இந்த – நிஜ வீரருக்கு – ” உயிர் ” பயம் கிடையாது …!!!

………..

….

ஜம்மு, காஷ்மீரில் உதம்பூர் ராணுவ யுனிட்’டைச் சேர்ந்த
அதிகாரி ஒருவர் ஒரு வீடியோவை தனது ட்விட்டரில்
பகிர்ந்துள்ளார்….

அந்தக் காட்சி – காணொலியைக் காணும் நம்மையே
உறை’யச் செய்கிறது….

17,000 அடி உயரத்தில், பனிப்புயலின் கொடிய தாக்குதலையும் தாங்கிக்கொண்டு நிற்கும் இந்திய ராணுவ வீரர் ஒருவர் …….

உண்மையிலேயே இந்த மாபெரும் தேசத்தையும், அதன் மக்களையும் –
அல்லும் பகலும் அசராது பாதுகாக்கும் வீரர் எவரோ, அவர்கள் அத்தனை பேருக்கும் நமது “வீர சல்யூட்”

…………………………………………………………………………………………………………….

Army jawan stands firm amid fierce
snow storm in Kashmir in A viral video.

Shared by PRO (Public Relations Officer)
Udhampur, an official Twitter profile of
the Ministry of Defence,
the clip is bound to give you a feeling of
gratitude towards those fighting for the
country.

The clip shows a jawan standing in knee-deep
snow while holding a gun. The soldier can be
seen standing firmly on the spot even as a
fierce snow storm rages around him.

The video was shared with a verse from
Rudyard Kipling’s poem For All We Have And Are.

“No easy hope or lies.
Shall bring us to our goal,
But iron sacrifice Of body,
will, and soul. There is
but one task for all.
One life for each to give.
Who stands if Freedom fall?”

Take a look:

….

.

…………………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

16 Responses to இந்த – நிஜ வீரருக்கு – ” உயிர் ” பயம் கிடையாது …!!!

 1. Tamil சொல்கிறார்:

  ஆம் ஐயா முற்றிலும் உண்மை.

  நமது பாரதப்பிரதமர் பல கார்கள் படைசூழ பல ராணுவ வீரர்கள் அணிவகுக்க பஞ்சாப் சென்று அங்கே ஒரு சில நூறு விவசாயிகள் தடுத்து நிறுத்தினார்கள் என்பதற்காக திரும்பி வந்துவிட்டு தன் உயிருக்கு ஆபத்து என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

  • bandhu சொல்கிறார்:

   மிகத் தவறான பார்வை. இதையும் அதையும் முடிச்சு போடுவதே தவறு. பிரதமர் என்பது ஒரு பதவிக்கான மரியாதை. யாராக இருந்தாலும், அந்த பதவியில் இருப்பவருக்கு அதற்கான மரியாதையையும், பாதுகாப்பையும் அளித்தே ஆகவேண்டும். இல்லையேல் இது ஒரு காட்டு ராஜ்ஜியம் (anarchy ) ஆகிவிடும்.

   என்ன எதிர்பார்க்கிறீர்கள்? அவரும் ஒரு துப்பாக்கி எடுத்து சண்டை போட்டிருக்கவேண்டும் என்றா? இல்லை, நம் நாட்டு மக்கள் தானே என்று அவர்களுடன் பேசி இருக்கவேண்டும் என்றா? அவர்கள் சாதாரண விவசாயிகள் தான் என்று தெரியுமா? அவர்களில் ஒருவர் இவரை தாக்கி இருக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்? அப்போது இதே வாய்கள் ‘இவர் திரும்பி வந்திருக்க வேண்டியது தானே? விளம்பரத்துக்காக போனார்!’ என்று பேசியிருக்காதா?

   பஞ்சாப் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது. அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நாம் அதை பற்றி போகிற போக்கில் விமர்சிப்பதை கடுமையாக எதிர்க்கிறேன்!

   • Tamil சொல்கிறார்:

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

    பிரதமர் என்பவர் யார்?

    நான் உங்களுடைய தலைமை சேவகன் என்று சொன்னது ஐயா மோடி அவர்களுக்கு ஞாபகம் இருக்குமா அல்லது உங்களுக்கு தான் ஞாபகம் இருக்குமா?

