செய்வது – சேவையா, வியாபாரமா, ஏமாற்றுதலா, பணம் பிடுங்கும் தந்திரமா …..???

….

சில விவரங்களை சேகரிப்பதற்காக ஒரு தடவை இவர்களின் தளத்திற்கு
சென்றேன்… நான் எங்குமே log-in செய்யவில்லை;
அதற்கான அவசியம் ஏற்படவில்லை; ஆனாலும்,

நான் இதற்குப்பிறகு , என் மெயில் பாக்சை திறக்கும் ஒவ்வொரு
சமயமும் – இவர்களது விளம்பரம் ஒன்று அங்கே தொங்கிக்கொண்டிருக்கிறது…

 • பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது…. என்னிடமிருந்து
  எதாவது பிசினஸ் கிடைக்கும்வரை என்னை பின் தொடர்வதை
  அது விடாது போலிருக்கிறது…!!!

இது தான் அவர்களுக்கு உதாரணம்….. அயராமல் எப்படி,
எந்த அளவிற்கு துரத்திக் கொண்டு வருகிறார்கள் பாருங்கள்…!!!

இந்த இடுகையின் தலைப்பு – இவர்கள் செய்வது – சேவையா, வியாபாரமா, ஏமாற்றுதலா, பணம் பிடுங்கும் தந்திரமா …..???

நான் சொல்ல வருவது “பைஜூ” என்கிற ஒரு புகழ்பெற்ற
நிறுவனத்தைப்பற்றி… மேலே புகைப்படத்தைப் பார்த்து இதற்குள்ளாகவே புரிந்து கொண்டிருப்பீர்கள்.

வியாபாரம் செய்வதோ, அதற்காக விளம்பரம் செய்வதோ தவறு
என்று யாரும் சொல்ல மாட்டார்கள்… ஆனால், ஒரு தனி மனிதரின்
பலவீனத்தை தெரிந்து வைத்துக்கொண்டு, அவரது பிள்ளை/பெண்களின் எதிர்காலம் குறித்து அவர் கொண்டுள்ள –
கவலையை, அக்கறையை பயன்படுத்தி,
அதை EXPLOIT செய்து, பணம் பிடுங்கும் இந்த தந்திரத்தை
யாராலும் நியாயப்படுத்த முடியாது.

இது, ஒரு வகையில் ஏமாற்றுதல் தான், பணம் பிடுங்கும்
தந்திரம் தான். சாதாரண ஏமாற்றுதல் கூட அல்ல –
கல்வியின் பெயரால் நடக்கும் கொள்ளை.
………….

2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்
2022-ம் ஆண்டு மார்ச் வரையில்
இந்திய கிரிக்கெட் அணிக்கான ஸ்பான்ஸர்,
இந்த ஆன்லைன் கோச்சிங் நிறுவனமான பைஜுஸ்தான்.

பைஜுஸின் விளம்பரத் தூதுவர் – பிரபல திரைப்பட நடிகர்
ஷாருக் கான்….

அனைத்து சோஷியல் மீடியாக்கள், டிவி, ரேடியோ,
செய்தித்தாள்களில் முழுபக்க விளம்பரங்கள்,
International Cricket Matches-களில்
விளையாடும் வீரர்களின் டீ ஷர்ட் களில்
முன்னும், பின்னும் – பெரிய விளம்பரங்கள்,

-இதற்கெல்லாம் எத்தனையெத்தனை கோடி பணம்
வேண்டியிருக்கும்…?

அத்தனை கோடி பணம் இவர்களுக்கு
எப்படி வந்தது….?

அப்பாவி பெற்றோர்களை ஏமாற்றி,
அவர்களின் ஆசையை அடாதவிதத்தில் தூண்டிவிட்டு –
அளவுக்கதிகமாக பிடுங்கியதன் மூலம் தானே….?

இந்த நிறுவனம் வளர்ந்தது எப்படி ….?

2011-ல், சில லட்சங்கள் முதலீட்டில் போட்டித் தேர்வுகளுக்கு
கோச்சிங் வழங்கும் நிறுவனமாக தொடங்கப்பட்ட
பைஜுஸின் இன்றைய சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலர்.


5 கோடிக்கு மேற்பட்ட மாணவர்கள் பைஜுஸில் தங்களைப் பதிவுசெய்திருக்கின்றனர். இதில் 55 லட்சம் மாணவர்கள்
கட்டணம் செலுத்திப் படித்துவருகின்றனர். ஆண்டுக்கு
ரூ.3000 கோடி அளவில் வருவாய் ஈட்டுகிறது பைஜுஸ்.

