தற்கொலை மெஷின் –

ஸ்விஸ் அரசு அறிவித்துள்ள ஒரு முக்கியமான முடிவு
பற்றியும், அதன் தொடர் நிகழ்வுகளையும் பற்றிய
ஒரு செய்தி கீழே –

இந்த செய்தியைப்பற்றி வாசக நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள்
என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்….

………………………….

தற்கொலை மெஷின்: இதில் படுத்தால் ஒரே நிமிடம்தான்.,
வலியில்லா மரணம் உறுதி- சட்டப்பூர்வ அனுமதி அளித்த நாடு! Published: Wednesday, December 8, 2021,

ஒரு நிமிடத்தில் வலியற்ற மரணம் வழங்கும் தற்கொலைக்கு
உதவும் இயந்திரத்துக்கு சுவிட்சர்லாந்தில் சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எனனவென்றால்
இயந்திரத்தை பயன்படுத்துபவர் லாக்-இன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால்

கண் இமைப்பதன் மூலம் கூட இந்த
இயந்திரத்தின் உள் இருந்து இயக்க முடியும்.

வலியற்ற மற்றும் அமைதியான மரணம்…

ஒரு நிமிடத்திற்குள் வலியற்ற மற்றும் அமைதியான மரணத்தை
உறுதியளிக்கும் சவப்பெட்டி வடிவ கேப்ஸ்யூல்-க்கு, சுவிட்சர்லாந்தில்
சட்டப்பூர்வ மதிப்பாய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அதன்
தயாரிப்பாளர்கள் கூறினார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் டாக்டர்
பிலிப் நிட்ச்கே. இவர் பிரபலமான கருணைக்கொலை ஆர்வலர்
ஆவார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை இயந்திரத்தை கண்டுபிடித்தார்.

ஆக்ஸிஜனை ஒரு முக்கியமான நிலைக்கு
குறைப்பதன் மூலம் இதில் படுப்பவர்களை ஹைபோக்ஸியா மற்றும்ஹைபோகாப்னியா மூலம் மரணம் ஏற்பட செய்கிறது.

சார்கோ கேப்சூல் என அழைக்கப்படும் இயந்திரம்

இந்த 3டி பிரிண்ட் இயந்திரம் ஆனது சார்கோ கேப்சூல் என
அழைக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தை எக்சிட் இன்டெர்நேஷனல்
நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்

இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும்
எடுத்து செல்லலாம் என்பதாகும். இந்த இயந்திரத்தை பயன்படுத்தும்
நபர் லாக்-இன் சிண்ட்ரோம் நோயாளியாக உடலில் உள்ள
அனைத்து தசைகளும் முற்றிலும் செயலிழந்த நிலையில் இருந்து
பேச முடியாத சூழலில் இருக்கும் போதிலும் கண் சிமிட்டுவதன்
மூலம் கூட இந்த இயந்திரத்தை இயக்க முடியும் என
இன்டிபென்டன்ட் யுகே குறிப்பிட்டுள்ளது.

டாக்டர் டெத் என்று அழைக்கப்படும் இயந்திரம் ( மாறாக, இதற்கு DOCTOR RELIEF (நிவாரணம் ) என்று பெயர் வைத்திருக்கலாம்….

இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்,
இந்த கேப்ஸ்யூல் மக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் படுத்திருப்பவர்கள் உயிரிழந்ததும் இந்த கேப்ஸ்யூலை
அப்படியே சவப்பெட்டியாக பயன்படுத்தலாம். . டாக்டர் டெத் என்று
அழைக்கப்படும் இந்த இயந்திரத்தை எக்ஸிட் இன்டர்நேஷனல்
என்ற லாப நோக்கற்ற அமைப்பின் இயக்குனரான டாக்டர் பிலிப்
நிட்ச்கே பின்னணியில் இருந்து தயாரித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு 1300 பேர் “உதவி தற்கொலை”
மூலம் இறந்திருக்கின்றனர் என இயந்திரத்தை உருவாக்கிய எக்சிட் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

பட்டனை அழுத்தினால் என்ன நடக்கும்

இந்த இயந்திரத்தின் செயல்பாடு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தின் உள்ளே சென்று படுத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் இந்த இயந்திரம் அவர்களிடம் கேள்விகள் கேட்குமாம்.
கேள்விகள் விவரங்கள் தெரியவில்லை. இந்த கேள்வி டாஸ்க்
முடிந்ததும். அதில் இருக்கும் பட்டனை அழுத்த வேண்டும்.
இந்த பட்டனை அழுத்திய சில விநாடிகளில் நாம் நமது இல்லை.

