என்ன ஆயிற்று கட்கரிஜி – க்கு …? ” கங்கா எக்ஸ்பிரஸ் வே ” – சுவாரஸ்யமான சில தகவல்கள் ….!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் அடுத்த 2-3 மாதங்களில்
மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற விருக்கிறது….

வழக்கம்போல் தேர்தலை முன்னிட்டு, சில சிறப்பு திட்டங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன…( 2019 – தேர்தல் சமயத்தில் –
நம்ம மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம்
அறிவிக்கப்பட்டதே… !!! – நினைவில்லை …? )

அதில் முக்கியமான “கங்கா எக்ஸ்பிரஸ் வே” திட்டத்திற்கு,
18-ந்தேதியன்று அடிக்கல் நாட்டப்பட்டது….

அது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்….

இந்த சாலையின் மொத்த நீளம் – 594 கிலோ மீட்டர்…
மொத்த செலவு மதிப்பு – 36,200 கோடி …

இந்த திட்டம் 2024-ல் முடிக்கப்படும் என்று
சொல்லப்படுகிறது…!!!

இந்த திட்டம், PPP – Public, Private -Participation
விதிகளின்படி அறிவிக்கப்பட்டிருக்கிறது…

துட்டு போடுவோருக்கு (ஆயுட்காலம் முழுவதும்….??? ) டோல் கேட்டுகளில், சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதி உண்டு…

இந்த முழு திட்டமும் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு,
தனித்தனியே காண்டிராக்டு விடப்பட்டு உள்ளது.

18-ந்தேதி அடிக்கல் நாட்டப்பட்ட இந்த திட்டத்திற்கான
டெண்டர் அதற்கு 2 நாட்கள் முன்னதாக,
16-ந்தேதி தான் முடிவு செய்யப்பட்டது…

அதில் 4-ல் 3 காண்டிராக்டுகள், அடானி நிறுவனத்திற்கு
கொடுக்கப்பட்டிருக்கின்றன… !!!

  • அது குறித்து, உத்திர பிரதேச அரசு வெளியிட்டுள்ள
    தகவல் அறிக்கை கீழே –

………………………………………….

………………………………………………

ஒரே ஒரு விஷயம் தான் வருத்தமாக இருக்கிறது….

பாவம் – இந்த திட்டத்தில் மிகவும் ஆர்வத்துடன்
செயல்பட்ட மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை
அமைச்சர் மாண்புமிகு நிதின் கட்கரி அவர்கள்
கலந்து கொள்ளவில்லை..

இவ்வளவு முக்கியமான திட்டத்தில், அவ்வளவு ஆர்வமாக
செயல்பட்டவரை –

  • அழைக்காமல் இருந்திருப்பார்களா என்ன … ?

  • அல்லது வர வேண்டாம் என்று தான் யாராவது
    தடுத்திருக்கப் போகிறார்களா என்ன….?
  • பாவம் –

-கடுமையான தலைவலி –

-அல்லது ஜலதோஷமாக இருக்கும்…

-இல்லையெனில் கலந்து கொள்ளாமல் இருப்பாரா…?

( பின் குறிப்பு – மேலே இடுகையில் – கூர்ந்து பார்த்தால் தெரியக்கூடிய – ஆனால் நான் சொல்லாத ஒரு விஷயம் இருக்கிறது…

முடிந்தால் யாராவது கண்டுபிடித்து சொல்லுங்களேன் பார்ப்போம்…!!! )

.
………………………………………………………………………………………………………………………….….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.