கரோனாவுக்குப் பிறகு இந்தியக் கல்வித் துறையே ஆன்லைனை நோக்கிய நகரலானது, பைஜுஸ் நிறுவனத்துக்கு மிகப் பெரும் வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. கடந்த இரண்டு
ஆண்டுகளில் பைஜுஸ் நிறுவனம் வருவாய் பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

ஆனால் – இந்தியக் கல்வி அமைப்பில், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மனநிலையில் பெரும் சிதைவை பைஜுஸ் ஏற்படுத்திவருகிறது.

பைஜுஸ் நிறுவனம் தற்போது முதல் வகுப்பில் ( அதற்கு கீழே
எதுவும் இல்லாததால் ….??? ) –

 • தொடங்கி பள்ளியிறுதி வகுப்பு வரையிலான
  பள்ளி மாணவர்களுக்கும்,

பெரிய வகுப்புக்களுக்காவது ஓரளவு நியாயம் சொல்லலாம். ஆனால் – முதல் வகுப்புக்கே ட்யூஷனா…..? எப்பேற்பட்ட மோசடி வேலை இது…!

நீட், ஐஏஎஸ் தொடங்கி வங்கித் தேர்வுகள் வரையில்
கோச்சிங் வழங்கிவருகிறது.

வகுப்புகளை காணொலியாக மாணவர்களுக்கு வழங்குகிறது. பைஜுஸில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு
வரையிலான கட்டணம் – மாதம் ரூ.3,333. மட்டுமே…..!!!!!!!!!!!!!!!!!!!!!

ஐந்தாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையில் கணிதம்
மற்றும் அறிவியல் பாடங்களுக்கான கட்டணம் மட்டும்
ரூ.26,000. ஐஏஎஸ் கோச்சிங்குக்கான கட்டணம் ரூ.1.5 லட்சம்
வரை செல்கிறது.

பெற்றோர்களையும், மாணவர்களையும் – புத்திசசலித்தனமாக ஏமாற்றி ( ???? ) தங்கள் அமைப்பில் சேரத்தூண்டுகிறது.

எப்படி…..?

ஓரு உதாரணம் கீழே –

சமீபத்தில் பைஜுஸ் நிறுவனம் வெளியிட்ட விளம்பரம்
ஒன்றில் –

 • சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் மொத்தமுள்ள
  761 ரேங்குகளில் 281 பேரும், ஐஏஎஸ்-க்குத்
  தேர்வாகியுள்ள முதல் 100 பேரில் 36 பேரும்
  பைஜுஸில் பயிற்சி பெற்றவர்கள் –
 • என்று எல்லாப் பத்திரிகைகளிலும் முழுப் பக்கத்துக்கு
  விளம்பரம் கொடுத்திருந்தது. அந்த விளம்பரம் வெளியான
  சில மணி நேரங்களிலே அந்த விளம்பரத்தில் இடம்பெற்ற
  மாணவர்கள், தாங்கள் பைஜுஸில் கோச்சிங் பெறவில்லை
  என்றும், அது அறிவித்த இலவச பயிற்சி வகுப்புகளில்
  அரைமணி நேரம் அளவில் மட்டுமே கலந்துகொண்டவர்கள்
  என்றும் விளக்கம் அளித்தனர்.

இது ஏமாற்றுதல் தானே…..?

ஆனால் இந்த ஏமாற்றுதலையே பைஜூஸ் சட்டபூர்வமாகச்
செய்கிறது…. எப்படி…..?

 • சும்மா வாங்க… வந்து பாருங்க… அஞ்சு பைசா கொடுக்க வேண்டாம். எங்கள் திட்டம் எப்படி இருக்கிறது என்று சும்மா வந்து பாருங்களேன் என்று சகல மார்க்கமாகவும், மக்களைச் சென்றடைந்து வலையை வீசுகிறது.
 • தங்களிடம் இனாமாக ட்ரயல் பார்க்கலாம் என்றும் பிறகு
  பிடித்திருந்தால் மட்டும் சேர்ந்தால் போதும் என்று விளம்பரம்
  செய்கிறது…
 • அப்படி ட்ரயல் பார்க்க உள்ளே நுழையும்
  மாணவர்களிடம் இப்படி ஒரு ஒப்புதலை பெற்றுக்கொண்டு தான்
  உள்ளே நுழைய விடுகிறது…
  ………………

Applicant and applicant’s parent
agree that BYJU’S may use the data
submitted by the applicant
for its business.
………………

எனவே, இந்த கண்டிஷனுக்கு ஒப்புதல் தந்து log in
செய்பவர்கள், இந்த நிறுவனத்தின் மீது எப்படி
நடவடிக்கை எடுக்க முடியும்…?

