…..

…….
” தவறான கட்சியில் இருக்கும் ஒரு சரியான மனிதர் “
- என்று வாஜ்பாய் அவர்கள் இருந்தபோதே அவரைப்பற்றி
சொன்னவர்கள் நிறைய பேர் உண்டு.. எனக்கு மிகவும்
பிடித்த தலைவர் வாஜ்பாய் … அவரைப் போன்ற
ஒரு தலைவர் அவருக்குப்பின் பாஜக-வில் யாருமில்லை.
1963-ல் – மத்திய பிரதேசம் ஜபல்பூரில், நான் முதல் முதலாக
அவரைப் பார்த்த /அவர் பேச்சை கேட்ட – அந்த நாள் முதலே
நான் வாஜ்பாய் அவர்களை தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன்…. நான் இருந்த ஊர்களில் அவர் எப்போது
பேசினாலும், அவசியம் கலந்து கொண்டிருக்கிறேன்….
எனக்குத் தெரிந்த வாஜ்பாய் மிகவும் நல்ல மனிதர்.
மென்மையானவர் ( சில சமயங்களில் கடுமையானவர் போல் தோற்றமளித்தாலும் கூட….!!!) சிறந்த நகைச்சுவை உணர்வு
கொண்டவர் … கவிதை உள்ளம் கொண்டவர்…
அருமையான பேச்சாளர்… (ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் கூட – )
வாஜ்பாய் அவர்கள் நேருஜி’யைப் பற்றியும்,
நரசிம்மராவ் பற்றியும், இன்னும் சில விஷயங்கள் குறித்தும்,
இந்த நாட்டின் பிரதமராக இருந்தபோது ஆற்றிய உரையை எதேச்சையாக – யூ-ட்யூபில் பார்க்க நேர்ந்தது…
மீண்டும் மீண்டும் கேட்டு அந்த சாமர்த்தியத்தையும்,
நகைச்சுவையையும் ரசித்தேன்…
ஹிந்தி தெரியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். கூடவே
ஆங்கிலத்தில் சப்-டைட்டில்கள் தொடர்ந்து வருகின்றன.
நண்பர்களுடன் அவசியம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று
தோன்றியது… கீழே தருகிறேன்.
……………
.
……………………………………………
வாஜ்பாய் மிகவும் பெருந்தன்மையானவர்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை
கிண்டல் செய்வாரே தவிர, அவதூறாக
பேசி நான் கேட்டதில்லை. அவருக்கு
எல்லா கட்சிகளிலும், எல்லா மதங்களிலும்
சிநேகிதர்கள் இருந்தனர். பாஜகவில்
இருந்தாலும் மத விஷயங்களில் தீவிரமாக
செயல்பட்டதில்லை; பேசியதில்லை.
அகம்பாவமும், ஆணவமும், மற்றவர்களை துச்சமாக
எள்ளி நகையாடுவதும் அவர் ரத்தத்திலேயே இல்லை.
நீங்கள் சொல்வது போல், அவருக்குப் பின் வேறு
யாருமே பாஜகவில் அது போல் இல்லை;
நீங்கள் எடுத்து போட்டிருக்கும் வீடியோவே அவரது
குணாதிசயங்கள் அத்தனையின் எசென்சுமாக
இருக்கிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
இன்னொன்றும் வாஜ்பாயைப் பற்றிப் படித்திருக்கிறேன். இந்திரா (பி.ம) வெள்ளை மாளிகைக்குச் சென்றபோது அவரை மிரட்டினர். (எந்த விஷயம் என்பது சட்னு மறந்துவிட்டது). இந்த மாதிரி விஷயங்கள் பேசி ஒத்துக்கொண்டோம் என்று ப்ரெஸ் மீட்டில் சொல்லணும் என்று நிர்ப்பந்தம். Indira walked away. ப்ரெஸ் மீட்டே நடக்கவில்லை. US thought, they will get support from opposition parties (தேசத்ரோகிகள் கிடைக்காமலா போயிடுவாங்க என்ற எண்ணம்). உடனே இந்தியா திரும்பினார். வாஜ்பாயியிடம் நடந்த விஷயத்தைப் பற்றி டிஸ்கஸ் செய்தார். அன்றே வாஜ்பாய் இந்திராவின் நிலைக்கு ஆதரவாக அறிக்கை விட்டது மட்டுமன்றி, இந்த விஷயங்களில் அரசியல் செய்வதில்லை என்ற நிலைப்பாட்டினை எடுத்தார். He was a statesman. இவருக்கு இவரது பொக்ரான் சாதனைக்கு பாரத ரத்னா கொடுக்கக்கூடாது என்று சிறுமதி கொண்ட காங்கிரஸின் சோனியா, அப்துல்கலாமிற்குக் கொடுத்தார். பிறகு அப்துல்கலாம் இரண்டாவது முறையாக ஜனாதிபதிக்கு நின்றபோது அவருக்கு யார் யார் ஆதரவு கொடுக்கவில்லை, ‘தமிழன்’ என்று ஓயாது பேசி, பிராமண துவேஷம் ஒன்றையே தன் கொள்கை என்று கொண்டிருந்த திமுக எந்த பிராமணருக்கு ஆதரவு தந்தது என்பதெல்லாம் வரலாறு.
வாஜ்பாயைப் புகழும்போது, அத்தகைய மனிதருக்கு காங்கிரஸ் கட்சி செய்ததையும் நாம் நினைவில் கொள்ளலாம்.
இன்னொன்று… வாஜ்பாயைப் பற்றி புகழும்போது, அவர், திரும்பவும் மக்களின் ஆதரவைப் பெறவில்லை என்பதையும், அதனால் அடுத்த பத்தாண்டுகளுக்கு அரசியல்வாதிகள் நாட்டைக் கொள்ளையடிக்க மக்கள் அனுமதி கொடுத்ததையும், பிறகு தவறைப் புரிந்துகொண்டு, மோடிக்கு தொடர்ந்து இரண்டு முறை மக்கள் பெரும்பான்மைக்கும் அதிகமாக பாராளுமன்ற அங்கத்தினர்களைக் கொடுத்ததும் நினைத்துப்பார்க்கவேண்டும்.