    அதிகாரம் தந்த மமதையில் தனக்கு அந்த அதிகாரத்தை தந்த சாமானியனை மதிக்கத் தெரியாத மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி.

    இரண்டு வருட காலம் மழையிலும் வெயிலிலும் குளிரிலும் டெல்லி என்னுடைய தெருக்களிலே தனது போராட்டத்தை நடத்திய சாமானியன் உடைய கோபம் சாதாரணமானதல்ல.

    இவர் காரைவிட்டு இறங்கி அவர்களை நோக்கி சென்றிருந்தார் இவர் இருந்த இடம் தெரியாமல் போய் இருப்பார் எனவே அவர் அதைச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை.

    பிரதமர் பதவி என்பது அனைவரும் கனவில் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்று அது தன்னுடைய தலையில் கிரீடம் ஆக இருக்கின்றபோது அனைவரையும் ஒருங்கிணைத்து எப்படி ஒரு மாபெரும் தலைவனாக விளங்க வேண்டும் என்பது மோடி ஐயாவுக்கு தெரியவில்லை.

    இன்று அதிகாரம் தருகின்ற மமதையில் ஊடகங்கள் தருகின்ற பிம்பத்தின் அடிப்படையில் தன்னை மிகப்பெரிய தலைவராக அவர் நினைத்துக் கொள்ளலாம்.

    நாளை வரலாறு சரியாக பதிவு செய்யும் அவர் சரியான தலைவர் அல்ல என்று.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் bandhu,

  அவசரத்தில், ஒரு முக்கியமான வார்த்தையை
  தவற விட்டு விட்டீர்கள் போலிருக்கிறதே….
  இதையும் சேர்த்துக்கொண்டால் தானே நீங்கள்
  சொல்லவந்த விஷயம் முழுமையடையும்….!!!

  “இந்த சம்பவத்தை விமரிசனம் செய்பவர்கள்
  தேசத்துரோகிகள்…”

  இந்த தேசத்தில், பாஜகவை ஆதரிக்காத அனைவருமே
  தேசத்துரோகிகள் தானே….!!!

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • bandhu சொல்கிறார்:

   இது கண்டிப்பாக anarchy என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஸ்டாலின் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கேரோ செய்யப்பட்டு அதை பிஜேபி நியாயப்படுத்தினாலும் என் நிலை இது தான்! கடுமையாக எதிர்க்கிறேன்!

  • Tamil சொல்கிறார்:

   காவிரிமைந்தன் ஐயா அவர்களுக்கு வணக்கம்,
   “பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி வந்தார்” என்று நான் பதிவிட்டதாக நினைவு, எனவே நீங்கள் அதை எளிமைப் படுத்தி விட்டீர்களோ?

   அல்லது அவர் பிரதமர் என்கின்ற அடிப்படையில் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கடைசி நேரத்தில் நானே போடவில்லை யாகவும் இருக்கலாம்.

   இதற்கு இவ்வளவு ரத்தக்களறி அதை போட்டிருந்தால் யோசித்துப்பாருங்கள் என்னை தேச விரோதியாகவே முடிவு செய்து பிடிவாரண்ட் கொடுத்திருப்பார்கள்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    தமிழ்,

    நீங்கள் ” தேசத்துரோகி ” பட்டம் பெற்று
    விடக்கூடாது என்பதில் எனக்கும்
    அக்கறை உண்டே ….!!! 🙂 🙂 🙂

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் Bandu –

  உங்கள் நிலை அதுவாகவே இருக்கலாம். அது உங்கள் விருப்பம்…
  நீங்கள் கடுமையாக எதிர்த்துக் கொண்டே இருங்கள்…. ஆனால்,
  நீங்கள் எதிர்பார்த்த சுப்ரீம் கோர்ட்டின் நிலை – அதுவாக இல்லையே…!!!

  ——————————
  இன்று சுப்ரீம் கோர்ட் எடுத்த முடிவு –
  உங்கள் பார்வைக்கு ….

  (பஞ்சாப் மாநில அரசின் கோரிக்கைப்படி,)
  விசாரணையை – ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற
  நீதிபதியின் தலைமையிலான கமிட்டி
  (மத்திய அரசு அல்ல …) நடத்தும்….

