சொரணையற்ற ஒரு கூட்டத்திற்கு வேறு என்ன கிடைக்கும்……???

….

உலக அளவில் – 2021ஆம் ஆண்டில்,
டாப் 10 சதவீதத்தினர் 52% வருமானத்தையும்,
40 சதவீத நடுத்தர மக்கள் 39.5% வருமானத்தையும்,

மீதமுள்ள 50 சதவீத மக்கள்
வெறும் 8.5% வருமானத்தையும் ஈட்டுகின்றனர் – என்று
பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் எழுதிய சமீபத்திய
ஆய்வு அறிக்கைகளிலிருந்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன…


……

அதிலிருந்து இந்தியா சம்பந்தப்பட்ட சில தகவல்கள் கீழே –

இந்தியாவின் டாப் 10 சதவீத மக்கள் மற்றும்
அடிமட்டத்தில் உள்ள 50 சதவீத மக்களுக்கு மத்தியில்
உள்ள வருமான இடைவெளி 22 மடங்காக இருக்கிறது.

டாப் ஒரு சதவீதத்தினரின் வருமானத்தை –
50 சதவீத அடித்தட்டு மக்களின் சராசரி வருமானத்தோடு,
ஒப்பிட்டால், இதே இடைவெளி – 80 மடங்காக உள்ளது.

இந்தியாவின் 50 சதவீத மக்கள் ஒட்டுமொத்த தேசிய
வருமானத்தில் வெறும் 13.1% மட்டுமே ஈட்டுகின்றனர்.

ஆனால், டாப் ஒரு சதவீத மக்கள் இந்தியாவின்
ஒட்டுமொத்த தேசிய வருமானத்தில்
21.7% -ஐ எடுத்துக் கொள்கின்றனர்….

அடித்தட்டில் உள்ள 50 சதவீத மக்கள் ஆண்டுக்கு சுமார்
ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும்,

நடுத்தர 40 சதவீத மக்கள் ஆண்டுக்கு சுமார் 4 லட்சத்து
70 ஆயிரம் ரூபாயும் ஈட்டுகின்றனர்.

மொத்தமாக அள்ளுவதெல்லாம்,
எஞ்சிய 10% டாப் பணக்காரர்களே…!!

  • டாப் ஒரு சதவீதத்தினர் மட்டுமே இந்தியாவின்
    ஒட்டுமொத்த வளத்தில் 33% வைத்துள்ளனர்.
  • இன்னமும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் –
    டாப் 10 சதவீத மக்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த
    வளத்தில் 64.6% வளத்தை தங்கள் வசம் வைத்துள்ளனர்.

டாப் 10 சதவீத இந்தியர்களின் வளம் மெல்ல மெல்ல
அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதற்கு நேர்மாறாக
அடித்தட்டில் உள்ள மக்களின் வளமும், வருமானமும்
கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது ….

அதாவது பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகிக்
கொண்டே போகிறார்கள்… நடுத்தர மக்களும், ஏழைகளும் –
மேலும் மேலும் ஏழைகளாகிக் கொண்டே போகிறர்கள்…

அத்தனையும் – அரசின் பார்வையிலும், ஆசிர்வாதத்துடனும், ஒத்துழைப்புடனும் நடந்து கொண்டிருக்கிறது….

பெரும் செல்வந்தர்கள் வசதியும், வளமும், வாய்ப்புமாக
இருந்தால் தான், நாடு வளர்ச்சியடையும் என்பதே
அரசின் அறிவிக்கப்பட்ட கொள்கையாக இருந்தால் …
நிலைமை பின் வேறு எப்படி இருக்கும்….???

” குடி உயரக்கோல் உயரும்,
கோல் உயரக் கோன் உயர்வான் “

  • என்று சொன்ன ஒளவையாரின் வாக்குக்கு நேரெதிராக –

செல்வந்தர்கள் உயர்ந்தால் தான், நாடு உயரும் என்பது
இப்போது நம் நாட்டின் கொள்கையாகி விட்டது ….!!!

நம்மைப் போன்ற சொரணையற்ற ஒரு கூட்டத்திற்கு
எந்த கொள்கையும் ஏற்ற கொள்கை தானே ….?

.

……………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to சொரணையற்ற ஒரு கூட்டத்திற்கு வேறு என்ன கிடைக்கும்……???

  1. Tamil சொல்கிறார்:

    My view is that

    Middle class is paying from 10% to 45% tax on average more than 20% tax on their income.
    Upper middle class is paying tax from 33% to 50% on average more than 40% tax on their income.

    these two are the one we are considering as 40% in this article.

    now lower class is also paying tax up to 10%. but issue is that higher class is not paying tax to their income and they are saving most of their money as assets.

    these are not guesstimate but actual truth based on the data released by Income tax department.

