….

மத்திய அரசையும், தலைமையையும் கடுமையாக
விமரிசித்துக் கொண்டிருக்கிறார் – மத்திய அரசின் கீழ்
பணி புரியும் ஒரு மாநில கவர்னர்….
அவரை மேலிடம் ஏன், எப்படி இன்னமும் பொறுத்துக் கொண்டிருக்கிறது…?
உள்துறை அமைச்சகத்திலிருந்து, ஜனாதிபதி அவர்களுக்கு
ஒரு கடிதம் போனால் போதும்…
அரை மணி நேரத்தில், இவர் மூட்டை முடிச்சுகளுடன் ஊர் திரும்ப
வேண்டியிருக்கும்….
அது ஏன் இன்னும் நடக்கவில்லை…..?
கீழே – மேகாலயா கவர்னர் திரு.சத்யபால் மாலிக்
அவர்களைக் குறித்த பிபிசி வலைத்தளத்தின் காணொலி –
….
.
………………………………………………………………………………………………………………………………………..
உண்மையிலேயே புரியாத புதிர். அவருடைய பின்புலமும் அபாயகரமானதாக தெரியவில்லை.
மேலும் அவர் எந்த இடத்திலும் கவர்னராக ஒரு சில வருடங்களுக்கு மேல் முழுவதும் பணியாற்றியது போன்று தெரியவில்லை. மாற்றப்பட்டு கொண்டே இருந்திருக்கிறார்.
எனவே ஏதோ மர்மம் இருக்கிறது.
தமிழ்,
இது – உங்கள் அனைத்து மறுமொழிகளுக்கும் சேர்த்து –
இடுகைகள் அனைத்தையும் ஆழ்ந்து
படிக்கிறீர்கள்… உங்கள் கருத்தை –
(அது சரியாகவும் இருக்கலாம் – தவறாகவும்
இருக்கலாம்…)
-தெளிவாகச் சொல்கிறீர்கள்.
தொடர்ந்து உங்கள் கருத்தை இங்கே
பின்னூட்டங்களின் மூலம் தெரிவித்து வாருங்கள்;
நல்ல, தெளிவான பின்னூட்டங்களின் மூலம்
நமது வாசகர்களும், வித்தியாசமான கோணங்களில்
சிந்திக்க அது உதவும்.
அதே சமயம், ஒரு எச்சரிக்கை.
எப்போது, யாருக்கு – “தேசத்துரோகி” பட்டம்
கொடுக்கலாமென்று ஒரு கூட்டம் அலைந்து
கொண்டிருக்கிறது… அவர்களுக்கு வாய்ப்பை
ஏற்படுத்திக் கொடுத்து விடாதீர்கள்…!!! 🙂 🙂 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்