கட்டாய மதமாற்ற முயற்சியும், தற்கொலையும் -அமைச்சர், சொல்வதை செயலில் காட்டுவாரா…?

……………………..

……………………………

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள்
கூறியதாக இன்று செய்தித்தளத்தில் வந்திருப்பது –

“அரியலூரில் கட்டாய மத மாற்றம் காரணமாக சிறுமி தற்கொலை
செய்து கொண்டது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு
பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்,

  • “தமிழகத்தில் எம்மதமும் சம்மதமே” – என்ற கொள்கையில்
    திமுக அரசு செயல்பட்டு வருகிறது எனவும், மாண்புமிகு தமிழக
    முதல்வரின் எண்ணமும் அதுதான் எனக்கூறிய அமைச்சர்
    சேகர்பாபு, “தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமே
    இல்லை” – என உறுதிபட தெரிவித்தார். “

LINK – https://tamil.oneindia.com/news/chennai/minister-sekarbabu-says-there-is-no-place-for-forced-conversion-in-tamil-nadu/articlecontent-pf643589-446165.html


ஆனால், அமைச்சர் கூறுவது தான் நடந்திருக்கிறதா….?

அரியலூர் மாணவியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று
காவல்துறை முழுமையாக, பாரபட்சமின்றி விசாரித்ததா…?
அந்தப்பெண் மருத்துவமனையில் இருந்தபோது, அவரும் அவரது பெற்றோரும் கூறியதை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்கிறது….

பரிதாபத்திற்குரிய அந்தப்பெண் இறந்தபிறகு, இறந்த பெண்ணின்
தாய், ஒரு காணொலி காட்சியில் முழு விவரங்களையும் தெளிவாக
கூறி இருக்கிறார்.

கடந்த 2 வருடங்களாகவே தங்களுக்கு மதம் மாறும்படி அழுத்தம்
தரப்பட்டதாக அவரே கூறுகிறார்…

ஒருதலைப்பட்சமாகவே செயல்படும் தமிழகத்தின், பெரும்பாலான ஊடகங்களின் பிரதிநிதிகள், அவரை மடக்கி மடக்கி கேள்வி
கேட்கிறார்கள்.

அவர் சொல்வது பொய் என்று நிரூபிக்க படாதபாடுபட்டு, பல
கேள்விகளை கேட்கிறார்கள்….

” கடந்த 2 வருடமாகவே வற்புறுத்தி வந்தார்கள் என்றால்,
இதுவரை ஏன் புகார் கொடுக்க வில்லை. ..?
பெண்ணை வேறு பள்ளிக்கு ஏன் மாற்றவில்லை…? “- என்றெல்லாம்.

அதற்கும் அந்த தாய் கோபத்துடனும், வருத்தத்துடனும் பதில்
அளிக்கிறார். 10-12 வகுப்பில் பெண் படிக்கிறாள். 489 மார்க்
எடுக்கும் பெண்ணை கொரோனா சமயத்தில் எப்படி,
டி.சி. வாங்கி, எப்படி வேறு பள்ளியில் சேர்க்க முடியும் …?
அவள் படிப்பு என்ன ஆகும்…? அதையெல்லாம் எண்ணி தான்
எப்படியாவது 12-வது வரை மகள் படிப்பை முடித்து விடட்டும்
என்று பொறுத்திருந்தோம் – என்று கூறுகிறார்.

காவல் துறையிடம், துவக்கத்தில் – முழு உண்மைகளையும் கூறாமல்
இருந்ததற்கான காரணம், பெண் உடல் தேறி வந்து விட்டால்,
மீண்டும் அதே பள்ளியில் தானே 12-ம் வகுப்பு பரீட்சை வரை
படிப்பைத் தொடர வேண்டும் – தாங்கள் முழு விவரங்களையும்
சொன்னால், படிப்பைத் தொடர சிக்கல் ஏற்படுமே என்கிற
கட்டாயமான சூழ்நிலை அவர்களுக்கு.

நமக்கே புரியக்கூடிய இந்த விவரம், விசாரணையில்
ஈடுபட்டிருக்கும் காவல்துறைக்கு புரியாதா…?
அந்த மாணவி, இறப்பதற்கு முன் ஆஸ்பத்திரி ஸ்டிரெச்சரிலிருந்தே தனியாருக்கு கொடுத்த பேட்டியும், அந்த மாணவி இறந்தபிறகு,
அவரது பெற்றோர் கொடுத்த பேட்டியும் மிகத் தெளிவாக
விஷயத்தை விளக்குகிறதே….அந்தப் பெண் கொடுத்த காணொலி
காட்சியை படமெடுத்தவர்கள் பாஜக சார்பானவர்களாகவே
இருந்தாலும் கூட –

அந்தப் பெண் இயல்பாகவே பதில் அளிக்கிறார். ஆஸ்பத்திரியில்,
ஸ்டிரெச்சரில் படுத்துக் கொண்டு, சுற்றிலும் மற்ற பலர் சூழ
இருக்கும்போது எடுக்கப்பட்ட அந்த காணொலியை போலியானது
என்றோ, கட்டாயப்படுத்தி எடுக்கப்பட்டது என்றோ சொல்ல
முடியாது.

விசாரணை அதிகாரிகளுக்கு மட்டும்
இது விளங்காமல் போவது எப்படி….? அவர்கள் தன்னிச்சையாக
இப்படி ஒரு தரப்பாக செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை; அவர்களுக்கு
மேல்மட்டத்திலிருந்து தரப்பட்டஆலோசனை/உத்திரவுகளுக்கு
ஏற்பவே அவர்களது விசாரணை அமைந்திருக்கும் என்பதில்
சந்தேகம் இல்லை.