  – During the hearing on Monday, senior
  advocate DS Patwalia, Advocate General
  of Punjab government, told the
  Supreme Court –

  that seven show-cause notices have been
  issued to the state officers as to why
  disciplinary action should not be taken
  against them.

  “Please appoint
  an independent committee,
  and give us a fair hearing,”

  the state government said.

  After being told that the Centre
  has issued show-cause notices to
  Punjab officials, the Supreme Court
  told the Centre that –

  -the notices issued by it to
  Punjab officials were self-contradictory.

  The court added that by constituting
  Committee, Centre is seeking to enquire
  if there was a breach of SPG Act and then,

  on the other hand, it is holding Punjab
  Chief Secretary and Director General guilty.

  ———
  The Supreme Court, agreed to set up
  an independent committee,
  to be headed by a former Supreme Court
  judge to probe Prime Minister
  Narendra Modi’s security breach
  in Ferozepur, Punjab last week.

  ( மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து
  சுப்ரீம் கோர்ட் கொண்டிருக்கும் அதிருப்தி,
  அவநம்பிக்கையை இது குறிக்கிறது என்று
  நான் நினைக்கிறேன்… )

  ஆனால், இப்போது கூட நீங்கள் –
  கடுமையாக எதிர்த்துக் கொண்டே இருக்கலாம்..
  ( ஏனென்றால் அந்த நிலை தானே உங்களுக்கு
  திருப்தி அளிக்கிறது… !!!)

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  .
  ……………………………………

  • bandhu சொல்கிறார்:

   என் நிலை அதே தான் சார். இதில் எந்த கட்சி, மத்திய அரசு மாநில அரசு என்பதற்கெல்லாம் நான் வரவில்லை. ஒரு பதவிக்கு கொடுக்கவேண்டிய மதிப்பு / பாதுகாப்பு பற்றியது தான் என் பார்வை. அதில் எந்த compromise -சும் கூடாது என்பதே என் நிலை.

 4. Raghavendra சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார், நீங்கள் எவ்வளவு தான் சொன்னாலும்,
  பந்து தன் நிலையிலிருந்து மாற மாட்டார். பலர் இப்படித்தான்
  வறட்டுத்தனமாக ஆபத்து ஆபத்து என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
  பஞ்சாபுக்கு போயே தீர வேண்டுமென்று பிடிவாதம் ஏன் ?
  அங்கே விவசாயிகள் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது
  மத்திய ஏஜென்சிகளுக்கு தெரியாதா ? போராட்டங்களுக்கிடையே
  போய் விட்டு, பாதியில் திரும்பி, பஞ்சாப் அரசை ஏசினால் எப்படி ?

  • bandhu சொல்கிறார்:

   இன்னமும் என் நிலை இது தான். யாராவது போராடினால் அங்கு எதற்கு போகவேண்டும் என்றால், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை தான். இதைத்தான் Anarchy என்கிறேன்!

  • கந்தவேல் சொல்கிறார்:

   இந்திராகாந்தியின் மரணம் எவ்வாறு ,யாரால் என்பது மறக்க பட்டுவிட்டது துரதிர்ஷ்டமே ?
   இது போன்ற வாக்குவாதங்கள் தேவையில்லாமல் பிஜேபி க்கு தான் பலம் சேர்க்கும். ஏனெனில் வழக்கம் போல நமது அறிவுஜீவிகள் , பிரதமரை கலாய்க்கிறேன் என்று, நமது தேசத்தையும் ,ராணுவத்தையும் ககொச்சை படுத்த ஆரம்பித்து விடுவார்கள் . பாகிஸ்தானுக்கும் ,சீனாவுக்கும் சாமரம் வீச தொடங்க ஆரம்பித்துவிடுவார்கள் .
   இதில் குழப்பம் அடைய போவது, பெரும்பான்மையான நடுநிலையாளர்களே .
   அவர்களை வழக்கம் போல இது போன்ற தேச துரோக கருத்துக்கள் மூலம், பிஜேபியை நோக்கி நகர்த்துவோம். பிஜேபி யின் மிக பெரிய பலமே, இது போன்ற தேச துரோக கருத்துக்களை அள்ளி வீசும் சாமானியர்கள் தான் .அவர்களும் என்ன தான் செய்வது, பிரதமரையும், பிஜேபியையும் கலாய்க்க , அவர்களின் ஒரே வழி , நமது ராணுவத்தை விமரிசிப்பதே ….வேறு வழி இல்லாதது அவர்களின் துரதிர்ஷ்டமே ….

