எது நிஜமான நம்பிக்கை … ?

…………….

….

உண்மையான ஆன்மிகம், கடவுள் நம்பிக்கை,
மத நம்பிக்கை என்பது எது என்பதை
புரிந்துகொள்ளாமல் –

தெரிந்தோ, தெரியாமலோ – அடுத்த மதத்தினரின் மனதை
புண்படுத்தக்கூடிய செயல்களில் தொடர்ந்து ஈடுபடும்
ஒரு சிலர் ( இவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள் )

  • தங்கள் மனசாட்சியை கொஞ்சம் உற்றுப்பார்க்க
    ஒரு உதாரண சம்பவம்….

கீழே ஒரு பாடல் –

சம்ஸ்கிருதமும், மலையாளமும் கலந்த
ஓரு திரைப்படப் பாடல் –

இதை எழுதியவர் – யூசுஃப் அலி கெச்சேரி ( Yusuf ali Kechery) என்கிற ஒரு மலையாளி-இஸ்லாமியர்…( 1934 – 2015 )

இவர் எழுதிய இந்த மலையாள, சம்ஸ்கிருத – பாடலுக்கு
இசையமைத்தவர் – பிரபல ஹிந்தி திரைப்பட
இசையமைப்பாளர் நௌஷாத் அலி – என்கிற இஸ்லாமியர்….


இவர் இசையமைத்த ஒரே மலையாளப்படம் இது தான்.

இந்தப்பாடலை பாடி இருப்பவர் –
பிறவியிலேயே கிறிஸ்தவரான கே.ஜே.யேசுதாஸ் அவர்கள்….

1988 -ல் வெளிவந்து, பாடல்களுக்காகவே
அமர்க்களமாக ஓடிய மலையாளப் படமான “த்வனி”-யில்
வெளியான பாடல் இது….

இந்தக் கலைஞர்கள் – உண்மையான ஆன்மிகம் எது – நிஜமான நம்பிக்கை எது
என்பதை புரிந்து கொண்டவர்கள்… மற்ற மதங்களோடு
இணைந்து வாழ்வது –

தமது மத நம்பிக்கைக்கு எதிரானவை அல்ல என்பதை
உணர்ந்து கொண்டவர்கள்.

உண்மையில், சில வருடங்கள் முன்பு வரை நமது அனைத்து
மக்களும் ( ஒரு சிலரைத் தவிர) மத நல்லிணக்கத்துடன் தானே
வாழ்ந்தனர்… ? அண்ணன்-தம்பியாக, மாமன்-மச்சானாக
உறவுமுறையில் கூட பாசத்துடன் அழைத்துக் கொண்டனர்…
அரவணைத்து வாழ்ந்தனர்.

அண்மையில் – சில வருடங்களாகத் தான், மதத்தைச் சொல்லி
ஆட்சியை பிடித்தவர்களின் பிரச்சாரங்களில் மயங்கி, அண்ணன்-தம்பிகளாக, மாமன்-மச்சான்களாக
பேதமின்றி பழகிய மக்கள்,

மத அபிமானம் என்கிற நல்ல நிலையிலிருந்து –
மதவெறி என்கிற போதைப் பிரச்சாரத்துக்கு அடிமையாகி விட்டார்கள்….

என்று – இந்த நாட்டு மக்கள் அனைவரும்,
ஜாதி, மத, இன வேறு பாடுகளைத் தவிர்த்து விட்டு –
ஒற்றுமையாக – உழைக்கிறார்களோ அன்று தான்
பாரத தேசம் உண்மையான வளர்ச்சியை நோக்கிச் செல்லும்.

இத்தகைய பாடல்களையும், அவற்றை உருவாக்கிய
கலைஞர்களையும் உணர்ந்து கொண்டால், ஒருவேளை
அவர்களது மனசாட்சி விழித்தெழலாம் என்கிற
நம்பிக்கையோடு – இந்தப் பாடலை இங்கே பதிகிறேன்.

“ராமா…. ராமா… ஜானகி ஜானே…”
………………

………….

