உயிரைக் குடிக்கும் ” மத வெறி ” …..

…..

மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும்
மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இங்கே நாம் எழுதி வருகிறோம்.
அது எந்த மதத்தினராக இருந்தாலும் சரி – மத வெறி
என்பது மிகக்கொடுமையான வெறியூட்டும் ஒரு “போதை”

“மதவெறி” மனிதரை எங்கே கொண்டு செலுத்துகிறது
என்பதற்கு மிக மிக மோசமான ஒரு உதாரணத்தை தமிழகம்
இப்போது பார்த்து வருகிறது.

மதவெறி என்னும் போதை கொண்ட ஒரு பெண்மணி மற்றும்
அவர் சார்ந்த மத நிறுவனத்தின் வெறிச்செயல்கள் –
அரியலூர் அருகே 17 வயது சின்னஞ்சிறு ஏழைப்பெண் ஒருவரின்
உயிரைப் பறிப்பதில் முடிந்திருக்கிறது.

ஏற்கெனவே ஏழ்மையில் தவிக்கும் அந்தப் பெண்ணின்
குடும்பம் இப்போது தங்களின் ஒரே எதிர்கால நம்பிக்கையாக
இருந்த அந்த சிறுபெண்ணையும் இழந்து தாங்கவொண்ணா
துக்கத்தில் தவித்து வருகிறது…

தங்கள் மதத்தில் உள்ளோரின் எண்ணிக்கையை
கூட்டிக் கொள்வதால், அந்த ஆசிரியப் பெண்மணியோ,
அவர் சார்ந்த நிறுவனமோ, பெருமை கொள்ளலாம்…
அதற்கான பணக்கொடையும் பெறலாம்….

ஆனால், அவர்கள் வணங்கும் அந்த இறைவன் இதை
ஏற்றுக் கொள்வாரா…?

அன்பையும், கருணையையும், இரக்கத்தையும் போதித்த
ஒருவரின் பெயரால் நிகழ்த்தப்படும் இந்த கொடூரத்தை
அவரே ஏற்றுக் கொள்வாரா…?

முட்டாள்தனம், பணவெறி, மதவெறி – ஆகியவையே
இதற்கு காரணம்….ஒருவர் எந்தக் கடவுளை கும்பிட வேண்டும்
என்று யாராவது உத்திரவு போட முடியுமா…? போட்டால் –
அது நம்பிக்கையோடு நிறைவேற்றப்படுமா…?

உண்மையாகவே ஆன்மிக வழியில் நடப்பவர்கள் எவருக்கும்
இத்தகையை செயல்களில் –
நம்பிக்கையோ, ஈடுபாடோ நிச்சயம் இருக்காது….

இத்தகையோரை – எந்த விதத்திலும் இந்த சமுதாயம்
ஏற்கக்கூடாது…. அவர்கள் சார்ந்த சமூகம் கூட இவற்றை
வலிமையாக கண்டிக்க வேண்டும்… இல்லையேல்,
பெரும்பான்மை சமூகத்தினரின் வெறுப்பை அவர்கள்
சந்திக்க வேண்டியிருக்கும்.

மேலும் இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கப்பட
ஒரே வழி, இந்த இரக்கமற்ற, மனிதாபிமானமற்ற, கொடூர
குற்றச்செயலில் ஈடுபட்ட பெண்மணியும், அவருக்கு
பின்னணியாக இருந்து செயல்பட்ட அந்த மத நிறுவனமும்
கடுமையாக, மிகக்கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

அவர்களுக்கு கிடைக்கக்கூடிய கடுமையான தண்டனை தான் –
எதிர்காலத்தில் அவரைப்போன்றே இயங்கக்கூடிய மற்றவர்களை இத்தகைய செயல்களில் ஈடுபடுவதிலிருந்து தடுக்க உதவும்.

தமிழக அரசு, அந்த மத நிறுவனம் நடத்தும் பள்ளியையும்,
ஹாஸ்டலையும், நாட்டுடைமையாக்கி, அரசு பொறுப்பில்
ஏற்று நடத்த வேண்டும்.

எதிர்காலத்தில் இத்தகைய மதமாற்ற முயற்சிகள்
நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய,
கடுமையான விதிகளைக் கொண்ட –
“கட்டாய மத மாற்ற தடைச் சட்டம்” ஒன்றையும் தமிழக அரசு
உடனடியாக கொண்டு வர வேண்டும்.

சமூகத்தில் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும்
நிலைநிறுத்த வேண்டுமென்றால் – இது மிகவும் அவசியம்.