இவர்களின் வகுப்புகளில் பிள்ளைகள் சேராவிட்டால்,
அவர்களால் தேர்வுகளில் முந்த முடியாது எனும் ஒருவித
அழுத்தமான சூழலையும் இவர்களின் தொடர் முயற்சிகள் உருவாக்குகின்றன.

கல்வியை விற்பது -பிற பொருட்களை விற்பது போல் அல்ல …
பிற பொருட்களை விற்க வேண்டுமென்றால் –
வாங்கக்கூடிய வாய்ப்பு இருப்பவர்களிடம், ஆசையைத் தூண்ட வேண்டும்.

ஆனால், இந்தியாவில் கல்வியை
விற்க வேண்டுமென்றால் – பெற்றோர்களின்
உணர்ச்சியைத் தூண்ட வேண்டும்… மன அழுத்தத்தை உண்டாக்க வேண்டும்..

கோச்சிங் சென்டர் வியாபாரத்துக்கு – பைஜுஸ் ஒரு பயங்கரமான முன்னுதாரணமாகி வருகிறது. தற்போது கிராமப்புறப் பெற்றோர்களிடமும் கூட ஸ்மார்ட்போன்கள்
இருக்கின்றன. குழந்தைகள், சிறுவர்கள் பார்க்கும் யூடியூப் வீடியோக்களிலும், கேம்களிலும் பைஜுஸ் விளம்பரம் வருகிறது.

கை தவறிப்போய், யோசனை இன்றி – அவர்கள் பைஜுஸ்
செயலியை டவுன்லோட் செய்துவிட்டால் கூட அவர்கள்
இந்நிறுவனத்தின் இலக்குப் பட்டியலில் வந்துவிடுகிறார்கள்…..

பெற்றோர்களின் தொடர்பு எண்களை இதன் தரகர்கள் வேட்டையாடுகிறார்கள். அவர்களைத் தொடர்பு
கொண்டு வீட்டில் படிக்கும் வயதில் பிள்ளைகள் இருக்கிறார்களா,
என்ன படிக்கிறார்கள், எத்தனை மதிப்பெண் பெறுகிறார்கள்
என்று ஆரம்பித்து தற்போதைய காலகட்டத்தில் உங்கள் பிள்ளை கூடுதலாக கற்றுக்கொள்ளாவிட்டால் அவரது எதிர்காலம் கேள்விக்குறிதான் என்ற இடம் நோக்கி நகர்த்துகிறார்கள்.
அதாவது அச்சுறுத்துவதுதான் இங்கே வியாபாரத்துக்கான
தூண்டில்!

அதன் பிறகு, ‘கவலைப்படாதீர்கள் நாங்கள் உங்கள் பிள்ளைக்குப் கோச்சிங் வழங்குகிறோம். சேருங்கள். இலவசமாக சில நாட்கள் பயன்படுத்திப்பாருங்கள். அதன் பிறகு முடிவுசெய்துகொள்ளுங்கள்’ என்றெல்லாம் தூண்டில்கள் வீசப்படுகின்றன.ஒருகட்டத்தில் நிறுவனத்தில் சேர்க்காவிட்டால் அது நம் பிள்ளைக்குச் செய்யும் துரோகம்’ என்று எண்ணும் அளவுக்குப் பெற்றோர்கள் கரைக்கப்படுகிறார்கள்.

வசதியில்லாத பெற்றோர்கள் வட்டிக்கு கடன் வாங்கியாவது
தங்கள் பிள்ளைகளை இவர்களின் வகுப்புகளில் சேர்க்கும் நெருக்கடி நிலையை இத்தகு நிறுவனங்கள்
உருவாக்கி வருகின்றன….

போட்டியில் முந்துபவர்களுக்கே, உயர்கல்வி கிடைக்கும்…
போட்டியில் முந்துபவர்களுக்கே, மத்திய அரசின் IAS, IPS,
IFS – வங்கிகள், IIT,நீட் – போன்ற தேர்வுகளில் தேர்ச்சிப்
பட்டியலில் முந்தி இடம் பிடித்து வாய்ப்பு பெற முடியும் என்கிற
ஒரு அழுத்தமான மனோநிலையை, மாணவர்களுக்கும்,
அவர்களது பெற்றோர்களுக்கும் உண்டு பண்ணி விடுகிறார்கள்.

