வியக்க வைக்கும் கொரியா ….!!!

….

இப்போதெல்லாம், உலக அளவில் தென் கொரியா நிறைய
பேசப்படுகிறது….

ஓரு பக்கம் பிரம்மாண்டமான எலெக்ட்ரானிக் தொழில் வளர்ச்சி….
(எல்.ஜி.எலெக் ட்ரானிக்ஸ், சாம்சங், ஹூண்டாய், கியா …)

மற்றொரு பக்கம் –
கொரிய இளைஞர்களின் ‘கொரியன் பாப்’ (‘கே’பாப்)
இசையும், நடனமும் ….உலக இளைஞர்களை கவர்ந்திழுக்கிறது.
சின்னப்பசங்கள் அருமையாக பாடி, ஆடுகிறார்கள்… என்னால் ரசிக்க முடியவில்லை என்றாலும் நம்ம ஊர் இளைஞர்களுக்கு பிடித்திருக்கிறது.
சாம்பிள் கீழே –

நிறைய திரைப்படங்கள்…
டிவி சீரியல்கள்,
நம்மூர் போலவே – குடும்பக்கதைகளுடன் டிவி சீரியல்கள்
(உலக மார்க்கெட்டைப் பிடிக்க ஆங்கில சப்-டைட்டில்களுடன்…)
என் நண்பர் ஒருவரின் மனைவி, தினமும் கொரிய சீரியல் நாடகம் பார்க்கிறார்( சப்-டைட்டில்கள் துணையுடன் )…
அவருக்கு மிகவும் பிடிக்கிறது… நம்ம ஊர் டிவி சீரியல்கள்
மாதிரியே (மாமியார்-மருமகள் சண்டை, சக்களத்தி சண்டைகள்,இரண்டு பெண்டாட்ட்க்காரர் கதைகள் …!!! ) இருக்கின்றன என்கிறார்.

நான் கூட தினமும் அல்ஜஜீராவுடன், கூடவே கொரிய செய்தித்தளத்தையும் – (கொரிய கலாச்சாரத்தை அறிந்து கொள்ள)
கொஞ்ச நேரம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்….!


என்ன – ஒரே ஒரு பிரச்சினை –
எல்லா முகங்களும் ஒரே மாதிரி தெரிகின்றன …
வித்தியாசம் காண்பது தான் சிரமமாக இருக்கிறது.

ஒரு மிக முக்கியமான விஷயம் –
அவர்களது கலாச்சாரம், இசை, நடனம், நாடகங்கள் எல்லாமே –
அமைதி வழியில் இருக்கின்றன… மேற்கத்திய நாடுகளின்
வயலன்ஸ் – வன்முறை கலாச்சாரத்தின் சாயலே இங்கு இல்லை.
சகலமும் சாத்வீகம்….!!!

கொரியா சிறிய நாடு….மொத்தமே – 5.1 கோடி மக்கள் தான்…
தென் கொரியா, தனியே பிரிந்து
ரிபப்ளிக் ஆஃப் கொரியா என்று உருவானது
1948 -ல்.

கொரிய யுத்தம் முடிவடைந்தது 1953-ல்.
அதற்குப் பிறகு துவங்கிய வளர்ச்சி தான்…
1953-2021 – வெறும் – 68 ஆண்டுகள் தான்…
உலகின் 10-வது பொருளாதார வளத்தில் நிற்கிறது…
எப்பேற்பட்ட, பிரமிக்க வைக்கும் வளர்ச்சி….!!!

நாம் கூட சில விஷயங்களை கற்றுக்கொள்ள
வேண்டியிருக்கிறது கொரியாவிடம் ….

நம்மிடம் இளைஞர்களுக்கோ, ஆற்றல் சக்திகளுக்கோ, தொழில் திறமைக்கோ பஞ்சமில்லை; தொழில் பயிற்சி பெற்ற இளைஞர்களும், உடல்வலு மிக்க உழைக்கும் தொழில் வர்க்கமும் தயாராகவே இருக்கின்றன…. இவர்களை ஒருங்கிணைத்து, ஆக்கபூர்வமாக பயன்படுத்தி பெரிய அளவில் தொழில் உற்பத்தியில், ஈடுபட வைக்க சரியான தொழில்துறை முனைவர்களுக்குத்தான் பஞ்சமாக இருக்கிறது.

மாநில மற்றும் மத்திய அரசுகளும், தொழில் முனைவோர் கூட்டமைப்பும் இணைந்து, இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும், புதிய புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் – தீவிரமாக முயற்சியில் இறங்கினால் –

பண முதலீடு ஒரு பிரச்சினையே இல்லை; வங்கிகளிடம் நிறைய பணம் இருக்கிறது; கடன் கொடுக்க காத்திருக்கிறார்கள்; பங்கு மார்க்கெட்டிலும், புதிய தொழில் அமைப்புகளுக்கு வெகு சுலபமாக முதலீடுகள் கிடைக்கின்றன.

பொருளாதார வளர்ச்சியில் கொரியாவைத் தாண்டிச்செல்வது இந்தியாவுக்கு ஒரு பிரச்சினையே இல்லை; தேவை தொழில் முனைவோரின் தீவிரமான முயற்சியும் அரசுகளின் ஆதரவும் தான்.