இது எந்த மதத்தினருக்கும் எதிரானது என்று கருதாமல் –
மதவெறி என்னும் பயங்கரமான ஒரு வியாதியை ஒழித்து –
சமூக ஒற்றுமையை நிலைநாட்ட, கொண்டு வரப்படும் ஒரு
கசப்பு மருந்து என்பதை அனைத்து மதத்தினரும் உணர்ந்து
ஒத்துழைக்க வேண்டும்.

.
…………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

21 Responses to உயிரைக் குடிக்கும் ” மத வெறி ” …..

 1. காவிரிமைந்தன் சொல்கிறார்:

  மதமாற்றம் எதற்கு ….. ?

  இதை இடுகையில் கூறுவதை விட,
  தனியே தருவது தான் பொருத்தமாக
  இருக்கும் என்பதால் இங்கே
  பின்னூட்டத்தில் எழுதுகிறேன்.

  மத மாற்றம் குறித்து -காஞ்சி மஹா பெரியவர்
  சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் கூறிய
  கருத்துகளை இங்கே தர விரும்புகிறேன்.

  ———————————–

  எல்லா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டனவே!
  எல்லா மதங்களும் கடவுள் ஒருவர் என்றே சொல்கின்றன.
  ஒருவரேயான அந்த கடவுள் எந்த சமயத்தின் மூலம்
  வழிபட்டாலும் அதனை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார்.
  எனவே, எவருமே தாங்கள் பிறந்த மதத்தை விட்டு
  இன்னொரு மதத்தைத் தழுவ வேண்டியதில்லை.

  கோயில், சர்ச், மசூதி, விஹாரம் முதலிய கட்டடங்கள்
  ஒன்றுக்கொன்று வேறுபடலாம். உள்ளே இருக்கிற மூர்த்தி
  அல்லது சின்னம் மாறுபடலாம். ஒவ்வொன்றிலும்
  சடங்குகளும் வேறு வேறாக இருக்கலாம். ஆனால்
  அனுக்கிரகம் செய்கின்ற பரமாத்மா ஒருவரே!

  ஒவ்வொரு தேச ஆசாரத்தையும் ஒவ்வொருவித
  ஜனக் கூட்டத்தின் மனப்பான்மையையும் பொறுத்து
  பல்வேறு சமயங்கள் ஏற்பட்டுள்ளன. அவை எல்லாம்
  ஒரே பரமாத்மாவை அவரவர் மனோபாவனைப்படி
  பக்தி செய்து அவரோடு சேருவதற்கு வழி செய்பவையே.
  எனவே எவரும் தங்கள் மதத்தை விட்டு விட்டு
  இன்னொன்றுக்கு மாற வேண்டியதில்லை.

  மற்ற மதங்களுக்கும் இந்து மதத்துக்கும் உள்ள
  ஒரு பெரிய வித்தியாசம், ஹிந்து மதம்
  ஒன்றுதான் ‘இது ஒன்றே மோட்ச மார்க்கம்!’
  என்று சொல்லாமல் இருக்கிறது.

  ஹிந்து மதம் பிறரைத் தன் மதத்துக்கு மாற்றுவது
  கிடையாது. ஏனென்றால் ஒரே
  பரமாத்மாவை அடைவதற்கான பல மார்க்கங்களே
  பல மதங்களும் என்று நம் முன்னோர்கள்
  நன்கு உணர்ந்திருந்தனர்.

  ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் இந்த
  விசால மனப்பான்மையைக் குறித்து
  பெருமைப்பட வேண்டும். ( இதே மனப்பான்மையை
  தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென்று தான்
  நான் இந்த தளத்தில் விடாமல் வலியுறுத்தி
  எழுதி வருகிறேன். )

  வேதம், “ஒரே சத்தியத்தைத்தான் ஞானிகள்
  பல பெயர்களில் சொல்கிறார்கள்” என்கிறது.

  கீதையில் பகவான் கிருஷ்ணர் ,
  “எவன் எந்த விதத்தில் எந்த ரூபத்தில்
  வழிபட்டாலும் அவனுடைய சிரத்தையை
  நானே விருத்தியாக்கி அவனை அதே வழிபாட்டில்
  நிலைப்படுத்துகிறேன்” என்கிறார்.