.
………………………………………………………………………………….……………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

14 Responses to எது நிஜமான நம்பிக்கை … ?

  1. சிவா சொல்கிறார்:

    கே.எம்.சார்,
    டாஸ்மாக் கடைகளைத் திறந்து, மாநில கட்சிகள்
    எப்படி மக்களை போதைக்கும், பணத்திற்கும்
    அடிமையாக்கி ஓட்டுகளை பெறுகின்றனவோ
    அதே போல், பாஜக என்கிற அகில இந்திய கட்சி,
    பெரும்பாலான இந்துக்களை “மதம்” என்னும் போதைக்கு,
    அடிமையாக்கி வைத்திருக்கிறது. எனவே, உங்களைப்
    போன்றவர்கள் எத்தனை எழுதினாலும், மக்களை
    அந்த போதையிலிருந்து வெளியில் கொண்டு வருவது
    இயலாத காரியம்.
    மக்களை கவர்ந்திழுத்து, தனது ஆளுமைக்கு
    உட்படுத்தக்கூடிய மிகச்சிறந்த, தன்னலமற்ற, உண்மையான
    தேசத்தலைவர் ஒருவர் இனி தோன்றினாலொழிய
    இந்த தேசத்தை இந்த சுயநலவாதிகளிடமிருந்து
    மீட்பது கடினமே.

    • புதியவன் சொல்கிறார்:

      ரொம்ப சுலபம் இதுமாதிரி எழுதுவது. பாஜக கட்சிக்கு முன்பு, மதம் சார்ந்து கிறிஸ்துவர்களோ இல்லை முஸ்லீம்களோ தமிழகத்தில் அல்லது இந்தியாவில் வாக்களிக்கவில்லையா? சிறுபான்மையினர் என்பதற்காகவும் தங்களது அரசியலுக்காகவும் திமுக, முற்றவும் அவர்கள் சார்பாக இருந்ததில்லையா? ஏன் இப்பொழுதும் 300 இந்துக்கோவில்கள் தமிழகத்தில் இடிக்கப்பட்டிருக்கின்றன என்ற செய்திகளை நான் நடுநிலை நாளேடுகளில் படிக்கிறேன்… ஒரு சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களுக்கு ஏதேனும் ஆகியிருக்கிறதா? இப்படி ஒரு கட்சி இந்து எதிர்ப்பு என்ற ஒன்றையே மூலதனமாகக் கொண்டு செயல்படும்போது, ‘இந்து; என்ற மத உணர்வை ஒரு கட்சி தட்டி எழுப்பும்போது நிச்சயம் மக்கள் மனதில் மாற்றம் வரும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இந்திய அளவில் இந்த மாதிரி நடந்துகொண்டதால்தான், பாஜக அரசு, குறிப்பாக 2014க்குப் பிறகான அரசு இந்து சார்பு என்ற தோற்றம் வருகிறது… ஆனால் பாஜக அரசு செய்வது இந்திய பாரம்பர்யத்தைத் தூக்கிப்பிடிப்பதுதான்.

      தமிழகத்தில் அதே அனலாஜி. சாதிகளுக்குள் வேறுபாடுகளை எழுப்பி திராவிடக் கட்சிகள் நடந்துகொண்டபோது (அதிமுக ஜெ இருந்த வரை இதில் விதிவிலக்கு) இந்தமாதிரி ‘சாதி உண்ர்வு/போதையில் மக்களை திராவிடக் கட்சிகள் வைத்திருக்கின்றன’ என்று யாரும் எழுதவில்லை? சாதிக்கு என்ன கணக்கோ, அதுவே மதத்துக்குமான கணக்கு.