இந்த பட்டனை அழுத்தினால் என்ன நடக்கும் என்ற கேள்வி வரலாம்.
இந்த பட்டனை அழுத்தியதும் உட்புறத்தில் முழுவதும் நைட்ரஜன்
நிரப்பப்படுகிறது. இதன்மூலம் ஆக்ஸிஜன் அளவு 21 சதவீதத்தில்
இருந்து 1 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அடுத்த சில விநாடிகளில்
சுயநினைவை இழந்து கோமாவுக்கு அழைத்து செல்லப்படுகிறது.
அடுத்த சில நிமிடத்தில் உயிர் பிரிந்துவிடும்.

சட்டப்பூர்வ அனுமதி

இந்த இயந்திரத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்படுகிறது.
ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா, ஆக்ஸிஜன் மற்றும்
கார்பன் டை ஆக்சைட் குறைவை ஏற்படுத்தி இறப்பை சந்திக்க
செய்கிறது. கருணைக் கொலை என்ற வார்த்தை
கேள்விப்பட்டிருப்போம் அதற்கு சுவிட்சர்லாந்து அரசு இந்த
இயந்திரத்தை பயன்படுத்த அனுமதி வழங்கி இருக்கிறது.

இந்த இயந்திரம் தயாரித்ததற்கு நிட்ச்கே எதிர்மறையான
எதிர்விளைவுகளை பெற்றுள்ளார். இது ஒரு புகழ்பெற்ற எரிவாயு
அறை எனவும் சிலர் குறிப்பிட்டதாகவும் இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தற்கொலை சட்டபூர்வமாக அனுமதிக்கப்படவில்லை.

ஆனால், சில நாடுகளில் தற்கொலைக்கு சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்படுகிறது.

இதை கருணைக் கொலை என்றும் கூறலாம்.
மோசமான நோயால் பாதிப்படைந்தவர்கள், கடும் வலி, தீராத நோய்
என்ற நிலையில் இருப்பவர்கள் தற்கொலை செய்து கொள்ள
சில நாடுகள் அனுமதி வழங்குகின்றன. இதில் ஐரோப்பிய நாடுகளில்
ஒன்றாக இருக்கும் சுவிட்சர்லாந்த் தற்கொலை செய்து கொள்ள
சட்டப்பூர்வமாக அனுமதி வழங்குகிறது.

சவப்பெட்டி வடிவ கேப்ஸ்யூல்

சவப்பெட்டி வடிவ கேப்ஸ்யூல் பயன்படுத்தி வலியற்ற மரணம்
என்பதற்கு நிறுவனம் தயாராகி உள்ளது. இயலாதவர்களுக்கு
வலியற்ற மற்றும் அமைதியான மரணத்தை வழங்க இந்த இயந்திரம்
வழிவகுக்கிறது. வினாடிகள் கணக்கில் உள்ளே இருப்பவர்களை
செயலிழக்கச் செய்து நிமிடக் கணக்கில் அவர்களின் உயிரை எந்த
வலியும் இன்றி அமைதியாக பிரித்தெடுக்கிறது.

…………………………………………

பின் குறிப்பு – என் கருத்து என்ன என்று கேட்பவர்களுக்கு –

நான் இதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்…
தீராத வலியாலும், குணப்படுத்த முடியாத நோயாலும்,
நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு –
இது ஒரு விடியல்…. அமைதியான மரணம் அவர்களுக்கு
எல்லா வேதனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும்.

இதற்காக எல்லாரும் ஸ்விட்சர்லாந்து போக முடியாது.
எனவே, நம் நாட்டிலும், இந்த மாதிரி ஒரு நிவாரண முறையை
அமலுக்கு கொண்டு வருவது பற்றி யோசிக்க வேண்டும். இதை தற்கொலை என்று வகைப்படுத்துவதே தவறு….வலியாலும், தீராத நோய்களாலும் துன்பத்தில் துடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அளிக்கப்படும் நிவாரணம் என்று தான் சொல்லப்பட வேண்டும்.

.
………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to தற்கொலை மெஷின் –

 1. R.Gopalakrishnan சொல்கிறார்:

  THIS IS AN EXCELLENT IDEA.

 2. SAKTHIVEL சொல்கிறார்:

  Very good one. Deceased persons organs can be used for other persons if that person willing.

 3. Sanmath AK சொல்கிறார்:

  These kind of machines/policies are need-of-the-hour. Given the scenario of declining birth rate and people move around globe for job/business, old people and severely ill ones are left with no one to take care. Also in case of certain diseases the pain & agony being gone through by the patient is horrible. Such machines/policies are a big relief to above-said people.

  • புதியவன் சொல்கிறார்:

   இதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை ஸன்மத். குழந்தை பெற்றுக்கொள்வது, அந்தக் குழந்தையை வளர்ப்பது எல்லாமே பெற்றோர்களின் செயல். விதை ஒன்று போட, செடி வேறு முளைக்குமா?