  ரயிலடியில் பிரயாணிகள் வந்து இறங்கியதும்
  ஜட்காக்காரன், ரிக்ஷாக்காரன், டாக்ஸிக்காரன்
  என்று பலபேர் வந்து சூழ்ந்து கொள்கிறார்கள்.
  யாருடைய வண்டியில் ஏறிக் கொண்டாலும்
  போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரலாம்.
  வண்டிக்காரர்கள் கிராக்கி பிடிப்பதற்காகப்
  போட்டி போடுவது அவர்கள் பிழைப்பு.

  ஆனால் கடவுள் என்கின்ற ஒரே லட்சியத்திற்கு
  அழைத்துச் செல்வதற்காக வெவ்வேறு மதத்தைச்
  சேர்ந்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு
  மதமாற்றத்தில் முனைவது அர்த்தமற்ற செயல்.

  மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும்
  அனுஷ்டானங்களிலும் சில வேறுபாடுகள்
  இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களையும்
  ஒன்று போல் பார்க்க வேண்டிய தேவையில்லை.
  ஆனால் – ஒரே மாதிரி ஆக்காமலே எல்லா மதத்தினரும்
  மனதில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்.

  யூனிஃபார்மிடி அவசியமில்லை –
  யூனிட்டி இருப்பதே அவசியம்.

  .
  ——————————————
  ” ஒன்று பட்டால் இங்கு வாழ்வு, நம்மில்
  ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே “- பாரதி

  ஒற்றுமையாக இருப்போம்.
  பாரதத்தை மேன்மைப் படுத்துவதைப்பற்றி
  மட்டும் யோசிப்போம்.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 2. Ramanathan சொல்கிறார்:

  Timely Article KM Sir, Thank you…
  It is very urgent needy and appropriate to avoid this untoward loses to our society கடுமையான விதிகளைக் கொண்ட –
  “கட்டாய மத மாற்ற தடைச் சட்டம்” ஒன்றையும் தமிழக அரசு
  உடனடியாக கொண்டு வர வேண்டும்.

 3. சிவா சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  கச்சிதமான இடுகை. இந்த நேரத்தில் மிக அவசியமான
  கருத்துகளைக் கொண்ட இடுகை. உங்கள் இடுகையை
  விடவும், பின்னூட்டம் இன்னமும் சிறப்பாக இருக்கிறது.
  இதைப் போன்ற பரந்த மனப்பான்மையை அனைவரும்
  கொண்டிருந்தால் இங்கே மதமாற்றத்திற்கோ,
  மனமாற்றத்திற்கோ அவசியம் ஏது ?
  இது போன்ற நல்ல கருத்துகளை நீங்கள் நிறைய எழுத
  வேண்டும். இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை
  தர வேண்டும். நன்றி.

 4. bandhu சொல்கிறார்:

  இந்த இடத்தில் மஹாஸ்வாமிகள் சொன்ன இன்னொரு கருத்து..

  மதம் மாறுபவர்கள் எந்த மதத்திற்கு மாறுகிறார்களோ அந்த மதத்தில் கடவுளாக வணங்குபவரையும் அவமானப்படுத்துகிறார்கள். மதம் மாறினால்தான் அந்த கடவுள் நம்மை காப்பார் என்று நினைப்பதே அவரை அவமானப்படுத்துவது தானே! கடவுள் எல்லோரையும் காப்பவர். அவரையே நம்பாதவரையும்!

 5. புதியவன் சொல்கிறார்:

  மதமாற்றத் தடைச்சட்டம், மதத்திற்கான சலுகை நீக்கப்படுதல் மிகவும் அவசியம். இங்கு நடப்பது மதத்திற்கு ஆள் பிடித்து அதற்கு அரசியல் முகவிலாசம் தேடுவது. அதற்கும் பக்திக்கும் சம்பந்தம் இல்லை. பக்தி என்பதோ இல்லை அவர்களுக்கு அவர்கள் கடவுள் மீது நம்பிக்கையோ இருந்தால், எதற்கு வெளிநாட்டுப்பணம் இங்கு மதமாற்றம் செய்வதற்காக வருகிறது? தேசத்தைக் கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து மதமாற்றம் செய்யமுனைவதே தேசத்துரோகச் செயல்தான்.

  இதனை முளையிலேயே கிள்ளி எறியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது காங்கிரஸின் மிகப் பெரிய தவறு.