இந்த நிலையில், அமைச்சரின் கூற்றுக்கும், அரசின் செயல்பாட்டிற்கும் –
நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன….

அமைச்சர் பேச்சில் நம்பிக்கை வர வேண்டுமென்றால் –

  • அந்தப் பெண்ணும், அவரது பெற்றோரும் கடைசியாக கொடுத்த
    ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் பாரபட்சமின்றி, சுதந்திரமான
    விசாரணை நடைபெற வேண்டும்…
  • இதில் சம்பந்தப்பட்டவர்கள் அந்த ஹாஸ்டல் வார்டன் மட்டும் தான்
    என்று எடுத்துக்கொள்ள முடியாது… பள்ளி நிர்வாகத்திற்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லையா…? சம்பந்தப்பட்ட அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

-இது சம்பந்தமாக பேசுபவர்களையோ, எழுதுபவர்களையோ –
மிரட்டுவது நிறுத்தப்பட வேண்டும்.

  • முக்கியமாக –

” தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமே இல்லை” –
என்று அமைச்சர் சொல்வதை உறுதிப்படுத்த, விரைவாக அரசு
” கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை ” கொண்டு வர வேண்டும்.

இத்தகைய ஒரு சட்டத்தை கொண்டு வர அரசு தயங்குவற்கு
காரணம் என்ன….?

.
……………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

6 Responses to கட்டாய மதமாற்ற முயற்சியும், தற்கொலையும் -அமைச்சர், சொல்வதை செயலில் காட்டுவாரா…?

  1. சிவா சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    இதெல்லாம் ஒன்றும் மாறப்போவதில்லை; இப்படியே 10 நாட்கள் ஓட்டிக்கொண்டிருந்தால், இந்தப் பிரச்சினை போய் அடுத்த பிரச்சினை
    வந்து விடும். திசை மாற்றி விடுவார்கள்.

    திமுக தான் ஆளும் கட்சி; கிறிஸ்தவர்களின் ஓட்டைப்பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள் அவர்களுக்கு எதிராக போகக்கூடிய எந்தவித நடவடிக்கையையும்
    எடுக்க மாட்டார்கள்.
    எங்கே சாவு விழுந்தாலும் முன்னே போய் நின்று
    வாய் கிழியப்பேசும் மற்ற கட்சித் தலைவர்கள்
    எங்கே போயினர் ?
    திருமா எங்கே ? திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்கிறாரா ? வைகோ எங்கே ?
    கம்யூனிஸ்ட் தலைவர்கள் வலதும், இடதும் எங்கே ?
    காங்கிரஸ் எங்கே ? எந்தப் …….. வாய் திறக்கவில்லையே ஏன் ?
    17 வயதுச் சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டு
    செத்திருக்கிறார் இவர்கள் யாரும் ஏன் வாயே திறக்கவில்லை ?
    இதுவும் கூட்டணி தர்மமா ?
    மானங்கெட்ட இந்த தலைவர்கள் தமிழகத்தைப் பொருத்தவரையில் உதவாக்கரைகளே. இவர்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் தங்களைத் தாங்களே
    ………ப்பால் அடித்துக் கொள்ள வேண்டியது தான்.

    • புதியவன் சொல்கிறார்:

      வைகோ வா? யாரது? சாராயம் மக்களுக்குக் கெடுதல் டாஸ்மாக் மூடப்படவேண்டும் என்று ஓயாது ஒரு காலத்தில் தொண்டை கிழியப் பேசி அரசை எதிர்த்த சிகரெட் வியாபாரியா? அவரது அரசியல், பேச்சு, போராட்டம் எல்லாமே வீண். அவரும் ஒரு அரசியல் வியாபாரி/வியாதி.

      கம்யூனிஸ்ட் தலைவர்களா? யாரது? கூட்டணிக்கு லஞ்சம் வாங்கி கூட்டணி வைத்துக்கொண்டவர்களா? அதற்கு விலையாகத்தான் இன்று, ‘மதமாற்றம்’ காரணம் அல்ல என்று கொத்தடிமை வேலை செய்துகொண்டிருக்கிறார்களோ?

      காங்கிரஸா? அது எந்தக் கட்சி? அதன் தலைவர் ராகுல், எந்த எந்தக் கல்லூரிகளில் மாணாக்கர்களைச் சந்தித்து படம் காட்டினார் என்பதை நீங்கள் search செய்தால், அவரது கட்சி எந்த மதத்திற்காக வேலை செய்கிறது என்பது தெரியும்.

      மற்றபடி உங்கள் கருத்தில் உண்மை இருக்கிறது.

  2. Rajs சொல்கிறார்:


    This is report from BBC Tamil.
    Can’t understand what is happening.

    • bandhu சொல்கிறார்:

      BBC Tamil ஒரு திமுக சார்பு ஊடகம்… விஷ்வ ஹிந்து பரிக்ஷத் , பிஜேபி என்று பெயர் கூறும் இவர்கள் தனியார் பள்ளி என்றும் வார்டன் என்றும் பெயரை மறைக்கிறார்கள். சாதகமான தீர்ப்பு சொன்ன நீதிபதியின் பெயரை கூறாமல் ‘நேர்மை’ காக்கும் இவர்கள் பாதகமான தீர்ப்பு சொன்ன நீதிபதியின் பெயரை சொல்கிறார்கள்!

      இதெல்லாம் ஒரு ஊடகம்! இவர்களை முற்றிலும் நிராகரிக்க வேண்டும்!

    • bandhu சொல்கிறார்:

      எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றிருந்தாலும் எவர் அதை திரித்து சொல்வாரோ அதை நிராகரிப்பதும் சரியான செயலே!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.