அமாவாசையும், பவுர்ணமியும் – ராகு காலமும், எம கண்டமும் – நம்மை எந்த அளவில் பாதிக்கின்றன….? – போகிற போக்கில் – (3)

பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வந்தால் அது ஒரு நாள்.
சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றி வந்தால், அது ஒரு மாதம்.
பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வந்தால், அது ஒரு வருடம்.

அடிப்படையில் நேரத்தைப் பற்றிய நம்முடைய கணிப்பு,
சூரியனைச் சுற்றி பூமியின் இயக்கம் மற்றும் பூமியைச்சுற்றி
சந்திரனின் இயக்கம் ஆகிய இரண்டு விஷயங்களைப் பொறுத்தே
இருக்கிறது.

மேலும் சூரியன் மற்றும் சந்திரனைப் பொறுத்து, அந்தந்தக் காலகட்டத்தில் பூமி இருக்கும் இடம், நம் உடல் மற்றும் மனதின் செயல்பாடுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பூமிக்கு அடிப்படைச் சக்தி கிடைப்பது சூரியனிலிருந்து தான்.
பூமி, பஞ்சபூதங்களால் ஆனது.
இந்த பூமியில் பிறக்கும் மனித உடலும் பஞ்சபூதங்களால்
ஆனது தான். உடலை விட்டு உயிர் பிரிந்த பிறகு, மீண்டும்
அந்த உடல் அந்த பூமியின் பஞ்சபூதங்களோடு இணைந்து
கரைந்து விடுகிறது.

நமது உடல் என்பதும் அந்த பூமியின் ஒரு சிறு துகள்தான்.
எனவே நமக்கும் முக்கியமாக சூரியனிலிருந்து தான் சக்தி
கிடைக்கிறது. எனவே எவ்வளவு தூரம் நம்மால் சூரியனின்
சக்தியை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பதைப் பொறுத்து
நமது சக்தி தீர்மானிக்கப்படுகிறது.

ஆகவே சூரியனைச் சுற்றிவரும் பூமியின் நகர்வு, நேரத்தைத் தீர்மானிப்பதற்கான அளவுகோலாக மட்டும் அல்லாமல்,
நாம் எவ்வளவு சக்தியுடன் இருக்கிறோம் என்பதையும்
தீர்மானிக்கிறது. ஆகவே வாழ்க்கைக்கு அடிப்படையாக
இருக்கும் இரண்டு அடிப்படை அம்சங்களான ‘நேரம்’ மற்றும்
‘சக்தி’ பெரும்பாலும் சூரியனாலேயே தீர்மானிக்கப்படுகின்றன.

இந்த உலகில் இருக்கும் அனைத்தின் மீதும் சூரியனுக்கு இருக்கும் ஆதிக்கம் மிகப் பெரியது. சந்திரனால் சூரியனைப் போல் சக்தியை வெளியிட முடியாது என்றாலும் அது பூமிக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதால் அதுவும் நம்முடைய உடல், மன அமைப்புகளின் மேல் அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இயந்திரத்தை சுழல வைத்து நாம் மின்சக்தி தயாரிக்கிறோமல்லவா … அதேபோல சந்திரன் பூமியைச் சுற்றி
வரும்போது, அந்த சுழற்சியால் இயற்கையாகவே அங்கு சக்தி உருவாகிறது. எனவே சந்திரனுடைய ஆதிக்கம் பூமியின் மேல் காந்த ஈர்ப்பு சக்தியாக இருக்கிறது.

எனவேதான் நமக்கு நடக்கும் வெளிப்புற வாழ்வை புரிந்து
கொள்ள சூரியனையும் உள்புற வாழ்வை புரிந்து கொள்ள
சந்திரனையும் பார்க்கிறோம்.

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில், சந்திரன்,
கடலில் பேரலைகளை ஏற்படுத்தி மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்குவது நமக்குத் தெரியும். அதாவது கடல் நீர் முழுதும்
அந்த இரு நாட்களில் அல்லது அதைச் சுற்றியுள்ள நாட்களில்
மேலே எழும்புகின்றன. தண்ணீர் மட்டுமல்ல, அனைத்துமே மேலெழும்புகின்றன. ஆனால் நீரில் மட்டும் அது கண்கூடாகத் தெரிகிறது.

