இவரை உங்களுக்கு நினைவிருக்கிறதா….???

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து,

” தனக்கெதிராக கூறப்பட்ட பாலியல் புகார் வழக்கில்,
தானே தீர்ப்பு கூறிக்கொண்டவர் “-

  • என்று சொன்னால் ஒருவேளை உடனே
    நினைவிற்கு வரக்கூடும்….!!!

அவர் இப்போது ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார்…
அதன் காரணமாக அவரைப்பற்றி வெளிவந்திருக்கும் செய்திகளின்
சுருக்கம் கீழே –

…………………………………

” அயோத்தி தீர்ப்புக்கு பின் விருந்து “
– முன்னாள் தலைமை நீதிபதி விளக்கம்
டிச 11, 2021 –

புதுடில்லி :அயோத்தி விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, அன்று மாலை நட்சத்திர
ஓட்டலில் விருந்தில் பங்கேற்றது குறித்து, உச்ச நீதிமன்ற
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் விளக்கம்
அளித்துள்ளார்.

‘ஜஸ்டிஸ் பார் தி ஜட்ஜ்’

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியாக
பதவி வகித்தவர் ரஞ்சன் கோகோய்.

ரபேல், அயோத்தி விவகாரம் போன்ற முக்கிய
வழக்குகளில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியவர்.
தற்போது ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இவர் ‘ஜஸ்டிஸ் பார் தி ஜட்ஜ்’ என்ற சுயசரிதை புத்தகத்தை
சமீபத்தில் எழுதி வெளியிட்டார்.

அதில், நீதிபதி ரஞ்சன் கோகோய் சக நீதிபதிகளுடன்
நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விருந்தில் பங்கேற்ற
புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

அதில் – ” அயோத்தி தீர்ப்பை கொண்டாடிய போது ” –
என இவரே குறிப்பிட்டிருக்கிறார்….

மேலும் ‘அயோத்தி விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட அன்று
மாலை, அந்த அமர்வில் இடம் பெற்று இருந்த நீதிபதிகளை டில்லி
தாஜ் மான்சிங் ஓட்டலுக்கு விருந்துக்கு அழைத்து சென்றேன்.

‘அங்கு கிடைத்த மிகச்சிறந்த ‘வைன்’ வாங்கி அருந்தினோம்.
சீன உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்தோம்’

  • என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

‘சர்ச்சைக்குரிய விவகாரமான அயோத்தி தீர்ப்பு கொண்டாட்டத்துக்கு
உரியதா’ என, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது….

இதற்கு ரஞ்சன் கோகோய் கூறி சமாளித்தது –

” இது தீர்ப்பை கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட
விருந்து அல்ல. அந்த அமர்வில் என்னுடன் பணியாற்றிய
நீதிபதிகள், நான்கு மாதங்கள் கடும் உழைப்பை தந்தனர்.

அதில் இருந்து அவர்களுக்கு சிறிய ஓய்வு அளிக்கவே அந்த
விருந்துக்கு அழைத்துச் சென்றேன். அனுமதிக்கப்படாத எதையும்
நாங்கள் செய்யவில்லை. நண்பர்களுடன் விருந்து சாப்பிட
எப்போதாவது வெளியே செல்லும்போது, நாம் விரும்பியதை
சாப்பிடுவது தானே இயல்பு…!” – இவ்வாறு அவர் கூறினார்.

( அனுமதிக்கப்படாதது எதையும் செய்யவில்லை என்று
சொல்லும்போதே அதில் ஒருவித குற்ற உணர்வு தெரிகிறதே…
“வைன்”, “சீன உணவுகள்” ( பாம்பு, பல்லி, நாய்க்கறி…? )

இவருடைய செயல்கள் எதுவும் அனுமதிக்கப்படாதவை இல்லை
என்பது உண்மையாக இருக்கலாம்…. ஆனால், விரும்பத்தக்கவை
அல்ல என்பதும் உண்மை தானே…? )


பதவி ஓய்வு பெற்றபின், இவர் ஆளும் கட்சியின் சார்பாக
ராஜ்ய சபா உறுப்பினர் (எம்.பி.) பதவிக்கு நிறுத்தப்பட்டார்….

அது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது –
” அதிலென்ன தவறு….?” – என்று கேட்கிறார் இவர்.

தவறு இல்லாமல் இருக்கலாம்…
ஆனால் அதற்கென்ன அவசியம் …?
இவருக்கு எம்.பி. ஆக வேண்டுமென்கிற அவசியம்
எங்கிருந்து வந்தது…? இவர் அரசியல்வாதி அல்லவே…?

ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி,
ஆளும் கட்சியின் சார்பாக எம்.பி.ஆக்கப்பட்டால், அது
விமரிசனத்திற்கு உள்ளாகும் என்பது இவருக்கு தெரியாதா…?
தெரியாது என்றால், இவர் வகித்த பதவிக்கு
இவர் லாயக்கற்றவர் என்று பொருளாகாதா….?

இவருக்கு இன்னொரு ஆசை இருந்ததும்
இப்போது தெரிய வருகிறது….

இவர் ஓய்வு பெற்ற பிறகு ஒரு நாள் இவரது தாய்,
அஸ்ஸாமிலிருந்து போன் செய்து –

“அஸ்ஸாம் மாநிலத்தின் முதலமைச்சர் பதவிக்கு வர
முயற்சி செய்வதாக இங்கே செய்திகள் உலவுகின்றன.
அதைப்பற்றி கனவில் கூட நீ நினைக்கக்கூடாது ” என்று
சொல்லி விட்டு, டெலிபோனை வைத்து விட்டாராம்…….

இவரது தாய்’க்கு இருந்த உணர்வு, அவர் எச்சரித்தும் கூட
இவருக்கு இல்லாமல் போய் விட்டது ஏன்…?

……………….

” நான் ராஜ்ய சபா பதவியை ஏற்றபின் இவ்வளவு விமரிசிப்பவர்கள்
பதவி ஏற்பதற்கு முன் சொல்லி இருந்தால் – ஒருவேளை
ஒருமுறைக்கு இருமுறை நான் யோசித்திருப்பேன்…” என்று இப்போது சொல்கிறார்…

மற்றவர்கள் விமரிசிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
இவருக்கே அது சரியல்ல என்று எப்படி தோன்றாமல் போயிற்று…?

இவரது பிற்கால செயல்களைப் பார்க்கும்போது, அந்தப் பெண் கொடுத்த பாலியல் புகாரில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது…..

பெரிய மனிதர் போர்வையில் உலா வரும் அற்பர்கள்….!!!

……………

இந்த செய்திகளை ஒரு ஆங்கில நாளிதழ் நேற்று வெளியிட்டபோது,
அதற்கு பின்னூட்டம் எழுதி இருக்கும் ஒருவர் சொல்கிறார் –

” இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை; உடனடியாக பதவி விலகுவதை யார் தடுக்கிறார்கள்….? “

…………………………………………………………….

” K Sridhar – Mysore –

Never too late to voluntarily step down
as Rajya Sabha MP.

Further, where was your “conscience”
while accepting this role from the govt.

  • when you very well knew that
    there was not even a semblance of
    “cooling period” between retiring as CJI
    and accepting the MPs role??

.
…………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.