
இதற்கு முந்தைய இடுகையில், மத்திய மந்திரி ஒருவரின்
ரவுடித்தனம் வெளிப்பட்டது….
இந்த இடுகையில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் –
மாநில மாண்பு ஒருவரின் ‘நிதான’ மான பேச்சைக் காணலாம்…
ஒருவேளை டாஸ்மாக் கடையை திறந்து வைத்துவிட்டு
வருகிறாரோ என்னவோ….!!!
இவர் தன் பேச்சுக்காக என்றும் வெட்கப்பட மாட்டார்…
மன்னிப்பும் கேட்க மாட்டார்…
தன் இயற்கையான இயல்புடன் நடந்துகொள்ளும்
ஒருவர் ஏன் வெட்கப்படப் போகிறார்….?
இவரை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்த மக்கள் தான்
வெட்கப்பட வேண்டும்….
இவரை அமைச்சராக நியமித்த கட்சித்தலைமை தான்
வெட்கப்பட வேண்டும்.
மக்களிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும்.
……….
.
……………………………………………..
அவரெல்லாம் ஒரு தலைவரை அவர் எந்த அடிப்படையில் பேசுகிறார் வாய்க்கு வந்ததை பேசுகிறார் இப்படி சொல்லி இருந்தால் நாம் ஏற்றுக்கொண்டு இருப்போமா அல்லது அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது என்று கருதி அண்ணாமலை அவர்களின் செயல்பாடுகளை பற்றி கருதி இருப்போமா?
திரு அண்ணாமலை அவர்கள் அரசியல் செய்வதற்காக தேவையில்லாதவற்றை பேசி அவர் மீது இருக்கின்ற நம்பிக்கையை குறைத்துக் கொள்கிறார்கள்.
அமைச்சர் காந்தி அவர்கள் மெத்தப் படித்தவர். அண்ணாமலை வெறும் ஐ.ஏ.எஸ் தான். அமைச்சர் மீது ஒரு கிரிமினல் கேஸ் இருக்கிறது. அரசியல்வாதி அண்ணாமலையின் மீது ஒரு கேஸும் இல்லை. அமைச்சர் பத்தாப்பு படிச்சே, 36 கோடி ரூபாய் கணக்கில் காண்பித்த சொத்து வைத்திருக்கிறார். இந்த அண்ணாமலையோ, நாலு ஆடுகளை மட்டும் வைத்திருக்கிறார்.
டாஸ்மாக் மூலம் வருமானம் பார்க்கும் அரசுக்கு ஏற்ற அமைச்சர் காந்தி அவர்கள். இவர் பெயரை ஏன் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி வைத்துக்கொண்டாரோ.