நமது உடலில் கூட எழுபது சதவிகிதத்திற்கும் மேல் நீராக
இருப்பதால், அந்த இரு நாட்களில் நமது உடலில் இருக்கும் நீரும் வேகமாக மேலெழும்பலாம். குறிப்பாக, மூளையில்
எழுபத்தி எட்டு சதவிகிதம் நீராக இருக்கிறது. எனவே
சந்திரனின் தாக்கம் மூளையின் மேல் அதிகமாக இருக்கும். மனோரீதியாக பலவீனமான மனிதர்கள் அன்றைய தினத்தில்
மேலும் சமநிலை தவறுகிறார்கள் என்பதை நாம் நடைமுறையில்
கவனித்திருக்கிறோம்.

அதாவது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில்,
மனிதனின் மேல் சந்திரனின் தாக்கம் இருக்கும்போது,
மனிதன் எந்த தன்மையில் இருக்கிறானோ அந்த தன்மை
மேலும் சிறிது அதிகமாகிறது.

மேம்பட்ட தன்மையில் இருந்தால் மேலும் மேம்பாடு அடைகிறது. பாதிப்புத் தன்மையில் இருந்தால், அந்தப் பாதிப்பு இன்னமும் அதிகமாகிறது.

ஆனால் பாதிக்கப்படுவதை மட்டும் மனிதன் நன்றாக
உணர்கிறான். தன்மை மேம்படும்போது அது நமக்குத்
தெரிவதில்லை. ஏனென்றால் இது மனிதனின் குணம்.
நமது உடலில் ஏதாவது நன்றாக நடந்தால் அது நமது
கவனத்திற்கு வருவதில்லை. ஆனால் உடல் ஏதாவது
காயப்பட்டால் அது உடனே நம் கவனத்திற்குள் வருகிறது.

சந்திரனின் சுழற்சிகளும், உடலில் இருக்கும் உயிரியல்
சார்ந்த சுழற்சிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எனவே நமது பிறப்பின் அடிப்படையே கூட சந்திரனின் சுழற்சிக்குத் தொடர்புடையதாக இருக்கிறது. எனவே நமது உடல், மனக் கட்டமைப்பின் மீது சந்திரனுக்குள்ள
ஆதிக்கம் மறுக்க முடியாதது.

மேலே கூறப்படும் கருத்துகள் ஏற்கத்தக்கவை என்று விஞ்ஞானபூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் உணர முடிகிறது…..

ஆனால் – இதனையொட்டி, எனக்கு
இன்னொரு கேள்வி உண்டு …

ராகு காலம், எம கண்டம் இரண்டுமே தமிழ்நாட்டில்
பொதுவாக கடைபிடிக்கப்படுகின்றன…
வாரத்தில் இன்னின்ன நாட்களில் இந்த நேரத்திலிருந்து
இந்த நேரம் வரை ராகு காலம், எம கண்டம் என்று
பிரிக்கப்பட்டு, சொல்லப்பட்டு, அனுபவத்தில்
கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

பலர், எப்போது கேட்டாலும் – ராகு காலம் எப்போது,
எம கண்டம் எப்போது என்று மனப்பாடமாகச் சொல்வார்கள்.

வட நாட்டில் – ஹிந்துக்களிடம் – ராகு காலம், எமகண்டம்
பார்க்கும் இந்தப் பழக்கம் கிடையாது.

இது ஏன் தமிழ்நாட்டில் மட்டும்….?

நான் பொதுவாக இந்த விஷயத்தில் சீரியசான ஆசாமி அல்ல.
இதைப்பற்றி அதிகம் யோசிக்கக்கூடாது என்பதற்காகவே
நான் இந்த நேரங்களை நினைவில் வைத்துக் கொள்ள
முயற்சிக்கவில்லை;

இந்த ராகு காலம், எம கண்டம் என்பது எப்போது முதல்
அனுசரிக்கப்பட்டு வருகிறது….?

