ஆளும் கட்சிக்கு 100 கோடி அள்ளிக் கொடுத்த -தொழிலதிபர்….!!!

” பா.ஜ.,வுக்கு ரூ.100 கோடி தேர்தல் நிதி வழங்கிய
லாட்டரி அதிபர் மார்ட்டின் ” – என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள
செய்தி சொல்கிறது –

சென்னை: பா.ஜ.,வுக்கு தேர்தல் நிதியாக, 100 கோடி ரூபாயை,
கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் வழங்கி உள்ளார்.

தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு, பெரு நிறுவனங்களிடம் இருந்து
தேர்தல் நிதி பெற்று வழங்க, டில்லியைச் சேர்ந்த, ‘புரூடெண்ட்
எலக்ட்டோரல்’ அறக்கட்டளைக்கு, மத்திய நேரடி வரிகள் வாரியம்
அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்த அறக்கட்டளை, இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல்
கமிஷனிடம், அக்டோபர் 20ம் தேதி கடிதம் சமர்ப்பித்தது.

அதன் விபரம்: கடந்த 2020- – 21ம் நிதியாண்டில், தேர்தல் நிதியாக,
245.72 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. அதில், 209 கோடி ரூபாய்,
பா.ஜ.,வுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி, 19 பெரு நிறுவனங்களிடம் இருந்துபெறப்பட்டுள்ளது.

இவற்றில் அதிகபட்ச தேர்தல் நிதியாக,
100 கோடி ரூபாயை, கோவையைச் சேர்ந்த
லாட்டரி அதிபர் மார்ட்டின், அவருக்குச் சொந்தமான, ‘பியூச்சர் கேமிங்
மற்றும் ஓட்டல் சர்வீசஸ்’
நிறுவனம் வாயிலாக வழங்கி உள்ளார்….!!!

……………………………………………………………………………………………………….


இரண்டு சின்ன கேள்விகள் –

1) ஒரு லாட்டரி சீட்டு நிறுவன அதிபர்
ஒரு அரசியல் கட்சிக்கு ஒரே ஆண்டில்
ஒரே தவணையில் 100 கோடி ரூபாய்
தானம் அளித்தால் …. அதற்கு என்ன அர்த்தம்…..?

எதையும் பிரதிபலனாக எதிர்பாராமலா கொடுத்திருப்பார்…?
இவ்வளவு கெட்டிக்காரரான ஒரு தொழிலதிபர் அத்தகைய
முட்டாள்தனத்தைச் செய்திருப்பாரா…..?

2) தானமே 100 கோடி என்றால்,
அவரது அந்த வருட லாபம் எத்தனை கோடி
இருந்திருக்கும்….? யாராவது guess பண்ண முடியுமா….?


அத்தனையும் கணக்கில் காட்டப்பட்டிருக்கும் என்று யாராவது நினைக்கிறீர்களா….???

.
…………………………………………………………………………………………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to ஆளும் கட்சிக்கு 100 கோடி அள்ளிக் கொடுத்த -தொழிலதிபர்….!!!

 1. ஸ்ரீதர் சொல்கிறார்:

  ஐயா,

  20 கோடி அபராதம் விதித்த செய்தி விவாதத்திற்க்கு வராமல் பார்த்துக்கொள்ளும் தொழிலதிபர் கொடுக்காத பணமா? நமக்கு செய்தி வந்தால் தான் தெரியும், இல்லை என்றால் அப்படி ஒன்று நடக்கவே இல்லை, இதுதான் பெரும்பாலான மக்கள் நிலைமை.

  இந்த 100 கோடிக்கு quid pro quo வெளிவருமா? அது தான் செய்தியாளர் நெறி.

  அதுவரை, இது தனக்கு வரவில்லை என்ற எரிச்சலில் வெளிவரும் விவரம் அவ்வளவுதான்.

  We, as electors, expect a fair playing field to chose the public servants, but the rot is deep rooted and the big lobby is waiting for an opportunity.

  The solace is it is coming out in open now, which was otherwise not even disclosed.

  If BJP says no, do you think the donor will keep quite?

  Waiting for the quid pro qo.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஸ்ரீதர்,

  ” Waiting for the quid pro qo.”