  2. புதியவன் சொல்கிறார்:

    விதிவிலக்குகளை விட்டுவிட்டு, இந்தத் தரவுகளை ஆராய்ந்தால், தொழில் செய்பவர்கள் பணக்காரர்களாக ஆகிறார்கள். பணம் வர ஆரம்பித்தவுடனேயே அவர்களும் தகிடுதத்தங்கள் செய்து அரசியல்வாதிகள் மூலமாக இன்னும் பணக்காரர்கள் ஆகின்றனர். இதை ஏதோ அம்பானி, அதானி கதைபோன்று நினைக்கவேண்டியதில்லை. இவர்கள் எல்லோரும் ஆரம்பத்தில் டீக்கு சிங்கியடித்துக்கொண்டிருந்தவர்கள்தாம், டிக்கெட்டுக்கும் காசு இல்லாமல் பிச்சைக்காரர்களாக இருந்தவர்கள்தாம். பின் எப்படி இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்துக்கு அதிபதிகளாக முடிந்தது? ஆரம்ப ஸ்மார்ட்னெஸ், ஏமாற்று, அரசியல் அதிகாரம் இவைகளின் உதவியால்தான். பணம் வர ஆரம்பித்ததும், வந்த பணமே இன்னும் விளைச்சலைக் கொடுக்கும். இவர்கள் நீங்கள் சொல்லும் பத்து சதவிகிதத்தினர்.

    அடுத்த லேயர், மத்தியதரவகுப்பினர். அவர்கள் பெரும்பாலும் இன்னொருவர் கம்பெனியில் வேலைபார்ப்பவர்கள், படித்தவர்கள், சிறு தொழில் செய்பவர்கள். இவர்களில் அறிவுஜீவிகளான அதிகாரிகள் நினைத்தால் மட்டும் நாட்டின் நிலையை உயர்த்தமுடியும். அவ்வாறு முனைவர்களும் குறைவே.

    இதற்கு அடுத்த லேயரில் உள்ள 50 சதம், மிகச் சாதாரண வேலை, படிப்பின்மை, உழைப்பின்மை, பொழுதைப் போக்குவது, அடுத்த லேயருக்குச் செல்ல ஆசையின்மை என்ற குணங்களால் நிரம்பப்பெற்றவர்கள். இருப்பதைக்கொண்டு வாழ்க்கையை ஓட்டும் இவர்களால், நாட்டை வேறு தளத்திற்கு எடுத்துச்செல்ல முடியாது. அதனால்தான் இவர்கள் வாக்குவங்கிகளாகவும், ஏமாற்றக்கூடியவர்களாகவும் நாட்டை ஆளும் அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. இவர்களும் அரசாங்கம் கொடுக்கும் பொங்கல் பரிசு, ரேஷன் கார்டுக்குள்ள பணம், சாதி, மதம் இவைகளைக்கொண்டு சந்தோஷமடைந்துவிடுகிறார்கள். இந்த நிலை மாறாது.

    சாதாரண ஸ்டார்ட் அப் கம்பெனிகள் ஆரம்பித்தவர்கள் இரண்டாவது லேயரிலிருந்து சட்னு முதல் லேயருக்குச் செல்லத் தலைப்படுகின்றனர். இது ஏதோ அரசாங்கக் கொள்கை என்று நினைத்தால் அது தவறு. யாரோ ஒரு தேவதூதன் இவர்கள் வாழ்வில் வந்து இவர்களை முதல் 10 சதத்திற்குத் தள்ளவில்லை. இவர்கள் உழைப்பு, தகிடுதத்தம்…. எட்செட்ரா எட்செட்ரா.

    தமிழகத்தில் பணக்காரர்கள் என்று கண்ணுக்குத் தெரியும் நூறு பேரை (ஏன் ஐநூறு பேரை) எடுத்துக்கொள்ளுங்கள். இவர்களது ஆரம்பகாலம் இரண்டாவது அல்லது மூன்றாவது லேயரில்தான் இருந்தது என்பது நமக்குத் தெரியும். அதனால் அரசாங்கத்தைக் குறை சொல்லுவதைவிட, அந்த அந்த மக்களின் உழைப்பு, அறிவு, ஸ்மார்ட்னெஸ் அதுவும் தவிர அவர்களின் லக் இவைகளைத்தான் நாம் எண்ணிப்பார்க்கணும்.

    • mekaviraj சொல்கிறார்:

      புதியவன்,

      (இதற்கு அடுத்த லேயரில் உள்ள 50 சதம், மிகச் சாதாரண வேலை, படிப்பின்மை, உழைப்பின்மை, பொழுதைப் போக்குவது, அடுத்த லேயருக்குச் செல்ல ஆசையின்மை என்ற குணங்களால் நிரம்பப்பெற்றவர்கள். )
      என்ன ஒரு சிந்தனை. உங்க மூளை பிதுங்கி வழியுதுன்னு நினைக்கிறேன்.

    • Tamil சொல்கிறார்:

      அரசாங்கத்தினுடைய அனைவருக்கும் சமமான ஒரு வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்.

      தாங்கள் விரும்புகின்ற வகையில் மக்களை பல அடுக்குகளாக பிரித்துக் கொண்டு சிந்திப்போம்.

