நீதிமன்ற தாமதம் – மாறன் பிரதர்ஸ் தப்பிக்க உதவுமா ….? துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி …

…..

.

நீதிமன்ற தாமதம் – மாறன் பிரதர்ஸ்
தப்பிக்க உதவுகிறதா ….?
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் கேள்வி …

தயாநிதி மாறன் அவர்கள் தொலைதொடர்பு அமைச்சராக
பதவி வகித்தபோது நடந்த – BSNL லைனை, திருட்டுதனமாக
பயன்படுத்திக்கொண்டதற்கான – ஊழல் வழக்கு –

கடந்த பல வருடங்களாக இழுத்தடித்துக் கொண்டே போவதை
கண்டித்து, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள்
New Indian Express ஆங்கில நாளிதழில் 2 நாட்களுக்கு
முன்னர் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்….

இந்த வழக்கில் நீதிமன்ற நடைமுறைகளில் ஏற்படும் தாமதம்
காரணமாக, அண்ணன்-தம்பி இரண்டு பேருமே
தண்டனையிலிருந்து தப்பி விடக்கூடிய சூழ்நிலை உருவாகி
உள்ளது என்று கடுமையாக கண்டித்து எழுதி இருக்கிறார்…

திரு.குருமூர்த்தி அவர்களின் கட்டுரை கீழே அப்படியே
தரப்பட்டிருக்கிறது…

அதற்குள் போகும் முன் –

இந்த விஷயத்தில் நமக்கு ஒரு வருத்தம் இருக்கிறது.
இந்த வழக்கு நீர்த்துப்போகவும், குற்றவாளிகள் தப்பிக்கவும்,
நீதிமன்ற நடைமுறையை மட்டும் குறை சொன்னால் போதுமா….?
இதற்கு வேறு காரணங்கள் எதுவும் இல்லையா ….?

நிச்சயமாக இருக்கின்றன –

 • திரு.குருமூர்த்தி அவர்கள் இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டுமென்று 2013-ல், உச்சநீதிமன்றத்தில், முதல்முறை
  கோரிக்கை (petition) வைத்தபோது, அதில் மத்திய அரசுக்கு
  440 கோடி ரூபாய் அளவில் இழப்பை ஏற்படுத்தி இருப்பதாகக்
  குற்றம் சாட்டி இருந்தார்….

( https://www.thehindu.com/news/national/centre-scuttling-probe-into-bsnl-phone-line-scam-says-plea-in-sc/article4299132.ece )

ஆனால், பாஜக ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த பிறகு,
திரு.ரவிசங்கர் பிரசாத் அவர்கள் தொலை தொடர்பு அமைச்சராக
பதவி வகித்தபோது, தயாநிதி மாறன் அவர்கள் மீது பதிவு
செய்யப்பட்ட குற்றச்சாட்டின்படி – இந்த தொகை
வெறும் 1.78 கோடியாக குறைந்து விட்டது….

முதலில் சொன்ன – 440 கோடி ரூபாய் எங்கே…?
இறுதியில் சார்ஜ் ஷீட்டில் சொல்லும் வெறும் 1.78 கோடி எங்கே…… ?
அதுவும் இந்த நீர்த்துப்போதல் நிகழ்ந்திருப்பது திரு.ரவிசங்கர்
பிரசாத் அவர்கள் அமைச்சராக இருந்த சமயத்தில் …

இதன் விளைவு … குற்றம் சாட்டப்பட்டவர்கள் இப்போது
வெகு சுலபமாக ” என்ன – பில் கட்டவில்லை அவ்வளவு தானே;
இப்போது பில் கொடுங்கள்; கட்டி விடுகிறேன்” என்று சொல்கிற
அளவிற்கு கிரிமினல் குற்றங்களை சிவில் குற்றமாக மாற்ற
முயற்சி நடக்கிறது…. இது எப்படி நிகழ்ந்தது …?

குற்றச்சாட்டை இப்படி நீர்த்துப்போக வைத்ததற்கு யார் காரணம்..?
இது வரை, திரு.குருமூர்த்தி அவர்கள் இதைப்பற்றி எங்கும் குறைகூறியதாகவோ, யாரையும் சாடியதாகவோ தகவல் இல்லை;

மேலும் – 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர்,
பாஜக சார்பில் – தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பாராளுமன்ற
உறுப்பினர்கள் மீது நடைபெறும் வழக்குகள் எல்லாவற்றையும்,
தனிநீதிமன்றத்தில் விசாரித்து, ஒரு வருடத்திற்குள் தீர்ப்புகள்
பெறப்பட்டு –
ஒரு வருடத்திற்குள்ளாக பாராளுமன்றம் குற்றவாளிகள் அற்ற
இடமாக சுத்தம் செய்யப்படும் – என்று வாக்குறுதி தரப்பட்டது.

