திருமதி நளினி ப. சிதம்பரம் அளித்த பரபரப்பான பேட்டி ….

…..

” தமிழக அரசு நாமக்கல்லிலும், ஈரோட்டிலும் தனியார்
பள்ளிகளை நடத்தும் சிலருக்காகத்தான், நீட் தேர்வை
எதிர்க்கிறது…. உண்மையிலேயே கிராமப்புற
மாணவர்களின் நலன் கருதி அல்ல…”

 • என்று வழக்கறிஞர் திருமதி நளினி ப. சிதம்பரம் அவர்கள்
  தந்தி டிவி-க்கு அளித்த பேட்டி என்று கீழேயிருக்கும்
  ஒரு காணொலி சமூக வலைத்தளங்களில் தற்போது
  ஒரு சிலரால், வேகமாக – அதி தீவிரமாக – பரப்பப்பட்டு வருகிறது.

……….

……….

இதில் வேடிக்கை என்னவென்றால், தேதி கண்டுபிடிக்கப்பட
முடியாதபடி வெளியிடப்பட்டுள்ள இந்த காணொலி,

சுமார் நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர், அதிமுக ஆட்சியில்
இருந்தபோது, நீட் தேர்வை ஒரு வருட காலத்திற்கு –
ஒத்தி வைப்பது சம்பந்தமாக அவசர தீர்மானத்தை கொண்டு
வந்த சமயத்தில், அதாவது ஆகஸ்ட் 14, 2017- அன்று
வழங்கப்பட்ட பேட்டி.

தற்போது உள்ள சூழ்நிலைக்கும் இதற்கும்
எந்தவித சம்பந்தமும் இல்லை;

ஆனாலும், ஒரு குறிப்பிட்ட தரப்பினால், இந்த பேட்டி –
இப்போது தான் தரப்பட்டது போன்ற தோற்றத்தை
உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது.

இன்றைய கால கட்டத்தில், பாஜக-வைத் தவிர.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு
எதிராகவே உள்ளன …

எனவே, குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில்,
நீட் தேர்வை ஆதரித்து இந்த காணொலி இப்போது
வெளியாவதன் பின்னணியில் யார் இருக்க முடியும் ….?

பதிலுக்கு அவசியம் இல்லாமலே புரிந்து கொள்ளலாம்…!!!

தமிழகத்தில், எதிர்க்கட்சியாக –
அதிமுக-வை விட, பாஜக மிகச்சிறப்பாக, சுறுசுறுப்பாக
செயல்படுகிறது…. !!! 🙂 🙂 🙂

.
…………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to திருமதி நளினி ப. சிதம்பரம் அளித்த பரபரப்பான பேட்டி ….

 1. bandhu சொல்கிறார்:

  https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/many-politicians-running-medical-colleges-of-their-own-arvind-kejriwal/articleshow/52366468.cms
  இது கேஜ்ரிவால் அப்போது சொல்லியிருப்பது!

  //தற்போது உள்ள சூழ்நிலைக்கும் இதற்கும்
  எந்தவித சம்பந்தமும் இல்லை;//

  ஒரே வித்யாசம், அப்போது இதற்கு உச்ச நீதி மன்றத்தின் ஆசி இல்லை. இப்போது இருக்கிறது. இதில் விலக்கு கேட்டு மறுபடி 2014 கால கட்டத்துக்கு எடுத்து செல்லப் பார்க்கிறார்கள்!

  மாநில அரசு பாட திட்டத்தின் கல்வித்தரத்தை உயர்த்துவது பற்றி மட்டும் பேசவே மாட்டேன் என்கிறார்கள்!

  மற்றபடி, இது பிஜேபி IT விங்கின் வேலை என்பதில் சந்தேகமே இல்லை!

  யார் சொன்னால் என்ன? இந்த அரசியல் வாதிகள் முன்னொரு காலத்தில் இதே விஷயத்தில் எப்படி பேசினார்கள். இப்போது எப்படி பல்டி அடிக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு வாய்ப்பு youtube மூலம் கிடைக்கிறது! ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் என்று சொல்லி அப்படி சொல்லவே இல்லை என்று சொல்ல முயற்சி மட்டுமே செய்ய முடிகிறது. சென்ற பொங்கலுக்கு Rs 2500 எப்படி போதும்? Rs 5000 தரவேண்டும் என்று சொன்ன வாய் இப்போது வாயை திறக்க முடியாமல் ‘ஒன்றியம்’, ‘தமிழ் புத்தாண்டு தேதி மாற்றம்’ என்று மக்களை திசை திருப்ப வழி தேடிக்கொண்டிருக்கிறது! மக்களே பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் மாநில அரசு பிச்சை கேட்கிறது (தயாநிதி) என்று எள்ளி நகையாடியவர்கள் இப்போது மாநில அரசு நிதி தர கேட்கும்போது வாய் மூடி மௌனம் சாதிக்கிறார்கள்.

