இளையராஜாவும், நானும் இணைந்திருந்த Magical Moments – வைரமுத்து அவர்கள் பேட்டி…

…………………

நான் இந்த பேட்டியை இப்போது தான் பார்க்கிறேன்.

வைரமுத்து அவர்கள் சொல்வதில் ஓரளவு
உண்மை இருக்கிறது…

ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது
என்பது போல் – அவர்கள் இரண்டு பேரின் ஈகோ’வும் தான்
அவர்கள் தொடர்ந்து இணைந்து செயல்பட முடியாமல்
தடுத்திருக்கிறது என்பது தான் உண்மை.

ஆனால் இந்த பழமொழி, கவிஞர் கண்ணதாசன் மற்றும்
எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரிடத்தில் பலிக்கவில்லை;
அவர்களுக்குள் ஈகோ தலையிடவில்லை;

தன் பாடல்களில் பிறர் மாற்றம் செய்வதைப்பற்றி அவர் கவலைப்பட்டதில்லை; எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும்,
அவருக்கும் இடையே எதுவுமே குறுக்கிட முடியவில்லை;
அவர்கள் தொடர்ந்து, கடைசி வரை நட்புடன், உரிமையுடன் – செயல்பட்டனர்.

வைரமுத்து அவர்களின் பேட்டி கீழே –

…………

.
……………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to இளையராஜாவும், நானும் இணைந்திருந்த Magical Moments – வைரமுத்து அவர்கள் பேட்டி…

  1. புதியவன் சொல்கிறார்:

    இளையராஜாவுக்கும் வாலிக்கும் இடையில் இந்த ஈகோ இல்லையே.. ரஹ்மானுக்கும் வாலிக்கும் இடையில் ஈகோ இருந்ததில்லையே (எனக்கு முடியலை ரகுமான் என்று வாலி சொன்னபோது, நானே வந்து பாடலை வாங்கிக்கொள்கிறேன் என்று ரகுமான் சொல்லி, இரவு சென்று வாங்கிவந்தாராம்) இங்கு தலைவன் என்பவன், இசையமைப்பாளர்தான். காட்சிக்கு ஏற்ற வரிகள் என்று முடிவுசெய்யவேண்டியது இயக்குநர்தான். ஆனால் திரைப்படம் என்று வரும்போது அங்கு, இசையமைப்பாளர்தான் இயக்குநர், நடிகருக்கு அடுத்தபடி (சில சமயங்களில் இவர்கள் மூவரில் யாராவது ஒருவரால்தான் படம் ஓடும்). இந்தக் கவிஞரால்தான் படம் ஓடியது என்று சொல்லமுடியாது.

    வைரமுத்துவே ஒரு பேட்டியில், தான் 200க்கும் அதிகமான இசையமைப்பாளர்களை உருவாக்க உழைத்ததாகவும் சொல்லியிருக்கிறார் (அதில் அவர் வெற்றிபெறவில்லை). காட்சி சொன்ன உடனேயே இசையமைக்கிறவரும் (எம்.எஸ்.வி, இளையராஜா போன்று), இசை வந்த உடனே பாடல் புனையும் திறம் படைத்தவரும் (கண்ணதாசன் போன்று) மிக மிகத் திறமைசாலிகள். வரிகளே இல்லாமல், இசையிலேயே காட்சியை உணரவைத்திருக்கிறார் இளையராஜா.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.