இங்கே யாருக்கும் வெட்கமில்லை….!!!

அண்மையில், அதிமுக-வின் தேர்தல் ஆணையராகப்
பொறுப்பேற்று, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்
தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த – முன்னாள்
சட்ட அமைச்சர் திருவாளர் பொன்னையன் அளித்துள்ள ஒரு
பேட்டி பல உண்மைகளை (…!!!) வெளிப்படுத்துகிறது…. கீழே –

………………………………

“சசிகலா இணைப்பில் இரு வேறு கருத்துகள்
இருக்கின்றனவே?”

“ஊடகங்கள்தான் அப்படிக் காட்டுகின்றன. சசிகலா வருவதற்கு
இடமே கொடுக்கக் கூடாது. முக்குலத்தோர் அதிகமிருக்கும்தென்மாவட்டங்களிலேயே அந்த அம்மாவும், அவர் மகனும்
(தினகரன்) நிறுத்திய அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்
இழந்துவிட்டார்கள். என்ன செல்வாக்கு இருக்கிறது
அந்தம்மாவிடம்? அவர் இணைந்தால் கட்சியில் பாதிப்பு ஏற்படும்
என அனைவரும் சொன்னார்கள். அதை ஓ.பி.எஸ்-ஸும்
ஏற்றுக்கொண்டார். ஒருவேளை சேர்க்க வேண்டுமென்றால்
அதைக் கட்சியின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்
என்றார். பொதுக்குழுகூட ‘சசிகலா ஜே’ என முழக்கமிட்டு
ஒரு பிரளயம் ஏற்பட்டால் வேண்டுமானால் சசிகலாவைக் கட்சியில்சேர்க்கலாம். ஆனால், அப்படி ஒன்று நடக்க வாய்ப்பே இல்லை.”

“ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு நீங்களே சசிகலா
பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்க வேண்டும் எனக்
கேட்டுக்கொண்டீர்கள். ஆனால், இப்போது இப்படிச் சொல்கிறீர்கள்?”

“அம்மாவுக்கு மிக முக்கியமான உடல் பிரச்னை தோல் அலர்ஜி.
அதற்குப் பல்வேறு நவீன மருந்துகள் இருந்தும் மருத்துவர்கள்
கூடாது என்று தவிர்த்தது ஸ்டீராய்டு. ஆனால், இந்த மருந்து
கொடுத்தால் அடுத்த நிமிடமே அரிப்பு நின்றுவிடும். ஆனால்,
ரத்த ஓட்டத்தில் மாற்றங்களை உருவாக்கி திசுக்களில் பாதிப்பை
ஏற்படுத்தும், ரத்த ஓட்டம் சீராக இருக்காது, கணையத்தில்
பாதிப்பு ஏற்படும், சர்க்கரை அளவு அதிகரிக்கும். இவ்வளவு
பிரச்னைகள் இருக்கின்றன என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

நான்கு மாதங்களுக்கு முன்பு அழைத்து வந்திருந்தால் அது
வெறும் சர்க்கரைநோயாக மட்டுமே இருந்திருக்கும். அம்மாவைக்காப்பாற்றியிருக்கலாம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின்
உடல்நிலை மிக மோசமாக இருந்தபோது அமெரிக்காவுக்கு
அழைத்துச் சென்று அவரைக் காப்பாற்றினோம்.
ரஜினி பிழைக்கவே மாட்டார் எனச் சொல்லப்பட்டபோதும்
அவரைச் சிங்கப்பூர் அழைத்துச் சென்று மீட்டுக் கொண்டுவந்தார்கள்.
ஆனால், அம்மாவை எட்டு மாதங்களாக அப்போலோவிலே
வைத்துக்கொண்டு அம்மா பிழைக்கக் கூடாது என்றே
சசிகலா செயல்பட்டார் எனச் செய்திகள் வந்தன.
அதை மக்களும் நம்பினார்கள்.

அம்மா பிழைக்க மாட்டார் எனத் தெரிந்ததும், அம்மாவைக்
கொண்டு போய் மருத்துவமனையில் அனுமதித்தார். அ.தி.மு.க.,
தமிழக அரசின் சொத்து அம்மா.

அப்போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்துக்கே அம்மாவைமருத்துவமனையில் சேர்த்தது தெரியாது.

அவரை மருத்துவமனையில் சேர்த்தது முதல் உயிர் பிரிந்ததுவரை
அவரை நாங்கள் யாருமே பார்க்கவில்லை. அதன் பிறகு
அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவின்
செயல்பாடுகள் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்பட்டன.
அவரின் உண்மை முகம் தெரிந்ததும் அவரைவிட்டு விலகினோம்.
கட்சிக்குள் இடமில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தோம்.”

“அப்போது ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாதான் காரணம்
எனச் சொல்கிறீர்களா?”

“நான் சொல்லவில்லை. மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
அதிலிருக்கும் உண்மைத்தன்மையை நீதிமன்றங்கள்தான்
வெளிக் கொண்டுவர வேண்டும்.”

“ஆனால், நீங்கள் எல்லோரும்தான் அம்மா இட்லி சாப்பிட்டார்,
நன்றாக இருக்கிறார் எனச் சொன்னீர்களே?”

“அம்மாவைக் கட்சி சார்பிலோ, அரசு சார்பிலோ அனுமதிக்கவில்லை.சசிகலாதான் அனுமதித்திருக்கிறார். அவர் சொன்னால் மட்டுமே பார்க்க அனுமதிப்போம் என்றார்கள். ஆனால், அவர் யாரையும்
உள்ளே அனுமதிக்கவில்லை. தினகரனுக்குக்கூட அனுமதி இருந்தது.
அதற்கு விளக்கங்கள் ஏதேதோ தரப்பட்டன. அப்போலோ
மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட மருத்துவ அறிக்கையை
வைத்துத்தான் நாங்கள் சொன்னோம். யாரும் நேரில்
பார்க்கவேயில்லை.”