    • Tamil சொல்கிறார்:

      100% Agree

  2. காவிரிமைந்தன் சொல்கிறார்:

    ஜாதி, மத வேறுபாடுகளை மறந்து, அனைவரும்
    ஒற்றுமையாக இருக்க வேண்டும். நமக்குள்ளேயே
    மோதல்களின்றி எல்லாரும் ஒன்றுபட்டு உழைத்தால் தான்
    இந்த தேசம் முன்னேறும் என்று நான் எழுதி இருக்கிறேன்.
    அரசியலையும், மதத்தையும் கலப்பது தவறு என்று எழுதுகிறேன்…

    இது சிலருக்கு பிடிக்கவில்லையென்றால் – நான் என்ன
    செய்யட்டும்….? தூங்குபவர்களைத் தான் எழுப்ப முடியும்…
    விழித்துக்கொண்டே கண்களை மூடிக்கொண்டிருப்பவர்களை
    எப்படி எழுப்ப முடியும்…?

    “ஈஸ்வர், அல்லா தேரே நாம் –
    சப்கோ சன்மதி தே பகவான் ”

    -என்று சொன்னவரையே சுட்டுக்கொன்றவர்களின்
    வாரிசுகளை யாரால் மாற்ற முடியும்… ?

    • புதியவன் சொல்கிறார்:

      அரசியலில் சாதியைக் கலந்ததற்கு என்னென்ன நியாயங்கள் உண்டோ அது அனைத்தும் அரசியலில் மத்த்திற்கு உண்டு. Minorityகளுக்குத் தனிச் சலுகை என்பதைக் கொடுத்ததன் காரணம் என்ன? எதற்காக ஹஜ் யாத்திரைக்கு அரசு பணம் தந்தது? எதற்காக மைனாரிட்டி இன்ஸ்ட்டிடியூஷன் என்று அரசு பல்வேறு சலுகைகள் தந்தது? எதற்காக தற்போது, பள்ளியில் இறைவணக்கம் கூடாது என்று அரசு மூக்கை நுழைக்கிறது? இதை மதவாதி என்ற எண்ணத்தில் எழுதவில்லை. அரசு, வாக்குகளைக் குறிவைத்து இப்படி நடந்துகொள்ளும்போது, மத உணர்வோ சாதி உணர்வோ தட்டி எழுப்பப்படுவதை குறைசொல்ல முடியாது. நீங்கள் இதைப்பற்றி யோசிக்கவில்லை. அரசியலில் சாதி மத உணர்வை ஆரம்பித்து, மைனாரிட்டி என்பதைத் தவறாக உபயோகப்படுத்தவிட்டு, இப்போது, இந்துத்வா குரல் எழுப்பப்படும்போது எப்படி குறை சொல்ல முடியும்?

      ஏன் கிறித்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட பெற்றோர்களுக்குப் பிறந்த ராகுல் காந்தி, தான் கவுல் பிராதணன், தான் முழுமையான ஹிந்து என்று சொல்லவேண்டும்? ஒரு பாஜக இடையில் வந்தது. ஆரம்பத்திலிருந்தே தவறு காங்கிரஸ் மற்றும் திராவிடெ் கட்சிகள் செய்த தவறுதான் இன்றைய நிலைக்குக் காரணம்.

    • புதியவன் சொல்கிறார்:

      இங்கு பிரச்சனை கடவுள்களைப்பற்றி அல்ல. இங்கு யாரும் என் கடவுள் மட்டும்தான் உண்டு எனச் சண்டை போடவில்லை. அதனால் ஈஸ்வர் அல்லா தேரே நாம் என இங்கு குறிப்பிடுவது பொருத்தமன்று.

      அனைவரும் சம்ம் என்றால் ஏன் மைனாரிட்டிகளுக்குச் சலுகை? ஏன் செக்யூலர் என்ற வார்த்தை இந்திராவால் நுழைக்கப்பட்டது? ஏன் அரசு இந்துக்கள் அல்லாதவர்களுக்குப் பல்வேறு சலுகைகள் அளித்தது? மத்த்தின் பெயரால் பிற நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு இங்கு கூட்டங்கள் நடந்தபோது நடவடிக்கை எடுக்கவில்லை? எத்தனையோ விடை தெரியாத கேள்விகள், பாஜக அரசால் மதம் அரசியலில் கலக்கப்பட்டது என்ற பொய்யான வாத்த்தைத் தள்ளுபடி செய்கிறது.