   எந்த ஒரு நோயாலும் ஒருவர் நிச்சயமாக இறந்துவிடுவார் என்று சொல்ல முடியாது. Pain, Cost related issues may be the concerns. It would be very subjective considering our society.

 4. balumahendran சொல்கிறார்:

  இதை in Principle ஏற்றுக்கொண்டாலும் by Practice, இந்தியாவிற்கு சரிப்படாது என்றே எனக்கு தோன்றுகிறது.
  நமக்கே தெரியாமல் நமக்கு கேன்சர் போன்ற வியாதி உள்ளது என்று லேப் ரிப்போர்ட் வாங்கி, நம் கை எழுத்து மாதிரியே போட்டு நம்மை கொலை செய்வது எளிது. Homicide (not just suicide) will get easier.

  முன்னாள் பிரதமரை கொல்ல பேட்டரி வாங்கி கொடுத்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்டதெல்லாம் தமிழ் நாட்டில் நடந்துள்ளது.
  (எந்த முட்டாளாவது பிரதமரை கொள்ள வாங்கும் பாட்டெரிக்கு பில் வாங்குவானா? அப்படியே வாங்கினாலும் அதை மாசக் கணக்கில் போலீஸ் வந்து பிடிக்கும் வரை சட்டை பையில் வைத்துக்கொண்டிருப்பானா என்று நாம் யாரும் கேட்க மாட்டோம்.)

  • புதியவன் சொல்கிறார்:

   எந்தக் குற்றத்திலும் குற்றவாளி தடயங்களை அழிக்க மறந்துவிடுவான் அல்லது தடயத்தை விட்டுச் செல்லுவான் என்பது பாலபாடம். கோர்ட் நடைமுறைகள், முடிவில் நீதி எல்லாவற்றையும் நாம் மதிக்கவேண்டும், அதில் குறைகள் இருந்தபோதிலும்.

   நம் சட்டங்களில் ஓட்டைகள் உண்டு. ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்டு, ஓசி டிக்கெட்டில் இரயில் பயணம் செய்து லட்சம் கோடி சொத்துக்களைச் சேர்த்தவர்கள், சட்டத்தின் பார்வையில் பொதுமக்கள் பார்வையில் புனிதர்களாவதும் இந்த இந்தியாவில்தான் நடக்கும். அதனையும் மீறி சிலர் தண்டனைக்குள்ளாகும்போது, அதனைக் கேள்வி கேட்பதும் இங்குதான் சாத்தியம்.

   குப்பன் சுப்பனெல்லாம் நம்ம ஊரில் சிறைக்குச் சென்றால் அழிந்து மடியவேண்டியதுதான். ஆனால் வெளிநாட்டுச் சதிக்குத் துணைபோகும் குற்றவாளிகளின் குடும்பங்கள் வெளிநாட்டில் படிக்க முடியும், சுப்ரீம் கோர்ட் வரை சென்று வாதாட கோடிக்கணக்கான பணத்தைச் செலவழிக்க முடியும்.

   உண்மை நம் யாருக்கும் தெரியாது. ஆனால் கோர்ட்டுக்கு, நேர்மையாக வாதாடிய வக்கீல்களுக்கு, புலன் விசாரணை செய்த அதிகாரிகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

   • balumahendran சொல்கிறார்:

    அதையேதான் நானும் சொல்கிறேன். இதில் வெளிநாட்டு சதி உள்ளது. ஆனால் சதி திட்டத்தில் ஈடு பட்டவர்கள் பதவியை அனுபவிக்க அப்பாவிகள் சிக்க வைக்கப்பட்டனர். (ஸ்வாதி கொலையில் அப்பாவி ராம்குமார் சிக்கவைக்கப்பட்டு கொல்லப்பட்டதை போல.)

  • கந்தவேல் சொல்கிறார்:

   நீங்கள் கூறும் விளக்கம் ஏற்கொள்ளத்தக்கவையா?
   உதாரணமாக நீங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு விடுகிறீர்கள், ஆனால் அதில் குடியிருப்பவர் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டால், சட்டம் உங்களையும் குற்றவாளி , மற்றும் குற்றத்திற்கு உடந்தை என்று தான் கைகாட்டும் . உண்மையில் நீங்கள் குற்ற செயலில் ஈடுபடவில்லை.ஆனாலும் இது ஒரு துரதிருஷ்டமான நிலை என்று வேண்டுமானாலும் வர்ணிக்கலாம்.
   அது போல் தான் பிரதமமந்திரியை தாக்கும் திட்டத்துடன் அலைந்தவர்களுடன் , விபரீதம் புரியாமல்,அவர்களுடன் கூட சுற்றி திரிந்தது ,அவரது துரதிருஷ்டம் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.