  சலிப்பாக இருக்கிறது இவர்களை பற்றி எழுத!

  • Venkataramanan சொல்கிறார்:

   *जो चोर लुटेरे हैं उनका काला धन जो कि भारत के बाहर जमा है अगर वह रुपया वापस आ जाए तो इतना धन आएगा की हर एक भारतीय नागरिक को मुफ्त में 15-20 लाख रुपए यूं ही मिल जाएगा*

   *If even once, the money hoarded by these crooks in banks abroad, even if we bring only that back, every poor Indian would get free of cost Rs 15 to Rs 20 lakhs, just like that. There’s so much money.*

   This is from the speech made by Modi on 7th Nov 2013 at Kanker, Chattisgarh during parliament election campaign. All these days, this is being projected as Modi’s promise to deposit 15 lakh in every individual’s account. This twist was done by ABP news channel after an interview with Amit Shah. He has replied the reported that Modi’s words were like a ‘Jumla’ meaning it is a cliche (பேச்சு வழக்கு). The interview clip went viral. Since then innocent & educated people alike, started believing that they will get money and those who oppose started to use this as an ammunition against Modi. Also there is not a single reference to it in BJP’s poll manifesto. By the way, I am not a fan of Modi. I just got curious when this 1.5L thing got viral and started looking for the source wondering how can any sane politician ever give such an impractical promise If there is any reference to a direct promise of 1.5L, please let me know. I’ll correct myself. Otherwise there is no use in perpetuating this alleged false promise.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் வெங்கடரமணன்,

  இந்த விஷயத்தில், நீங்கள் இவ்வளவு அக்கறை
  எடுத்துக் கொண்டு, “நிறைய ஆராய்ச்சி”கள் செய்து,
  “சில உண்மை” களை வெளிக்கொண்டு வந்து, இங்கு
  தெரிவித்திருப்பதற்கு என் மனம் நிறைந்த
  பாராட்டுகள்.

  இருந்தாலும், நமது வாசகர்கள் இது குறித்த
  “முழு உண்மை”களையும் தெரிந்துகொண்டால் தான்
  திருப்தி அடைவார்கள்.

  இவ்வளவு தேடியெடுத்த உங்களிடம் இந்த மீதி
  உண்மைகளும் ரெடியாக இருக்குமென்றே
  நம்புகிறேன்… எனவே, தயவுசெய்து அவற்றையும்
  இங்கு தெரிவித்து, நமது வாசக நண்பர்கள்
  “தெளிவு பெற” உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.
  ……………

  – கடந்த ஏழரை ஆண்டுகளில், இதுவரை
  எவ்வளவு கோடி’கள், வெளிநாடுகளில் பதுக்கி
  வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது..?

  -அதில் எவ்வளவு கோடி’கள் மீட்கப்பட்டு,
  இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது….?

  – இந்த பதுக்கல்’களில் சம்பந்தப்பட்டிருந்த
  எவ்வளவு பேர் மீது இதுவரை
  கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு
  சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்….?

  – இங்கே கொள்ளையடித்து விட்டு,
  வெளிநாடுகளுக்கு தப்பியோடிய – எத்தனை
  “திருட்டு கோடீஸ்வரர்” கள் ( மால்யா,
  லலித் மோடி etc. etc…போன்றவர்கள் )
  இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்…?

  ………….

  நீங்கள் பாஜக- காரர் இல்லையென்று சொல்லி
  இருப்பதை நான் நம்புகிறேன். எனவே,
  மேற்கண்ட விவரங்களையும் வெளியிடுவதில்
  உங்களுக்கு (தர்ம)சங்கடம் ஏதும் இருக்காது என்றே
  நம்புகிறேன்.