      நீங்கள்கூட, இந்திராவைக் கொன்றவர்களின் வாரிசு மன்மோகன்சிங் என எழுதியதில்லை. ராஜீவைக் எஒன்றவர்களின் வாரிசுகள் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் என்று எழுதப்போவதில்லை. ஆனால் பாஜக மீதான விமர்சனத்தின்போது இந்த மாதிரி எழுத்த் தோன்றுகிறது. (நான் குறிப்பிட்டது ஒருசில உதாரணங்கள்தான்).

      சீதாராம் யெச்சூரி சொன்னதைப் போல, மோடியைத் தாக்கத் தாக்க அவரின் ஆதரவுத்தளம் அதிகமாகிறது. அதனால் பாஜக மீதான விமர்சனத்தில் மோடியைத் தாக்காதீர்கள் என்று சொன்னது உண்மைதான்.

      • காவிரிமைந்தன் சொல்கிறார்:

        காந்திஜியை கொன்றவரையே நியாயப்படுத்தும்
        ஒரு கூட்டத்தை என்னால் எப்படி திருப்திப்படுத்த முடியும்… ?

        இன்றிருக்கும் இந்திய அரசியல் சட்டம் மாற்றப்படாத வரையில்,
        சட்ட நிலவரம் இது தான்….
        ———————————
        the Supreme Court of India in the 1994 case S. R. Bommai v. Union of India established the fact that India was secular since the formation of the republic. The judgement established that there is separation of state and religion.

        It stated “In matters of State, religion has no place.
        And if the Constitution requires the State to be secular in thought and action,
        the same requirement attaches to political parties as well.

        The Constitution does not recognize, it does not permit, mixing religion
        and State power. That is the constitutional injunction. None can say
        otherwise so long as this Constitution governs this country.

        ..

        • புதியவன் சொல்கிறார்:

          When was the term secular added to the preamble?
          Secular means that the relationship between the government and religious groups are determined according to constitution and law. It separates the power of the state and religion. By the 42nd Amendment in 1976, the term “Secular” was also incorporated in the Preamble.
          Prime Minister Indira Gandhi, whose Indian National Congress government enacted the 42nd Amendment in 1976, during the Emergency.

          உண்மை இப்படி இருக்க, உங்க கருத்துக்கு மாற்றுக்கருத்து என்பதால்,
          //காந்திஜியை கொன்றவரையே நியாயப்படுத்தும்
          ஒரு கூட்டத்தை என்னால் எப்படி திருப்திப்படுத்த முடியும்… ?// னு சொல்லிட்டீங்களே காமை சார்.. இப்படிச் சொல்லிட்டீங்களே…. நாளைக்கு மன்மோகன் சிங்கை நீங்க பாராட்டினா, இந்திராகாந்தி கொலையைச் செய்த கூட்டத்தை நியாயப்படுத்தறீங்க, இதுபோல தமிழீழம் பற்றி எழுதினாலே, ராஜீவ் காந்தியை கொலைசெய்த கூட்டத்தை ஆதரிக்கிறீங்கன்னுலாம் எழுதமுடியுமா? இல்லை இப்போதுள்ளவர்களை ஔரங்கசீப்புக்கும், கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் ஆதரவாளர்கள்னு எழுதிடமுடியுமா? அல்லது உங்கள் வாதத்தின் வழியிலேயே பாஜக ஆதரவு நிலையில் இருந்த கருணாநிதியையும் அந்தச் சமயத்து திமுக எம்பிக்களையும் காந்தி கொலையில் கோர்த்துவிட்டுடுவீங்க போலிருக்கே…

          • காவிரிமைந்தன் சொல்கிறார்:

            புதியவன்,

            உங்களால் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து
            போக முடியும் என்பதை நிரூபித்து விட்டீர்கள்…
            போதும். இதற்கு மேலும் இங்கே எழுதி,
            உங்கள் தரம் மேலும் இறங்க நான் காரணமாக
            இருக்க விரும்பவில்லை;

            ஒரு காலத்தில் அருமையாக,
            நல்ல தெளிவுடன், நியாயமாக செய்திகளை
            அலசி ஆராய்ந்து இந்த தளத்தில்
            பின்னூட்டம் போட்டுக்கொண்டிருந்த ஒருவர்
            இன்று இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து
            எழுதுகிறார் என்றால் அதற்கு
            அடிப்படைக் காரணம்…?