      அப்படி செய்கையில் ஒவ்வொரு மக்களும் தங்களுடைய தரத்தை மேம் படுத்திக் கொள்வார்கள் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு செல்ல முற்படுவார்கள் அப்போது வருகின்ற இளைஞர்களையும் தடைகளையும் அரசாங்கம் சரி செய்து கொடுக்க வேண்டும்

      உதாரணத்திற்கு பொருளாதார அடிப்படையில் உற்று நோக்கினார்கள் என்று சொன்னால்,
      “முதல் மட்டத்தில் இருப்பவனுக்கு அவனுடைய தேவை உண்ண உணவு இருக்க இடம் உடுக்க உடை”

      அவனுக்கு இவன் இவை மூன்றையும் மட்டும் மாதம் தோறும் கொடுத்தீர்கள் என்று சொன்னால் அவன் அதே இடத்தில் தான் இருப்பான்.

      அல்லது அவனுக்கு இந்த மூன்றுக்கும் தேவையான பணத்தை எப்படி சம்பாதிப்பது என்பதை சொல்லி கொடுத்தீர்கள் என்றால் அல்லது அதற்குரிய நிலையை ஏற்படுத்திக் கொடுத்தீர்கள் என்று சொன்னாள் அவன் அந்த நிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்வான்.

      அல்லது இவை இரண்டையும் செய்யலாம்.

      ஆனால் நமது அரசுகள் அவர்களை அதே இடத்தில் வைப்பது மட்டுமல்ல, அவன் அந்த இடத்திலேயே இருந்து மேலே எழும்ப வேண்டும் என்று நினைத்தால் அவனுடைய காலை பிடித்து இழுத்து அவனை மீண்டும் அதே நிலையில் வைக்கின்ற வகையில் தான் செயற்படுகின்றனர்.

      உதாரணத்துக்கு தமிழகத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

      நாம் யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு கொடுக்கிறோம்? 2.15 கோடி குடும்பங்கள்.

      அத்தனை ஏழைகளா அல்லது தமிழ்நாடு அரசு பல லட்சம் கோடி ரூபாயை வருடந்தோறும் உபரியாக சேமித்து கொண்டிருக்கிறதா?

      நீங்கள் சொல்லலாம் அதனாலென்ன 1,200 கோடி என்று இப்படித்தான் ஒவ்வொரு திட்டங்களும் இதுதான் நமது அரசுகளும் அதைத் தலைமை பொறுப்பேற்று நடத்துகின்றன தலைவர்களின் உடைய செயல் திறனும்.

      பயிர்க்கடன் என்ற அடிப்படையில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது அவற்றில் எத்தனை விவசாயத்துக்காக பெறப்பட்ட கடன் எத்தனை விவசாயிகளால் பெறப்பட்ட கடன்?

      என்ன நடக்கிறது இருக்கின்ற பொருளாதாரத்தைக் கொண்டு , ஒவ்வொரு அடுக்கு மக்களை மேம்படுத்துவதை விட்டுவிட்டு அவற்றை தாங்கள் இருக்கின்ற அடிப்படையில் பிரித்து சுகபோகமாக இருப்போம் என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கிறோம்.

      குறிப்பு: இவர் இலவசங்களுக்கு எதிரானவர் என்று நினைத்துவிடாதீர்கள் இலவசம் வேண்டும் அது யாருக்கு என்பதில் தான் நான் முரண்படுகிறேன். எது இலவசமாக இருக்க வேண்டும் யாருக்கு இருக்க வேண்டும் இவற்றில்தான் உடன்படுகிறேன் முரண் படுகிறேன்

  3. Tamil சொல்கிறார்:

    //இதற்கு அடுத்த லேயரில் உள்ள 50 சதம், மிகச் சாதாரண வேலை, படிப்பின்மை, உழைப்பின்மை, பொழுதைப் போக்குவது, அடுத்த லேயருக்குச் செல்ல ஆசையின்மை என்ற குணங்களால் நிரம்பப்பெற்றவர்கள். //

    உண்மையாகக் கூட இருக்கலாம், அதற்கு காரணம் நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன தலைவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    நீங்கள் சொல்கின்ற மேல்மட்டத்தில் இருப்பவனும் அப்படித்தான் இருந்திருப்பான் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால், ஆனால் அவனுக்கு வாய்ப்பும் ஆதரவு இருந்தது போல் கீழே இருப்பவனுக்கு இருப்பதில்லை.

    நீங்கள் பிறக்கின்ற போது உங்களுக்கு ஒரு மொழி எப்படி தெரியாதது போல் கீழே இருப்பவனுக்கு என்ன செய்யவேண்டும் என்கின்ற அடிப்படை தெரியாது, அதனை சீர் செய்ய வேண்டியது நாம் தேர்ந்தெடுத்து இருக்கின்ற அரசாங்கங்கள் ஆனால் அவைகள் அவற்றைத் தங்களுடைய அட்வண்டேஜ் ஆஃ எடுத்துக்கொண்டு அவர்களை மீண்டும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.