…..

“பொம்மை” தமிழ்த் திரைப்படம் 22, ஏப்ரல் 1964-ல்
வெளிவந்தது.
இதைத்தயாரித்து இயக்கியவர், (அப்போதைய)
புதுமை விரும்பியான இயக்குநர் எஸ்.பாலசந்தர்….
( இவர் கே.பாலசந்தருக்கும் பல ஆண்டுகள் முந்தியவர்…)
பல கலைகளில் தேர்ந்தவர்…… நடிகர், பின்னணிப் பாடகர்,
கதை வசனகர்த்தா, இயக்குநர், இசையமைப்பாளர்,
தயாரிப்பாளர்… கர்நாடக இசையில் நல்ல புலமை
உடையவர் – வீணை வித்வான்…!!! ( நான் இவரை
நேரில் பார்த்து பேசும் ஒரு வாய்ப்பும் கிடைத்தது – திருவையாறு தியாகராஜர் உத்சவத்தில் … 1968-ல்… !!! )
பொம்மை வெற்றிகரமாக ஓடிய ஒரு வித்தியாசமான த்ரில்லர்
தமிழ்ப்படம்…. அதன் டைட்டிலில் எஸ்.பாலசந்தர் ஒரு
புதுமையை செய்திருந்தார்… படத்தின் உருவாக்கத்தில்
சம்பந்தப்பட்ட கலைஞர்கள் அனைவரையும்,
திரைப்படத்தின் இறுதியில் திரையில் தோன்ற வைத்து அறிமுகம் செய்து
வைத்தார்….
(பிற்காலத்தில் புகழ்பெற்ற பல திரைக்கலைஞர்களை இதில் நேரடியாக, மேக்கப் இன்றி பார்க்கலாம்… சுவாரஸ்யமாக இருக்கிறது…!!! )
அதை – கீழே பார்க்கலாம்….
…..
…………………….
அந்த சமயத்தில் – இது தான் தமிழ் சினிமாவில் முதல் முறை என்று
நான் நினைத்திருந்தேன்…. என்னைப்போலவே இன்னும் பலரும் கூட….!
இப்போது போல், நினைத்த சமயத்தில் எல்லாம்
எந்த திரைப்படத்தையும் யூ-ட்யூப் மூலம் காணும் வசதிகள்
இல்லாத காலம் அது… எனவே அதற்கு முந்தைய படங்களுடன்
ஒப்பீடு செய்ய வசதி இல்லை;
சென்ற வாரம், யூ-ட்யூபில் –
ஆகஸ்ட் 15, 1951-ல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
அவர்களின் தயாரிப்பு, இயக்கத்தில் உருவாகி வெளியான
“மணமகள்” திரைப்படத்தை (கொஞ்சம் மட்டும் ) பார்த்தேன்.
வியந்து போனேன்… முதலில் இந்த டெக்னிக்கை
அறிமுகப்படுத்தியவர் எஸ்.பாலசந்தர் அல்ல –
அவருக்கு முன்பாக, 1951-லேயே என்.எஸ்.கே. அவர்கள்
இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இதைச் செய்திருந்தார்…
கீழே தருகிறேன்… பாருங்களேன்…
தமிழ்த் திரையுலகில்
பல ஜாம்பவான்கள் பல ஆண்டுகள் முன்னதாகவே
வித்தியாசமாகச் செயல்பட்டிருக்கிறார்கள்…
நினைத்துப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது….
………….
.
………………………………………………
மிக சுவாரஸ்யம்! welcome back சார்!
bandhu,
நன்றி நண்பரே.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்