            மதம் தருகிற போதை …!!!

            வேடங்கள் களையப்பட்டு, உங்கள் உண்மை நிலையை
            நான் புரிந்துகொண்டேன். போதும்.

            .
            -வாழ்த்துகளுடன்,
            காவிரிமைந்தன்

  3. bandhu சொல்கிறார்:

    ஜாதி, மத வேறுபாடுகளை மறந்து, அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது சில அரசியல்வாதிகள், சில extremist கள் தவிர பெரும்பாலானோரின் விருப்பமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அப்படி இருந்தும் மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யும் காட்சிகள் பிரபலமாவது எதனால் என்று பார்க்க வேண்டும். அது ‘மத நல்லிணக்கம்’ ‘செகுலரிஸம்’ என்று பேசிக்கொண்டே பல வருடங்களாக minority appeasement செய்து வந்த கட்சிகளினால்தான்! பார்த்துப் பார்த்து பலரும் வெறுத்துப் போய் விட்டதனால் வந்த விளைவு அது!

    ‘செகுலரிஸம்’ முக்கியம் என்பதால் ஊழல் செய்தாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு மக்களை கொண்டு சென்றதே காங்கிரசின் பெரிய சாதனை!

  4. காவிரிமைந்தன் சொல்கிறார்:

    bandu,

    ” பல வருடங்களாக minority appeasement
    செய்து வந்த ” –

    -என்று சொல்கிறீர்களே அப்படி
    எந்தெந்த ஆட்சியில் –
    என்னென்ன விதங்களில் appeasement செய்தார்கள்
    என்று கொஞ்சம் வரிசைப்படுத்துங்களேன்…
    நானும், மற்ற நண்பர்களும் உங்கள் கூற்றில்
    எந்த அளவிற்கு நியாயம் இருக்கிறது
    என்று தெரிந்து கொள்ள முடியும்.

    மாறாக -என்னுடைய பார்வை என்னவென்றால் –
    அந்த ஆட்சிகளில் “majority community -ஐ appeasement ”
    செய்ய அவர்கள் தவறியதன் காரணமாக – அவர்கள் மீது
    இவர்களால் சுலபமாக வெறுப்பு உணர்வை
    தூண்ட முடிந்தது/முடிகிறது என்பதே…

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • Venkataramanan சொல்கிறார்:

      “மாறாக -என்னுடைய பார்வை என்னவென்றால் –
      அந்த ஆட்சிகளில் “majority community -ஐ appeasement ”
      செய்ய அவர்கள் தவறியதன் காரணமாக – அவர்கள் மீது
      இவர்களால் சுலபமாக வெறுப்பு உணர்வை
      தூண்ட முடிந்தது/முடிகிறது என்பதே…”

      பெற்றோர் ஒரு குழந்தையை கொஞ்சி இன்னொன்றைக் கொஞ்சாமல் விடுவது போலவா ஐயா ? அதற்குப் பெயர் பாரபட்சம் தானே ?

  5. Saina சொல்கிறார்:

    நான் தங்களின் இடுகையை தொடர்ந்து படித்து வருகிறேன். கருத்திடுவது இதுவே முதல்.
    எங்கள் associationல் WhatsApp group ல், இந்த தலைப்பு குறித்து விவாதம் நடந்த போது, (திரு.புதியவன்) இதே கருத்தை, வார்த்தைகள் கூட கிட்டதட்ட ஒரே மாதிரி பதிவிட்டார்கள். இது ஏதும் toolkit ஆக இருக்குமோ? மிகுந்த ஆச்சர்யங்கள் உடன் Saina

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.