“அப்போதே சசிகலாவை எதிர்த்து பேசியிருக்கலாமே?”

“அம்மாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்
எங்களின் குறிக்கோளாக இருந்தது. ப்ரீத்தி ரெட்டி, பிரதாப்
ரெட்டியிடம் கேட்டோம். ஆனால், மருத்துவமனையில்
யார் கொண்டுவந்து நோயாளியைச் சேர்க்கிறார்களோ அவர்கள்
சொன்னால் மட்டுமே பார்க்க அனுமதிப்போம். அதுதான்
அப்போலோ மருத்துவமனையின் சட்டவிதி என்றுவிட்டார்கள்.
அதற்குமேல் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.”

“அ.தி.மு.க ஜனநாயகக் கட்சி என்கிறீர்கள். ஆனால், எதிர்க்கருத்துவைப்பவர்களையெல்லாம் கட்சியைவிட்டு நீக்கிவிடுகிறீர்களே…
இதுதான் ஜனநாயகமா?”

“அதென்ன மாற்றுக்கருத்து… அவன் இவன் என முன்னாள்
முதல்வரைப் பேசுவது மாற்றுக் கருத்தா? செயற்குழுக் கூட்டத்தில்
சசிகலா ஒரு கொடிய சக்தி. கட்சிக்குள்ளேயே கால் எடுத்து
வைக்கக் கூடாது என்றார். பிறகெப்படி சசிகலாவுடன்
இணைந்தால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்கிறார்.
செயற்குழு, பொதுக்குழுக்களில் பேசவேண்டியதை ஊடகங்களில்
பேசுகிறார். எந்தக் கட்சியாக இருந்தாலும் இப்படிப் பேசுபவர்களைநீக்கியிருப்பார்கள். நாங்களும் அதைத்தான் செய்தோம்.”

“தொடர் தோல்விகளுக்குப் பிறகும் பா.ஜ.க உடனான
கூட்டணி தொடருமா?”

“தோல்விகளுக்கான காரணங்களை அலசி ஆராய்ந்துவிட்டோம்.
பா.ஜ.க-வின் கொள்கை வேறு; எங்களது கொள்கை வேறு.
பா.ஜ.க-வுடனான கூட்டணி, கொள்கைரீதியில் இல்லை.

நாங்கள் திராவிட இயக்கம், அவர்கள் ஆன்மிக இயக்கம்.
நாங்கள் ஆன்மிகத்துக்கு எதிரானவர்கள் இல்லை. ஒன்றே குலம்
ஒருவனே தேவன் என்ற அண்ணா வழியில் இருப்பவர்கள்.
ஆனாலும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக (???)
அவர்களுடன் கூட்டணி வைத்திருந்தோம். நாம் உழைத்துச்
செலுத்தும் வரியையெல்லாம் உத்தரப்பிரதேசத்துக்குக்
கொடுத்துவிட்டு நமக்கு மிகவும் சொற்பமான தொகையையே
ஒதுக்கினார்கள். அவர்களோடு முரண்பட்டு நின்றால் எதுவும்
நமக்குக் கிடைக்காது. எனவே, அவர்களோடு இணக்கமாக இருந்து
நிர்மலா சீதாராமனிடம் கெஞ்சிக் கெஞ்சி நமக்கான நிதியை
வாங்கிப் பெற்றிருக்கிறோம். அதற்கான கூட்டணிதான்
பா.ஜ.க-வுடனானது.”

லிங்க் – https://www.vikatan.com/government-and-politics/politics/ex-minister-ponnaiyan-shares-his-views-on-current-political-happenings-in-aiadmk

.
……………………………………………………………………………………………………………………..…….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to இங்கே யாருக்கும் வெட்கமில்லை….!!!

 1. arul சொல்கிறார்:

  Ponnaiyan: Question is why you agreed and requested to appoint SASIKALA as CM after JJ’s death? But no answer

 2. Tamil சொல்கிறார்:

  நேரத்திற்கு தகுந்தாற்போல் பேசும் பச்சோந்திகள் இவர்கள்.

  ஜெயலலிதா என்பவர் ஒரு தனிமனிதர் அல்ல, அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே சசிகலா சொன்னதால் நாங்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று சொல்வது பேதமை.

  ஜெயலலிதாவை சசிகலாவுடன் சேர்ந்து கொலை செய்தவர்கள் தான் நீங்கள் எல்லாரும்.

  • புதியவன் சொல்கிறார்:

   அப்படிக்கிடையாது. அப்போது ஜெ வை நேரடியாக அணுகுவதற்கு அனேகமாக எல்லோரும் பயந்துகொண்டிருந்தார்கள். பெண் நோயாளி. அதனால் சசிகலா மட்டும்தான் அவருடன் இருந்திட நேர்ந்தது. அதனால் சசிகலா சொன்னதையே எல்லோரும் நம்ப நேர்ந்தது.

   சசிகலா தலைவராக வரணும் என்று பலர் சொன்னதன் காரணம், அதிமுக அழிந்துவிடக்கூடாது, பிளவுபட்டால் சரி செய்ய கரிஷ்மா உள்ள தலைவர் ஒருவர் இல்லை என்பதுதான்.

   நச்சுப்பாம்பும், அதனுடன் சேர்ந்த அதன் குட்டியும், ஜெ. வுக்கு, அவரின் அரசியல் வாழ்வுக்கும் உலை வைத்தன. அந்தப் பாம்புக்குட்டி, காசுக்காகக் கட்சி நடத்தி அதிமுகவை தோல்வியுறச் செய்தது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.