  கர்நாடகாவில் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவருகிறார்கள். இது இந்தியா முழுமைக்கும் தேவையானது

 6. புதியவன் சொல்கிறார்:

  இன்றைய திமுக அரசும், பத்திரிகைகளும், இணையதளங்களும் இதனை ஊக்குவிக்கின்றன (மதமாற்றத்தை). அதனால்தான் அவர்கள், இந்துக்கள் சார்பான அல்லது இந்துக்கள் வைத்திருக்கும் பள்ளிகள், நிறுவனங்கள் இவற்றில் சிறு தவறு நடந்தாலும் உடனே உள்ளே தள்ளுகிறது. மற்ற மதங்கள் என்றால், அதனை மறைக்க விஷயத்தைத் திருப்புகிறது. பத்திரிகைகளும் மாற்றுமதச் செய்திகளை வெளியிடுவதில்லை அல்லது பூசி மெழுகிகிறார்கள்.

 7. Rajs சொல்கிறார்:

  Hurriedly written article, should have waited for the details. Can you substantiate any of the allegations.

  • சாமானியன் சொல்கிறார்:

   ஜார்ஜ் பொன்னையா , எஸ்.ரா.சர்குணம் போன்ற உத்தம மதகுருமார்களின் மதத்தை பரப்பும் பேச்சுக்கள் மூலம் substanstiate பண்ணிக்கொள்ளலாமே ….
   கை புண்ணுக்கு கண்ணாடி தேவையா …..

   • Rajs சொல்கிறார்:

    Whose hand is the question

   • Rajs சொல்கிறார்:

    Whose hand is the question in relation to the video

    • சாமானியன் சொல்கிறார்:

     ஐயா,
     இது உங்களுக்கான பதில் இல்லை .
     எஸ்.ரா.சர்குணம் , ஜார்ஜ் பொன்னையா போன்ற மத குருமார்களின் மேடை பேச்சுக்களை நான் பல தடவை கேட்டிருக்கிறேன் .பொது மேடையிலேயே பகிங்கிரமாக இந்து கடவுள்களை ஆபாசமாக வர்ணிக்கிறார்காள்.மத துவேஷத்தை வளர்க்கிறார்கள் என்றே கருதுகிறேன் .இதை எந்த கிருத்துவர்களும் எதிர்ப்பு தெரிவிக்காதது அதிர்ச்சியயையே ஏற்படுத்துகிறது .

     • Rajs சொல்கிறார்:

      These type of people exist in every walk of life. They don’t actually represent the particular group they come from.

     • புதியவன் சொல்கிறார்:

      இந்த These type of people.. கருத்தை சிறுபான்மையினர் தவிர, வேறு எங்கேயும் நான் கண்டதில்லை. இந்தத் தளத்தில் வந்த பல்வேறு பதிவுகளிலும், ‘இவர் சொல்கிறார்… ஆனால் இது இந்து மத மக்களின் கருத்தல்ல’ என்று நான் பார்த்ததே இல்லை. ஏதோ ‘மத அபிமானத்தில்’ இப்படி எழுதுகிறார்கள் என்று நினைக்கவேண்டாம். அரசியலில் மதம் காங்கிரஸால் நுழைக்கப்பட்டதிலிருந்து, திமுகவால் நுழைக்கப்பட்டதிலிருந்து (வாக்குகளுக்காக) இவை நீறு பூத்த நெருப்புப்போல இருந்துகொண்டே இருந்தது. பாஜக எப்போது இதைப்பற்றி வெளிப்படையாகப் பேச ஆரம்பித்ததோ, அப்போதிலிருந்து அவர்களுக்கு ஆதரவு பெருக ஆரம்பித்துவிட்டது.

      Of course, வளர்ச்சித் திட்டங்கள்தாம் ஒரு கட்சியை நாம் ஆதரிக்கவும் எதிர்க்கவும் காரணம். மற்றதெல்லாம் additional factors. ஆனால் இந்து மதத்தின் மீது அபிமானம் வைத்திருப்பவர்கள், நிச்சயமாக பாஜக வை ஆதரிப்பார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். (மதத்தின் பெயரால் பாஜக விற்கு முன்பு சிறுபான்மையினரின் வாக்குகள் ஒரு கட்சிக்குச் சென்றபோது நாம் கண்டுகொள்ளவில்லை. தற்போது பாஜக அந்த ஆயுதத்தை எடுத்து வெற்றிபெறும்போது நமக்குக் கவலையாக இருப்பதாக எண்ணுகிறோம்)

 8. நண்பன் சொல்கிறார்:

