…

உத்திரப் பிரதேச – யோகிஜி
இதற்கும் பெருமைப்படுவாரோ…?
அடுத்த 2 மாதங்களில் மாநில சட்டமன்ற தேர்தல் வருவதால் –
தனது ஆட்சியில் பலதுறைகளிலும் முன்னேற்றங்கள்
அசுர வேகத்தில் நிகழ்ந்திருப்பதாக,
வளர்ச்சி விகிதங்கள் அதிகரித்திருப்பதாக,
மாற்றி மாற்றி டெல்லி/உ.பி. தொலைக்காட்சிகளிலும்,
மற்ற மீடியாக்களிலும் அரசு செலவில் விளம்பரங்கள்
ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் கூட –
செய்யப்படுகின்றன…யோகிஜியின் ஆட்சியில்….!
இந்த விளம்பரங்களின் மொத்தச்செலவை கூட்டிப்பார்த்தால்,
அது கூட இதுவரை வேறு யாருமே செய்யாத ஒரு சாதனையாகத்
தான் இருக்கும்… அதைக்கூட விளம்பரப்படுத்திக்கொள்ளலாம்.
இப்போது அவர்களுடைய இன்னொரு மிகப்பெரிய
சாதனை பற்றிய செய்தி அவர்கள் விரும்பாவிட்டாலும்
கடந்த திங்களன்று வெளிவந்து விட்டது.
இதற்கும் உரிய விளம்பரம் கொடுத்தால் தேவலை…!!!
யோகிஜி செய்வாரா…? நிச்சயம் செய்ய மாட்டார்….
ஒரு so called சந்நியாசியின் ஆட்சியில் உள்ள மாநிலம் –
பெண்களுக்கு எதிரான குற்றங்களில், வன்முறைகளில்,
நாட்டிலேயே முதல் இடம் வகிக்கிறது என்றால் அது
சாதனை இல்லையா….?
எனவே, யோகிஜி அரசு பணம் கொடுக்காவிட்டாலும், மீடியாக்கள்,
இதற்கான விளம்பரத்தை தாமாக முன்வந்து கொடுக்க வேண்டும்…
செய்யுமா….???
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் – 2021-ஆம் ஆண்டில்
முதல் 8 மாதங்களில், பெண்களுக்கெதிரான குற்றங்கள்
46 % அதிகரித்திருக்கின்றன…
இதில் நாட்டிலேயே அதிக பட்சமாக,
உத்திரப் பிரதேசத்தில் தான் நிகழ்ந்திருக்கின்றன –
10,084 கிரிமினல் குற்றங்கள்…!!!
இந்தியாவில், 2021-ன் முதல் 8 மாதங்களில்,
அதற்கு முந்தைய ஆண்டான 2020-ஐ விட
46 % அதிகம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
நிகழ்ந்திருப்பதாக –
தேசிய பெண்கள் கமிஷன் ( National Commission for Women ) இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது.
புள்ளிவிவரங்களின்படி, 2021, ஜனவரி முதல் ஆகஸ்டு
வரையான 8 மாதங்களில் மொத்தம் 19,953 பெண்களுக்கு
எதிரான குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
அதற்கு முந்தைய ஆண்டான 2020-ல் இதே காலகட்டத்தில்,
மொத்தம் 13,618 குற்றங்கள் தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
அதாவது புகார்கள் 46 % அதிகரித்திருக்கின்றன.
இதில் அதிக பட்சமாக, உத்திரப் பிரதேசத்தில் – 2021-ல் முதல் 8 மாதங்களில் மட்டுமே 10,084 புகார்கள் பதிவாகி இருக்கின்றன. அதாவது
மக்கள் தொகையில், நாட்டில் 16.5 சதவீதம் இருக்கும்
உத்திரப்பிரதேசம் – பெண்களுக்கெதிரான குற்றங்களில்
மட்டும் 50.7 % வகிக்கிறது.
மற்ற மாநிலங்கள் எதுவும் இதற்கு அருகில் கூட நெருங்க
முடியவில்லை ; உதாரணமாக, இதற்கு அடுத்தபடியாக,
தலைநகர் டெல்லியில் 2,147 புகார்கள் பதிவாகி இருக்கின்றன.