இந்த வாக்குறுதி இன்னமும் நிறைவேறாததற்கு யார் காரணம்….?
தேர்தலின்போது சொன்ன வார்த்தை காப்பாற்றப்பட்டிருந்தால் –
இன்று, நாம் இங்கு புலம்ப வேண்டிய அவசியமே
இருந்திருக்காதே…? எழுத வேண்டிய அவசியமே இருக்காதே…?

இப்போது கூட, பல முக்கியமான வழக்குகள், பல ஆண்டுகளாக
நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன… இந்தப் பிரச்சினையை
தீர்த்து வைக்க வேண்டியது ஆட்சியில் உள்ளவர்களின்
பொறுப்பு தானே ….?

இந்த 7 ஆண்டுக்காலத்தில், பாஜக அரசால், அவசியம் கருதி, எத்தனையோ புதிய புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டு. நிறைவேற்றப்பட்டு – நடைமுறைப்படுத்தப்பட்டும் விட்டன…

நீதித்துறை தாமதங்களை தவிர்க்கவும் ஒரு சட்டம் கொண்டு
வரப்பட வேண்டியது மிக மிக அவசியம்….என்பதை
இந்த வழக்கு தரும் அனுபவத்தை வைத்தாவது உணர வேண்டும்.

மத்திய அரசு, உச்சநீதிமன்றத்துடன் கலந்தாலோசித்து,
இதற்கான வழிமுறைகளை உருவாக்கலாம்.

எந்த ஒரு வழக்கானாலும், ஒரு வருட காலத்திற்குள் நடத்தி
முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்…
வாய்தா கொடுத்துக்கொண்டே இருக்கும் வழக்கத்திற்கு
ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு,
எந்தவொரு வழக்கிலும் 3 தடவைகளுக்கு மேல் வாய்தா
அளிக்கப்பட மாட்டாது என்று விதிகள் வர வேண்டும்.

இதற்காக – நீதிமன்றங்களில், அனைத்து மட்டங்களிலும்,
கூடுதல் நீதிபதிகள் தேவைப்படலாம்.
கூடுதல் கட்டிட மற்றும் இதர வசதிகளும் செய்து
கொடுக்கப்பட வேண்டியிருக்கும்.
இதற்காகவெல்லாம் பெரிய அளவில் செலவுகள்
ஏற்பட வாய்ப்பில்லை; ஒருவேளை ஏற்பட்டாலும் –
நீதித்துறையில் ஏற்படும் அளவு கடந்த தாமதங்களை தவிர்க்க,
இவை அவசியமானவை என்றே கருதப்பட வேண்டும்.

ஆளும் கட்சியில் செல்வாக்குள்ள – திரு.குருமூர்த்தி அவர்கள்
அக்கறை எடுத்து, இதில் ஈடுபட்டால், நீதித்துறை
சீர்திருத்தங்களுக்கான சட்டங்கள் உருவாக அது வழி வகுக்கும்
என்கிற எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

….

New Indian Express – நாளிதழில் வெளிவந்துள்ள
திரு.குருமூர்த்தி அவர்களின் கட்டுரை கீழே –
………………………………………

Will judicial delay help the Maran brothers escape?
…..
https://www.newindianexpress.com/opinions/columns/s-gurumurthy/2022/jan/12/will-judicial-delay-help-the-maran-brothers-escape-2405834.html

…..
Published: 12th January 2022 10:06 AM | Last Updated: 12th January 2022 10:23 AM | A+A A-
Former Union minister Dayanidhi Maran (File | PTI)
By S Gurumurthy

………………………………

The punishing, tiring 16-year long pursuit to jail the culprits, the Maran brothers of Sun TV fame, in the infamous telephone exchange fraud case exposed 10 years back, is still on.

And it is seemingly unending. The case of the fraud discovered in 2007, kept buried till 2011, filed in 2016, and blocked several times, has hit a roadblock again.

The buccaneers first used their huge political, media and financial clout and stalled the CBI from filing a first information report (FIR).

After the FIR was finally filed, the Marans began misusing the judicial process itself to delay the trial. After crossing all impediments, with the trial in its last lap, a critical judicial delay seems to open an escape route for them now.

A long recall is needed to know how all efforts to catch the culprits may get frustrated after all.

Case in Supreme Court for the sixth time

It was indeed a daring crime. Dayanidhi Maran as telecom minister got installed in his twin homes in Chennai, a secret and un-billable telephone exchange outside the system, that had 756 multimedia high-speed telephone lines.