இந்த காலங்களில் நல்ல காரியங்களை செய்யக்கூடாது
என்று சொல்லப்படுவது ஏன் …?
அதற்கான காரணங்கள் ஏற்கத்தக்கவையா…?

இது வெறும் மத சம்பிரதாயமான சடங்கு மட்டும் தானா…?
அல்லது சந்திரன், சூரியன் போல் – அறிவுபூர்வமான,
விஞ்ஞான பூர்வமான பின்னணி எதாவது இதற்கு உண்டா….?

மத சம்பந்தமானது தான் என்றால் – வட இந்தியாவில்
உள்ள – சாஸ்திரங்களில் நம்பிக்கையுள்ள இந்துக்கள் கூட
இதை கடைபிடிப்பதில்லையே – ஏன்…?

இது குறித்து விஷயம் தெரிந்த நண்பர்கள் யாராவது
விளக்கமாக பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்…

.
………………………………………………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அமாவாசையும், பவுர்ணமியும் – ராகு காலமும், எம கண்டமும் – நம்மை எந்த அளவில் பாதிக்கின்றன….? – போகிற போக்கில் – (3)

 1. Raghuraman சொல்கிறார்:

  Sir., I read somewhere that Rahukalam is observed based on UV rays from sun. Not sure about emakandam.

  Since only few states follow solar calendar ( Tamilnduion of them), others do not follow the Rahukalam. This is my understanding. May be wrong.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இடுகைக்கு தொடர்பில்லாத – ஆனால் ஒரு அற்புத அறிவிப்பு ….
  —————————————————–

  ஆந்திர பாஜக தலைவரின் அறிவிப்பு –
  Wednesday, December 29, 2021,

  அமரவாதி: ஆந்திராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால்
  ஒரு குவார்ட்டர் மதுபாட்டில் 70 ரூபாய்க்கு
  விற்கப்படும் எனவும் , அரசுக்கு அதிக வருமானம்
  கிடைத்தால் தரமான குவார்ட்டர் பாட்டில் ஒன்றின்
  விலை 50 ரூபாயாக குறைக்கப்படும் என்றும்
  கூறி இருக்கிறார்.

  பாஜக தலைவர் பேச்சு- ஆந்திர பிரதேச பாஜக
  தலைவரான சோமுவீரராஹு பாஜக ஆட்சிக்கு வந்தால்,
  ஆந்திர மாநிலத்தில் மதுபான விலையை குறைக்கும்
  என உறுதியளித்துள்ளார். செவ்வாய்க்கிழமை ஆந்திர
  மாநிலம் விஜயவாடாவில் பிரஜா அக்ரஹா சபா”
  அதாவது மக்களின் கோபத்தை வெளிப்படுத்தும்
  கூட்டம் என்ற பெயரில் நடைபெற்ற பேரணியில்
  ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

  அப்போது தொண்டர்களிடையே உரையாற்றிய
  ராஜு பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு கோடி வாக்குகளை
  அளியுங்கள் வெறும் 70 ரூபாய்க்கு மது பானம்
  வழங்குவோம் என்றார்.

  மேலும் அரசுக்கு அதிக வருமானம் வந்தால் தரமான
  மது வெறும் 50 ரூபாய்க்கு விற்கப்படும் எனக் கூறிய
  வீரராஜு, ஆந்திர மாநிலத்தில் தற்போது 200 ரூபாய்
  வரைக்கும் மதுபானங்கள் விற்கப்பட்டு வரும்
  நிலையில் அந்த மது பாட்டில்களும் தரம் குறைவாக
  இருப்பதாக கூறியுள்ளார்.

  Read more at: https://tamil.oneindia.com/news/andhra-pradesh-bjp-president-has-said-that-liquor-will-be-sold-for-50-rupees-if-the-people-voted-for/articlecontent-pf634228-443669.html

  .
  ————————————————–

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.