
மத்திய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தால் ஓய்வுக்கு
பிறகு பதவியா …? லோக்சபாவில் தயாநிதி மாறன் கேள்வி
December 8, 2021, 8:08 [IST]
Google Oneindia Tamil News
டெல்லி: மத்திய அரசுக்கு சாதகமான தீர்ப்பு கொடுத்தால் பணி
ஓய்வுக்குப் பிறகு பதவி வழங்கப்படுவதாக லோக்சபாவில் திமுக
எம்.பி. தயாநிதி மாறன் குற்றம்சாட்டினார்.
லோக்சபாவில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஊதியம்
மற்றும் பணி நிலைமை தொடர்பான திருத்த மசோதா மீது
நேற்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில்
திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசியதாவது:
நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். ஆனாலும்
அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகள் மக்களிடம் பல
சந்தேகங்களை எழுப்பி இருக்கின்றன. நீதித்துறையில்
ஆட்சியாளர்கள் செல்வாக்கு செலுத்துவதாக மக்களுக்கு
சந்தேகம் உள்ளது.
ஆட்சியில் இருப்பவர்கள் பெரும்பான்மை இருக்கிறது
என்பதற்காக நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை
சீர்குலைத்துவிடக் கூடாது என்பதே எங்களது வேண்டுகோள்.
மத்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குகிற நீதிபதிகளுக்கு
பணி ஓய்வு காலத்துக்குப் பிறகு பதவிகள் வழங்கப்படுகின்றன.
உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்
ஆளுநர்கள் மற்றும் எம்.பிக்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய
இருவர் பணிக்காலத்துக்குப் பிறகு ஒருவர் ஆளுநராக
நியமிக்கப்பட்டார்; மற்றொருவர் ராஜ்யசபா எம்.பியாக்கப்பட்டார்.
உச்சநீதிமன்றம் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில்
இல்லை. நாடு விடுதலை அடைந்து 71 ஆண்டுகளாகியும்
உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த
ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில்
தலித்துகள் 5 பேர்தான் இதுவரை நீதிபதிகளாகப் பணியாற்றி
இருக்கின்றனர். உச்சநீதிமன்றத்தில் பெண்களுக்கும் போதுமான
பிரதிநிதித்துவம் கிடையாது. இந்திய நீதிமன்றங்களில் ஒரு
குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகிற
நிலை உள்ளது……
இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.
.
…………………………………………..
வரவேற்கப்பட வேண்டிய கருத்து / உரை –
சரியான இடத்தில், சரியான விதத்தில் சொன்ன –
திருமதி கனிமொழி அவர்களுக்கு நமது பாராட்டுகள் –
எதற்கு ஆங்கிலத்தில் இருக்கவேண்டும்? ஏழைகளுக்கு அது புரியுமா? என்னைப் பொறுத்தவரையில் திட்டத்தின் பெயரும், அதற்கான மாநிலப் பெயர் அடைப்புக்குறிக்குள் இருந்தால் அதுவே போதுமானது.
தலைப்புக்கேற்றபடி சொல்வதற்கு இவருக்கெல்லாம் தகுதி உண்டா? (இருவருக்கும்) திமுக காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசு செய்த அநியாயங்களைவிட ஒன்றும் பாஜக அரசு செய்துவிடவில்லை. ஏன்… தமிழகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு ஏன் விசாரணைக் கமிஷன் போன்றவற்றிர்க்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள்? தங்கள் கட்சிக்காரர், தன்னுடைய ஆள் என்ற அளவுகோல் இதற்கு இல்லையா? ஏன் ஆட்சி மாற்றம் நிகழும்போது அதிகாரிகள் மாற்றம், தலைமைச் செயலர் மாற்றம் எல்லாம் நிகழ்கிறது?
கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்தான் அரசு வக்கீல்கள் ஆகிறார் கள். அவர் கள் தான் பின்னாளில் நீதிபதிகள் ஆகிறார்கள். நீதிபதிகள் பல பேரும் கட்சி சார்புடையவர்கள்தான்.
இந்த விஷயத்தில் யாரைப் பற்றியும் பேச திமுக லுக்கு எந்த தகுதியும் கிடையாது.
கணபதி சுப்பிரமணியன்.