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கந்தவேல்,

  ஏன் முட்டாள்தனமாக பின்னூட்டம் எழுதுகிறீர்கள்….?

  உங்கள் பின்னூட்டத்தை இன்னொரு முறை நீங்களே
  படித்துப் பாருங்கள்… அறிவுபூர்வமாக எதுவும் அதில்
  இருக்கிறதா…?

  // பிஜேபி யின் மிக பெரிய பலமே, இது போன்ற தேச துரோக கருத்துக்களை
  அள்ளி வீசும் சாமானியர்கள் தான் .//

  இங்கே தேசதுரோகம் என்று வர்ணிக்கப்பட எதாவது வாக்கியங்கள்
  இருந்தால் எடுத்துக் காட்டுங்கள் பார்ப்போம்…

  // பிரதமரையும், பிஜேபியையும் கலாய்க்க , அவர்களின் ஒரே வழி ,
  நமது ராணுவத்தை விமரிசிப்பதே ….//
  உங்கள் முட்டாள்தனத்தின் உச்சகட்டத்தை இது வெளிப்படுத்துகிறது.

  இந்த இடுகை இந்திய ராணுவத்தின் தியாகத்தையும், வீரத்தையும்
  பாராட்டி , அவர்களுக்கு “சல்யூட்” சொல்லும் இடுகை.
  இங்கே நீங்கள் கூறுவது போல் ராணுவம் குறித்த விமரிசனம் எங்கே….?

  பாஜக-வில் பல புத்திசாலிகள், சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள்.
  ஆனால், துரதிருஷ்டவசமாக உங்களைப் போன்றவர்களும்
  பலர் இருக்கிறார்கள்.
  உங்களைப் போன்றவர்களின் முக்கிய பணி என்று நீங்கள் நினைத்துக் கொண்டு செயல்படுவது , பாஜகவைக் குறித்து யாராவது விமரிசனம்
  செய்தால் உடனே அவர்களுக்கு தேசத்துரோகி பட்டம் கொடுப்பது.

  இந்த தேச விடுதலைக்காக, தனது சொத்துகளையும், இளமையையும்,
  குடும்ப வாழ்வையும், தியாகம் செய்த சுதந்திரப்போராட்ட வீரர்
  ஒருவரின் மகன் நான்.

  40 ஆண்டுகள் இந்தியாவின் பாதுகாப்புத்துறையில் பணி புரிந்தவன்.

  உங்களைப் போன்றவர்களிடமிருந்து எனக்கு எந்தவித சர்டிபிகேட்டும்
  தேவையில்லை…. விமரிசிப்பவர்களை எல்லாம் தேசத்துரோகிகள்
  என்று உளறுவதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள்…

  பாஜகவில் பெரும்பாலானோர் உங்களைப்போன்றே இருப்பதால் தான்,
  மனசாட்சி உள்ளவர்களால் பாஜகவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை;

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • கந்தவேல் சொல்கிறார்:

