…
இன்று காலை தமிழக சட்டமன்ற கூட்டத்தை துவக்கி வைத்து
பேசிய கவர்னர் அவர்கள், முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களை
எக்கச்சக்கமாக புகழ்ந்து பேசியிருப்பதாக, திமுக ஆதரவு
செய்தித் தளங்கள் பெரிய அளவில் செய்தி போட்டுள்ளன….
முதலில் செய்தியிலிருந்து கொஞ்சம் –
……………………..

……..

………………….

…………………………………………………………………………………………………………………………………………
இந்த உரையை பெரிதுபடுத்தி திமுக தளங்கள்
விளம்பரப்படுத்துவது ஒரு இயல்பான சந்தேகத்தை
எழுப்புகிறது.
சாதாரணமாக, கவர்னர் உரையை, அரசு தான் தயாரித்துக்
கொடுக்கும்…. அந்த உரை, தமிழக அரசின் கேபினட்டின்
ஒப்புதலைப் பெற்ற பின்னர் கவர்னருக்கு அனுப்பப்படும்.
அந்த உரையைத் தான் கவர்னர் சட்டமன்றத்தில்,
தனது உரையாக படிப்பார்…..
மேற்படி உரை விளம்பரங்கள் மூலம், திரு.ஸ்டாலின் அவர்களை ஆளுனர் அவர்கள் எக்கச்சக்கமாக தனிப்பட்ட முறையில்
பாராட்டுவது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.
முதல்வரைப் புகழ்ந்து வரும் வாசகங்கள், அரசு தயாரித்துக்
கொடுக்கப்பட்ட உரையிலேயே இருந்ததா …. அதாவது
தன்னைப் புகழ்ந்து எழுதப்பட்ட உரைகளை, அரசே தயாரித்து
அளித்து கவர்னர் உரையில் படிக்க அனுப்பப்பட்டதா அல்லது
கவர்னர் தனது சொந்த உரையாக அதைச் சொன்னாரா….?
ஏனென்றால், (பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ) கவர்னர்
தாமாகவே முன்வந்து தனிப்பட்ட முறையில் திரு.ஸ்டாலினை பாராட்டினார் என்பதற்கும்,
தமிழக அரசு தயாரித்து கொடுக்கப்பட்டதைத்தான் படித்தார்….
என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது….
.
……………………………………………
முதல்வர் பிரதமர் ஜனாதிபதி என்று அனைவரும் தயாரித்துக் தரப்படுகின்ற உரைகளை தான் நிகழ்த்துகிறார்.
இப்படி எழுதிக் கொடுத்தால் இந்த நடிகர்கள் நன்றாக பேசுவார்கள் என்பதை அவரைச் சுற்றியுள்ளவர்கள் அறிந்து அதற்கேற்ப எழுதித் தருவார்கள்.
Tamil,
விஷயம் அது இல்லை நண்பரே…
முதல்வருக்கோ, பிரதமருக்கோ – எழுதிக் கொடுப்பவர்கள்
மற்றவர்களாக இருந்தாலும், அதில் சொல்லப்படுவது –
அவர்களது சொந்தக் கருத்தாகத் தான் இருக்கும்.
ஆனால், கவர்னரோ, ஜனாதிபதியோ பேசுவது –
இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது….
அவர்கள் உரையில் கூறுவது – அவர்களது சொந்தக் கருத்துகள் அல்ல…..
ஆளும் கட்சியின்/அரசின் கருத்துகளைத் தான்
அவர்கள் உரையில் வெளியிடுவார்கள்…
சொந்த கருத்துகளுக்கு சாதாரணமாக அதில் வாய்ப்பு இல்லை…
ஒருவேளை சொந்த கருத்துகளைச் சேர்த்தால் – அந்த கருத்துகள்
அரசை புகழ்வதாக இருந்தால், அரசுக்கு அதில் ஆட்சேபம் எதுவும்
இருக்காது….இல்லையேல் – அரசே அதை ஆட்சேபிக்கும்.
எனவே தான், இங்கே பாஜக கவர்னர் தனிப்பட்ட முறையில்
தமிழக முதல்வரை பாராட்டினாரா – அல்லது தமிழக அரசு
சொல்லச் சொன்னதைத்தான் சொன்னாரா என்கிற கேள்வி எழுகிறது…..
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
yes. dmk must answer this question.
கவர்னர் உரை என்பது அரசால் அனுப்பிவைக்கப்படும் உரை. இதில் ஆளுநர் மாற்றங்கள் செய்வதில்லை, தேசியத்துக்கு எதிராக இருந்தாலொழிய (சென்ற கவர்னர் தூங்கிவிட்டதால் தூக்கியடிக்கப்பட்டார். அதனால்தான் இப்போது மரியாதையாக ஜெய்ஹிந்த் வந்திருக்கிறது)
ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் நமக்குத் தெரியும், மத்திய அரசு எப்படிப்பட்ட போக்கைக் காண்பிக்கப்போகிறது என்று.