  அது என்றைக்கும் வெளியே தெரிய வராது….!!!

  இவர் கொடுத்தது மட்டும் தான் நமக்கு தெரியும். ஏனென்றால்,
  இது சட்டபூர்வமான பணப்பரிமாற்றம். இதற்கு பதிலாக
  அவர் என்ன பெற்றுக்கொள்கிறார் என்பது சட்டபூர்வமானதாக
  இருக்காது… எனவே அது வெளியிலும் வராது….

  மிகப்பெரிய, சாதுரியமான – வெற்றிகரமான முதலாளி…
  100 கோடியை இப்போது – invest – முதலீடு செய்திருக்கிறார்… அவ்வளவே….
  இதற்கு வரவேண்டிய return -ஐ எப்படி பெற்றுக்கொள்வது என்று
  அவர் ஏற்கெனவே தீர்மானித்திருப்பார்….. !!!

  நாமெல்லாம் இந்த வியாபாரம் குறித்து ஒன்றுமறியா அப்பாவிகள் …
  தானாக வெளியே வரும் – அல்லது விடப்படும் – சங்கதிகள் மட்டுமே
  நமக்கு தெரிய வரும்…

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 3. bandhu சொல்கிறார்:

  இந்த லாட்டரி அதிபர் திமுகவிற்கு எந்த அளவு பணத்தை இறைத்தார் என்பதும் அதற்க்கு பிரதி உபகாரமாக திமுக என்ன செய்தது என்றும் பல செய்திகள் சில வருடங்களுக்கு முன் வெளியானது. இப்போது பிஜேபி க்கு பணத்தை இறைக்கிறார் என்றால் இதுவும் முதலீடு தான். பிஜேபி வித்யாசமான கட்சி என்பது தவிடு பொடியானது தான் மிச்சம்!

  • புதியவன் சொல்கிறார்:

   இளைஞன் என்ற படத்தை எடுத்தவர் யார்? எஸ்.மார்ட்டின். அதற்கு வசனம் எழுதினதுக்காக கருணாநிதிக்கு 50 லட்ச ரூபாய் கொடுத்தாராம். (வசனம் எழுத திரைத்துறை செலவழிப்பது ஓரிரண்டு லட்சங்கள்).

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ” பிஜேபி வித்யாசமான கட்சி என்பது தவிடு பொடியானது தான் மிச்சம்..! ”

  – சரியாகச் சொன்னீர்கள்….!!! 🙂

 5. Tamil சொல்கிறார்:

  பாஜக வானது இந்தியாவிலேயே இருக்கின்ற காட்சிகளிலேயே மிக மிக மோசமான கட்சி.

  பேசத் தெரிந்த ஒரே காரணத்தினால் நாட்டை குட்டிச்சுவராக்கி இருக்கிறார் மோடி.

  சொல்வதற்கும் செய்வதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாத ஒரு ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறார்.

  பல்லாயிரக்கணக்கான கோடி மக்கள் பணத்தை அவருடைய சகாக்களுக்கு தானமாக தந்து கொண்டிருக்கிறார்.

  வரலாறு அவரை மிக மோசமான பிரதமர் என்று பதிவு செய்யும்

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  தமிழ்,

  ஆனால் – நிகழ்காலம் அவருடையதாகத் தானே இருக்கிறது……!!!

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


  தற்போது வெளிவந்திருக்கும் தகவல் –

  “லாட்டரி மன்னன் என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டின்,
  அரசியல் பலம் மற்றும் அரசை ஏமாற்றியதன் மூலம் 7,000 கோடி
  மதிப்புள்ள வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்.

  கடந்த 2019 ஏப்ரல் 30 ஆம் தேதி இவரது நிறுவனங்கள் மற்றும்
  வீடுகளில் நான்கு நாட்கள் தொடர்ந்து வருமான வரித்துறையினர்
  சோதனை நடத்தினர். இதில் 5.8 கோடி ரொக்கமும் 24 கோடி
  மதிப்புள்ள தங்கம், வைரமும் பறிமுதல் செய்யப்பட்டன.
  இந்தியா முழுவதும் மார்ட்டினுடன் தொடர்புடைய 70 இடங்களில்
  சோதனை நடைபெற்றது…”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s