…

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும்,
திமுக தலைவருமான மறைந்த அறிஞர் அண்ணா அவர்களின்
திருமணப்பத்திரிகையின் பிரதி ஒன்று காணக் கிடைத்தது…..!!!
அண்ணா’விற்கு அவரது 21-வது வயதில், 1930-ல்
ராணியம்மாளுடன் திருமணம் நடந்திருக்கிறது….
அண்ணா’வின் சிறுவயதிலேயே, அவரது தந்தை இறந்து
விட்டதால், அவரது மாமன் பொறுப்பிலேயே திருமணம்
நடந்திருக்கிறது…. திருமண அழைப்பிதழும் அவரது மாமன்
பெயரிலேயே அச்சடிக்கப்பட்டிருக்கிறது…
இந்தப் பத்திரிகையைப் பார்த்தபோது, எனக்கு மிகவும்
சிரிப்பு வந்தது… ஜாதி, மத எதிர்ப்பாளரும் – சம்ஸ்கிருதத்தை, அதன் ஆதிக்கத்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவரும் –
மிகப்பெரிய அளவில் சுயமரியாதை இயக்கத்தை
தலைமை தாங்கி இயக்கியவருமான அண்ணா’வின்
திருமணப் பத்திரிகையில், அவரது பெயர் –
“சிரஞ்சீவி” ….. அண்ணாதுரை …. “முதலியார்”
என்று எழுதப்பட்டிருக்கிறது…
சம்ஸ்கிருத எதிர்ப்பாளரான அண்ணாவின் திருமணப்
பத்திரிகையில், ஏகப்பட்ட சம்ஸ்கிருத வார்த்தைகள்
(“சிரஞ்சீவி “, ஸ்ரீ ராமஜெயம் … etc. ),
– “ஔபாசனம்” போன்ற சடங்குகள்
எல்லாம் வருகின்றன….
அந்த வயதில் –
- அண்ணாவிற்கு தீவிரமான சுயமரியாதை
சிந்தனைகள் உருவாகவில்லையா அல்லது
- தனது திருமணப்பத்திரிகையின் வாசகங்களை
தீர்மானிக்கும் அளவுக்கு அவருக்கு அப்போது சுதந்திரம்
இல்லையா …? - என்பது தெரியவில்லை….
குறை எதுவும் காணும் நோக்கில் நான் இந்த இடுகையை
எழுதவில்லை…
பிற்காலத்தில், மிகப்பெரிய சுயமரியாதை இயக்கத்தை இயக்கிய
ஒரு தலைவரின் திருமணப் பத்திரிகையில் இத்தகைய
வாசகங்களைப் பார்த்தது எனக்கு சிரிப்பை வரவழைத்தது….
எல்லாம் காலம் செய்யும் கோலம் –
அது 1930 ….
இது 2022 … !!!
எனக்கேற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே
இந்த இடுகை…. கீழே திருமணப் பத்திரிகையின் நகல்….
………………..

.
……………………………………………
1930 இல் அண்ணாவிற்கு தீவிரமான சுயமரியாதை சிந்தனைகள் உருவாகவில்லை என்பதுதான் சரியாக இருக்கும் காரணம் பெரியார் அவர்கள் 1925 இல் காங்கிரசை விட்டு விலகி சுயமரியாதை மற்றும் கடவுள் மறுப்பு சாதி மறுப்பு போன்றவற்றைப் பேசிக்கொண்டிருக்கிறார் , அண்ணா அவர்கள் பெரியார் அவர்களை சந்தித்தது 1934.
அல்லது நாளை நாம் எடுக்கப்போகும் சித்தாந்தத்தை இது கேள்விக்குள்ளாக்கும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டுமென்று அவருக்கு தோன்றாமல் இருந்திருக்கலாம்.
காவிரிமைந்தன் ஐயா அவர்களே,
இன்று கூட இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத தமிழக முதல்வர் அவர்கள் மனைவி இந்து கோவில் கோவிலாக சென்று அவருக்காக வேண்டி கொண்டு இருக்கிறார்.
யாராவது கேட்டால் அது அவருக்கு நான் பெரியார் அவர்களுடைய வழியில் கொடுக்கின்ற சுதந்திரம் என்று நமது கணவர் மேடைகளிலே மார்தட்டி கொள்வார் , என்பது போல
கொள்கை வேறு நடைமுறை வாழ்க்கை வேறு என்று அண்ணா இருந்து விட்டாரோ என்று ஒரு கணம் யோசித்து நீங்கள் அவரை தவறாக புரிந்துகொள்ளக்கூடாது.