(தமிழ் நாட்டில் – 375 மட்டுமே…)
ஆட்சியாளர்கள் இதற்கும் பெருமைப்பட்டுக்கொள்ள,
விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டியது தானே ….?
வெட்கக்கேடு …. !!!
குற்ற உணர்வும். அவமானமும் பிடுங்கித் தின்ன வேண்டாமா…?
ஆனால், சம்பந்தப்பட்டவர்களுக்கு இதுகுறித்து,
எந்தவித குற்ற உணர்வோ, மான, ரோசமோ – எதுவும்
இருப்பதாகத் தெரியவில்லையே…!!!
.
…………………………………………….
தமிழ் நாட்டில் – 375 மட்டுமே ( மட்டுமே ?)
Ramanathan,
ஆமாம்…. அகில இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்,
தமிழகம் எத்தனையோ பாதுகாப்பானது என்று தான்
சொல்ல வேண்டும்…
இதனை பல மாநிலங்களில் வசித்த அனுபவம் உடையவன்
என்கிற முறையில் என்னால் – நிச்சயமாகச் சொல்ல முடியும்.
.
வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஈவேரா மட்டும் இல்லைனா…
Periyar is a product Tamilnadu and its culture not the other way around
பெரியார் அவர்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை;
இது தமிழ்நாட்டின் பண்பாடு சம்பந்தப்பட்ட விஷயம்.
வட இந்தியர்கள் – பெரும்பாலும் – பெண்களை (இன்றும் கூட,)
அடிமைகளாகவே வைத்துக்கொள்ள விரும்புபவர்கள்…
பெரும்பாலான பெற்றோர்கள் கூட ஆண்பிள்ளைகளுக்கு ஈடாக
பெண் குழந்தைகளை வளர்க்க விரும்புவதில்லை;
ம.பி., பீஹார், உ.பி., ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து
வந்தவர்கள் இதை சுலபமாக உணர்வார்கள்.
அடிப்படையிலேயே, தமிழகம் – தமிழர்கள் –
பெண்களைபாதுகாப்பாக வைத்துக் கொள்பவர்கள்.
இல்லத்தரசி என்கிற பொறுப்பையும், பதவியையும் கொடுத்து,
அவர்களை கௌரவமாக வைத்துக் கொள்பவர்கள்.
அம்மா, சகோதரி, மனைவி, பெண் – என்கிற வெவ்வேறு
நிலைகளில் வைத்து, அவர்களுக்கு அரணாக இருப்பவர்கள்.
எனவே தமிழர்களின் அடிப்படை பண்பே, பெண்களுக்கு
தமிழகம் பத்திரமான இடமாக இருப்பதற்கான காரணம்.
(இதில் சில விதிவிலக்குகள் இருக்கக்கூடும்…. ஆனால்
அவை விதிவிலக்குகள் மட்டும் தான் என்பதை
நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.)
அடுத்த காரணம் சட்டம் ஒழுங்கும் கூடத்தான்.
திமுகவோ, அதிமுகவோ, இரண்டு கட்சிகளுமே
பெண்கள் விஷயத்தில் அதிக அக்கறையும், மரியாதையும்
காட்டும் கட்சிகள் தான். பெண்களுக்கு கேடு விளைவிப்பவர்களை
இரண்டு கட்சிகளுமே / ஆட்சிகளுமே பொறுத்துக் கொள்வதில்லை.
மேலும், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும்
முன்னேற்றத்திற்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நமது ஒரே ஒரு திருஷ்டிப் பரிகாரம்… டாஸ்மாக்.
இதை மட்டும் ஒழித்து விட்டால், எல்லா விதங்களிலும்
தமிழ்நாடு – இந்தியாவில் முதலிடத்தில் இருக்கும்
என்பதில் சந்தேகமே இல்லை.
(எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும்…! )
இதுவே என் கருத்து….
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
யோகி ஒரு பசுந்தோல் போர்த்திய புலி.
நாளைய பிரதமர் வேட்பாளராக கூட இருக்கலாம், நாம் மோடியோடு ஒப்பிட்டு அவரை நல்லவர் என்று கூட நினைக்கலாம்