A fraud on his own ministry and government, it was also a national security risk to keep a huge phone system off the record. Uncovered by an honest CBI Inspector in 2007, the fraud lay deep in the UPA government, till The New Indian Express exposed it in 2011, causing the explosive exit of Dayanidhi from the ministry. But, with their pronounced media might, political clout and money power, the Marans — with whose names echo the infamous Italian politician Silvio Berlusconi — thwarted the probe even after the exposure.

That forced this writer to petition the Supreme Court in 2013 to direct the CBI to file an FIR. Cornered, the CBI had to — six years after it had itself found out the fraud and three years after the NIE exposed it.

The CBI chargesheeted the Marans in 2016. But they began an unending procession of vexatious proxy litigations to thwart the trial. They took the case to the highest court four times – once in 2015, twice in 2018, and once in 2019.

Finally the trial began. Again they faked litigation to stop the CBI from further probing the case and adding Sun TV, the beneficiary of fraud, as an accused, which is its right in law.

That landed the case again in March last – for the sixth time in eight years – in the highest court where it is pending for listing for nine months.

Here is the frustrating story of the decade long gruelling chase to bring the culprits to book, and where it stands now.

Delay, by political clout

The daring CBI Inspector S B Shankar who uncovered the fraud was a simple man. He lived in a single bedroom apartment in Rajaji Bhavan in Besant Nagar in Chennai, cooking his own food, washing the utensils.

He rode on his rickety scooter everyday to the CBI office in Shastri Bhavan, 11 km away. Direct and indirect threats did not deter him.

Later, in an act of revenge, a disgraceful attempt by some pliant CBI officers to fake a case of a lapse in some investigation to fix the honest inspector failed miserably.

Shankar had unearthed four facts which firmly fixed the Marans.

One, misusing his position as telecom minister Dayanidhi got installed off the record some 400 high-speed telephone lines in his new palatial home with almost similar numbers in his old ancestral house.

Two, all lines were kept fraudulently in the name of the Chief General Manager, Chennai Telephones, outside the billing system and so were free of cost.

Three, the 400 high-speed lines installed in the new home were connected by underground cable to the Sun TV network a short distance away and used for its show business. Four, the fraudulent phone system had caused a loss of Rs 440 crore to the public.

The NIE brought out Shankar’s report on June 2, 2011, in an exposure headlined ‘Minister Steals a Telephone Exchange and Loots BSNL.’

The next day, blatantly lying he had only one line, not hundreds, Maran threatened the NIE with a damage suit for `10 crore. Challenging him to file it, the NIE wrote, ‘Welcome Mr Maran.’

Four days later, the NIE finally nailed Maran’s lies by publishing the photocopy of BSNL file notings, which established the existence of the fraudulent home telephone exchange and shut his mouth.

With the CBI still unmoving, this writer mailed all evidence to the then CBI director A P Singh on 15.12.2012 and asked him to file an FIR.

Being of questionable integrity, which got exposed in the aftermath of the 2G spectrum case, he did not even acknowledge the mail.

This writer met other CBI officials and briefed them, but to no avail. Only after a writ plea in the Supreme Court did the CBI file the FIR. By then, the Marans’ political clout had delayed it by more than six years.

Delay, by vexatious cases

The CBI began hesitantly, gathered pace, moved and got Dayanidhi Maran’s anticipatory bail cancelled by the High Court in August 2015.

Maran forthwith moved the Supreme Court, got his arrest stayed and avoided custodial interrogation that is so necessary for the CBI to get at the truth.

Finally, after probing with its hands tied, the CBI filed a less than complete chargesheet in end-2016.

The Marans had other plans. Through proxies, they sought discharge by the trial court. By a perverse order in March 2018, the trial judge obliged them. Marans threw cocktails and abused the NIE and this writer in the vilest terms. But the joy they bought was short lived.

Bad for them, the CBI petition to overthrow the trial court order came before an upright, courageous judge, Justice Jayachandran.

His aroused judicial conscience exploded on the trial court. Justice Jayachandran who saw “error, illegality and perversity all over the trial court order” called it “perverse” more than once in his judgment.

The dictionary meaning of perverse is “turning away from what is right or good: corrupt”.

But despite the resounding slap, the Marans wouldn’t give up. Through proxies again, they headed to the Supreme Court, which threw them out in July 2018. The trial started in August.

In September again, the proxies moved the High Court, which showed them the door. They moved the highest court again in November. It bundled them out in January 2019.

Trial commenced again in March 2019. The proxies again challenged it in the High Court, which rejected it. They again moved the SC, which too closed the gate.

While all these proxy efforts failed except to delay, the present proxy effort might not just stop at delaying the case, but help the buccaneers escape altogether.

