” அட் ராங்கி ரே” அமர்க்களமும், – 63 வயது பாட்டியின் சவாலும்….!!!

நம்ம ஊர் தனுஷ் ஹீரோவாகவும்,
கூடவே ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் மற்றும்
ஹீரோயினாக சாரா அலி கான் ஆகியோர் நடிக்கும்
ஹிந்தி திரைப்படம் ” அட் ராங்கி ரே” … (At rangi Re .. )


இசையும் நம்ம ஊர் மாஸ்டர் ஏ.ஆர்.ரெஹ்மான் தான்….

இந்தப்படம் அடுத்த வாரம் OTT மூலம் வெளியிடப்படுகிறது….

வடக்கே இந்தப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு
உருவாகி இருக்கிறது…(இந்தப் படத்தை தமிழிலும் டப்பிங்
செய்து ” கலாட்டா கல்யாணம் ” என்கிற பெயரில்
வெளியிடுகிறார்கள்… )

இந்தப்படத்திலிருந்து – சாரா அலி கான், குழுவினருடன்
ஆடும் “சக்கா சக்” என்கிற பாடல் வெளியாகி –
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை
பெற்றிருக்கிறது…

ஹிந்தியில் ஒரு 63 வயது பாட்டி- ரவி பாலா ஷர்மா –
…வலைத்தளத்தில் அடிக்கடி தன் நடனங்களை வெளியிட்டு
அசத்தி வருகிறார். இந்த சாரா அலி கானின் “சக்கா சக்”
நடனத்தை பார்த்து விட்டு, ” நீ என்ன பெரியதாக ஆடி விட்டாய் –
என் ஆட்டத்தைப் பார் “- என்று சொல்லி கிட்டத்தட்ட
அதே காஸ்டியூமில் தனித்து ஆடுகிறார்….

பார்க்க ஒரே அமர்க்களமாக இருக்கிறது….

நமது வலைத்தள நண்பர்களும் இந்த கூத்தை பார்த்து ரசிக்க
வேண்டாமா….? கீழே – முதலில் சாரா அலி கான் குழுவினர் –
அதையடுத்து 63 வயது பாட்டி ரவி பாலா ஷர்மா’வின்
தனி ஆட்டம்….!!!

………………..

………………..

.
…………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ” அட் ராங்கி ரே” அமர்க்களமும், – 63 வயது பாட்டியின் சவாலும்….!!!

  1. sparklemindss சொல்கிறார்:

    This is awesome 🙂

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.