பொதுவாக, பணம் செலவழித்து படிக்க முடியாத
ஏழைப்பிள்ளைகள் தான் அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள்.

தனியார் பள்ளிகளில் படிப்பவர்களில் பெரும்பாலானவர்களும்
ஏழை மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான்…

அவர்களில் சிலர் மிகக்கடுமையாக உழைத்து, படித்து –
முதல் நிலைகளில் RANK பெற்று தேர்ச்சி பெறுகிறார்கள்.

பைஜுஸ் போன்ற நிறுவனங்கள் –
தங்களிடம் படிக்கும் மாணவர்களின் கல்வியறிவை பெரிதாக
உயர்த்தி விடுவதில்லை;

ஆனால் – அவர்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு,
போட்டித் தேர்வுகளில் எப்படி சுலபமாக ஜெயிப்பது என்கிற
தந்திரத்தை, உத்திகளைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
இந்த தந்திரங்களை தெரிந்து கொண்ட மாணவர்கள்
பள்ளிகளில் நல்ல rank -ல் வந்த மாணவர்களையும்
ரேசில் முந்தி, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுகிறார்கள்.

போட்டி என்பது சமமான தகுதி உடையவர்களிடையே தானே
இருக்க வேண்டும்…. ஆனால், இங்கு தந்திரங்கள் தெரிந்த –
கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் –
மற்ற மாணவர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள்…

எனவே, தகுதி இருந்தும், பள்ளிகளில் சிறப்பாக படித்து,
நல்ல மார்க் வாங்கி முதல் நிலைகளில் வந்த மாணவர்களும் கூட –
இவர்களிடம் தோற்று விடுகிறார்கள்….

இது சரியா….?
இந்த நிலையை மாற்ற நம்மால் என்ன செய்ய முடியும்….?


மக்கள் – இன்றைய, நேற்றைய, நாளைய – பெற்றோர்கள்
யோசிக்க வேண்டும்….

முக்கியமாக – தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும்,
அரசும் இது குறித்து தீவிரமாக யோசிக்க வேண்டும்.
இந்த நிலையை மாற்ற என்ன செய்ய முடியுமோ, அதைச்செய்ய
வேண்டும்.

நல்ல கல்வி தான் சமூக முன்னேற்றத்திற்கான அடிப்படை
என்கிற அடிப்படைத் தத்துவத்தையே தகர்க்கின்றன
பைஜு போன்ற நிறுவனங்கள்…

வாசக நண்பர்கள் கூட இதுகுறித்து, தங்கள் ஆலோசனைகளை
வழங்கலாம்.

( நன்றி – என்னை இந்த இடுகையை எழுதத் தூண்டிய – உதவிய
எழுத்தாளர்-சிந்தனையாளர் எஸ்.அப்துல் மஜீத்,
https://wikibio.in/ byju-raveendran/
மற்றும் நண்பர் சைதை அஜீஸ் ஆகியோருக்கு….. )

.
……………………………………………………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to செய்வது – சேவையா, வியாபாரமா, ஏமாற்றுதலா, பணம் பிடுங்கும் தந்திரமா …..???

 1. Ramanathan சொல்கிறார்:

  நன்றி: Thiru K V M sir What you said in this post is very true Let our people to understand through this post and avoid untoward loses in all the way… Thanks a Lot to you sir 🙏 🙏 🙏

 2. Tamil சொல்கிறார்:

  1) ஐயா நீங்கள் அவர்களுடைய இணையதளத்திற்கு சென்று வந்ததனால் அவர்களைப் பற்றிய விளம்பரம் ஏனைய இணையங்களில் வந்தது என்பது சரியான புரிதல் அல்ல என்று நினைக்கிறேன். என்ன நடந்திருக்கலாம் என்றால் நீங்கள் அவர்களைப் பற்றியோ அல்லது பொதுவாக கல்வி பற்றிய தேடி இருக்கலாம் அதன் அடிப்படையில் கூகுளின் துணையுடன் அவர்கள் உங்களுக்கு நீங்கள் போகும் இடமெல்லாம் தங்களுடைய சேவையை தெரியப் படுத்தி உங்களை தங்களுடைய வாடிக்கையாளராக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

  இதை நீங்கள் தடுக்க வேண்டும் என்று சொன்னாள் தங்களுடைய தேடலை கூகுள் ஞாபகம் வைத்துக்கொள்ளக் கூடாது என்கின்ற செட்டிங்கை நீங்கள் உபயோக படுத்த வேண்டும்.