   ஐயா,
   எனது பதிவை, வெறும் இந்த இடுக்கைக்கான பதில் என்றும் நீங்கள் கணித்தது துரதிர்ஷ்டமே ?
   பிஜேபியை விமரிசைப்பவர்களை பல தளங்களில் நான் கண்டிருக்கிறேன். சமீபத்தில் ஒரு ராணுவ உயரதிகாரி விபத்தில் இறந்ததற்கு , பிஜேபியின் நாடகம் என்று விமரிசித்தார்கள்.
   பல ராணுவ வீரர்கள் “PALKOT” தாக்குதலின் போது உயிர்த்தியாகம் செய்ததையும் , இந்திய அரசின் நாடகம் என்று பதிவிட்டார்கள் .இந்த இடுகையிலேயே ‘TAMIL” என்பவர் , பிரதமரின் பயணத்தை கொச்சையாக சம்பந்தமே இல்லாமல் விமரிசிக்கிறார். நாம் வேடிக்கை தான் பார்க்கிறோம் . எனது பதிவை கண்டு திடீரென்று பொங்குவதில் அர்த்தம் இல்லை .உண்மையில் பிஜேபியை துரத்த வேண்டுமானால் அவர்களின் ஊழலை வெளிக்கொணரவேண்டும்.
   பிரதமர் சேர்த்து வைத்துள்ள 1000 கணக்கான ஊழல் பணத்தையும் , அவர் தம் குடுமபத்தினர் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களையும் வெளிப்படுத்த வேண்டும் .அதை விட்டுவிட்டு சிறுபிள்ளை தனமாக அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் , கொச்சை படுத்தி அதிலேயே இன்புற்றுக்கொண்டிருந்தால் , எதிர் கட்சியினரின் நிலை அந்தோ பரிதாபம் தான்.

   • Tamil சொல்கிறார்:

    மோடி அவர்கள் தனிப்பட்ட முறையில் ஊழல் செய்து வைத்திருக்கிறார் என்று நான் சொல்லவில்லை.

    அவருடைய ஆனால் அவரின் நேர்மையற்ற ஆட்சி பல லட்சம் கோடி இழப்பை இந்த தேசத்தின் ஏழைகளுக்கு தந்திருக்கிறது.

    2014இல் மோடி வரவேண்டுமென்று விரும்பிய, வாக்கு கேட்டு அவர்களில் நானும் ஒருவன்.

    ஆட்சியை தொடங்கிய முதல் வாரத்தில் பிரமித்துப் போனேன் ஆனால் முதல் மாதத்திலேயே தெளிவாக என்னுடைய நண்பர்களிடம் சொன்னேன் இவருடைய ஆட்சி இவர் ஆட்சிக் கட்டில் 8 விளங்குகின்ற போது இந்தியாவை ஒரு மோசமான இடத்தில் கொண்டு சென்று வைத்திருக்கும் என்றும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது அன்று என்னோடு முரண்பட்ட அனைத்து நண்பர்களும் இன்று என்னோடு ஒத்துப் போகிறார்கள் என்பது காலத்தின் கோலம்.

    அதற்கு ஒரு சில உதாரணங்களை இங்கே தருகிறேன். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் பல மணி நேரம் என்னால் தரவுகளோடு பேச முடியும் அப்படி நான் பேச ஆரம்பித்தால் மோடி மட்டுமல்ல இந்த தேசத்தின் உடைய உச்சநீதிமன்றத்தின் அவலங்களையும் வீதியிலே சந்தி சிரிக்க வைக்க முடியும். (அப்படிப்பட்ட நேரம் வரவேண்டும் என்று நீங்கள் கடவுள் நம்பிக்கையாளராக இருந்தால் கடவுள் எனக்கு வழங்க வேண்டும் என்றும் கடவுள் மறுப்பாளராக இருந்தால் இயற்கை எனக்கு தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்)

    1) இந்திய டெலிகாம் நிறுவனங்கள் மீது சுமத்தப்பட்ட 1.7 லட்சம் கோடி AGR
    – இதனால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்படப்போவது இந்த தேசத்தில் இருக்கின்ற ஒவ்வொரு மனிதனும் ஆவான்
    2) பல நிறுவனங்களை தன்னுடைய நண்பர்களுக்கு தாரை வார்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக நேர்மையற்ற முறையில் அவற்றை மடை மாற்றம் செய்தது.
    உதாரணங்கள் :
    2.1)DHFL – 50,000 crore. இதுவே 40 ஆயிரம் கோடிக்கு மேல் இழந்தவன் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சாமானியன்
    2.2) LVB bank – 20k crore
    இது போன்று எண்ணற்ற நிறுவனங்களை திவாலாக்கிய அவற்றை அவர்களுடைய நண்பர்கள் வாரி வழங்கிய உத்தமர் தான் மோடி அவர்கள்.
    உடனே நேருவையும் காங்கிரசையும் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லி மோடியை புனிதராக நிரூபிக்க முயற்சிக்காதீர்கள்.