Paradox – further probe shut, Sun TV out, but trial on

The CBI, which had not done a complete investigation, began probing for further evidence for which it had undisputed right in law.

Headed by an honest director, the CBI had made an application to the trial court to probe further, to gather more evidence and to add Sun TV as accused – first wrongly kept out by the CBI thanks to Marans’ clout.

Marans’ proxies argued that as the CBI could not produce further evidence under the law, no further probe was needed.

But noting that more evidence could not be produced without probe, and further investigation was needed to add Sun TV as accused, the trial judge allowed CBI’s plea in a reasoned 26-page order in January last. Panicked, the Marans forthwith moved the High Court.

Strangely, the High Court ordered that further evidence might be produced during the trial but further probe was not needed.

The result was a total paradox – further probe is shut, Sun TV is out, but the trial should go on even if the CBI moved the Supreme Court.

The CBI rushed to the top court quickly against the paradoxical order, to get approval for its probe to add Sun TV as accused.

But nine months have passed and the case has not even been listed by the registry for hearing. Meanwhile, the trial is going on in Chennai.

The Marans who were trying to stop the trial earlier have begun furiously expediting trial without further probe and without Sun TV being added as accused.

The CBI desperately needs the case listed in the SC to get further probe okayed, add Sun TV as accused and to stop the trial till then. But the registry seems unmoving.

Many commercial litigations filed later have been heard and disposed of. Being in power in Tamil Nadu, the Marans are racing to close the trial before the top court takes up the case.

If they succeed — they will if the CBI petition before the SC is not listed and heard — Sun TV will escape prosecution and the Marans might escape going to jail. Will judicial delay finally allow the Marans and Sun TV to escape?

S Gurumurthy
Editor, Thuglak, and commentator on economic and political affairs

.
……………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to நீதிமன்ற தாமதம் – மாறன் பிரதர்ஸ் தப்பிக்க உதவுமா ….? துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி …

 1. M.Sekhar சொல்கிறார்:

  Only ne point: The suit amount reduced dtastically from Rs 440 crores for one clar reason: Something like 187000 C in 2-G case. Here, the lines COUD HAVE CAUSED Rs 440 crores, if ully used 24 X 7. But it was a connection fraudulently in the nae of BSNL and henc no meter attached;; so so PROOF possible to claim its use for any length of time. Not a BJP- or IB Misiter Tiwary’s making.

 2. சிவா சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  நீங்கள் சொல்லி இருப்பது சரி தான் ஆனால் உங்கள் மார்க்கெட்டிங் தான் சரி இல்லை; வாங்க மாட்டாதவர்களிடம் விற்க முயற்சி செய்கிறீர்கள்.

  // எந்த ஒரு வழக்கானாலும், ஒரு வருட காலத்திற்குள் நடத்தி
  முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்…

  வாய்தா கொடுத்துக்கொண்டே இருக்கும் வழக்கத்திற்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, எந்தவொரு வழக்கிலும் 3 தடவைகளுக்கு மேல் வாய்தா
  அளிக்கப்பட மாட்டாது என்று விதிகள் வர வேண்டும். //

  இதை நிறைவேற நீங்கள் எங்கே கோரிக்கை வைக்கிறீர்கள் ?

  //ஆளும் கட்சியில் செல்வாக்குள்ள – திரு.குருமூர்த்தி அவர்கள் அக்கறை எடுத்து, இதில் ஈடுபட்டால், நீதித்துறை சீர்திருத்தங்களுக்கான சட்டங்கள் உருவாக அது வழி வகுக்கும்//

  தமிழ் நாட்டை விடுங்கள். வட மாநிலங்களில், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ரவுடித்தனம், மதக்கலவரங்கள் ஆகிய குற்றைச்சாட்டுகளில் சிக்கி, வழக்குகள் நிலுவையில் உள்ள
  பாஜகவினர் எத்தனை ஆயிரம் பேர் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா ? நீதித்துறையின் மெத்தனம் ஒன்றின் மேல் தானே அவர்களது எதிர்காலமே அமைந்துள்ளது. அவர்களுக்கு எதிராக போகக்கூடிய ஒரு சட்டத்தை ஆளும் கட்சி எப்படி கொண்டு வர முயற்சிக்கும் ? அதை கொண்டுவர முயற்சிப்பது
  துக்ளக் குருமூர்த்தியாகவே இருந்தாலும் கூட ?

  எனவே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நீதித்துறையின்
  தாமதத்திற்கு எதிராக எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபட
  மாட்டார்கள்; தாமதம் பற்றி சும்மா பேசிக்கொண்டே
  இருப்பார்கள்; அவ்வளவு தான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.