  2)
  எதைத் தின்றால் பித்தம் தீரும் என்ற நிலையில் தங்களுடைய வருமானத்தை பெருக்குவதற்காக பல வழிமுறைகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது காரணம் போட்ட காசுக்கு இன்னும் ரெட்டன் வரவில்லை என்பதுதான்.

  3)
  இது போன்ற நிறுவனங்கள் தேவைதான், இவர்களால் இந்தியா போன்ற பரந்த தேசத்திற்கு ஒரு சில நூறு ரூபாயில் ஒரு வருட காலத்திற்கு சேவையை தர முடியும் என்று சொன்னால் அது பயனுள்ளது.

  அப்படி இல்லாமல் இந்த ஏழை மாணவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் சுரண்ட வேண்டும் என்ற அடிப்படையில் இவர்கள் முற்பட்டாள் அது தவறானது.

  3)
  கல்வியைத் தருவது என்ற ஒற்றை நோக்கத்திற்காக (குறைந்த லாப நோக்கத்தில்) இந்த நிறுவனம் நடத்தப்பட்டால் ஒரு பாடத்திற்கு அதிகபட்சம் 100 ரூபாயில் ஒரு வருடம் முழுவதும் . மாணவர்களின் திறனை மேம்படுத்த கூடிய இணையத்தை தர முடியும்.

  இதனை NEET போன்று தேர்வுகளுக்கும் தரமுடியும்.

  குறிப்பு: தான் தீர்க்கமாக இதைச் சொல்வதற்கு காரணம் அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தை உருவாக்குவதற்காக எனது உழைப்பை தந்து கொண்டிருக்கின்றேன் என்ற அடிப்படையில்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழ்,

   // குறிப்பு: நான் தீர்க்கமாக இதைச் சொல்வதற்கு
   காரணம் அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தை
   உருவாக்குவதற்காக எனது உழைப்பை தந்து
   கொண்டிருக்கின்றேன் என்ற அடிப்படையில் //

   -உண்மையில் அப்படிப்பட்ட – சேவை நோக்கிலான –
   அதே சமயம், நியாயமான கட்டணங்கள் பெறும் –
   நிறுவனங்கள் நிறைய உருவாக வேண்டும் என்பது
   தான் என் ஆசையும்…

   உங்கள் முயற்சி வெற்றி பெற என்
   உளமார்ந்த வாழ்த்துகள்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. tamilmani சொல்கிறார்:

  இதேபோல் நாமக்கல் . திருச்செங்கோடு போன்ற இடங்களில் “கல்வி தொழிற்சாலைகள்”
  ஆரம்பிக்கப்பட்டன. மாணவர்களை சிறைகளில் அடைத்து மனப்பாடம் செய்ய வைத்து
  மாலை வேளைகளில் விளையாட விடாமல் +2 மாணவர்களை அதிக மதிப்பெண்
  வாங்க வைத்தார்கள். ஆனால் நீட் வந்தவுடன் இவை போணி ஆகவில்லை. உண்மையிலேயே
  திறமைசாலிகள் தான் நீட் தேர்வில் வெற்றி பெற்றார்கள் . இந்த கல்வி வியாபாரிகளுக்கு அரசியல்வாதிகள் துணையும்
  உண்டு. நீட்டை எதிர்த்து கொண்டே நீட் கோச்சிங் நடத்தும் அரசியல்வாதிகள் பலருண்டு.அவர்கள்
  எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்று சொல்லவே தேவையில்லை. ஹிந்தி வேண்டாம் போடா
  என்று சொல்லி காசு வாங்கி ஹிந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகளை நடத்துபவர்கள் அவர்களே.

  • புதியவன் சொல்கிறார்:

   இப்போ புதிதாக ‘தமிழ்வழி கல்வி மாணவர்கள் நீட் தேர்வினால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று புதிதாக ஒரு நாவலை எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். எடப்பாடி அரசு செய்ததைப்போல, அரசுப் பள்ளியில் தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு 20 சதம் ஒதுக்கீடு என்று அரசு அறிவிக்கலாமே.

   திமுகவைச் சேர்ந்தவர்கள் மருத்துவக் கல்லூரிகளை நடத்துவதால்தான் இவர்களின் நீட் எதிர்ப்பு.

   ஏன் +2 மதிப்பெண்களை மட்டும் வைத்து பெரும்பாலான அரசு வேலைகளுக்கு ஆட்களை எடுக்கக்கூடாது? எதற்கு தனித் தேர்வு?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.