  நீங்கள் தரப்போகும் விவரங்களை வாசக நண்பர்கள்
  ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பார்கள் –
  என்பது உங்களுக்கு தெரியும்.
  எனவே அவர்களை அதிகம் காக்க வைக்க மாட்டீர்கள்
  என்று நம்புகிறேன்.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   கா.மை. சார்… நம்ம நீதித்துறை மிகுந்த பலவீனமாக இருக்கா இல்லை அரசியல்வாதிகளுக்குள்ள அண்டர்ஸ்டாண்டிங்கா இல்லை, கள்ள ஆடுகள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

   மல்யாவின் பையனை உள்ளே தள்ளி நுங்கு எடுத்திருந்தால் ஆறாயிரம் கோடி உடனே வந்திருக்கும். இதுவே கேடிகளுக்கும். இதனை ஏன் பாஜக செய்யவில்லை என்பது ஆச்சர்யம்தான் (எத்தனையோ பேர்மேல பொய் வழக்கு குண்டாஸ் போடமுடிந்த மாநிலங்கள் இருக்கும்போது, மத்திய அரசினால் இதனைச் செய்யமுடியாதா? முழுமையாக பிஸினெஸை முடக்க முடியாதா?-இங்க நீதிபதிகளுக்கு தண்ணீர் கட்/கரண்ட் கட் என்று செய்ததைப்போல). லலித் மோடிக்கும் இந்த அரசின் அமைச்சர் உதவி செய்தார் (பத்திரிகையில் வந்து மாட்டிக்கொண்டார்)

   பாஜக அரசின் பெரிய கரும்புள்ளி, குற்றவாளிகளைத் தப்பவிடுவது, ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது. ஏதேனும் ஒரு குற்றவாளி மேல இவங்க நடவடிக்கை எடுத்திருக்காங்களா? அவங்களிடம் கள்ளக்கூட்டு என்றுதானே இதற்குப் பொருள்? இதைத்தானே காங்கிரஸும் செய்தது. நேரடியாக எளிய மக்கள் பயன் பெற மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? கடனைக் கட்டினேன், லட்சம் கோடி கடன்கள் இப்போது இல்லை என்றெல்லாம் சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?

  • Venkataramanan சொல்கிறார்:

   காவிரிமைந்தன் சார்.

   பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று – வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை இந்தியாவிற்கு கொணர்வோம் என்பது. அது இன்று வரை நடக்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கான துணிச்சல் (political will) யாரிடமும் இல்லை. ஆனால் அந்த 1.5 லட்சத்தைப் பேசுவது போல் இதை யாரும் பொருட்படுத்துவதாய்த் தெரியவில்லை. பொதுமக்களுக்கும் தமக்கு நேரடியாக பணம் கிடைக்கப்போகிறது என்ற பொய்யான எதிர்பார்ப்பில் 1.5L விஷயம் மனதில் ஆழப்பதிந்திருக்கும் என நினைக்கிறேன். அரசாங்கத்திற்கு பணம் வருகிறதா என நமக்கு என்ன கவலை ? நமக்கு வருகிறதா, அது தான் முக்கியம். எனவே தான் எதிர்கட்சிகளும் இந்த 1.5 லட்சத்தை ஒரு துருப்புச்சீட்டாய் பயன்படுத்துகின்றன போலும்.

   இதோடு இன்னொரு புரியாத விஷயம் – இதை பொய்யென்று ஏன் பாஜக பலமாய் மறுக்கவில்லை என்பது. உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அளவிற்கு நான் அரசியலை கூர்ந்து கவனிப்பவனல்லன். இந்த ஒரு விஷயம் மட்டும் நெருடலாகவே இருந்தது. அதனால் தான் பந்து அவர்கள் குறிப்பிட்ட 1.5L பற்றி மற்றவர்களும் என்ன நினைக்கிறார்கள் என்றறிய பின்னூட்டமிட்டேன். தாமதமாய் பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். நன்றி.

   • Tamil சொல்கிறார்:

    //பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று – வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை இந்தியாவிற்கு கொணர்வோம் என்பது. அது இன்று வரை நடக்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கான துணிச்சல் (political will) யாரிடமும் இல்லை.//

    i have RTI report it clearly says that they tried their best and nothing they could find.

    my doubt is that they are all came back as legal investment through FDI back to India.

    also the amount was not as Modi mentioned in his election speech.

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  .
  உங்கள் விளக்கத்திற்கு நன்றி வெங்கட்ரமணன்.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.