…………

……………

korean song/dance – sample –

…….

கொரிய டிவி நாடகம் ஒன்றிலிருந்து ஒரு காட்சி –
….

.
………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to வியக்க வைக்கும் கொரியா ….!!!

 1. bandhu சொல்கிறார்:

  Default என்ற படம் சமீபத்தில் வந்த ஒன்று. அதில் IMF எந்த அளவு ஒரு நாட்டை படுத்தி எடுப்பார்கள் என்பதை சொல்லியிருப்பார்கள். கொரியாவின் பொது மக்கள் எந்த அளவு கடன் தொல்லையை அனுபவிக்கிறார்கள் என்பதை இந்த படமும் Squid Game என்ற மிக பிரபலமான netflix சீரியலும் இதன் மறுபக்கத்தை தெளிவாக காட்டும்!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Bandhu,

   நீங்கள் சொல்வதும் ஒரு காலத்தில் உண்மையான
   நிலைமையாகத் தான் இருந்தது…

   ஆனால், பிற்பாடு நிலவரம் பெரும் அளவில்
   மாறியுள்ளது….

   நான் இந்த இடுகையில் எழுதியுள்ள கருத்துகளின்
   அடிப்படையை கீழே தந்துள்ளேன் –

   கொரியா – தற்போதைய பொருளாதார நிலையின்
   அடிப்படையில், ஒரு வளர்ந்த நாடாக –

   Developed country -யாக
   மதிக்கப்படுகிறது.

   சரியான நிலவரத்தை கீழ்க்கண்ட தகவல்கள்
   எடுத்துச்சொல்கின்றன என்று நினைக்கிறேன்…..

   ——-
   How did Korea get out of poverty?

   Close collaboration between the chaebol,
   authoritarian regimes running
   state-controlled economic plans and
   disciplined, collectivist-minded
   individuals brought South Korea out of
   dire poverty within a single generation.

   ————
   Why is Korea successful economically?

   South Korea’s rigorous education system
   and the establishment of a highly motivated
   and educated populace is largely responsible
   for spurring the country’s high technology
   boom and rapid economic development.
   The country has almost no natural resources,
   and a high population density in its territory.

   ————————

   South Korea’s impressive rapid growth
   to come from a low-income country to a
   high-income country is an experience that
   developing countries can certainly learn from.
   In fact, out of 110 middle-income countries
   from the 1960s, only 13 including South Korea,
   have transitioned to high-income status.

   ———-

   How does South Korea make money?

   Manufacturing. South Korea’s industry,
   which has grown remarkably since the 1960’s,
   accounts for 41 percent of the nation’s
   economy. The country exports a variety of
   manufactured goods, including steel,
   automobiles, ships, chemicals, clothing,
   television sets, household appliances,
   and computers and semiconductors.
   ——————-

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  இவங்களோட work culture is not good. இந்த ஊருக்கு ப்ராஜக்டுக்குப் போனவங்க, இவங்களைப் பற்றி நல்ல அபிப்ராயம் தெரிவிக்கலை. உறிஞ்சி எடுத்துடுவாங்க, இவங்கள்ட வேலை செய்யவே முடியாது, கொரியனும் மிகக் கடுமையாக வேலை செய்வான் என்று சொல்லியிருக்காங்க.

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  புதியவன்,

  நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்.
  ஒரு விதத்தில், அந்த work culture தான் அவர்கள்
  தங்களது, அடிபாதாள பொருளாதார வீழ்ச்சியிலிருந்து
  மேலே வர உதவியாக – முக்கிய காரணமாகவும்-
  இருக்கக்கூடும்.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 4. புதியவன் சொல்கிறார்:

  தென்கொரியர்கள் Network related products, electronic communications relatedல் மிகத் திறமையானவர்கள்.

  தொழில் வளர்ச்சி இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்ட KIA, Huandai – Cars – in my opinion and general public opinion in various countries – are not competent with Japanese or even American products.

  ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம் வேறுபடும். அதைப் பற்றி பெரிதாக shock ஆவதற்கு நாம் வளர்ந்த சூழ்நிலைதான் காரணம். நம் கலாச்சாரமான, குழந்தைகளை வளர்க்கும் முறை, கூடவே வைத்துக்கொள்வது என்பதெல்லாம் மேற்கத்தைய கலாச்சார அளவீட்டின்படி, மிகத் தவறானதும், கொடுமைப்படுத்துவதற்கு ஒப்பானதாகும். உடை போன்றவற்றில் தாராளம் போன்றவை கீழ்த்திசை நாடுகளில் உள்ளது. (Public bath, Nudity in certain places are not a big issue. I also felt that cultural shock in Taiwan as well as moving with Japanese etc. business team in a resort). அதனால நாம் அதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றபடி நடந்துகொண்டால் போதுமானது. வெளிநாடுகளில் பொதுவாக ‘உரிமை’ என்பது இருவருக்கும் உண்டு. யாரும் சிறிதுகூட அத்துமீற முடியாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.