொல்வதை நாம் எப்படி விரும்புவோம், நம் மனைவியின் யோக்யதாம்சங்களைப் பற்றி பிறர் கூறுவதை எவ்வளவு ஆவலுடன் நாம் கேட்டுக்கொள்வோம் என்பதைப் பொறுத்து சிங்கப்பூர் பிரதமரின் கருத்துக்களையும் நாம் கேட்டுக்கொள்ளலாம்.
நீங்கள் சொல்வது சரி. ஒரு நாட்டை பற்றி வேறு ஒரு நாட்டு பிரதமர் / ஜனாதிபதி கருத்து சொல்வது தவறு. இந்த மாதி பெருதன வேலைகளை அமெரிக்கா / கனடா / இங்கிலாந்து தலைவர்கள்தான் முந்திரி கொட்டை போல கருத்து சொல்வார்கள்!
இதை எழுதும்போது, பஞ்சாப்/தில்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்திற்காக பணத்தை அனுப்ப உதவியதும் அல்லாமல், அதைப்பற்றி விமர்சித்த கனடா பிரதமர் இப்போ அந்த ஊர்ல அவசரநிலைப் பிரகடனம் செய்து தலைமறைவாக இருப்பது நினைவுக்கு வருது.
1) எப்படி இருந்த சமூகம் –
இன்று இப்படி ஆகி விட்டதே என்று ஒருவர் அங்கலாய்ப்பதை ,
தவறாக எடுத்துக்கொள்ள
ஒருவருக்கு special mentality வேண்டும்….!!!
(அது என்ன special mentality –
என்று யாரும் கேட்க மாட்டார்கள்;
படிப்பவர்களுக்கே புரியும்…. )
2) கோவிட் பாசிடிவ் என்பதால், தனிமைப்படுத்திக்
கொண்டிருக்கும் – கனடா பிரதமரை தலைமறைவாக
இருக்கிறார் என்று சொல்வது –
அறியாமையின் வெளிப்பாடு அல்லது உண்மையை
தங்கள் வசதிக்கு, திரித்துக் கூறும் தன்மை
என்று தான் சொல்ல வேண்டும்.
( இதுவும் special mentality இருப்பவர்களால்
மட்டுமே முடியும்….!!!)
.
//எப்படி இருந்த சமூகம் – இன்று இப்படி ஆகி விட்டதே என்று ஒருவர் அங்கலாய்ப்பதை// – சிங்கப்பூரிலும் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது… மக்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள், அவர்கள் mentality, பொழுதுபோக்கு, சமுகக்கடமை, குடும்பக்கடமை எல்லாமே மிகவும் மாறிவிட்டது, இந்த 50-60 வருடங்களில். அதற்கேற்றபடிதான் அவர்கள் தேர்ந்தெடுப்பவர்களும் இருப்பார்கள். அப்போ ஆப்ரஹாம் லிங்கன் இருந்தார், லீ…. என்று பெரிய லிஸ்ட் போடலாம். ஏன் தமிழகத்திலேயே இன்றுவரை நாம் சொல்வது காமராஜர், கக்கன். சாதிக்கண்ணோட்டத்தோடும் குறுகிய மனத்தோடும், எதிர்காலத் தலைமுறையை அழிக்கவேணும் என்ற ஆவேசத்துடன் மக்கள் வாக்களித்து காமராசரைத் தோற்கடித்தபிறகு, யாருக்கேனும் காமராசரைப் பற்றிப் பேச (தமிழர்களுக்கு) யோக்கியதை இருக்கிறதா? மக்களுக்கு ஏற்றபடிதான் அவர்களுடைய ஆட்சியாளர்கள் அமைவார்கள். அதனால் பிரச்சனை அந்த அந்த நாட்டு மக்களிடம்தான், தலைவர்களிடம் இல்லை.
போராட்டத்தின்போது அவர் தலைமறைவாக இருந்தது செய்தித்தாள்களில் வந்தது.
நாங்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் கிரிமினல்கள் 50 சதவீதம் தான் என்று சொல்லி எங்களை கேவலப்படுத்த வேண்டாம் என்ற அடிப்படையில் நமது அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து இருக்கலாம்