  ஐயா,
  பிஜேபியை பற்றி எழுதும் போது மட்டும், நேரடியாக பெயரை குறிப்பிடுகிறீர்கள் .RSS இயக்கம், இந்துத்வா , என்று பகிங்கிரமாகவே வீரத்துடனும், தீரத்துடனும் எதிர்க்கிறீர்கள். ஆனால் இந்த செய்தியில் மட்டும் , தாங்கள் மேலோட்டமாக குறிப்பிட்ட மதத்தை மறைக்க முயற்சி செயகிறீர்கள் . கிருத்துவ மதமாற்ற கும்பல் என்று பகிங்கிரமாக குறிப்பிட்டு உங்கள் கோபத்தை வெளிக்காட்டியிருக்க வேண்டாமோ? அதுதானே நடுநிலையான வீரம் .
  இவ்வாறு பயந்து கொண்டிருந்தால் , கடைசியில் மதசகிப்பு தன்மை என்பது இந்துக்கள் மட்டுமே கைக்கொள்ளவேண்டிய கொள்கை என்ற முடிவுக்கு மற்ற மதத்தினர் முடிவுக்கு வந்துவிட கூடும் .
  மத சகிப்பு தன்மை என்பது மற்ற மதத்தினருக்கு உண்மையில் போதிக்க படுகிறதா?
  அவர்கள் ரத்தத்திலே அது கிடையாதா ? எங்கெங்கு காணினும் மாற்றுமத துவேஷம் மட்டுமே? ஆனால் இவர்களே கடைசியில் பிஜேபியை மட்டும் மதவெறியர்கள் என்று வர்ணிப்பது எவ்வாறு ?

  • Rajs சொல்கிறார்:

   After some political leaders shared a video revealing the identity of a minor girl who died by suicide, Thanjavur SP Ravali Priya G said on Friday that it is an offence to reveal any details of a minor and that action will be taken soon. A hostel warden from Tamil Nadu’s Thirukattupali in Thanjavur was arrested for allegedly assaulting a 17-year-old schoolgirl, who later killed herself.

   https://www.republicworld.com/india-news/general-news/tamil-nadu-thanjavur-sp-warns-politicians-against-revealing-identity-of-suicide-victim-articleshow.html

   • புதியவன் சொல்கிறார்:

    பத்மா சேஷாத்ரி பள்ளி, திருவான்மியூரில் உள்ள பள்ளி – இவற்றைப் பற்றி சிறிய செய்தி வந்ததே பத்திரிகைகள், அரசினால் ஊதிப்பெருக்கப்பட்டு உடனே சிறை என்றெல்லாம் வந்தது. ஒரே ஒரு மாற்று மதத்திற்கு இந்த மாதிரி நடந்திருக்கிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? செய்திகளின் ஓரத்தில் வந்து உடனே மறைக்கப்பட்டுவிடுகிறது. அரசின், அரசு அதிகாரிகளின் விளக்கங்கள் கொஞ்சம்கூட ஏற்றுக்கொள்ளும்படி இருப்பதில்லை.எத்தனையோ உதாரணங்கள் காட்டலாம். தமிழக அரசு இந்து மத எதிர்ப்புடன் செயல்படுகிறது (அல்லது சிறுபான்மையினருக்கு ஆதரவாக மட்டும் செயல்படுகிறது என்று). அரசின் ஒடுக்குமுறையும் மிக அதிகமாக இருப்பதை செய்திகளில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

    • Rajs சொல்கிறார்:

     This is reply to your other comment also. There many in all the major religions who abuse other religious people. Do some google search in case you are interested in truth.

     As for the this comment. School name is in public domain. Did this blog ask for taking over of those schools that you have mentioned. I don’t even remember seeing any article in this blog. I am not saying this blog trying to hide the news.

     • புதியவன் சொல்கிறார்:

      சிறுமிகளுக்கான பாலியல் தொல்லைகள், பலாத்காரங்கள் போன்றவை இந்து சம்பந்தமான இடங்களில் நடந்தால் மட்டும்தான் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் அரசும் மிக மூர்க்கமாகச் செயல்படுகின்றன. நான் இணையதளப் பத்திரிகைகளையும் சொல்லியிருக்கிறேன். ‘விமர்சனம்’-சில நிகழ்வுகளுக்கு விமர்சனத்தை மட்டும்தான் வைக்கிறது. அது செய்திப்பத்திரிகை அல்ல.

 9. Rajs சொல்கிறார்:

  https://www.ndtv.com/tamil-nadu-news/tamil-nadu-student-alleges-abuse-forced-conversion-kills-self-2720888

  Of course, it is proved that any kind of offer was done for converting to religion by any one in school, it would be a shame whether law/enforcing agencies work or not.

 10. Tamil சொல்கிறார்:

  Nothing happens, both state and centre are ruled by incapable people!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.