    3)
    அனில் அம்பானி அவர்களை இந்தியாவின் டாப் டென் பணக்காரர்கள் வரிசையில் இருந்து பிச்சைக்காரனாக மாற்றிய மாபெரும் சரித்திரத்திற்கு சொந்தக்காரர் மாண்புமிகு மோடி அவர்கள்.

    முகேஷ் அம்பானிக்கு உதவி செய்வதற்காக அனில் அம்பானி R-Com நிறுவனத்தின் பிரச்சனைக்கு தீர்வு வராமல் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கின்ற DoT என்ற நிறுவனத்தை நிர்வகித்து வருகின்றது மோடி அரசு. ஒரு பிரச்சனைக்கு தீர்வு ஒரு நாளில் வேண்டாம் ஒரு வாரத்தில் வேண்டாம் ஒரு மாதத்தில் வேண்டாம் ஒரு வருடத்தில் வேண்டாம் நான்கு வருடங்களாக Sep – 2017 , முதல் தரவில்லை என்றால் இப்படிப்பட்ட கேவலமான ஆட்சியை நமது மோடி அவர்கள் தந்து கொண்டிருக்கிறார்கள்.

    நம் அனைவருக்கும் வங்கிகளுக்கு பணத்தைத் திருப்பித் தராத தோல்வியடைந்த தொழிலதிபராக அனில் அம்பானியை தெரியும் ஆனால் உண்மை என்ன தெரியுமா நண்பர்களே, சாமானியனுக்கு உதவுகின்ற வகையில் தனது திட்டங்களை செயல்படுகின்ற தொழிலதிபர், இந்திய தேசத்தின் உடைய ஒருவகையில் டாடாவை விட சிறந்த சேவைகளை தருகின்ற தொழிலதிபர் அனில் அம்பானி. அவர் தனது அண்ணன் முகேஷை போன்று பணம் பணம் என்று திரிகின்ற பணப் பைத்தியம் பிடித்தது மனிதர் அல்ல. பெற்ற தாயை கூட நம்பாத மனிதர் முகேஷ் அம்பானி ஆனால் அவருடைய இலவல் அணில் அம்பானி இந்த தேசம் நினைவில் வைத்துப் போற்ற வேண்டிய ஒரு தொழிலதிபர். அவர் அத்தனை தடைகளையும் கடந்து நாளை தனது தனித்துவத்தை நிரூபிப்பார் என்று நான் நம்புகிறேன்.

    இவற்றை அனைத்தையும் நான் வெறும் பேச்சுக்காக சொல்லவில்லை தரவுகளின் அடிப்படையில் சொல்கிறேன்.

    உதாரணத்திற்கு :
    அனில் அம்பானி தலைமையில் இயங்குகின்ற R-Power நமக்கு தயாரித்து விளங்குகின்ற ஒரு கிலோ வாட் மின்சாரத்தை விலை ஒரு ரூபாய் இருபத்தி ஏழு பைசா. நமக்கு மோடியும் ஸ்டாலினும் அதை இலவசமாகத் தரலாம். ஆனால் அவர்களால் இதை ஒரு ரூபாய் 27 பைசாவுக்கு வேண்டாம் மூன்று ரூபாய்க்கு தயாரிக்க முடியுமா?

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கந்தவேல்,

  மீண்டும் அபத்தமான ஒரு பின்னூட்டம்.

  எங்கோ, யாரோ – எழுதினால் – அதற்கு இங்கே பதிலா….?
  உங்கள் குப்பையை அங்கே போய் கொட்டுங்கள்.

  பொருத்தமற்ற, பொறுப்பற்ற உங்களின் இது போன்ற
  பின்னூட்டங்களை இனிமேலும் இங்கே அனுமதிப்பதாக இல்லை.

  நேர்மையாக, இடுகைக்கு சம்பந்தமுள்ளதாக நீங்கள்
  எதாவது கூற விரும்பினால் மட்டும் இங்கே எழுதுங்கள்…

  வேறு மாதிரி உளறல்கள் இங்கே வந்தால் இனி அவை இடம் பெறாது
  என்பதையும் உணருங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.